பெருமாள்
கோவில்களில்
ஏன்
சிவன்
இருப்பதில்லை
வாரியார்
தந்த
அற்புதமான
விளக்கம்
ஒரு
கூட்டத்தில்
ஒரு
அம்மா
வாரியாரிடம்,"
ஐயா
நான்
பெரும்பாலும்
சிவன்
கோயில்களில்
பெருமாள்
சந்நிதியை
பார்த்து
இருக்கிறேன்.
ஆனால்,
ஏன்
பெருமாள்
கோயில்களில்
சிவனின்
சந்நிதி
இருப்பதில்லை?"
என்று
கேட்டார்கள்.
அதற்கு
வாரியார்
திருப்பிக்
கேட்டார்,"
அம்மா!
அண்டாக்குள்ள,
குண்டா
போகுமா,
குண்டாக்குள்ள
அண்டா
போகுமா?"
என்று
அந்த
அம்மா
சிறிது
நேரம்
யோசித்த
பிறகு,"
சுவாமி
எனக்குத்
தெரிந்தவரை
அண்டா
தான்
பெரிது.
அதனால் அண்டாக்குள்ள தான் குண்டா போகும்" என்றார்கள்.
உடனே வாரியார் சிரித்துக் கொண்டே சொன்னார், " அது போலத் தான் அம்மா சிவன். அவர் அண்டா. நாராயணன் குண்டா. அதனால் தான் பெருமாள் கோயில்களில் சிவன் சந்நிதி இருப்பதில்லை . ஆனால் சிவன் கோயில்களில் பெருமாள் சந்நிதி உள்ளது" என்று.
எவ்வளவு அருமையான விளக்கம் பாருங்களேன்!
நன்றி இணையம்