ராசிக்கேற்ற சித்தர் வழிபாட்டு தலங்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:36 AM | Best Blogger Tips


* அசுவினி (மேஷம்) = ஸ்ரீபோகர், பழனி
* பரணி(மேஷம்) = ஸ்ரீகோரக்கர், வடக்குப்பொய்கை நல்லூர் (நாகப் பட்டிணம்), ஸ்ரீபோகர், பழனி
* கார்த்திகை 1 (மேஷம்) = ஸ்ரீபோகர், பழனி, ஸ்ரீ தணிகை முனி மற்றும் ஸ்ரீசம்ஹாரமூர்த்தி, திருச்செந்தூர்; ஸ்ரீபுலிப்பாணி, பழனி கார்த்திகை 2, 3, 4 (ரிஷபம்) = ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன் றம்; ஸ்ரீ வான்மீகர், எட்டுக்குடி; ஸ்ரீ இடைக்காடர், திரு அண்ணாமலை.
* ரோகிணி (ரிஷபம்) = ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன்றம், ஸ்ரீலஸ்ரீ சிவானந்த மவுனகுரு யோகீஸ்வரர், திருவலம்
*
மிருகசீரிடம்1, (ரிஷபம்)=சிவானந்த மவுனகுரு யோகீஸ்வரர். மிருக சீரிடம்2 (ரிஷபம்) = ஸ்ரீசட்டைநாதர், சீர்காழி மற்றும் ஸ்ரீரங்கம். ஸ்ரீ பாம்பாட்டி சித்தர், மருதமலை மற்றும் சங்கரன்கோவில். மிருக சீரிடம்3 (மிதுனம்)= ஸ்ரீபாம்பாட்டி சித்தர், மருதமலை மற்றும் சங்கரன் கோவில். மிருகசீரிடம் 4 (மிதுனம்)=அமிர்த கடேஸ்வரர் ஆலயம், திருக்கடையூர்.
* திருவாதிரை (மிதுனம்) = ஸ்ரீஇடைக்காடர் திருஅண்ணாமலை, ஸ்ரீ திருமூலர் சிதம்பரம்.
*புனர்பூசம்1,2,3 (மிதுனம்)=ஸ்ரீதன்வந்திரி,ஸ்ரீவசிஷ்டர் வைத்தீஸ் வரன்கோவில், புனர்பூசம் 4 (கடகம்)= ஸ்ரீதன்வந்திரி, வைத்தீஸ் வரன் கோவில்.
* பூசம் (கடகம்) = ஸ்ரீகமலமுனி, திருவாரூர்; ஸ்ரீகுருதட்சிணா மூர்த்தி, திருவாரூர் (மடப்புரம்)
* ஆயில்யம் (கடகம்) = ஸ்ரீகோரக்கர், வடக்குப்பொய்கை நல்லூர், நாகப் பட்டிணம் அருகில்; ஸ்ரீஅகத்தியர், ஆதி கும்பேஸ்வரர் கோவி ல், கும்பகோணம்; ஸ்ரீஅகத்தியர், திருவனந்தபுரம், பொதியமலை, பாபநாசம்.
* மகம் (சிம்மம்), பூரம் (சிம்மம்) = ஸ்ரீராமதேவர்,அழகர் கோவில், மதுரை அருகில்.
*உத்திரம் 1 (சிம்மம்) = ஸ்ரீராமத்தேவர், அழகர்கோவில், மதுரை அருகில், ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன்றம். உத்திரம் 2 (கன்னி) = ஸ்ரீ ஸ்ரீ சதா சிவப்ரும்மேந்திரா நெரூர்; ஸ்ரீகரூவூரார் கரூர் பசுபதீஸ்வரர் கோவில்; ஆனிலையப்பர் கோவில் கருவூர்; கல்யாண பசுபதீஸ் வரர் கோவில் தஞ்சாவூர்.
* அஸ்தம் (கன்னி) = ஆனிலையப்பர் கோவில் -கரூவூர், ஸ்ரீ கரூவூ ரார் கரூர்.
* சித்திரை 1 , 2 (கன்னி) = ஸ்ரீகருவூரார் கரூர்,ஸ்ரீசச்சிதானந்தர் கொடு விலார்ப்பட்டி. சித்திரை 3, 4(துலாம்) = ஸ்ரீகுதம்பைச் சித்தர் மாயூரம்
* சுவாதி (துலாம்) = ஸ்ரீகுதம்பைச் சித்தர் -மாயூரம்
* விசாகம்1,2,3 (துலாம்) = ஸ்ரீநந்தீஸ்வரர் காசி,ஸ்ரீகுதம்பைச் சித்தர் மயிலாடுதுறை விசாகம் 4 (விருச்சிகம்)=ஸ்ரீகுதம்பைச் சித்தர் மயிலாடு துறை, ஸ்ரீவான்மீகர் எட்டுக்குடி, ஸ்ரீஅழுகண்ணி சித்தர் நீலாயதாட்சியம்மன்கோவில், நாகப்பட்டிணம்
* அனுஷம் (விருச்சிகம்) = ஸ்ரீவான்மீகி -எட்டுக்குடி, தவத்திரு. சிவ ஞான குருசாமிகள் என்ற அரோகரா சாமிகள், தோளூர்பட்டி, தொட்டியம்-621 215. திருச்சி மாவட்டம்.
* கேட்டை (விருச்சிகம்) = ஸ்ரீவான்மீகி எட்டுக்குடி, ஸ்ரீகோரக்கர் வடக்குப் பொய்கைநல்லூர்,நாகப்பட்டிணம் அருகில்.
* மூலம் (தனுசு) = ஸ்ரீபதஞ்சலி ராமேஸ்வரம், சேதுக்கரை, திருப் பட்டூர்
* பூராடம் (தனுசு) = ஸ்ரீபதஞ்சலி ராமேஸ்வரம், ஸ்ரீசித்ரமுத்து அடிக ளார் பனைக்குளம் (இராமநாதபுரம்), ஸ்ரீபுலஸ்தியர் ஆவுடை யார் கோவில்.
*உத்திராடம் 1 (தனுசு) = ஸ்ரீகொங்கணர் திருப்பதி, ஸ்ரீதிருவலம் சித்தர் திருவலம்(ராணிப்பேட்டை), ஸ்ரீலஸ்ரீமவுன குருசாமிகள் தங்கால் பொன்னை (வேலூர் மாவட்டம்)
* உத்திராடம் 2,3,4 (மகரம்) = ஸ்ரீகொங்கணர் திருப்பதி
* திருவோணம் (மகரம்) = ஸ்ரீ கொங்கணர் திருப்பதி, ஸ்ரீ சதா சிவ ப்ரும்மேந்திரால் நெரூர், ஸ்ரீதிருமூலர் சிதம்பரம், ஸ்ரீகருவூரார் கரூர், ஸ்ரீபடாஸாகிப் கண்டமங்கலம்.
* அவிட்டம் 1,2 (மகரம்) ; அவிட்டம் 3,4 (கும்பம்) = ஸ்ரீதிருமூலர் சிதம்பரம் (திருமூலகணபதி சந்நிதானம்).
*
சதயம் (கும்பம்) = ஸ்ரீதிருமூலர் சிதம்பரம், ஸ்ரீசட்டநாதர் சீர்காழி, ஸ்ரீதன்வந்திரி, ஸ்ரீதன்வந்திரி வைத்தீஸ்வரன் கோவில்.
*
பூரட்டாதி 1,2,3 (கும்பம்)= ஸ்ரீதிருமூலர் சிதம்பரம், ஸ்ரீ தட்சிணா மூர்த்தி திருவாரூர். ஸ்ரீகமலமுனி திருவாரூர்,ஸ்ரீகாளாங்கிநாதர் திருவாடுதுறை, சித்தர் கோவில்,சேலம் ஸ்ரீசதாசிவப்ரும் மானந்த ஸ்ரீசிவபிரபாகர சித்த யோகி. பரமஹம்ஸர் ஓமலூர் பந்தனம் திட் டா. பூரட்டாதி4(மீனம்)=ஸ்ரீசுந்தரானந்தர் மதுரை, ஸ்ரீஆனந்த நடரா ஜ சுவாமிகள் குட்லாம்பட்டி(மதுரை), பரம்மானந்த ஸ்ரீ சித்தயோ கி பரமஹம்ஸர்,ஓமலூர்.
* உத்திரட்டாதி (மீனம்) = சுந்தரானந்தர் ஃ மதுரை; ஆனந்த நடராஜ சுவாமிகள் குட்லாம்பட்டி(மதுரை), ஸ்ரீமச்சமுனி திருப்பரங்குன் றம்.
* ரேவதி (மீனம்) = ஸ்ரீசுந்தரானந்தர் மதுரை, குனியமுத்தூர் சுவாமி கள் என்ற சிவ சுப்ரமணிய சுவாமிகள் ஜீவசமாதி.அசுவினி (மேஷம்) = ஸ்ரீபோகர், பழனி
* பரணி(மேஷம்) = ஸ்ரீகோரக்கர், வடக்குப் பொய்கை நல்லூர் (நாகப் பட்டிணம்), ஸ்ரீபோகர், பழனி
* கார்த்திகை1 (மேஷம்) = ஸ்ரீபோகர், பழனி, ஸ்ரீதணிகைமுனி மற்றும் ஸ்ரீசம்ஹாரமூர்த்தி, திருச்செந்தூர்; ஸ்ரீபுலிப்பாணி, பழனி
* கார்த்திகை 2, 3, 4 (ரிஷபம்) = ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன் றம்; ஸ்ரீ வான்மீகர், எட்டுக்குடி; ஸ்ரீஇடைக்காடர், திரு அண்ணாமலை.
* ரோகிணி (ரிஷபம்) = ஸ்ரீமச்சமுனி,திருப்பரங்குன்றம், ஸ்ரீலஸ்ரீ சிவானந்த மவுனகுரு யோகீஸ்வரர், திருவலம்
* திருவாதிரை (மிதுனம்) = ஸ்ரீஇடைக்காடர் திரு அண்ணாமலை, ஸ்ரீதிருமூலர் சிதம்பரம்.
* புனர்பூசம் 1, 2, 3 (மிதுனம்) =ஸ்ரீதன்வந்திரி,ஸ்ரீவசிஷ்டர் வைத்தீ ஸ்வரன்கோவில், புனர்பூசம் 4 (கடகம்)= ஸ்ரீதன்வந்திரி, வைத்தீஸ் வரன் கோவில்.
* பூசம் (கடகம்) = ஸ்ரீகமலமுனி, திருவாரூர்; ஸ்ரீகுருதட்சிணா மூர்த்தி, திருவாரூர் (மடப்புரம்) * ஆயில்யம்(கடகம்)=ஸ்ரீகோரக்கர், வடக்குப் பொய்கை நல்லூர்,நாகப்பட்டிணம் அருகில்; ஸ்ரீஅகத்தியர், ஆதிகும் பேஸ்வரர்கோவில், கும்பகோணம்; ஸ்ரீஅகத்தியர், திருவன ந்தபுரம், பொதியமலை, பாபநாசம்.
*மகம் (சிம்மம்), பூரம் (சிம்மம்) = ஸ்ரீராமதேவர், அழகர் கோவில், மதுரை அருகில்.
* உத்திரம் 1 (சிம்மம்) = ஸ்ரீராமத்தேவர், அழகர்கோவில், மதுரை அருகில், ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன்றம். உத்திரம் 2 (கன்னி) =ஸ்ரீஸ்ரீ சதா சிவப்ரும்மேந்திரா நெரூர்; ஸ்ரீகரூவூரார் கரூர் பசுபதீஸ்வரர் கோவில் ஆனிலையப்பர் கோவில் கருவூர்; கல்யாண பசுபதீஸ் வரர் கோவில் தஞ்சாவூர்.
* அஸ்தம் (கன்னி) = ஆனிலையப்பர் கோவில் கரூவூர், ஸ்ரீ கரூவூரார் கரூர்.
* சித்திரை 1,2 (கன்னி) = ஸ்ரீகருவூரார் கரூர்,ஸ்ரீசச்சிதானந்தர் கொடு விலார்ப்பட்டி. சித்திரை 3, 4(துலாம்) = ஸ்ரீகுதம்பைச் சித்தர் மாயூரம்
* சுவாதி (துலாம்) = ஸ்ரீகுதம்பைச் சித்தர் -மாயூரம் * விசாகம்1,2,3 (துலாம்) = ஸ்ரீநந்தீஸ்வரர் காசி,ஸ்ரீகுதம்பைச் சித்தர் மயிலாடு துறை விசாகம் 4 (விருச்சிகம்)=ஸ்ரீகுதம்பைச் சித்தர் மயிலாடு துறை, ஸ்ரீவான்மீகர் எட்டுக்குடி, ஸ்ரீஅழுகண்ணி சித்தர் நீலாய தாட்சியம்மன்கோவில், நாகப்பட்டிணம்
* அனுஷம் (விருச்சிகம்) = ஸ்ரீவான்மீகி -எட்டுக்குடி, தவத்திரு. சிவஞான குருசாமிகள் என்ற அரோகரா சாமிகள், தோளூர்பட்டி, தொட்டியம்-621 215. திருச்சி மாவட்டம்.
* கேட்டை (விருச்சிகம்  ஸ்ரீவான்மீகி எட்டுக்குடி, ஸ்ரீகோரக்கர் வடக்குப் 
பொய்கைநல்லூர்,நாகப்பட்டிணம் அருகில்.
*மூலம் (தனுசு)=ஸ்ரீபதஞ்சலிராமேஸ்வரம், சேதுக்கரை, திருப்பட்டூர்
*பூராடம் (தனுசு) = ஸ்ரீபதஞ்சலி ராமேஸ்வரம், ஸ்ரீசித்ரமுத்து அடிக ளார் பனைக்குளம் (இராமநாதபுரம்), ஸ்ரீபுலஸ்தியர் ஆவுடையார் கோவில்.
*உத்திராடம்1 (தனுசு) = ஸ்ரீகொங்கணர் திருப்பதி, ஸ்ரீதிருவலம் சித்தர் திருவலம்(ராணிப்பேட்டை), ஸ்ரீலஸ்ரீமவுன குருசாமிகள் தங்கால் பொன்னை (வேலூர் மாவட்டம்) உத்திராடம் 2,3,4 (மகரம்) =ஸ்ரீகொங்கணர் திருப்பதி
* திருவோணம் (மகரம்) = ஸ்ரீகொங்கணர் திருப்பதி, ஸ்ரீ சதா சிவ ப்ரும்மேந்திரால் நெரூர், ஸ்ரீதிருமூலர் சிதம்பரம், ஸ்ரீகருவூரார் கரூர், ஸ்ரீபடாஸாகிப் கண்டமங்கலம்.
* அவிட்டம் 1 , 2 (மகரம்); அவிட்டம் 3, 4 (கும்பம்) = ஸ்ரீதிருமூலர் சிதம்பரம் (திருமூலகணபதி சந்நிதானம்).
* சதயம் (கும்பம்) = ஸ்ரீதிருமூலர் சிதம்பரம், ஸ்ரீசட்டநாதர் சீர்காழி, ஸ்ரீதன்வந்திரி, ஸ்ரீதன்வந்திரி வைத்தீஸ்வரன் கோவில்.
* பூரட்டாதி 1,2,3 (கும்பம்) = ஸ்ரீதிருமூலர் சிதம்பரம், ஸ்ரீதட்சிணா மூர்த்தி திருவாரூர். ஸ்ரீகமலமுனி திருவாரூர்,ஸ்ரீகாளாங்கிநாதர் திருவாடுதுறை, சித்தர் கோவில்,சேலம் ஸ்ரீசதாசிவப்ரும் மானந்த ஸ்ரீ சிவபிரபாகர சித்த யோகி. பரமஹம்ஸர் ஓமலூர் பந்தனம் திட்டா.
* பூரட்டாதி4 (மீனம்) = ஸ்ரீசுந்தரானந்தர் மதுரை, ஸ்ரீஆனந்த நடராஜ சுவாமிகள் குட்லாம்பட்டி(மதுரை), பரம்மானந்த ஸ்ரீசித்தயோகி பரம ஹம்ஸர்,ஓமலூர்.
* உத்திரட்டாதி (மீனம்) = சுந்தரானந்தர் ஃ மதுரை; ஆனந்த நடராஜ சுவாமிகள் குட்லாம்பட்டி(மதுரை), ஸ்ரீமச்சமுனி திருப்பரங் குன்ற ம்.
* ரேவதி (மீனம்) = ஸ்ரீசுந்தரானந்தர் மதுரை, குனியமுத்தூர் சுவாமி கள் என்ற சிவ சுப்ரமணிய சுவாமிகள் ஜீவசமாதி.

 நன்றி இணையம்

🌹 *வாழ்வின் எதார்த்தம்* 🌹

மணக்கால் அய்யம்பேட்டை | 12:34 AM | Best Blogger Tips

🌹

🌴
நாம் இறந்த அடுத்த நொடியே நம்முடைய உயிர் ஆத்மாவாக மாறவெளியே நின்றபடி நம்மை வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிடும்.
🌴கொஞ்ச நேரத்தில் எப்படியாவது நாம் இறந்த செய்தி நம் வீட்டுக்கு போய்விடும்
எல்லோரும் கதறியழுது காத்திருப்பார்கள்,
🌴நம்மை வேடிக்கை பார்க்க ஊரே திரண்டு நிற்கும்,
உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் உடனே தகவல் சென்றுவிடும்,
🌴இவ்வளவு நாள் நேராக வீட்டுக்குள் சென்ற நம்மை இன்று வாசலிலேயே வைத்துவிடுவார்கள்,
🌴இத்தனைக்கும் அந்த வீட்டை நாம்தான் பார்த்து பார்த்து கட்டியிருப்போம்,
எல்லாம் நேரம்!
🌴ஆளுக்கொரு பக்கம் மார்பிலும் தலையிலும் அடித்துக்கொண்டு அழுவார்கள், வருகின்ற நண்பர்களையும் உறவினர்களையும்கூட கட்டிக்கொண்டு அழுவார்கள், நமக்கு ஒன்றுமே புரியாது,
🌴அவர்கள் அழுவதை பார்த்து கஷ்டமாக இருந்தாலும் உள்ளுக்குள் சந்தோஷமாக இருக்கும் நம்மீது இவ்வளவு பாசம் வைத்திருக்கிறார்களே என்று!
🌴உங்களைவிட்டு எங்கும் போகமாட்டேன் எப்போதும் உங்களுடன் இருப்பேன் என்று ஆறுதல் சொல்லி கண்ணீரை துடைக்கவேண்டும் என்று துடியாய் துடிப்போம்.
🌴ஆனால் எதுவுமே முடியாது. அதுதான் மரணத்தின் மிகமோசமான துயரம்!
🌴பாவம் எல்லோரும்
tired
ஆகி tired ஆகி அழுதுகொண்டே இருக்கிறார்கள் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது!
🌴இதோ நாம் எதிர்பார்த்த
அந்த freezer box வந்துவிட்டது, கோடைவெயிலுக்கு சும்மா குளுகுளு என்று இருக்கும்.
🌴ஆனால் நம்மால் தான் உணரமுடியாது, ஒருவழியாக உள்ளே தள்ளி அடைத்துவிட்டார்கள், இருட்டிக்கொண்டதால் வெளியே campfire ம் போட்டுவிட்டார்கள்.
🌴விடியவிடிய விழித்திருந்து உறங்கலாம் என்று நினைக்கும்போது தாரைதப்பட்டையுடன் ஒரு குரூப் வந்துவிட்டது,
🌴சொந்தபந்தங்கள் எல்லாம் வரத்தொடங்கிவிட்டன பாவிமக்கள் இந்த பாசத்தையெல்லாம் எங்கு வைத்திருந்தார்களோ தெரியவில்லை
🌴அழுதுகொண்டே ஓடிவருகிறார்கள், இவ்வளவு நேரத்திற்கு பிறகு தமிழில் நமக்கு பிடிக்காத அந்த வார்த்தையை ஒருவன் சொன்னான்,
'
பொணத்தை ' கொஞ்சம் தள்ளிவைங்க பந்தல்போடனும்,
🌴நம்ம அப்பா எவ்வளவு அழகா பெயர் வச்சிருந்தாலும் செத்தபின்னாடி பத்துகாசுக்கு தேறாது!
🌴கூட்டம் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது, நம் பகையாளிகள் கூட நம்மை ரொம்ப நல்லவன் என்று certificate தருகிறார்கள்,
🌴ஒருபக்கம் தாரை தப்பட்டை
இன்னொரு பக்கம்
மக்கள் வெள்ளத்தில் மாலை மரியாதைகள் இன்னொரு பக்கம் பட்டாசுசத்தம், எல்லாம் இருந்தும் என்ன பிரயோஜனம்!?
🌴அத்தனைபேரு முன்னாடி அரைகுறை dress சோட நம்மை குளிக்கவச்சி மானத்தை வாங்கிட்டாங்களே!!
🌴என்ன பண்றது
பொணமா பொறந்தாலே இப்படிதான்!
ஒருவழியாக எரிப்பதற்கோ புதைப்பதற்கோ எடுத்துசெல்கிறார்கள்
🌴இவ்வளவு நாள் நாம் போட்ட ஆட்டத்தையெல்லாம் சேர்த்து நாலுபேர் ஆடிக்கொண்டு இருக்கிறார்கள்!
கடைசியில் நம்மை எரித்தேவிட்டார்கள்!
🌴இனி எங்காவது நாய் ஊளையிட்டால் கூட நாம்தான் வந்திருக்கிறோம் என்று புலுக ஆரம்பித்துவிடுவார்கள்!
🌴அடுத்த நாள் வீட்டுக்கு சென்று பார்த்தால்
அழுகை குறைந்து விசும்பலாகிவிட்டிருக்கும்
அதற்கு அடுத்த நாள் விசும்பலும் குறைந்திருக்கும்.
🌴இப்படி நாளாக நாளாக நம்மை கொஞ்சம் கொஞ்சமாய் மறந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிடுவார்கள்!
🌴இதில் இன்னொரு சிறப்பு செய்தி என்னன்னா
நாம் இறந்ததை யாரோ
Facebook
ல் போட
மொத்தம்
4000 likes(
விருப்பங்கள்)
அடப்பாவிகளா,
அப்போ அத்தனைபேரும் எப்போ போவான்னு wait பண்ணிட்டே இருந்தீங்களா?!
🌴இவ்ளோதாங்க வாழ்க்கை
புது status வர்றவரைக்கும் தான் பழைய status க்கு மதிப்பு!
🌴நாம வாழ்ந்த வாழ்க்கைதான் Status!
யாரையும் காயப்படுத்தாம எல்லோரும் விரும்புகிற மாதிரியான சிறந்த வாழ்க்கையாக வாழ்ந்தால்
ஏகப்பட்ட likes வரும்!
🌴அதுமட்டுமில்லாம என்னைக்காவது யாராவது அந்த சிறந்த status(வாழ்க்கை)ஐ
share
பண்ணிட்டே இருப்பாங்க
திரும்பத்திரும்ப அந்த நினைவுகள் இந்த உலகத்துல சுத்திகிட்டே இருக்கும்!
🌴ஒவ்வொரு இறப்பின் போதும் எத்தனையோ கனவுகளும் ஆசைகளும்
சேர்ந்தே புதைந்து போகின்றன!
🌴இப்படி ஒவ்வொரு நாளும் சராசரியா உலகம் முழுவதும்
70,000
பேர் உயிர்துறக்கிறார்கள்!
🌴நாளைய விடியல் நமக்கானது என்கின்ற
எந்த உத்திரவாதமும் இல்லாதபோது
நாம் ஏன் பொய்யோடும், பொறாமையோடும், பகையோடும், பாவத்தோடும் நம் வாழ்க்கையை வாழவேண்டும்?
🌴அர்த்தமுள்ள
வாழ்க்கையை வாழ்வோம் !
சீக்கிரம் எந்திரிங்க
எரிச்சிடப்போறாங்க!😁🙏
நன்றி இணையம்

‪‎அபிஷேகத்தின்_ஆற்றல்_அறிவோம் !!!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:31 AM | Best Blogger Tips


ஆலயங்களில் நடத்தப்படும் 16 வகை சோடச உபசாரங்களில் அபிஷேகமே மிக, மிக முக்கியத்துவமும் வலிமையும் வாய்ந்தது என்று ஆகமங்களில் கூறப்பட்டுள்ளது. தமிழில் திருமுழுக்கு என்று கூறப்படும் அபிஷேகத்துக்கு நம்முன்னோர்கள் 26 வகை திரவியங்களை பயன்படுத்தினார்கள்.
பிறகு அந்த திரவியங்களின் எண்ணிக்கை 18 ஆக குறைந்தது. தற்போது பெரும்பாலான ஆலயங்களில் 12 வகை திரவியங்களைக் கொண்டே அபிஷேகம் செய்யப்படுகிறது.
பொதுவாக ஒரு ஆலயம் அதிகாலை திறக்கப்பட்டதும் திருப்பள்ளி எழுச்சி முடிந்ததும் அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். நிறைய பக்தர்கள் கடவுளுக்கு நடத்தப்படும் அபிஷேகத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
12
வகை திரவியங்களை எள்எண்ணெய், பஞ்ச கவ்யம், பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், தேன், கரும்புச்சாறு, பழரசம், இளநீர், சந்தனம், தண்ணீர் என்ற வரிசையில் அபிஷேகத்துக்கு பயன்படுத்தும் வழக்கம் உள்ளது.

#‎சிலைகளுக்கு ஏன் இப்படி வித விதமான திரவியங்களால் அபிஷேகம் செய்ய வேண்டும்?
ஒரு ஆலயத்தின் மூலவர் சிலை எந்த அளவுக்கு அருள் ஆற்றல் சக்தியை வெளிப்படுத்துகிறது என்பது, அந்த சிலைக்கு செய்யப்படும் அபிஷேகங்களின் அளவையும், சிறப்பையும் பொருத்தே அமையும்.
இந்த உண்மையை சங்க காலத்துக்கு முன்பே நம் மூதாதையர்கள் கண்டுபிடித்து விட்டனர். எனவே தான் ஆலயங்களில் மூலவர் சிலைக்கு அபிஷேகம் நடத்தப்படுவதற்கு அவர்கள் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தனர். அதோடு அபிஷேக பொருட்கள் தடையின்றி கிடைக்க நிலங்களை கோவில்களுக்கு எழுதி வைத்தனர்.
அபிஷேகங்களில் பல வகைகள் இருந்தாலும் மகா அபிஷேகம், அன்னாபிஷேகம், சங்காபிஷேகம் ஆகிய மூன்றும் சிறந்ததாகும். எந்த வகை அபிஷேகம் செய்தாலும் 24 நிமிடங்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்று ஆகம விதிகளில் கூறப்பட்டுள்ளது. ஆனால் சில ஆலயங்களில் 2 நாழிகை அளவுக்கு (48 நிமிடங்கள்) அபிஷேகங்கள் செய்யப்படுவது உண்டு.
அபிஷேகத்துக்கான கால அளவு மட்டுமின்றி, அபிஷேகத்துக்கு பயன்படுத்தும் திரவியங்கள் வகுக்கப்பட்டுள்ளது.
எள் எண்ணெய்
பஞ்ச கவ்வியம்
மாவு வகைகள்
மஞ்சள் பொடி
பசும்பால்
தயிர்
தேன்
நெய்
நெல்லி முள்ளிப்பொடி
கரும்புச்சாறு
பன்னீர்
அன்னம்
வாசனை திரவிய தீர்த்தம்
அபிஷேகத்துக்கு பயன்படுத்தும் தண்ணீரில் சுத்த கந்த திரவியங்களான பாதிரிப்பூ, உத்பலம், தாமரைப்பூ, அலரிப்பூ, வெட்டி வேர் ஆகியவற்றை கலந்து தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். முன்பெல்லாம் மூல விக்கிரகத்துக்கு நடத்தப்படும் அபிஷேகத்தை யாரும் பார்க்க மாட்டார்கள்.
சந்தன அபிஷேகம், விபூதி அபிஷேகம், கலச அபிஷேகம் ஆகியவற்றை மட்டும் பார்க்க பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். சில ஆலயங்களில் ஆகமப்படி இன்றும் எந்த ஒரு அபிஷேகத்தையும் பக்தர்கள் பார்க்க முடியாது. ஆனால் பல ஆலயங்களில் இப்போதெல்லாம் பாலாபிஷேகம் உள்பட எல்லா அபிஷேகத்தையும் பக்தர்கள் காண அனுமதிக்கப்படுகிறார்கள்.
திருவண்ணாமலையில் ஈசனுக்கு நடத்தப்படும் எல்லா அபிஷேகத்தையும் பக்தர்கள் கண்டு களிக்கலாம். அபிஷேகம் செய்யப்படும்போது அந்த விக்கிரகம் அளவிட முடியாத ஆற்றலை வெளிப்படுத்தும் என்பதால்தான் அபிஷேகத்தை பார்க்க வேண்டாம் என்றார்கள்.
ஆலய கருவறையில் உள்ள கற்சிலை, பிரபஞ்ச சக்திகளை எல்லாம் ஒருங்கேப் பெற்று அதை ஆலயம் முழுவதும் பரவச் செய்து கொண்டிருப்பதை படித்து இருப்பீர்கள். அபிஷேகம் செய்யப்படும் போது மூலவர் சிலை வெளிப்படுத்தும் சக்தியானது அதாவது அருள் அலைகள் இரட்டிப்பாக உயர்ந்து விடுமாம். நம் முன்னோர்கள் இதை எப்படித்தான் கண்டு பிடித்தார்களோ... ஆனால் விஞ்ஞானிகள் இந்த உண்மையை சமீபத்தில்தான் கண்டுபிடித்து ஒப்புக் கொண்டுள்ளனர்.
நமது பழமையான ஆலயங்களில் உள்ள மூலவர் சிலைகள் அரிய மூலிகைகளால் உருவாக்கப்பட்டதாகும். அவற்றின் அடியில் சக்தி வாய்ந்த மந்திர தகடு பதித்து இருப்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த மந்திர தகடும், மூலிகையும் அபிஷேகம் செய்யும் போது அதிக ஆற்றலை வெளிப்படுத்தும். அபிஷேக தீர்த்தத்தை நம் மீது தெளித்துக் கொண்டாலும், சிறிதளவு குடித்தாலும் நமக்கு அபரிதமான புத்துணர்ச்சி கிடைப்பது இதனால்தான்.
தயிர், பால், சந்தனம், தண்ணீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யும்போது மூலவர் சிலையில் அதிக அளவில் மின் கடத்தும் திறன் ஏற்படுவதை குற்றாலம் பராசக்தி கல்லூரி ஆராய்ச்சிக் குழுவினர் சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டு பிடித்தனர். அபிஷேகம் செய்ய, செய்ய கருவறையில் உள்ள காற்று மண்டலத்தில் எதிர் மின்னூட்டங்கள் அதிகரிப்பதையும் கண்டு பிடித்தனர்.
அபிஷேகம் காரணமாக கருவறையில் உள்ள காற்றில் அதிக ஈரப்பதம் இருக்கும். ஈரப்பதத்தில் ஒளி வேகம் அதிகமாக இருக்கும். அதனால்தான் அபிஷேகத்தின் போதும் தீபம் காட்டும்போதும் கருவறை காற்று மண்டலம் அயனியாக்கப்பட்ட மூலக்கூறுகளுடன் வெளியில் வருகிறது. அது பக்தர்களுக்கு உள்ளத்தில் பலத்தை ஏற்படுத்துவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
மேலும் அபிஷேகத்தின் போது ஓம் என்று தொடங்கி குருக்கள் சொல்லும் மந்திரம் கற்சிலை மீது பட்டு வெளியில் அலையாக வரும்போது தெய்வீக ஆற்றலை கொடுக்கிறது. அபிஷேகம் செய்யப்படும்போது நேர் அயனியும் எதிர் அயனியும் காற்றில் வந்து பக்தர்கள் உடலுக்குள் சென்று புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது.
நேர் அயனியை சிவமாகவும் எதிர் அயனியை சக்தியாகவும் நம் முன்னோர்கள் உருவகப்படுத்தி, அபிஷேகம் செய்யும்போது சிவசக்தியின் திருவிளையாடல் நடப்பதாக வரையறுத்துள்ளனர். இதை கருத்தில் கொண்டே, ஆலயத்தில் எப்போதும் தெய்வீக ஆற்றல் நிரம்பி இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நம் முன்னோர்கள் கருவறையில் இருந்து அபிஷேக திரவியங்கள் நேராக கோவில் திருக்குளத்தை சென்றடைய ஏற்பாடு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு மூல மூர்த்திக்கும் ஒவ்வொருவித அபிஷேகம் மிகவும் உகந்தது. அதற்கு ஏற்ப பலன்கள் கிடைக்கும். பொதுவாக பாலாபிஷேகம் செய்வதை பெரும்பாலான பக்தர்கள் விரும்பி செய்வதுண்டு எல்லா கடவுளுக்கும் பாலாபிஷேகம் அடிக்கடி நடைபெறும்.
குறிப்பாக பிரதோஷ காலத்தில் நந்திக்கு செய்யப்படும் பல்வேறு அபிஷேகங்களில் பால் அபிஷேகம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அபிஷேகத்துக்கு கொண்டு செல்லும் பாலை, கோவிலை ஒரு தடவை சுற்றி விட்டு கொடுத்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.
‪#‎திருக்கோவில்களுக்கு நாம் செல்லும்போது சிவபெருமானுக்கு அபிஷேகப் பொருள்களும் அவற்றின் பயன்களும் என்ன? என்பது பற்றிப் பார்ப்போம்
1.
கந்த தைலம் - இன்பம்
2.
மாப்பொடி - கடன் நீக்கம்
3.
மஞ்சட்பொடி - அரசவசியம்
4.
நெல்லிப்பருப்புப்பொடி - பிணிநீக்கம்
5.
திருமஞ்சனத்திரவியம் - பிணிநீக்கம்
6.
ரசபஞ்சாமிர்தம் - முக்தி
7.
பழபஞ்சாமிர்தம் - முக்தி
8.
பால் - ஆயுள் விருத்தி
9.
பஞ்சகவ்யம் - சுத்தம், சகல பாவநீக்கம்
10.
இளவெந்நீர் - முக்தி
11.
தேன் - சுகம், சங்கீத குரல்வளம்
12.
இளநீர் - ராஜயோகம் கொடுக்கும்
13.
சர்க்கரைச்சாறு - பகைவரை அழிக்கும்
14.
கரும்புச்சாறு - ஆரோக்கியம்
15.
தமரத்தம் பழச்சாறு - மகிழ்ச்சி தரும்
16.
எலுமிச்சம் பழச்சாறு - எமபயம் போக்கும்
17.
நாரத்தம் பழச்சாறு - மந்திர சித்தி ஆகும்
18.
கொழுச்சிப் பழச்சாறு - சோகம் போக்கும்
19.
மாதுளம் பழச்சாறு - பகைமை அகற்றும்
20.
அன்னாபிஷேகம் - விளைநிலங்கள், நன்செய்தரும்
21.
வில்வங் கலந்தநீர் ( வில்வோதகம்) - மகப்பேறு தரும்
22.
தர்ப்பைப்புல் கலந்தநீர் ( குரோதகம்) - ஞானம் தரும்
23.
பன்னீர் - குளிர்ச்சி தரும்
24.
விபூதி ( திருநீறு) - சகல ஐஸ்வர்யம் தரும்
25.
தங்கம் கலந்தநீர் ( ஸ்வர்ணோதகம்) - சகல சௌபாக்கியம் கிட்டும்
26.
ரத்னம் கலந்தநீர் ( ரத்னோதகம்) - சகல சௌபாக்கியம் கிட்டும்
27.
சந்தனம் - அரசாட்சி, பெருஞ் செல்வம் கிட்டும்
28.
கோரோசணை - சகல ஆரோக்கியம், மிக்க புகழ் கிட்டும்
29.
ஜவ்வாது - சகல ஆரோக்கியம், மிக்க புகழ் கிட்டும்
30.
புனுகு - சகல ஆரோக்கியம், மிக்க புகழ் கிட்டும்
31.
பச்சைக் கற்பூரம் - சகல ஆரோக்கியம், மிக்க புகழ் கிட்டும்
32.
குங்குமப்பூ - சகல ஆரோக்கியம், மிக்க புகழ் கிட்டும்
33.
தயிர் - குழந்தைச் செல்வம் கிட்டும்
34.
சங்காபிஷேகம் - சகல பாரிஷ்டம் கிட்டும்
35.
ஸ்நபன கும்பாபிஷேகம் - சித்த சுத்தியடைந்து சிவதரிசனம் கிட்டும்
ஆகவே நாம் சிவாலயங்களுக்கு செல்லும் போது இந்த அபிஷேக பொருள்களை வாங்கி கொடுத்தும் கண்ணார அபிஷேகத்தை பார்த்தும் பிறந்த பிறவியின் பயனைப் பெறவும் என்று மனம், மொழி, மெய்களால் வாழ்த்தி மகிழ்கிறேன்

இறைவன் நினைவே இனிய காலை வணக்கம்.இந்த நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன் !! நலமுடன்!! 
நன்றி!! நன்றி!! நன்றி!! ஓம் சிவ சத்தி ஓம்
-
என்றும் அன்புடன் Mu DhanaLakshmi Chandaran


கோயிலுக்குள் வேக வேகமாக வலம் வர கூடாது என்பது ஏன்..?

மணக்கால் அய்யம்பேட்டை | 12:29 AM | Best Blogger Tips

கோயிலுக்குள் வேக வேகமாக வலம் வந்து கடவுளை வணங்கக்கூடாது என்று சாஸ்திரம் கூறுகிறது.
கோயில்களில் மூலவர் பிரார்த்தனை முடிந்ததும், பிரகார வலம் வந்து வணங்குவது வழக்கம்.
சிலர், வேலைக்குப் போக வேண்டும், என்ற நோக்கத்தில், வேக வேகமாக கோயிலை வலம் வருவார்கள்.
சிலர் ஒரு கையால் நமஸ்கரித்து விட்டு, அல்லது வாயருகே கையைக் கொண்டு வந்து முத்தம் கொடுப்பது போல் பாவனை செய்து விட்டு வேகமாக கோயிலைக் கடப்பார்கள்.
இவையெல்லாம் சாஸ்திரப்படி தவறு.
ஒரு நிறைமாத கர்ப்பிணி, எப்படி பவ்யமாக நடப்பாளோ, அந்தளவு வேகத்தில் தான் பிரகாரத்தை வலம் வர வேண்டும்.
அப்போது, அந்த தெய்வத்தின் நினைவு மட்டுமே இருக்க வேண்டும்.
கதை பேசிக்கொண்டும், சேஷ்டைகள் செய்தபடியும் கோயிலை வலம் வரக்கூடாது.
குழந்தைகள் சப்தம் செய்தால், அவர்களுக்கு பக்குவமாக எடுத்துச்சொல்லி, அமைதிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு வலம் வருவதால், முன் ஜென்ம பாவங்கள் எல்லாம் விலகி விடும்.

 நன்றி இணையம்

இன்றைய விருந்தோம்பல் டிப்ஸ்:

மணக்கால் அய்யம்பேட்டை | 12:27 AM | Best Blogger Tips

இன்றைய விருந்தோம்பல் டிப்ஸ் க்கான பட முடிவு

1. உங்கள் வீட்டில் விருந்தாளி வந்தால், குடிக்கத் தண்ணீர் வேணுமான்னு கேட்கறதுக்குப் பதிலா, உங்கள் மொபைலைச் சார்ஜ் பண்ணனுமா? அப்படி கேளுங்க!
ஆனந்தக் கண்ணீர் வந்து உங்கள் நட்பைப் பலமாக்கிக்கணும்ன்னு நினைப்பார்கள் 

2)
பிறகு, காபி/டீ/குளிர் பானம் வேணுமான்னுக் கேட்கறதுக்குப் பதிலா, உங்களுக்கு Wi-Fi password வேணுமான்னு கேளுங்க!
100%
கேரண்டி ,விருந்தாளி அப்படியே மெர்சல் ஆகிடுவார்


நல்ல வேளை , என் வீட்டில் WiFi இல்ல..
நன்றி இணையம்