இதுதான் காங்கிரஸுக்கும் பாஜகவிற்கும் உள்ள வித்தியாசம்

மணக்கால் அய்யம்பேட்டை | 10:45 PM | Best Blogger Tips


காங்கிரஸ் - 
பாகிஸ்தானில் போய் பேசினார்கள். " நீங்க எங்களுக்கு உதவுங்கள். அப்பதான் மோடியை தோற்கடிக்கலாம்."
மோடி - 
"
மிஸ்டர் நவாஸ் ஷெரீப்! நான் இப்பொழுது லாகூரில் வந்து இறங்கப் போகிறேன். உடனே வந்து என்னைப் பார்க்கவும்."
நவாஸ் ஷெரீப் - 
"
இதோ கிளம்பிட்டேன்."
நவாஸ் ஷெரீப் கார்கள் லாகூர் விமான நிலையம் விரைகின்றன......நரேந்திர மோடி கொடுத்த அதிர்ச்சியால் " RAW " உளவு அமைப்பே அதிர்ந்து போய் உள்ளது.
இதுவரை எந்த வித பாதுகாப்பும், முன்னேற்பாடு்களும் இன்றி பாகிஸ்தான் சென்ற ஒரே தலைவர் மோடிஜி தான்.
வீரம் என்பது பிறப்பில் இருந்து வருவது... 
அதெல்லாம் சந்தர்ப்பத்திற்க்காக வாழ்பவர்களிடம் வர வைக்க முடியவே முடியாது!
இரண்டு மணி நேரத்தில் பாகிஸ்தான் ஊடகங்களின் விமரிசனங்களை புரட்டிப் போட்ட தலைவர் மோடி...!
காலையில் ஆஃப்கானிஸ்தானில் பார்லிமெண்ட் கட்டிடத்தை திறந்து வைத்து பேசிய போது பாகிஸ்தானிற்கு எதிராக கொம்பு சீவும் நடவடிக்கை என்று கூவிய ஊடக வாய்கள்...
மதியம் லாகூரில் நவாஸுடன் பிறந்த நாள் விருந்து என்றவுடன் மோடியை ஒரு ராஜதந்திர நிபுணர் என்று புகழாரம்...!.........
குண்டு துளைக்காத கூண்டிற்குள் நின்றுகொண்டு வீரவசனத்தையும் மென்று முழுங்கி் பேசிக் கொண்டிருந்த காங்கிரஸ்காரனுக்கு, அப்படியெல்லாம் இல்லாமல் தைரியமாய் என் நாட்டிற்குள் வந்து எவனடா என்னை என்ன செய்து விடுவான் என தைரியமாய் திறந்த மேடையில் நின்று தேசியக் கொடியை ஏற்றும் நரேந்திர மோடியைக் கண்டால் பொறாமை வருவதும்...
அமெரிக்கா சென்று சொன்ன இடத்தில் கையெழுத்து போட்டு விட்டு, கொடுத்த சாப்பாட்டை தின்றுவிட்டு அமெரிக்க அதிபரிடம் ஆட்டோகிராஃப் வாங்கி நாட்டை கேவலப் படுத்திய காங்கிரஸ்காரனுக்கு நீங்க சொல்ற இடத்திலெல்லாம் கையெழுத்து போட முடியாது, நாங்க சொல்ற மாதிரி மாத்துங்க என ஆன்மையுடன் சொல்லும் நரேந்திர மோதியைக் கண்டால் பொறாமை ஊறுவதும்...
10 ஆண்டுகளாக பாக்கிஸ்தானை எதிர்த்து அறிக்கை விடுவது கூட சிறுபான்மையின முஸ்லிம்களின் ஓட்டு வங்கியை பாதிக்குமோ என நம் நாட்டின் ராணுவ வீரர்களை சாகடிக்க விட்டு வேடிக்கை பார்த்த காங்கிரஸுக்கு, ஒரு குண்டு நம் எல்லையில் வீழ்ந்தால் 30 குண்டுகளை பாக்கிஸ்தானை நோக்க உத்தரவிடும் நரேந்திரமோதியைக் கண்டால் பொறாமை வருவதும்..
ராஜதந்திரம் என்றால் கட்சித் தலைவியின் முந்தனையை பிடித்துக்கொண்டு அந்தம்மாள் சொலும் உளரல்களைக்கேட்டு நடந்து கொள்வதுதான் என இருக்கும் காங்கிரஸ்காரனுக்கு, உண்மையான ராஜரீக நடவடிக்கைகள் நாட்டில் நடப்பதைக் கண்டால் பொறாமை வருவதும் இயற்கையே..
உன் நாட்டிற்குள் நட்புடன் வருகிறேன் எனச் சொல்லி விட்டு எதிரி நாட்டுக்குள் காலை வைக்கும் தைரியம் வேண்டும்.
அதையெல்லாம் மோடியை அகற்ற உதவி செய்யுங்கள் எனக்கேட்கும் மூளையற்ற, பதவி வெறி பிடித்த காங்கிரஸ்காரன் மூளைக்கு எட்டாத விஷயங்கள்..
எனவே அவர்களின் கட்சித்தலைவி சொல்வதைக் கேட்டுக் கொண்டு மீடியாவில் உளரிக் கொட்டுவதே அவர்கள் இப்போதைக்கு செய்ய வேண்டிய முக்கியமான பணி.
அதைச் செய்யுங்கள் காங்கிரஸ் கட்சியின் அடிமைகளே....!
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரிப்பின் தாயாரை சந்தித்த மோடி அவர் காலைத் தொட்டு வணங்கினார்.இதுவே தாய்மையை வணங்கும் நம் பாரதப் பண்பாடு.

நன்றி இணையம் 

கோவை பரளிக்காடு

மணக்கால் அய்யம்பேட்டை | 10:41 PM | Best Blogger Tips

கோவை பரளிக்காடு உங்களை அன்புடன் வரவேற்கிறது
கோவை - மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள காரமடையில் இருந்து மஞ்சூர் செல்லும் சாலையில் உள்ளது காரமடை வனப்பகுதி. இப்பகுதியில் மலைவாழ் மக்களுடன் இணைந்து சுற்றுச்சூழல் சுற்றுலாவை நடத்தி வருகிறது காரமடை வனத்துறை. சனி, ஞாயிறுகளில் அனுமதி. 20 பேருக்கு குறையாமல் முன்பதிவு செய்தால், எந்த நாளிலும் அனுமதிப்பார்கள். பரிசல் பயணம், மதிய உணவு, ஆற்று குளியலுக்கு பெரியவர்களுக்கு ரூ.300, 15 வயதுக்கு உட்பட்ட சிறியவர்களுக்கு ரூ.200 கட்டணம். கோவையில் இருந்து காரமடை வழியாக இரண்டரை மணி நேர பயணத்தில் பரளிக்காடு பரிசல் துறையை அடையலாம். காலை 10 மணி அளவில் பூச்சிமரத்தூரில் உள்ள பரிசல்துறையில் தயாராக இருக்க வேண்டும். அங்கு செல்ல பஸ் வசதி இல்லை. பைக், காரில் செல்லலாம்.
வனத்துறையினர், அப்பகுதி மலைவாழ்மக்கள் வரவேற்பார்கள். சுக்கு காபி கொடுத்து உபசரிப்பார்கள். பரிசல் கரையில் இயற்கை எழிலோடு பெரிய மரங்களும், நிழலும் ஆசுவாசப்படுத்தும். அங்கிருந்தவாறு பரிசல் நடக்கும் பில்லூர் ஆற்றின் அழகை, இருபுறமும் மலைகள் பசுஞ்சுவராய் காட்சியளிப்பதை ரசிக்கலாம். 30&க்கும் அதிகமான பரிசல்கள் உள்ளன. ஒரு பரிசலில் 4 பேர் வீதம் செல்லலாம். 2 மணி நேரம் பரிசலில் பயணிக்கலாம். மலையடிவாரங்களில் தற்காலிகமாக இறங்கி ஓய்வெடுக்கலாம். வனப்பகுதியில் காலாற நடக்கலாம். அங்குள்ள மலைவாழ் குடியிருப்புகளை பார்வையிடலாம். சலிக்க, சலிக்க மேற்கொண்ட பரிசல் பயணம் முடிந்து பரிசல் கரையில் இறங்கினால் மலைவாழ் மக்கள் சமைத்த உணவு தயாராக இருக்கும்.
அதில் களி உருண்டை, நாட்டுக்கோழி குழம்பு, மீன் குழம்பு, வெஜிடபிள் பிரியாணி, கேசரி, சப்பாத்தி, கீரை மசியல், வெங்காய தயிர்பச்சடி, தயிர் சாதம், அப்பளம், ஊறுகாய் மினரல் வாட்டர் வழங்குவார்கள். உணவின் ருசி நம்மை கிறங்கடிக்கும். பரிசல் கரையில் உள்ள மர கயிறு ஊஞ்சலில் விளையாடி மகிழலாம்.அங்கிருந்து மாலை 3 மணியளவில் வனத்துறையினர் காரமடை செல்லும் வழியில் 20 கி.மீ. தூரத்தில் உள்ள பவானி ஆற்றுக்கு அழைத்து செல்வார்கள். கூழாங்கற்கள் நிறைந்த ஆற்றின் நீர் குளிர்ச்சியானது. மூழ்கி எழுந்தால் மொத்த களைப்பும் பறந்துபோய் புத்துணர்ச்சி வந்துவிடும்.
ஆற்றில் 5 மணி வரை ஆட்டம் போடலாம். பின்னர் வனத்துறையினர் வழியனுப்பி வைப்பார்கள். பரிசல் பயணம், ஆற்றுக்குளியல் வனத்துறையினரின் கண்காணிப்பில் நடப்பதால் தைரியமாக செல்லலாம். பரளிக்காடு சுற்றுச்சூழல் வனச்சுற்றுலாவை குடும்பத்தோடு குதூகலிக்கலாம். வன அதிகாரியை 90470 51011 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு 3 நாள் முன்பு முன்பதிவு செய்ய வேண்டும்.

 Thanks to 
நம்ம கோயம்புத்தூர்

எண் ஏழின் சிறப்புக்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 10:39 PM | Best Blogger Tips
 
எண் ஏழு (Number 7) பெருமை
ஏழு என்பது, வேத மரபில் ஒரு முக்கிய எண்.
ஏழு என்பதற்கு முழுமை அல்லது பரிபூரணம் என பொருள்படும்.
ஏழு என்பது இந்தியப் பண்பாட்டில் சிறப்பிடம் பெற்ற எண் ஆகும்.
காலத்தைக் கணிக்கும் முறையில் எண் ஏழு பழங்காலமக்களிடையே மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்துள்ளது.
ஏழு என்பது தமிழ் எண்களில் '' என்று குறிக்கபடுகிறது.
எண் ஏழின் சிறப்புக்கள்:
1. புதிய உலக அதிசயங்கள் மொத்தம் ஏழு, இது அறிவிக்கப்பட்ட தேதி 07/07/2007
2. எழு குன்றுகளின் நகரம் ரோம்
3. வாரத்திற்குமொத்தம் ஏழு நாட்கள்
4. மொத்தம் ஏழு பிறவி
5. ஏழு சொர்க்கம்(குரான்)
6. ஏழு கடல்கள்
'
கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகுத்தி குறுகத் தெரித்த குறள்' - ஒளவையார்.
7. வானவில்லின் நிறங்கள் (VIBGYOR)
8. ஏழு வானங்கள். (Qur'an)
9. ஏழு முனிவர்கள் (Rishi)
10. ஏழு ஸ்வரங்கள் (ச,ரி,,,,,நி)
11. ஏழு கண்டங்கள் (Europe, Asia, Africa, North America, South America, Australia, and Antarctica)
12. ஆதி மனிதன் Adam மற்றும் Eve ஆகியோரின் பெயர்களில் உள்ள மொத்த எழுத்துக்களின் கூட்டுத்தொகையின்
எண்ணிக்கை ஏழு
13. ஒவ்வொரு திருகுறளிலும் உள்ள சீர்கள் ஏழு. அதுமட்டுமா, ஒன்றே முக்கால் அடிக் குறளைக் காற் காற் பகுதியாக வெட்டிப் பாருங்கள் அதுவும் ஏழுபகுதிகளாக வரும்.
14. கண்ணுக்கு புலப்படக் கூடிய கோள்களின் எண்ணிக்கை ஏழு (Sun, Moon, Mercury, Mars, Jupiter, Venus and Saturn)
15. திருக்குறளில் மொத்தம் 1330 குறட்கள், 133 அதிகாரங்கள் உள்ளன. அதனுடைய கூட்டுத்தொகையும் ஏழு.
16. மேலுலகம் ஏழு
17. கீழுலகம் ஏழு
நுண்ணறிவாய் உலகாய் உலகு ஏழுக்கும்
எண்ணறிவாய் நின்ற எந்தை பிரான் தன்னைப்
பண் அறிவாளனைப் பாவித்த மாந்தரை
விண் அறிவாளர் விரும்புகின்றாரே - திருமூலர் பாடல்
18. திருக்குறளில் "கோடி' என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது
19. மொத்தம் ஏழு தாதுக்கள்
20. ஏழு செவ்விய போரியல் நூல்கள் - சீனா
21. ஏழானது மிகப்பெரிய ஓரிலக்கா பகா எண் (Prime Number) ஆகும்.
22. ஏழு புண்ணிய நதிகள்
23. இராமாயணத்திலுள்ள மொத்த காண்டங்களின் எண்ணிக்கை ஏழு
24. அகப்பொருள் திணைகள் ஏழு
25. புறப்பொருள் திணைகள் ஏழு
26. சூரிய பகவானின் ரதத்திலுள்ள குதிரைகளின் எண்ணிக்கை ஏழு
27. கடை ஏழு வள்ளல்கள்
28. சப்த நாடி (சமஸ்கிருதத்தில் சப்த என்றால் ஏழு)
29. "திருவள்ளுவர்" - எழுத்துக்களின் கூட்டுத்தொகையும் ஏழுதான்
30. ஏழு அதிர்ஷ்ட தெய்வங்கள் - ஜப்பான்
31. ஏழு மலையான் - திருப்பதி, ஆந்திரா
32. மனிதனுடைய தலையிலுள்ள ஓட்டைகளின் எண்ணிக்கை ஏழு
33. உடலை கட்டுப்படுதும் சக்கரங்கள் ஏழு.
34. பெண்களின் பல்வேறு பருவங்கள் ஏழு (பேதை,பெதும்பை,மங்கை,மடந்தை,அரிவை,தெரிவை,
பேரிளம் பெண்)

 நன்றி இணையம்

வெற்றிப்பாதை!!

மணக்கால் அய்யம்பேட்டை | 10:38 PM | Best Blogger Tips


🌺
🌺💐💐💐🌺🌺
🌹வெற்றிப்பாதை!!
🌺🌺💐💐💐🌺🌺
🐝 ஒற்றைக்காலில் நின்று தவம் செய்தாலும் மீன் கிடைக்கும் வரையில் முயற்சியை கைவிடாத வெண்கொக்கு!
🌺🌺💐💐💐🌺🌺
🐝 ஆயிரக் கணக்கினில் அடி வாங்கினாலும் சிலையாகும் வரையில் உளியை உறவாக எண்ணும் கருங்கல்!
🌺🌺💐💐💐🌺🌺
🐝 கால்களில்லாத போதிலும் பாறைகளில் மோதியும் படுகுழியில் விழுந்து கடலைச் சேரும் குறிக்கோள்களை கடத்திவிடாத நதி!
🌺🌺💐💐💐🌺🌺
🐝 கைகளை துண்டித்தாலும் தலையைத் தறித்தாலூம் நிழல் பரப்பும் எண்ணத்தில் மீண்டும் தழைக்கின்ற மரம்!
🌺🌺💐💐💐🌺🌺
🐝 இரும்பு முள்ளில் குத்தினாலூம் ரணத்தையும் கூட ரசித்துக்கொண்டே வண்டியிழுக்கும் எருதுகள்!
🌺🌺💐💐💐🌺🌺
👍கனவு நிறைவேறும்வரை கலைத்து விடாதே முயற்சியை ஏனெனில்..
🌺🌺💐💐💐🌺🌺
👉முயற்சி மட்டுமே முன்னேற்ற மாளிகைக்கு முதலிடமாகும்!
🌺🌺💐💐💐🌺🌺
🌹வெற்றிப்பாதை!!
🌺🌺💐💐💐🌺🌺
🐝 உருக்கப்படும் தங்கம் தான் உரு மாறி நகையாகிறது!
🌺🌺💐💐💐🌺🌺
🐝 அறுக்கப்படும் மரம் தான் அழகான ஜன்னலாகிறது!
🌺🌺💐💐💐🌺🌺
🐝 இடிக்கப்படும் நெல் தான் உமி நீங்கி அரிசியாகிறது!
🌺🌺💐💐💐🌺🌺
🐝 துவைக்கப்படும் துணி தான் தூய்மை பெற்று வெண்மையாகிறது!
🌺🌺💐💐💐🌺🌺
🐝 ஏற்றப்படும் விளக்கு தான் இருள் நீக்கி ஒளி தருகிறது!
🌺🌺💐💐💐🌺🌺
🐝 தட்டப்படும் தந்தி தான் தம்புராவில் இசை தருகிறது!
🌺🌺💐💐💐🌺🌺
🐝 செதுக்கப்படும் பளிங்கு தான் செம்மை பெற்றுச் சிலையாகிறது!
🌺🌺💐💐💐🌺🌺
🐝பதப்படுத்தப்படும் தோல் தான் பயனுள்ள காலணியாகிறது!
🌺🌺💐💐💐🌺🌺
🐝 மிதிக்கப்படும் மண் தான் மிருதுவான பானையாகிறது!
🌺🌺💐💐💐🌺🌺
🐝 புதைக்கப்படும் விதை தான் மண்ணை விட்டு மரமாக எழுகிறது!
🌺🌺💐💐💐🌺🌺
🐝தோற்றுப்போகும் மனிதன் தான் துணிவு பெற்று வீரனாகிறான்!
🌺🌺💐💐💐🌺🌺
🐝 தொடர்ந்து முயலும் வீரன் தான் சரித்திரம் படைத்தது வாழ்கிறான்!
🌺🌺💐💐💐🌺🌺
👉முயல்வோம்..
வெற்றி பெறுவோம். 🌺🌺💐💐💐🌺🌺

*பைரவரை வணங்கினால்* *எதிர்ப்பு தவிடுபொடியாகும்!*

மணக்கால் அய்யம்பேட்டை | 10:18 PM | Best Blogger Tips

*பைரவரை வணங்கினால்*
*எதிர்ப்பு தவிடுபொடியாகும்!*
சுத்தம் செய்யச் செய்ய அசுத்தமும் வந்துகொண்டே இருக்கும். வீட்டில் ஒட்டடை இருக்கிறதே என்று ஒட்டடைக்குச்சி எடுத்து, ஒட்டடைகளைச் சுத்தம் செய்வோம். ஆனால் பதினைந்து நாள் கழித்து மீண்டும் ஒட்டடை பல்லிளிக்கும். திரும்ப வருகிறதே என்கிற காரணத்தால், ஒட்டடையை அப்படியே விட்டுவிடுகிறோமா என்ன?
துவைத்து, அயர்ன் செய்து போட்டுக் கொள்கிற சட்டை மாலையிலேயே அழுக்காகிவிடும். மீண்டும் துவைக்கிறோம். அயர்ன் செய்கிறோம். உடுத்தி அழகு பார்க்கிறோம். மீண்டும் அழுக்காகிறது. இதுதான் வாழ்க்கையின் கணக்கு.
கடவுளை வணங்குவதன் தாத்பர்யமும் பலமும் பலனும் கூட இப்படித்தான். கடவுளை வணங்குகிறோம். இருக்கிற கஷ்டங்களெல்லாம் எங்கோ பறக்கிறது. பதவி, உத்தியோகம், வருமானம் என வாழ்க்கைத் தரம் உயர, அங்கே எதிர்ப்பு, எதிரி என உருவாக, மீண்டும் ஏதோவொரு சிக்கல், ஏதோவொரு பிரச்னை. எப்படியோ வருகிறது துக்கம்.
இந்த எதிர்ப்பில் இருந்து மீண்டும் வருவதற்குத்தான் காலபைரவ வழிபாடு கைகொடுக்கிறது. எதிரியை துவம்சம் செய்வதற்காகத்தான் காலபைரவர், தன் சந்நிதிக்கு வருபவர்கள் யார் என்று காத்திருக்கிறார்.
இன்று அஷ்டமி. தேய்பிறை அஷ்டமி. காலபைரவருக்கு உரிய அருமையான நாள். சிவாலயத்துக்குச் செல்லுங்கள். ஞாயிற்றுக்கிழமைதான். விடுமுறை நாள்தான். குறிப்பாக, மாலையில் செல்லுங்கள். இன்று மாலை 4.30 முதல் 6 மணி வரை ராகுகால வேளை. பல சிவாலயங்களில், காலபைரவருக்கு ராகுகாலத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இதில் கலந்து கொள்ளுங்கள். பைரவர் முன்னே ஒருமித்த மனத்துடன் நில்லுங்கள்.
உங்களால் முடிந்த அளவுக்கு அரளிப்பூச்சரங்களை வழங்குங்கள். இன்னும் முடியும் என்றால், தயிர்சாதம் நைவேத்தியம் வழங்குங்கள். குடும்பத்துடன் சென்று, குடும்பம் நன்றாக சீரும் சிறப்புமாக இருக்கவேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள். 
எதிர்ப்புகள் அகலும். தடைகள் விலகும். எதிரிகள் தவிடுபொடியாவார்கள். உங்கள் வீட்டில் தடைப்பட்ட காரியங்கள் யாவும் இனிதே நடைபெறும். உத்தியோகம் சிறக்கும். தொழில் விருத்தியாகும். லாபம் பெருகும். சந்தோஷம் இரட்டிப்பாகும். உற்சாகம் கரைபுரண்டோடும்.
ஒற்றுமை மேலோங்கும். இவையெல்லாம் இன்னும் இன்னும் வளரச் செய்யும். வாழையடிவாழையென தழைக்க வைக்கும். பைரவ வழிபாடு, மகத்துவமானது. மறந்துவிடாதீர்கள். தேய்பிறை அஷ்டமி வழிபாடு, உங்களை வளர்ச்சிப்படுத்தும். வளமாக்கும் என்பது உறுதி!
நன்றி 
*_- வி.ராம்ஜி(MyTemple team)_*