லேப்டாப்பை பாதுகாப்பாக வைத்து இருப்பது

மணக்கால் அய்யம்பேட்டை | 2:14 PM | Best Blogger Tips

 
நீங்கள் உங்கள் லேப்டாப்பை பாதுகாப்பாக நீண்டநாள் பாவனையுடன் வைத்திருக்க விரும்புகிறீர்களா? எந்த நேரமும் லேப்டாப் பராமரிப்பு பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்கிறீர்களா? எப்படி முழுமையான பாதுகாப்பை பெறுவது என்று தேடிக்கொண்டிருக்கிறீர்களா? இதோ உங்களுக்கான தீர்வு.

சாதாரண Desk Top கணினிகளுடன் ஒப்பிடுகையில் லேப்டாப்களின் பராமரிப்பு அத்தியாவசியமானதும்  சிறிது கடினமானதும் கூட. இன்று அநேகமானோர் லேப்டாப்பை பயன்படுத்துகிறார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் லேப்டாப்பை கையாள்வதற்கான அடிப்படை வழிகளை கூட பின்பற்றுவதில்லை. அநேகமாக பெரும்பாலானவர்கள் லேப்டாப்பை வெளியில் எடுத்துச்சென்றுதான் பாவிக்கிறார்கள். அப்படியிருக்கும்போது அதற்குரிய சரியான பாதுகாப்பை கொடுக்காவிட்டால், அந்த லேப்டாப்பின் பாவனை காலத்தை இழக்கவேண்டி இருக்கும். இங்கு லேப்டாப் பாதுகாப்பிற்கான சில வழிகளை தருகிறேன்.

Over Heat பிரச்சினை

எப்பொழுதும் உங்கள் லேப்டாப் Over Heat ஆகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். வெப்பமான பிரதேசங்களில் அதிக நேரம் பாவிப்பதையும் தவிருங்கள். இப்படியான சம்பவங்களால் பாட்டரி பழுதடைய கூடிய சந்தர்ப்பங்கள் உள்ளன. அதோடு அநேகமான சந்தர்ப்பங்களில் ஹார்ட் டிஸ்க் மற்றும் சில Internal parts ஐயும் பழுதடைய செய்துவிடும். சில வேளைகளிக் ஹார்ட் டிஸ்க் கிராஷ் ஆகி சேமிக்கப்பட்டிருந்த தரவுகள் அனைத்தும் அழிந்துவிடும். ஆகவே லேப்டாப்பை வெளியில் எடுத்து செல்லமுன்னர் சுற்று சூழல் பற்றி அதிக கவனமெடுங்கள்.

1.   குளிரூட்டப்பட்ட அறைகளில் (Air conditioned) இருந்து சட்டென சாதாரண வெப்ப நிலையுள்ள பகுதிக்கு எடுத்து வராதீர்கள்.
2.   அப்படி மாறுபட்ட வெப்பநிலையுள்ள பிரதேசத்துக்கு மாற்றவேண்டிய தேவை ஏற்பட்டால் லேப்டாப்பை ஆஃப் செய்துவிட்டு எடுத்து செல்லுங்கள்.
3.   வெப்பநிலையான பிரதேசங்களில் ( சாதாரன வெப்பநிலையில் கூட) 2 மணித்தியாலங்களுக்கு மேலாக பாவிப்பதை தவிருங்கள்
4.   எங்கு சென்றாலும் லேப்டாப்புடன் ஒரு பொலுத்தீன் பையை எடுத்து செல்லுங்கள். பயணங்களின் போது லேப்டாப்பின் மீது நீர் படுவதை தவிர்க்கமுடியும்.
5.   Cool pad ஐ பாவிப்பது நல்லது. 2 மணிநேரத்துக்கு அதிகமாக பாவிக்கவேண்டியிருந்தால் Cool Pad ஐ உபயோகியுங்கள். லேப்டாப்பின் Heat ஐ ஓரளவிற்கு குறைக்கும்
6.   அவன் (Microwave Ovens), டிவிடி ப்ளேயர், டி.வி ஏனைய இலத்திரணியல் உபகரணங்களுக்கு அருகில் லேப்டாப்பை எடுத்து செல்வதை முற்றாக தவிருங்கள். இவற்றில் இருந்து வரும் காந்த சக்தி லேப்டாப்பின் ஹார்ட் டிஸ்கை நிச்சயம் பாதிக்கும்
7.   லேப்டாப்பை ஆஃப் செய்து ஒரு நிமிடத்துக்குள் மறுபடியும் ஆன் செய்யாதீர்கள். ஆகக்குறைந்தது 2 நிமிட இடைவெளியையாவது பேணுங்கள்.
8.   லேப்டாப் மீது நீர் படவேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டால் ஈரத்தன்மை காயும் வரை லேப்டாப்பை ஆன் செய்வதை தவிருங்கள். ஈரத்துடன் ஆன் செய்வதால் short circuit ஏற்பட வாய்ப்புள்ளது.
9.   அளவுக்கதிகமாக லேப்டாப்பை சார்ஜ் செய்யாதீர்கள். ஆரம்பத்தில் AC அடாப்டரை பழுதுபடுத்தும். பின்னர் காலப்போக்கில் லேப்டாப்பின் Internal Parts ஐ பாதிக்கும்
10. அதிக மழைபொழிவின் போது சார்ஜ் இடுவதை தவிருங்கள். வீட்டில் இருந்தால் UPS மூலம் சார்ஜ் இட முயற்சியுங்கள்.

பாட்டரி பாதுகாப்பு

பலர் ஏனைய பாதுகாப்பு விடயங்களில் கவனம் செலுத்தினாலும் பாட்டரி விடயத்தில் கவனம் செலுத்த தவறுகின்றனர். இதனால் பாட்டரி குறுகிய காலத்துக்குள்ளேயே செயலிழந்து போகிறது. இதை தடுப்பதற்கு

1.   லேப்டாப்பை சார்ஜ் செய்யும்போது ஒருபோதும் பயன்படுத்தாதீர்கள்
2.   சார்ஜ்ஜிங் முழுவதுமாக முடியும்வரை காத்திருங்கள். வழக்கமாக 2 தொடக்கம் 3 மணித்தியாலங்களில் முழுவதுமாக சார்ஜ் ஆகிவிடும்
3.   சூரிய வெளிச்சமுள்ள இடங்களில் பாட்டரியை வெளியே எடுக்காதீர்கள்
4.   லேப்டாப்பையோ அல்லது பாட்டரியையோ வெப்பமுள்ள இடங்களில் வைக்காதீர்கள்.


மேலே குறிப்பிட்டவை பாட்டரியை பாதுகாப்பதற்கான External வழிகள். இப்போது சில Internal முறைகளை பார்ப்போம்

1.   Wi-fi,  Bluetooth போன்றவற்றை பாவிக்காதபோது ஆஃப் செய்துவிடுங்கள்
2.   பாட்டரி சார்ஜ் 50 % இற்கும் குறைவாக இருக்கும்போது High Resolution கொண்ட வீடியோ கேம்ஸ் விளையாடாதீர்கள். இப்படியான கேம்ஸ் பட்டரியை இரு மடங்கு வேகமாக சார்ஜ் ஐ குறைக்கும்
3.   USB port பட்டரி Life ஐ குறைக்கும். ஆகவே USB Mouse, Joystick,  Pen Drive போன்றவற்றை பாவிக்காத நேரங்களில் அகற்றிவிடுங்கள்.
4.   லேப்டாப் Screen ஐ மாத்திரம் ஆஃப் செய்யும் மென்பொருள்களை உபயோகித்து தேவையற்ற நேரங்களில் Screenஐ ஆஃப் செய்துவிடுங்கள். TurnOffMonitor 1.0  இந்த மென்பொருளை நிறுவி Shift+F1 ஐ உபயோகித்து Screen ஐ ஆஃப்/ ஆன் செய்துகொள்ளலாம்
5.   தேவையில்லாதபோது சிடி ட்றைவில் உள்ள சிடிக்களை அகற்றிவிடுங்கள்
6.   Screen Server களை உபயோகிப்பதை தவிருங்கள்
7.   முக்கியமாக Screen இன் Brightness குறைத்து வையுங்கள்



மூட்டுவலிக்குரிய மருத்துவக் குறிப்புக்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:33 PM | Best Blogger Tips
மூட்டுவலிக்குரிய மருத்துவக் குறிப்புக்கள்:-

ஒருவருக்கு முதுமை வந்துவிட்டால் அங்கே மூட்டு வலியும் சேர்ந்து ஆரம்பித்த விடுகின்றது.

இது உடம்பில் இடுப்புமூட்டு, கால்மூட்டு, தோள்பட்டை, கழுத்துப் போன்ற பகுதிகளில் இந்த வலியை உணர முடியும்.


இந்த மூட்டு வலிக்கு முதன்மைக் காரணமாக முதுமை இருந்தாலும் உடலுக்கு ஒத்துக் கொள்ளாத உணவுகளை அடிக்கடி சாப்பிடுவது, அதிக குளிர்ச்சி மற்றும் வெப்பநிலை, அதிக நேரம் நடத்தல் அல்லது அதிக நிறை கொண்ட பொருட்களைபத் தூக்குதல், அதிகமாக உடற்பயிற்ச்சி செய்தல், அல்லது எந்தவித உடற்பயிற்சியும் செய்யாமல் இருப்பது நீண்ட நாட்களாக உடல் நோய்களால் பாதிக்கப்பட்டு இருப்பது, எலும்பு மூட்டுக்களில் ரத்தம் உறைந்து போய் காணப்படுவது ஆகியவையும் பிற காரணங்களாக அமைகின்றன.

மருத்துவக் குறிப்புக்கள்.

கரட், பீட்ரூட் ஆகியவற்றை பச்சையாக உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

காய்கறிச் சூப் அசைவ சூப் அடிக்கடி சாப்பிடுங்கள்.

எந்த வாழைப்பழமாக இருந்தாலும் அதை தினமும் சாப்பிடும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவும்.

கல்சியம் அதிகம் உள்ள பால் சார்ந்த பொருட்கள் மற்றும் மீன் உணவை அடிக்கடி எடுத்துக் கொள்ளங்கள்.

நடைப்பயிற்சி அவசியமான ஒன்றுதான் ஆனால் அது அளவோடுதான் இருக்க வேண்டும். அதேபோல் அளவான உடற்பயிற்சி செய்வதும் நன்மை தரும்.

காரம் நிறைந்த எண்ணெய்யில் வறுத்த உணவுகள், போப்பி, பால் சாப்பிடுவதை முடிந்தளவு தவிருங்கள்.

உடல் நலத்தைக் காக்க அக்கறை எடுப்பது போல உங்கள் மனதையும் சுகமாய் வைத்திருக்க முயன்றிடுங்கள்.

அதாவது, மனதில் தேவையில்லாத விஷயங்களை போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம். தேவையில்லாமல் டென்ஷன் ஆகவேண்டாம்.

இவற்றை பின்பற்றிக் கொண்டு வந்தால் உங்களுக்கு வர எட்டிப்பார்க்கும் மூட்டுவலி தானாக மறைந்துவிடும்ஒருவருக்கு முதுமை வந்துவிட்டால் அங்கே மூட்டு வலியும் சேர்ந்து ஆரம்பித்த விடுகின்றது.

இது உடம்பில் இடுப்புமூட்டு, கால்மூட்டு, தோள்பட்டை, கழுத்துப் போன்ற பகுதிகளில் இந்த வலியை உணர முடியும்.


இந்த மூட்டு வலிக்கு முதன்மைக் காரணமாக முதுமை இருந்தாலும் உடலுக்கு ஒத்துக் கொள்ளாத உணவுகளை அடிக்கடி சாப்பிடுவது, அதிக குளிர்ச்சி மற்றும் வெப்பநிலை, அதிக நேரம் நடத்தல் அல்லது அதிக நிறை கொண்ட பொருட்களைபத் தூக்குதல், அதிகமாக உடற்பயிற்ச்சி செய்தல், அல்லது எந்தவித உடற்பயிற்சியும் செய்யாமல் இருப்பது நீண்ட நாட்களாக உடல் நோய்களால் பாதிக்கப்பட்டு இருப்பது, எலும்பு மூட்டுக்களில் ரத்தம் உறைந்து போய் காணப்படுவது ஆகியவையும் பிற காரணங்களாக அமைகின்றன.

மருத்துவக் குறிப்புக்கள்.

கரட், பீட்ரூட் ஆகியவற்றை பச்சையாக உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

காய்கறிச் சூப் அசைவ சூப் அடிக்கடி சாப்பிடுங்கள்.

எந்த வாழைப்பழமாக இருந்தாலும் அதை தினமும் சாப்பிடும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவும்.

கல்சியம் அதிகம் உள்ள பால் சார்ந்த பொருட்கள் மற்றும் மீன் உணவை அடிக்கடி எடுத்துக் கொள்ளங்கள்.

நடைப்பயிற்சி அவசியமான ஒன்றுதான் ஆனால் அது அளவோடுதான் இருக்க வேண்டும். அதேபோல் அளவான உடற்பயிற்சி செய்வதும் நன்மை தரும்.

காரம் நிறைந்த எண்ணெய்யில் வறுத்த உணவுகள், போப்பி, பால் சாப்பிடுவதை முடிந்தளவு தவிருங்கள்.

உடல் நலத்தைக் காக்க அக்கறை எடுப்பது போல உங்கள் மனதையும் சுகமாய் வைத்திருக்க முயன்றிடுங்கள்.

அதாவது, மனதில் தேவையில்லாத விஷயங்களை போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம். தேவையில்லாமல் டென்ஷன் ஆகவேண்டாம்.

இவற்றை பின்பற்றிக் கொண்டு வந்தால் உங்களுக்கு வர எட்டிப்பார்க்கும் மூட்டுவலி தானாக மறைந்துவிடும்.
 
Thanks to FB Karthikeyan Mathan
 

உடல் நலம் காப்போம்..! நோயின்றி வாழ்வோம்..!!

மணக்கால் அய்யம்பேட்டை | 1:14 AM | Best Blogger Tips

உடல் நலம் காப்போம்..! நோயின்றி வாழ்வோம்..!!

தேங்காய் எண்ணெயின் பயன்கள் பல..

தென்னை மரம் என்றாலே அது பல வகைகளில் மனிதனுக்கு உபயோகமாக உள்ளது.

அதிலும் தேங்காயில் இருந்து பெறப்படும் தேங்காய் எண்ணெய் மனித வாழ்க்கையோடு ஒன்றிப்போன ஒரு விஷயமாகும்.

பொதுவாக நமது தலைச் சருமத்தைப் பாதுகாக்க அடிப்படையான விஷயம் என்றால் அது தேங்காய் எண்ணெய் தான்.

வறண்ட சருமத்திற்கு தேங்காய் எண்ணெய்தான் மிகச் சிறந்த மருந்தாகும்.

குளிர் காலத்தில் பொதுவாக அனைவரது சருமமும் வறண்டு போய்விடும்.

அந்த சமயத்தில் கை, கால்களில் தேங்காய் எண்ணெய் தடவுவது நல்லது.

வெப்பத்தால் பாதிக்கப்படும் சருமத்திற்கு அருமருந்தாக இருப்பது தேங்காய் எண்ணெய் தான்.

புண்களில் நீர்த்தன்மையை அகற்றி அது விரைவாக ஆறுவதற்கு தேங்காய் எண்ணெய் பயன்படுகிறது.

தலை முடியின் வளர்ச்சிக்கு பேருதவியாக இருப்பது தேங்காய் எண்ணெய்.

தேங்காய் எண்ணெயை தடவ பிடிக்காதவர்கள் கூட, இரவில் தேங்காய் எண்ணெய் வைத்து காலையில் தலைக்குக் குளித்து விடலாம்.

உதடுகள் உலர்ந்து போகாமல் இருக்க உதவும் நல்ல லிப் பாம் ஆக இருப்பதும் தேங்காய் எண்ணெய் தான்.

தேங்காய் எண்ணெய் அல்லது தேங்காய் விழுதை முகத்திற்குப் பயன்படுத்தலாம்.

நல்ல பலனை அளிக்கும்.

தலைப் பொடுகை நீக்க, தேங்காய் எண்ணெயுடன் சில சொட்டு எலுமிச்சை சாறை விட்டு அதை வைத்து தலைக்கு மசாஜ் செய்யுங்கள்.

சிறிது நேரம் ஊறவிட்டு பிறகு தலைக்கு குளியுங்கள். இவ்வாறு ஒரு வாரத்தில் 2 முறை செய்தால் பொடுகு நீங்கிவிடும்.

சளித் தொந்தரவு உள்ளவர்கள், தேங்காய் எண்ணெயை நன்கு சூடாக்கி இறக்கி அதில் ஒரு சிறிய கட்டி கற்பூரத்தைப் போட்டு வெதுவெதுப்பாக எடுத்து நெஞ்சுப் பகுதிகளில் தடவினால் நிவாரணம் கிடைக்கும்.

வறண்ட சருமம் மற்றும் வறண்ட கூந்தலுக்கு தேங்காய் எண்ணெய் நன்மை அளிக்கும்.

தேங்காய் எண்ணெயின் பயன்கள் பல..

தென்னை மரம் என்றாலே அது பல வகைகளில் மனிதனுக்கு உபயோகமாக உள்ளது.

அதிலும் தேங்காயில் இருந்து பெறப்படும் தேங்காய் எண்ணெய் மனித வாழ்க்கையோடு ஒன்றிப்போன ஒரு விஷயமாகும்.

பொதுவாக நமது தலைச் சருமத்தைப் பாதுகாக்க அடிப்படையான விஷயம் என்றால் அது தேங்காய் எண்ணெய் தான்.

வறண்ட சருமத்திற்கு தேங்காய் எண்ணெய்தான் மிகச் சிறந்த மருந்தாகும்.

குளிர் காலத்தில் பொதுவாக அனைவரது சருமமும் வறண்டு போய்விடும்.

அந்த சமயத்தில் கை, கால்களில் தேங்காய் எண்ணெய் தடவுவது நல்லது.

வெப்பத்தால் பாதிக்கப்படும் சருமத்திற்கு அருமருந்தாக இருப்பது தேங்காய் எண்ணெய் தான்.

புண்களில் நீர்த்தன்மையை அகற்றி அது விரைவாக ஆறுவதற்கு தேங்காய் எண்ணெய் பயன்படுகிறது.

தலை முடியின் வளர்ச்சிக்கு பேருதவியாக இருப்பது தேங்காய் எண்ணெய்.

தேங்காய் எண்ணெயை தடவ பிடிக்காதவர்கள் கூட, இரவில் தேங்காய் எண்ணெய் வைத்து காலையில் தலைக்குக் குளித்து விடலாம்.

உதடுகள் உலர்ந்து போகாமல் இருக்க உதவும் நல்ல லிப் பாம் ஆக இருப்பதும் தேங்காய் எண்ணெய் தான்.

தேங்காய் எண்ணெய் அல்லது தேங்காய் விழுதை முகத்திற்குப் பயன்படுத்தலாம்.

நல்ல பலனை அளிக்கும்.

தலைப் பொடுகை நீக்க, தேங்காய் எண்ணெயுடன் சில சொட்டு எலுமிச்சை சாறை விட்டு அதை வைத்து தலைக்கு மசாஜ் செய்யுங்கள்.

சிறிது நேரம் ஊறவிட்டு பிறகு தலைக்கு குளியுங்கள். இவ்வாறு ஒரு வாரத்தில் 2 முறை செய்தால் பொடுகு நீங்கிவிடும்.

சளித் தொந்தரவு உள்ளவர்கள், தேங்காய் எண்ணெயை நன்கு சூடாக்கி இறக்கி அதில் ஒரு சிறிய கட்டி கற்பூரத்தைப் போட்டு வெதுவெதுப்பாக எடுத்து நெஞ்சுப் பகுதிகளில் தடவினால் நிவாரணம் கிடைக்கும்.

வறண்ட சருமம் மற்றும் வறண்ட கூந்தலுக்கு தேங்காய் எண்ணெய் நன்மை அளிக்கும்.
 
Via ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.
 

இயற்கை மருத்துவம்

மணக்கால் அய்யம்பேட்டை | 1:07 AM | | Best Blogger Tips

1. அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.

2. விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.

3. கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.

4. சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.

5. நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.

6. வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.

7. பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.

8. புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்.

9. பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

10. கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.

11. சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.

12. முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.

13. இலவங்கப் பூ சூரணத்தை முலைப்பால்விட்டு உறைத்து நெற்றியில் பற்றிட ஜலதோஷம் போகும்.

14. நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.

15. பல் கூச்சம் இருந்தால் புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.

16. படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.

17. நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.

18. நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.

19. இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.

20. மலச்சிக்கலுக்கு இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம். அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.

21. கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.

22. வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.

23. ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.

24. கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசனி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.

25. கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.

முதுமையிலும் இளமையாக தெரிய சில குறிப்புகள் !!

மணக்கால் அய்யம்பேட்டை | 1:06 AM | Best Blogger Tips
young-age-to-know-some-tips                                                                     
ஆணோ, பெண்ணோ இப்போதெல்லாம் முப்பது வயதிலேயே நரைக்கத் துவங்கிவிடுகிறது நரைமுடி. நரைமுடிதான் முதுமையின் அடையாளத் தோற்றம் என்பதால் அதை மறைக்க பெரும்பாலோனோர் பிரயத்தனப்படுகின்றனர். நரையை மறைக்க டை உபயோகியுங்கள்… கருங்கூந்தலை கண்ணாடியில் பார்க்கும் போது உற்சாகம் பிறக்கும்.
நமக்குத்தான் வயதாகிவிட்டதே என்று எண்ணாமல் உற்சாகத்தோடு இருந்தாலே இழந்த இளமையை மீட்டெடுக்கலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். ஐம்பது வயதிலும் அழகாய் தெரிய சில ஆலோசனைகளையும் அவர்கள் கூறியுள்ளனர்.



டை பயன்படுத்த உங்களுக்கு விருப்பமில்லை என்றால் பூவரசங்காய் முக்கால் பங்கும், கரிசலாங்கண்ணி கால் பங்கும் எடுத்து பக்குவமாக அரைத்து தலையில் பூசிக்கொள்ளுங்கள் முடி நல்ல பொலிவோடு அழகாக இருக்கும்.

நீர்ச் சத்து குறைபாடு

முதுமையில் நீர்சத்து குறைபாடு என்பது உடலில் ஏற்படும். இதனால் பலருக்கு நா வறட்சி, உதடு கறுத்துப் போதல் போன்ற பிரச்சனைகள் உண்டாகும். நா வறட்சியை தவிர்க்க அடிக்கடி வெந்நீர் குடியுங்கள். குறைந்தது ஒரு நாளைக்கு ஐந்து லிட்டர் தண்ணீராவது குடிக்க பழகுங்கள். முகச் சுருக்கம் போக்க எலுமிச்சை பழத்தைத் தேய்த்து சிறிது நேரம் கழித்து வெந்நீரில் ஆவி பிடியுங்கள்.

கால்வெடிப்பு குணமாக

கால்வெடிப்புகள் உங்கள் முதுமை தோற்றத்தை மேலும் அதிகப்படுத்தும் என்பதால் இதமான சுடுநீரில் பாதத்தை நனைய விட்டு நன்கு கழுவுங்கள் பிறகு வெடிப்பு உள்ள இடத்தில் கற்றாழை கொண்டு வந்து அதனுடைய சாறை கால்வெடிப்புகளில் தடவி சிறிது நேரம் ஊறவிடுங்கள். மஞ்சள் பற்று போட்டாலும் பித்த வெடிப்பு கால் ஆணி ஆகியவை குணமாகிவிடும்.

கழுத்து சுருக்கம் போக்க

வயதானால் கண்கள் சுருக்கம் ஏற்படுவது இயல்பு. முதுமையில் கண்களுக்கு கீழே கருவளையம் வரும் அது உங்கள் வயதைக்கூட்டி முதியவராக தோற்றமளிக்கச் செய்யும். எனவே கண் சுருக்கத்தைப் போக்க கண்களுக்கு அதிக சிரமம் தரும் வேலைகளை தவிர்க்கவேண்டும். அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பது, அதிகம் நேரம் புத்தகம் படிப்பது போன்ற பழக்கங்களை குறைத்துக் கொள்ளுங்கள்.
கண்களின் கருவளையத்தை தவிர்க்க ஆரஞ்சுப்பழச் சாற்றை கண்ணுக்குக் கீழே தேய்த்து சற்று நேரம் கழித்து இதமான வெந்நீரில் கழுவிவிடுங்கள் பிறகு அந்த இடத்தில் வெள்ளரிப் பிஞ்சை தேயுங்கள். மெல்ல மெல்ல கருவளையம் காணாமல் போய்விடும்.
கழுத்து சுருக்கம் என்பதும் உங்களின் வயதை கூட்டும் அதனை அகற்ற சொர சொரப்பாக அரைக்கப்பட்ட அரிசி மாவையும், கடலை மாவையும் கழுத்துப்பகுதியில் தேய்த்து சிறிது நேரம் ஊறவைத்து பிறகு நீரில் கழுவுங்கள். இதனால் கழுத்துச் சுருக்கம் காணாமல் போகும்.

கண்ணக் குழி தவிர்க்க

இளமையில் கன்னங்களில் குழி விழுவது அழகை அதிகரிக்கும். அதுவே முதுமையில் என்றால் வயதான தோற்றத்தை அதிகரிக்கும். எனவே இதனை தவிர்க்க தினந்தோறும் காலையிலும், மாலையிலும் இதமான சூடுள்ள வெந்நீரைக் குடித்து அதை இரண்டு கன்னப்பகுதியிலும் ஒதுக்கி உப்ப வைக்க வேண்டும். சிறிது நிமிடம் இப்படியே வைத்திருந்து பிறகு கொப்பளியுங்கள். பிறகு கன்னங்களின் உட்புறத்தில் விரலால் மசாஜ் செய்யவேண்டும். இப்படி சில வாரங்கள் செய்தாலே போதும் கன்னங்களில் குழி மறைந்து இளமைத் தோற்றம் கிடைக்கும்.

இயற்கையை ரசியுங்கள்

உடல் ஆரோக்கியமாக இருந்தாலே இளமையாக உணர்வுகளும் மனநிலையும் உங்களுக்குள் இருக்கும். உங்கள் மனநிலையில் வயதானவர் என்கிற எண்ணத்தை தூக்கி எறிந்துவிட்டு நாம் இளைஞன். நம்மால் எதையும் செய்ய முடியும் நம் உடல் மிகமிக உற்சாகமாக இயங்குகிறது. நூறு சதவிகிதம் இளமையாக இருக்கிறது. ஆரோக்யமாக இருக்கிறது என்றே எண்ணுங்கள்… கண்டிப்பாக உங்கள் தோற்றத்தில் நீங்கள் இளைஞராக மாறிவிடுவீர்கள். அடுத்து இயற்கை அழகை நேசியுங்கள். புதுப்புது விஷயங்களை ரசியுங்கள்.

Via இன்று ஒரு  தகவல்

பற்கள் ஆரோக்கியம்

மணக்கால் அய்யம்பேட்டை | 1:01 AM | Best Blogger Tips

நமது ஆரோக்கியத்தை பிரதிபலிக்கும் கண்ணாடிதான் பற்கள்! அது பற்றி அறிய வேண்டிய தகவல்கள்!
மனிதனுக்கு பற்கள் இன்றியமையாத உறுப்பாகும். உண்ணும் உணவுப் பொருட்களை நன்றாக அரைத்து அது எளிதில் செரிமானம் அடைய பற்கள் இன்றியமையாதவை. முக அழ கிற்கும், முகப் பொலிவிற்கும், பேசுவதற்கும் இந்தப் பற்கள் மிக முக்கியம்.
உடலின் நுழை வாயிலான வாயை ஆரோக்கியமாக வைத்திருப்பது உடலில் பல நோய்கள் வராமலிருக்க வழி செய்யும்.
மனிதனுக்கு
பற்கள் இன்றியமையாத உறுப்பாகும். உண்ணும் உணவுப் பொருட்களை நன்றாக அரைத்து
அது எளிதில் செரிமானம் அடைய பற்கள் இன்றியமையாதது. முக அழகிற்கும்இ முகப்
பொலிவிற்கும்இ பேசுவதற்கும் இந்தப் பற்கள் மிக முக்கியம். உடலின்
நுழைவாயிலான வாயை ஆரோக்கியமாக வைத்திருப்பது உடலில் பல நோய்கள்
வராமலிருக்க வழி செய்யும்.

ஈறு நோய்கள்:

பற்களின்
பாகங்களில் மிகவும் அதிகமாகப் பாதிக்கக்கூடியது பற்களைச் சுற்றியுள்ள
ஈறுதான். பொதுவாக ஈறுநோய் வருவதின் முதல் கட்டம் நிறம் மாறுதல்இ ஈறு
தடிப்புஇ பல் ஈறுகளில் இருந்து இரத்தம் கசிதல் ஆகும். இயற்கையாகவே பல்
ஈறுக்கும் பற்களுக்கும் இடையே சிறிது இடைவெளி இருக்கும். அதுவே ஈறு
வியாதியால் பாதிக்கப்பட்டால் பெருமளவு ஆழமாகி ஒரு பை மாதிரி ஆகி அதில்
நிறைய பாக்டீரியாக்களும்இ பாக்டீரியாவால் வெளி வரும் விஷப் பொருட்களும்
மற்றும் ஈறுடன் அழுகிய சில பாகங்களும் உமிழ் நீரும் அடங்கி ஒரு பள்ளம்
ஆகிறது. அதில் உற்பத்தியாகும் பொருட்கள் மூலம்தான் பற்களின் ஈறு மட்டும்
அல்லாமல் பல் பிடிப்பிற்குக் காரணமாக இருக்கும் எலும்புகளும் மற்றும்
லிக்மண்டுகளும் பாதிக்கப்பட்டு பற்களில் அசைவு ஏற்பட்டு முடிவாக தானாகவே பற்கள் விழுவதற்கும் வாய்ப்பு ஏற்படுகிறது.

இந்த வகையில்
வியாதிகள் ஈறுகளில் ஏற்படும் பொழுது இரத்தம் கசிதல்இ வாயில் உள்ள உமிழ்
நீர் ஒரு திரவம் போல் சமயங்களில் வாய்இ தாடை போன்றவற்றில் கடைசி வரை
பரவுதல் போன்றவைகளாகும்.

பொதுவாக் பிளாக் (Pடயஙரந) என்னும் ஒரு
வெண்படலம் பற்களின் ஈறுகளைச் சுற்றிப் படருகிறது. இது சாதாரண வெண்படலம்
அல்ல. இந்தப்படலம் முழுவதும் விஷக்கிருமிகள் உள்ளன. அதை வளர விடுவதால்
தொடர்ந்து அது கெட்டியாகி காரையாக மாறிவிடுகிறது.

ஈறு நோய்க்கான சிகிச்சை

வருடத்திற்கு
ஒருமுறை பற்களைச் சுத்தம் செய்து கொள்வதுடன் பற்காரை அகற்றி பற்களை
பாதுகாக்க வேண்டும். மேலும் ருடவசய ளுழniஉ ளுஉயடநச என்ற நவீன கருவி மூலம்
பற்களைச் சுத்தம் செய்து கொள்ளலாம்.

பல் சொத்தை


பற்களில்
ஏற்படும் சொத்தையானது பாக்டீரியாக்களால் ஏற்படுகிறது. பற்களில் உள்ள
குழிகளில் ஒட்டும் தன்மையுள்ள உணவுப் பொருட்கள் தங்கி விடுவது கிருமிகள்
வளர வழி வகுத்து பல் அரித்து பல் சொத்தையை ஏற்படுத்துகிறது. பற்கூழைப்
பாதிக்கும் பொழுது வலி ஏற்படுகிறது.

பல் சொத்தைக்கான சிகிச்சை

சிறு
புள்ளியாக சொத்தை ஏற்படும் போதே பல் மருத்துவரை அணுகி பல் அடைத்துக்
கொள்வது நல்லது. முன் பற்களில் ஏற்படும் சொத்தையை காம்போசிட் எனப்படும்
பல்லின் நிறம் கொண்ட சிமெண்ட்டினால் அடைப்பதால் பாதிப்பில்லாமல் பல்லின்
அழகு பாதுகாக்கப்படும்.

பல்சீரமைப்பு

பொதுவாக
முன் பல் தூக்கலாக இருப்பதற்குக் காரணம் குழந்தை சிறு வயதில் உள்ளபோது
விரல் சூப்புவதாலும்இ பால் பற்கள் விழுந்து முளைக்கும் போது நாக்கினால்
முன் பல்லைத் தள்ளுவதாலும்இ வாய் திறந்தே தூங்குவதாலும் ஏற்படுகிறது. ஆறு
வயதுக்கு மேல் பாற்பல் விழுந்து முளைக்கும் சமயம் ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு
ஒரு முறை பல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

பல் சீரமைப்புக்கான சிகிச்சை

பொதுவாக கிளிப்புகள் மூலம் வெளியில் தூக்கலாகத் தெரியும் பல் சரி செய்து
பொருத்தப்படுகிறது. அதனால் பற்கள் சரியான இடத்திற்குத் தள்ளப்படுவதால்
பல்வரிசை சீராக அமையும்.

பற்களைப் பாதுகாக்க என்ன செய்யலாம்?

பற்களில் சிறு புள்ளியாக சொத்தை ஏற்படும் போதே பல் மருத்துவரை அணுகி பல் அடைத்துக் கொள்வது நல்லது.

பல்
சொத்தைஇ பற்கூழ் பாதித்தாலும் வேர் சிகிச்சை எனும் நவீன சிகிச்சை (சுஊவு)
மூலம் பற்களைப் பாதுகாக்கலாம். பல் சொத்தையால் வலி ஏற்படும் போது பொடிஇ
புகையிலைஇ கற்பூரம் போன்றவைகளை வைப்பதால் அது நாளடைவில் புற்றுநோய்
வருவதற்கு ஏதுவாகிறது. எனவேஇ இதைத் தவிர்க்க வேண்டும்.

வாயில் ஏற்படும் கட்டிஇ புண் முதலியவற்றைப் பல் மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சை செய்து கொள்ள வேண்டும்.

ஆறு
வயதுக்கு மேல் பாற்பல் விழுந்து முளைக்கும் சமயம் ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு
ஒரு முறை பல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

தினமும் இருமுறை பல் துலக்க வேண்டும்.


ஈறு நோய்கள்

பற்களின் பாகங்களில் மிகவும் அதிகமாகப் பாதிக்கக்கூடியது பற்களைச் சுற்றியுள்ள ஈறுதான். பொதுவாக ஈறுநோய் வருவதின் முதல் கட்டம் நிறம் மாறுதல், ஈறு தடிப்பு, பல் ஈறுகளில் இருந்து இரத்தம் கசிதல் ஆகும்.
இயற்கையாகவே பல் ஈறுக்கும் பற்களுக்கும் இடையே சிறிது இடைவெளி இருக்கும்.
அதுவே ஈறு வியாதியால் பாதிக்கப்பட்டால் பெருமளவு ஆழமாகி ஒரு பை மாதி ஆகி அதில் நிறைய பாக்டீரியாக்களும், பாக்டீரியா வால் வெளிவரும் விஷப் பொருட்களும் மற்றும் ஈறுடன் அழுகிய சில பாகங்களும் உமிழ் நீரும் அடங்கி ஒரு பள்ளம் ஆகிறது.
அதில் உற்பத்தியாகும் பொருட்கள் மூலம் தான் பற்களின் ஈறு மட்டும் அல்லாமல் பல் பிடிப்பிற்குக் காரணமாக இருக்கும் எலும்புகளும் மற்றும் லிக்மண்டுகளும் பாதிக்கப்பட்டு பற்களில் அசைவு ஏற்பட்டு முடிவாக தானாகவே பற்கள் விழுவதற்கும் வாய்ப்பு ஏற்படுகிறது.
இந்த வகையில் வியாதிகள் ஈறுகளில் ஏற்படும் பொழுது இரத்தம் கசிதல், வாயில் உள்ள உமிழ் நீர் ஒரு திரவம் போல் சமயங்களில் வாய், தாடை போன்றவற்றில் கடைசி வரை பரவுதல் போன்றவைகளாகும்.
பொதுவாக் பிளாக் (Plaque) என்னும் ஒரு வெண்படலம் பற்களின் ஈறுகளைச் சுற்றிப் படருகிறது. இது சாதாரண வெண்படலம் அல்ல. இந்தப்படலம் முழுவதும் விஷக் கிருமிகள் உள்ளன. அதை வளர விடுவதால் தொடர்ந்து அது கெட்டியாகி காரையாக மாறிவிடுகிறது.
ஈறு நோய்க்கான சிகிச்சை
வருடத்திற்கு ஒருறை பற்களைச் சுத்தம் செய்து கொள்வதுடன், பற்காறை அகற்றி பற்களை பாதுகாக்க வேண்டும். மேலும் Ulara Sonic Scaler என்ற நவீன கருவி மூலம் பற்களைச் சுத்தம் செய்து கொள்ளலாம்.
 

பல் சொத்தை
 

பற்களில் ஏற்படும் சொத்தையானது பாக்டீரியாக்களால் ஏற்படுகிறது. பற்களில் உள்ள குழிகளில் ஒட்டும் தன்மையுள்ள உணவுப் பொருட்கள் தங்கி விடுவது கிருமிகள் வளர வழிவகுத்து பல் அத்து பல் சொத்தையை ஏற்படுத்துகிறது. பற்கூழைப் பாதிக்கும் பொழுது வலி ஏற்படுகிறது.
பல் சொத்தைக்கான சிகிச்சை
சிறு புள்ளியாக சொத்தை ஏற்படும் போதே பல் மருத்துவரை அணுகி பல் அடைத்துக் கொள்வது நல்லது. முன் பற்களில் ஏற்படும் சொத்தையை காம்போசிட் எனப்படும் பல்லின் நிறம் கொண்ட சிமெண்ட்டினால் அடைப்பதால் பாதிப்பில்லாமல் பல்லின் அழகு பாதுகாக்கப்படும்.
இன்னும் கொஞ்சம் விரிவாகச் சொல்லப் போனால் நமது முகத்தைக் கண்ணாடி பிரதிபலிப்பது போல் உடலில் தோன்றும் பல நோய்களின் ஆரம்ப கட்ட அறிகுறிகளை வாய் மற்றும் பற்களில் ஏற்படும் இராசயன மாறுதல்களைக் கொண்டே கண்டுபிடித்துவிடலாம். எனவே நமது உடலின் ஆரோக்யத்தை பிரதிபலிக்கும் கண்ணாடியாக நமது வாய் மற்றும் பற்கள் விளங்குகின்றன.
மருத்துவ உலகில் “Mouth is the Mirror of our Body” என்னும் வாசகம் மிகவும் பிரபலமானது. பல் போனால் சொல் போச்சு என்னும் தமிழ் பழமொழியும் நாம் அனைவரும் அறிந்த ஒன்று.
குழந்தை பிறந்து ஆறு மாதங்கள் கழிந்த நிலையில் பால் பற்கள் எனப்படும் தற்காலிக பற்கள் (milk tooth or temporary tooth) வளர ஆரம்பிக்கும். இரண்டரையிலிருந்து மூன்று வயதுக்குள் கிட்டத்தட்ட எல்லா பற்களுமே வளர்ந்திருக்கும். அந்த வயதில்தான் அம்மாக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
பொதுவாக இந்தப் பருவத்தில் புட்டிப் பால் கொடுக்க ஆரம்பிக்கும் அம்மாக்கள், பால் பாட்டிலை குழந்தையின் வாயில் வைத்தபடியே தூங்கச் செய்து விடுவார்கள். இதனால் குழந்தைகளின் பற்களில் அந்தப் பால் படிந்துவிடும். எப்போதும் நம் வாயில் நிரந்தரமாக இருக்கும் ஸ்டிரெப்டோ காகஸ் (strepto coccus) எனப்படும் பாக்டீரியாக்கள், பற்களில் படிந்திருக்கும் அந்தப் பாலோடு வினை புரிந்து, கேரிஸ் (caries) எனப்படும் பற்சொத்தையை ஏற்படுத்தும். இதனை ‘நர்ஸிங் பாட்டில் கேரீஸ்’ (nursing bottle caries) என்று அழைக்கிறோம்.
குழந்தைகளுக்கு இப்படிப்பட்ட தொந்தரவு ஏற்படாமல் இருக்க பால் குடித்த உடனே கொஞ்சம் தண்ணீர் கொடுத்து குடிக்க வைக்க வேண்டும்.
பால் பற்கள் விழுந்து குழந்தைக்கு நிரந்தரமான பற்கள் வளர ஆரம்பிக்கும் பருவத்திலும் தாய்மார்கள் கவனமாக இருக்க வேண்டும். சில பால் பற்கள் விழாமல் இருக்கும்போதே அதே இடத்தில் நிரந்தரமான பல் சற்று சாய்வாக முளைக்க ஆரம்பிக்கும். அப்படிப்பட்ட தருணத்தில் இடையூறா£க இருக்கும் பால் பற்களை டாக்டரிடம் சென்று நீக்கி விட வேண்டும். நீக்கா விட்டால், பற்களில் அழுக்கு சேர்வது, நாக்குக்கு இடையூறாக பற்கள் வளர்ந்து அதனால் பேச்சுக்கு இடையூறு ஏற்படுவது போன்றவை நிகழும்.
சின்ன வயதிலேயே பற்கள் நீண்டு வளர்வதால் சிலருக்கு முக அமைப்பே மாறி அவலட்சணமாக தோற்றமளிக்கும்.. பெரும்பாலும் குழந்தைப் பருவத்தில் விரல் சூப்புவதே இதற்குக் காரணம். பால் பற்கள் விழுந்து நிரந்தரமான பற்கள் (permanent tooth) வளரும் பருவத்தில் இந்தப் பழக்கம் தொடரும்போது பற்களின் நேரான வளர்ச்சிக்கு விரல்கள் இடையூறாக இருப்பதால் பற்கள் தன் இயல்பை விட்டு விரல் சூப்பும் நிலைக்கேற்ப நீண்டு வளர ஆரம்பிக்கும். எனவே, மூன்றில் இருந்து நான்கு வயது வரை குழந்தைகள் விரல் சூப்பினால் பரவாயில்லை. அதற்கு மேல் அந்தப் பழக்கத்தை அனுமதிக்கக் கூடாது.
என்ன முயன்றும் விரல் சூப்புவதை விட முடியாத குழந்தைகளுக்கு சில தடுப்பு முறைகள் உள்ளன. கிளிப் ட்ரீட்மென்ட் (clip treatment) எனும் சிகிச்சை உள்ளது. இந்த சிகிச்சையில் துருப்பிடிக்காத சின்ன கிளிப்புகளை மேல் தாடையில் பொருந்தி விடுவதால் அவர்களால் விரல் சூப்ப முடியாது. ஆனால், இந்த கிளிப்புகளை மாட்டிய பிறகு கடினமான பொருட்களை சாப்பிட்டால் அவை உடைந்து போய் விடக் கூடும்.
பற்களைத் துலக்குகிற விஷயத்தில் எல்லோரும் செய்கிற தவறு பற்களை மட்டும் துலக்குவதுதான். முன்னரே சொன்னது மாதிரி பல் எத்தனை முக்கியமோ அதே அளவுக்கு ஈறுகளும் முக்கியம். ஈறுகளுக்கும் பற்களுக்கும் இடையில் உள்ள சின்ன இடைவெளியில் நாம் சாப்பிடும் பொருட்கள் தங்குவதுதான் ஈறு தொடர்பான பிரச்னைக்கு முதல் படி. எனவே, குழந்தைகள் பல் துலக்கப் பழகும்போதே பல்லுக்கும் ஈறுகளுக்கும் உள்ள இடைவெளியை சுத்தம் செய்ய சொல்லிக் கொடுக்க வேண்டும்.”
 

…குழந்தைகள் பல் மருத்துவம் ஆங்கிலத்தில் Paedodontics என்று அழைக்ப்படுகிறது.
 

பல் சம்பந்தப்பட்ட எந்த ஒரு பிரச்சனையையும் நாம் சிறு வயதிலேயே அறிந்து கொண்டு அதற்கு சிகிச்சை செய்தால் அதைப் பெரியதொரு பிரச்சனையாக ஆகவிடாமல் அப்பிரச்சனையை ஆரம்பத்திலேயே சரி செய்ய முடியும்.
 

இளம் குழந்தைகளின் பல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு பல் மருத்துவரை அவ்வப்போது அணுகுவது நல்ல பயனைக் கொடுக்கும்.
உதாரணமாக….
 

*பல்லை காரணியாகக் காட்டி நல்ல பழக்க வழக்கங்களை குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க முடியும்.
 

* உணவு, சாக்லேட், ஜஸ்கிரீம், கேக் போன்றவற்றை சாப்பிட்ட பின்பு பற்களை சுத்தம் செய்ய வேண்டிய அவசியத்தை குழந்தைகளுக்கு எடுத்துக் கூற முடியும்.
 

* பற்களை காலையில் மட்டும் அல்லாமல் இரவில் உறங்குவதற்கு முன்னும் பல்•• துலக்க வேண்டிய அவசியத்தை எடுத்துக் கூற முடியும்.
 

* சிறு வயது குழந்தைகளுக்கு உரிய பழக்க வழக்கங்களான விரல் சூப்புதல் (Thumb Sucking), பென்சில் சுவைத்தல், (Pencil Biding ) மற்றும் Tongue thrusting• போன்ற ஆரோக்கியமற்ற பழக்கங்களை ஆரம்பத்திலேயே சரி செய்ய முடியும்.
 

* குழந்தைகளின் பால் பற்கள் (milk teeth) சரியான முறையில் இருக்கிறதா என்பதைக் கவனிக்க முடியும்.
 

* 12 வயது சிறியவர்களின் நிரந்தர பற்கள்• (Permanent teeth)• சரியான வயதில் சரியான இடத்தில் சரியான முறையில் வளருகிறதா என்பதைக் கவனித்து அதற்கு ஏற்றாற் போல் ஆரம்பத்திலேயே சிகிசசை செய்ய முடியும்.
 

* குழந்தைகளின் தாடை சரியான முறையில் வளருகிறதா•••• என்பதையும் கவனிக்க முடியும்.
 

நவீன பல் பாதுகாப்பு சிகிச்சை முறைகள்
 

உடல் ஆரோக்கியத்திற்கும், வசீகரமாகத் தோன்றுவதற்கும், ருசியாக சாப்பிடுவதற்கும், நன்றாகப் பேசுவதற்கும் பற்கள் இன்றியமையாதவை. பற்களின்ஆரோக்யம் உடலின் ஆரோக்யம்.
 

பற்களின் பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள நவீன சிகிச்சை முறைகள்
 

1) பல் சொத்தையும், சிகிச்சை முறையும்:
 

2) பற்களில் சொத்தை ஏற்பட்டவுடன் அதை கவனித்து பற்களை அடைத்துக் கொள்ள வேண்டும். பற்களை அடைப்பதற்கு சிமெண்ட, வெள்ளி, தங்கம் மற்றும் பல்வேறு உலோகக் கலவைகளும், காம்போசிட் ரெசின் என்னும் பிளாஸ்டிக் வகையைச் சேர்ந்த பொருட்களும் இருக்கின்றன. பல்லின் தன்மைக்கேற்ப தகுந்த பொருளைக் கொண்டு பல் மருத்துவர் சிகிச்சை அளிப்பார்.
 

3) 2) உடைந்த பற்களும், பற்கூழ் சிகிச்சை முறையும்:
 

4) பற்கள் உடைந்தாலோ, பற்களின் மீது அடிப்பட்டாலோ, சில சமயங்களில் அப்பற்கள் நிறம் மாறிக் கொண்டே வரும். பார்ப்பதற்கு விகாரமாகவும், பற்களின் வேர்களைச் சுற்றிக் கிருமிகளும் பரவும். இதனால் உடலின் முக்கிய பாகங்கள் பாதிக்கப்படலாம்.
 

5) 2.அ )பற்கூழ சிகிச்சை (ROOT CANAL TREATMENT)
 

6) இதற்கு பற்களின் உட்பக்கமாக வெளியே தெரியாமல் ஒரு துவாரம் போட்டு பழுதுபட்ட பற்கூழை (Pulp) எடுத்துவிட்டு அந்தப் பகுதியை அடைத்து விடுவோம். அதன் பின் பற்களின் மேல் பரப்பில் உள்ள எனாமல் பகுதியை தேய்த்து எடுத்துவிட்டு மற்ற பற்களின் நிறத்திலேயே பீங்கான மற்றும் பிளாஸ்டிக்கினால் ஒரு உறை செய்து நிரந்தரமாக இருக்கும்படி பொருத்தி விடலாம்.
 

7) .ஆ ) பற்கள் சிறிதளவே உடைந்திருந்தால் அதில் காம்போசிட் என்ற பொருளை வைத்து நீலநிற ஒளியைப் (Ultra Violet) பாய்ச்சி முழு பல்லாக கொண்டு வரமுடியும். இந்த நவீன சிகிச்சைக்கு Light Cure Treatment என்று பெயர். .இ ) பற்கள் பெரும் பகுதி உடைந்திருந்தாலோ, பல்லை எடுக்கும் நிலை ஏற்பட்டாலோ, பல் எடுத்த இடத்திலேயே எலும்பில் ஒரு துளையிட்டு அந்த எலும்புக்குள் Titanium என்ற உலோகக் கலவையினால் ஆன ஒரு அங்குல (1 or 

11/2 inch) நீளமுள்ள ஸ்க்ரூவைப் பொருத்தி விடுவார்கள். பின்னர் அதன் மேல் பீங்கானில் பல்லைப் போல ஒரு உறை செய்து நிரந்தரமாகப் பொருத்தி விடலாம். இதற்கு Implant பற்கள் (Teeth) என்று பெயர்.
 

9) 3) பல் ஈறு நோய் மற்றும் சிகிச்சை முறை:
 

10) பற்களுக்கு இடையில் படியும் காரைகளினால் பற்களின் ஈறுகள் கெட்டு இரத்தம், சீழ் கசியும், வாய் துர்நாற்றம் ஏற்பட காரைகளும் ஒரு காரணம். மேலும், வெற்றிலை பாக்கு போடுவதாலும், புகை பிடிப்பதாலும் பொடி போடுவதாலும், பற்களில் கறை படியும். இதற்கு பற்களை சுத்தம் செய்ய வேண்டும். தற்போது Ultrasonic Scaler எனப்படும் எலக்ட்ரானிக் கருவியைப் பயன்படுத்தி எனாமல் பகுதியைப் பாதிக்காமல் பற்களில் படிந்துள்ள காரை மற்றும் கறைகளை நீக்கிவிடலாம்.
 

11) 4) தாடை எலும்பு முறிவும், சிகிச்சையும்:
 

12) வாகனங்கள் மூலமாக விபத்து ஏற்படும் போது தாடை எலும்புகள் உடைந்து விடுவதும் உண்டு. உடைந்த தாடை எலும்பில் பற்கள் இருக்கும் போது மேல் பற்களையும், கீழ் பற்களையும் சரியான நிலையில் வைத்து கம்பிகள் மூலம் கட்டி உடைந்த எலும்புகளை சரியான நிலையில் பொருத்திவிடலாம்.
 

13) இப்போதுள்ள நவீன சிகிச்சை முறையில் உடைந்த தாடை எலும்புகளில் எவர்சில்வர் தகடுகளைப் பொருத்தி அவைகளை நிரந்தரமாக வைத்து விடுவார்கள். இந்த நவீன சிகிச்சை செய்வதால் உடனேயே வாயை திறந்து பேசவும், சாப்பிடவும் வசதியாக இருக்கும்.
 

14) 5) வாய் புற்று நோய் மற்றும் சிகிச்சை முறை
 

15) வாய் புற்று நோய்க்கு 3 காரணங்கள் உள்ளன. அவையாவன.
 

16) SharpTeeth (கூர்மையான பற்கள்),
 

17) Sepsis (வாயில் சீழ் வடிதல்),
 

18) Spiced Food (கார வகை உணவுகள்),
 

19) Syphilis (பல்வினை நோய்),
 

20) Smoking (புகை பிடித்தல்)
 

21) மேற்கூறிய காரணங்களால் வாய்புற்றுநோய் வருவதால் ஒழுங்கான பழக்க வழக்கங்களை கடைபிடித்து, வெற்றிலை பாக்கு, புகையிலை தவிர்த்து, துலக்குவதற்கு மிருதுவான பொருட்களை உபயோகிப்பதாலும், அதிக காரவகை உணவுகளை தவிர்ப்பதாலும் புற்று நோய் வராமல் தடுக்கலாம்.
 

22) ஏதாவது ஒரு காரணத்தால் வாயில் புண் ஏற்பட்டால் அந்தப் புண் பத்து நாட்களுக்கு மேல் ஆறாமல் இருந்தால் கண்டிப்பாக பல் மருத்துவரை அணுகி அது புற்று நோயின் அறிகுறியா? என்று சோதித்து தேவையான சிகிச்சை மேற்கொள்வது அவசியம். ஆரம்பத்திலேயே கண்டு பிடித்து விட்டால் அறுவை சிகிச்சை மூலமாகவோ, கதிர்வீச்சு மூலமாகவோ, மாத்திரைகள் உட்கொள்வதன் மூலமாகவோ ஆரம்ப நிலையிலேயே புற்று நோயைக் குணப்படுத்தி விடலாம்.
 

23) 6) ஒழுங்கற்ற பற்களும், பல்சீரமைப்பு சிகிச்சையும்:
 

24) குழந்தைப் பருவத்தில் கை சூப்பும் பழக்கத்தினாலும், நாக்கைத் துருத்திக் கொள்வதாலும், கீழுதட்டைக் கடிப்பதாலும், உறங்கும் போது வாயினால் மூச்சுவிடுவதாலும், பற்கள் தூக்கலாகவும், ஏறுமாறாகவும் அமைந்து விடுகின்றன. பற்களின் அமைப்பு ஒழுங்காக, வரிசையாக இல்லாமல் சீர்கெட்டு இருந்தால் முகத்தின் வசீகரம் குறையும்.
 

25) இதற்கு ஆர்த்தோடான்டிக் அப்ளையன்ஸ் எனப்படும் கிளிப் போட்டு சரி செய்யலாம். இந்த சிகிச்சை முறையில் நிறைய வகைகள் உண்டு.
 

26) தினமும் பற்களையும், ஈறுகளையும் சுத்தம் செய்து வந்தால் இருதய நோய்கள் வராமல் தடுக்கலாம் என்கிறார்கள் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள். பற்களின் சுத்தத்திற்கும் இருதய நோய்க்கும் தொடர்பு உண்டு என்பது விஞ்ஞானிகளின் வாதமாகும். பற்களையும், ஈறுகளையும் சுத்தமாக வைத்திருந்தால் இருதய குழாயில் அடைப்பு ஏற்படுவதை தடுக்க முடியும் என்பது மருத்துவ விஞ்ஞானிகளின் கருத்தாக உள்ளது.
 

27) இது தொடர்பான ஆய்வுகளில் இத்தாலி நாட்டின் மிலன் பல்கலை கழகம் நோய் எதிர்ப்பு இயல் துறை தலைவர் டாக்டர் மரியோ கிளரிக் தலைமையிலான குழு ஈடுபட்டது. இதில் வெளியான தகவல்கள்: மனிதனின் வாய் பகுதியில் ஏராளமான பேக்டீரியாக்கள் எனப்படும் நுண்ணுயிர்களும் உண்டு, தீமை தரும் நுண்ணுயிருகளும் இருக்கின்றன. இவற்றில் தீமை தரும் நுண்ணுயிர்கள் வாய்ப்பகுதியில் துர்நாற்றத்தை ஏற்படுத்துவது மட்டுமின்றி இருதயத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆய்வுகளில் தெரியவந்தது. இவ்வாறு பாதிப்பை ஏற்படுத்துவதில் முன்னிலை வகிக்கிறது பார்பிரோமோனஸ் ஜிங்வலிஸ் என்ற நுண்ணுயிரி ஆகும்.
 

28) பற்கள் இறுதி வரை உறுதியாக இருக்க வேண்டுமானால் நீங்கள் செய்ய வேண்டியவை:
 

29) * ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்க வேண்டும்.
 

30) * பற்களுக்கிடையில் அழுக்கு, காறை சேராமலிருக்க தினமும் பற்களுக்கிடையில் நூலை நுழைத்து முன்னும் பின்னும் இழுத்து இழுத்து கிளீன் பண்ணவேண்டும்.
 

31) * ஒவ்வொரு முறை சாப்பிட்ட பின்பும் நிறைய தண்ணீர் கொண்டு வாயை நன்றாக பலமுறை கொப்பளியுங்கள்.
 

32) * சாப்பிட்ட பின் வாயை வெளியே மட்டும் தண்ணீரால் துடைத்துவிட்டு வந்துவிடாதீர்கள். பலபேர் இதைத்தான் செய்கிறார்கள். இது மிகப்பெரிய தவறு. கேட்டால் வாய் கழுவும் தண்ணீர் உப்பாக இருக்கிறது என்பார்கள். அல்லது சாப்பிட்ட டேஸ்ட் போய்விடுமாம். இந்த இரண்டு பதிலுமே தவறானது.
 


33) * நான்கு அல்லது ஐந்து மாதத்துக்கொரு முறை பிரஷ்ஷை மாற்றிவிடுங்கள்.
 

34) ஒவ்வொரு பல்லுக்கும் அடியில் அதாவது வேர்ப்பகுதியில் ரத்தக்குழாயும், நரம்பும் இருக்கின்றன. ரத்தக்குழாயும், நரம்பும் கடுமையாக பாதிக்கப்பட்டால் தாங்க முடியாத பல்வலி, வீக்கம், பல் கூச்சம், ரத்தம் மற்றும் சீழ் வடிதல் முதலிய நிறைய பிரச்சினைகள் இந்த பாதிக்கப்பட்ட பல்லுக்கு ஏற்படும்.
 

35) முன்பெல்லாம் தாங்க முடியாத வலியுடன் மிகமிக கெட்டுப்போன ஒரு பல்லுடன் ஒருவர் டாக்டரிடம் வந்தால் அந்தப் பல்லைப் பிடுங்குவதைத் தவிர வேறு வழியில்லாமல் இருந்தது. ஆனால் இப்பொழுது அப்படியில்லை. ரூட் கெனால் தெரப்பி என்று சொல்லக்கூடிய சிகிச்சை முறையில் பாதிக்கப்பட்ட அந்தப் பல்லை பிடுங்காமல் சிகிச்சை அளித்து காப்பாற்றி விடலாம்.
 

36) விபத்தினால் பல் பாதிக்கப்பட்டாலோ, பல் உடைந்து போனாலோ பல்லில் ஓட்டை விழுந்திருந்தாலோ பல்லின் அடிப்பாகத்தில் சீழ் கட்டியிருந்தாலோ மேற்சொன்ன சிகிச்சை கைகொடுக்கும்.
 

37) இந்த சிகிச்சை முறையில் பல்லுக்கு அடியிலுள்ள பாதிக்கப்பட்ட நரம்பையோ, சீழையோ பல்லுக்கு நடுவில் மெல்லிய ஊசியை நுழைத்து உள்ளே போய் சுத்தம் செய்து எடுத்துவிட்டு பல்லுக்குள் ஏற்பட்ட ஓட்டையை அடைத்து விடுவார்கள். ஆனால் இது ஒரே ஒரு தடவையில் முடிகிற காரியமல்ல. சுமார் மூன்று அல்லது நான்கு முறை பல் டாக்டரிடம் சென்றுதான் ஆக வேண்டும்.
 

38) இது வரை குறிப்பிட்டுள்ளவை சில நவீன பல் பாதுகாப்பு சிகிச்சை முறைகளாகும். நமது பற்களைப் பாதுகாத்துக் கொள்வதும், வாயை சுத்தமாக வைத்துக் கொள்வதும் நமது முக்கியக் கடமையாகும். வாய் சுத்தமாக இல்லாவிட்டாலும், பற்கள் பழுதாகி இருந்தாலும் நமது உடலில் முக்கிய உறுப்புகள் பாதிக்கப்பட்டு நமது உடல் ஆரோக்யம் கெடலாம். ஆதலால் ஒருவர் தன் உடல் நலத்தைக் காக்க விரும்பினால் வாய் மற்றும் பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளல் அவசியம்.


பற்களை சுத்தம் செய்தல் (ஸ்கேலிங்)
 

ஸ்கேலிங் என்றால் என்ன?

பற்களின் ஆரோக்கியம் என்பது உங்கள் உடலின் பொதுவான ஆரோக்கியத்தின் முக்கியமான அங்கமாகும். உங்களுக்கு என்ன வயதானாலும், உங்கள் பற்களை ஆரோக்கியமாக வைத்துகொள்ளவேண்டும், மேலும் வைத்துகொள்ளவும் முடியும். சரியாக பற்களை நீங்கள் கவனித்து கொண்டால், ஆயுள் காலம் முழுவதும் உங்கள் பற்களை நீங்கள் ஆரோக்கியமாக வைத்து கொள்ள முடியும். ஸ்கேலிங் மூலம் உங்கள் பற்களையும் ஈருகளையும் ஆரோக்கியமாகவும் திடமாகவும் வைத்துகொள்ளமுடியும். இந்த வழிமுறை, பற்களின் வெளிப்புறத்தில் படியும், கரைகள், ப்லேக், மற்றும் கால்க்யுலஸ் போன்ற கிருமிகளால் பாதிக்கப்பட்ட படிமானங்களை அகற்ற உதவும். இப்படிபட்ட படிமானங்கள் ஸ்கேலிங் மூலம் அகற்றபடாவிட்டால், தொற்றுக்கிருமிகளால் பாதிப்பு ஏற்படுத்துவதுடன் ஈருகளையும் அழித்துவிடும். இதனால் பயோரியா மற்றும் பற்களின் இழப்பு ஏற்படலாம். ஸ்கேலிங் ஒரு பாதுகாப்பான மற்றும் இயல்பான வழிமுறையாகும். இது பற்களின் மேல்புரத்தை எந்தவிதத்திலும் பாதிக்காது. இதை ஒரு பல் நிபுனர் மூலம் தான் செய்து கொள்ள வேண்டும்.
 

ப்லேக் என்றால் என்ன?

பற்களில் ப்லேக் என்பது, மிருதுவான, பிசுபிசுப்பான, வண்ணமற்ற பேக்டிரியாகிருமிகள் மற்றும் உணவு பொருட்களின் படிவம் ஆகும். அது பற்களின் மேல் உருவாகிகொண்டே இருக்கும். இந்த படிவத்தின் மேல் அந்த பேக்டிரியாகிருமிகள் குடியேறி வேகமாக பெருகி, ஈருகளில் பாதிப்பை ஏற்படுத்த துவங்கும். இதனால் ஈருகளை தொட்டாலே வலி மற்றும் இரத்த கசிவு ஏற்படும். பற்களில் உள்ள ப்லேக்கை 10–14 மணி நேரத்திற்குள் பல்துலக்குவதன் மூலம் சுத்தபடுத்தாவிட்டால், அது கால்க்யுலஸ் ஆகவோ அல்லது டார்டாராகவோ இறுகிவிடும். கால்க்யுலஸாக உருவாகிவிட்டால், பல் துலக்குவதன் மூலம் அகற்ற முடியாது, பல் நிபுனரால் ஸ்கேலிங் மூலம் தான் அகற்ற முடியும்.
 


"கம்போடியா நாட்டில் நம் தமிழின் தொன்மை"

மணக்கால் அய்யம்பேட்டை | 12:53 AM | Best Blogger Tips

கம்போடியாவில் 1,200 ஆண்டு பழமையான "மகேந்திர பர்வதம்' நகரம் கண்டுபிடிப்பு

கம்போடியாவில் 1200 ஆண்டுகளுக்கு முன் இருந்த "மகேந்திர பர்வதம்' என்ற நகரத்தை சர்வதேச தொல்லியல் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

லண்டனைச் சேர்ந்த தொல்லியல் வளர்ச்சி அறக்கட்டளையின் இயக்குநர் ஜீன் பாப்டிஸ்ட் செவான்ஸ் தலைமையில் சர்வதேச நிபுணர்கள் குழு கம்போடியாவில் ஆய்வில் ஈடுபட்டது.

இந்தக் குழுவினர் உலகிலேயே மிகப்பெரிய ஹிந்து கோவில் வளாகம் அமைந்துள்ள கம்போடியாவின் அங்கோர்வாட்டுக்கு 40 கி.மீ. தொலைவில் உள்ள நாம் குலேன் மலைப்பகுதியில் தீவிர ஆராய்ச்சி நடத்தினர்.

எனினும், அங்குள்ள கண்ணிவெடிகள் புதைக்கப்பட்ட அடர்ந்த காடு, வேகமாகப் பாய்ந்தோடும் காட்டாறு, சதுப்பு நிலம் போன்றவை காரணமாக முழு அளவில் கள ஆய்வுப் பணியில் ஈடுபட அவர்களால் இயலவில்லை.

இதைத் தொடர்ந்து, அந்த மலைப்பகுதி மீது ஹெலிகாப்டரில் பறந்தபடி லிடார் எனப்படும் தொழில்நுட்பம் மூலம் லேசர் கதிர்களை அப்பகுதி மீது பாய்ச்சி, தகவல் சேகரிக்கும் நூதன ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது, நாம் குலேன் மலை மீது மகேந்திர பர்வதம் என்ற வரலாற்று இடைக்கால நகரம் இருந்ததைக் கண்டுபிடித்தனர்.

1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த அந்த நகரத்தைச் சேர்ந்தவர்கள்தான் கி.பி. 802இல் அங்கோர் பேரரசை நிறுவியுள்ளனர். அதன் தலைநகராக மகேந்திர பர்வதம் விளங்கியதாகத் தெரிகிறது. இப்போது, ஆண்டுதோறும் உலகெங்கிலும் இருந்து 20 லட்சம் மக்கள் அங்கோர்வாட் கோவிலைப் பார்வையிடுகின்றனர்.

இந்த நகரம் குறித்த தொல்லியல் ஆய்வில் ஈடுபட்ட நிபுணர் குழுவின் தலைவர் ஜீன் பாப்டிஸ்ட் கூறுகையில், ""தொன்மையான நூல்களின்படி புகழ்பெற்ற வீரனும், மன்னனுமான இரண்டாம் ஜெயவர்மனுக்கு மலை மீது அமைந்த தலைநகர் இருந்தது தெரிய வருகிறது. அதுதான் இந்த மகேந்திர பர்வதமாகும்.

இப்போது நூதன ஆய்வின் மூலம் அந்த நகரில் சாலைகளும், கால்வாய்களும் இருந்ததைக் கண்டறிந்துள்ளோம்'' என்றார்.

இந்த நிபுணர் குழுவின் இணைத் தலைவரான சிட்னி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டேமியன் இவான்ஸ் கூறுகையில், ""இந்த நகர் குறித்த தகவல்கள் மூலம் இன்றைய சமூகத்துக்கு முக்கியமான விஷயங்கள் கிடைக்கலாம். மலை மீது அமைந்த நகரில் காடுகள் அழிப்பு மற்றும் நீர் நிர்வாகத்தை அதிகம் சார்ந்திருந்தது போன்றவற்றால் இந்த நாகரிகம் அழிந்திருக்கலாம் '' என்றார்.

இந்த நகரில், இதற்கு முன் அடையாளம் காணப்படாத 30 கோவில்களும் இருந்துள்ளது லேசர் ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வு தொடர்பான விவரங்கள் அமெரிக்க தேசிய அறிவியல் நிறுவனத்தின் பத்திரிகையில் வெளியிடப்பட உள்ளன.

அதன் பின், நாம் குலேன் காடுகளுக்குள் தொல்லியில் நிபுணர்கள் நுழைந்து கள அகழாய்வில் ஈடுபட்டு, மகேந்திர பர்வதம் நகரில் மக்களின் வாழ்க்கை, நாகரிகம் ஆகியவை குறித்து தகவல் சேகரிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், தெற்காசியா மீது சுமார் 600 ஆண்டுகளுக்கு ஆதிக்கம் செலுத்திய அங்கோர் பேரரசு உருவான விதம் மற்றும் அது குறித்த மேலும் பல தகவல்களும் இந்த அகழாய்வில் கிடைக்க வாய்ப்புள்ளது.

via Dinamani.

இன்று சர்வதேச தந்தையர் தினம்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:52 AM | Best Blogger Tips


எத்தனையோ இன்னல்கள் பட்டாலும் அதை வெளிக் காட்டாமல் துன்பத்தின் சாயல் தம் பிள்ளைகள் மீது படிந்து விடாமல் அனைத்தையும் தம் தோளில் சுமந்தே கூன் விழுந்து போன தந்தையர்கள். இராத்தூக்கம் பகல் தூக்கம் இன்றி வளர்த்து வாலிபமாக்க எவ்வளவு தியாகங்கள் புரிந்த, புரியும் தந்தையர்கள்.
கொஞ்சம் சிந்தனைகளை ஓடவிட்டுப் பாருங்கள்.வாழ்க்கையில் ஒவ்வொரு தந்தையும் தன்னை ஆ
ளாக்க பட்ட துயரங்கள் கொஞ்சமாவது உங்கள் கண்களைக் கலங்க வைக்கும தந்தையர்க்கு மரியாதையும், நன்றியும் செலுத்தும் விதமாக தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.

இத்தினம் தற்போது பெரும்பாலான நாடுகளில் கொண்டாடப்படுகிறது. தந்தையர் தினம் கொண்டாட்டங்கள் மேலைநாட்டிலிருந்து வந்திருந்தாலும் இந்தியாவில் பரவலாக ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறது. இன்றைய தினம் சில பள்ளிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. குழந்தைகள் தங்களது தந்தைக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவிக்கலாம். பாசத்துக்கு எப்போதும் அன்னை தான் உதாரணம். ஆனால் தந்தைதான் ஒரு குழந்தைக்கு வழிகாட்டியாக இருக்கிறார். “அன்னையிடம் அன்பை வாங்கலாம், தந்தையிடம் அறிவை வாங்கலாம்’ என்ற பாடல் வரிகள் தாய், தந்தையரின் முக்கியத்துவத்தை விளக்குகின்றன. சிறு வயதிலேயே குழந்தைக்கு தந்தையை மதிக்க கற்றுத் தருவதே இதன் நோக்கம்.

தந்தையும் குழந்தைகளுக்கென நேரம் ஒதுக்கி அவர்களுக்கு நல்லொழுக்கங்களை கற்றுத்தர வேண்டும். ஒவ்வொரு தந்தையும் தனது குழந்தைக்கு ஒரு பொறுப்புள்ள தந்தையாக செயல்படவேண்டும். அதே நேரத்தில் தந்தையின் தியாகங்களை கருத்தில் கொண்டு, வயதான காலத்தில் குழந்தைகள் அவர்களை பேணிக்காக்க வேண்டும்.

எப்போது தொடங்கியது :
==================

அமெரிக்காவில் 1909ல் சொனாரா லூயிஸ் ஸ்மார்ட் டாட் என்ற இளம் பெண் தந்தையர் தினம் கொண்டாடும் யோசனையை முன்வைத்தார். அன்னையர் தினம் கொண்டாடும் போது தந்தையர் தினம் ஏன் கொண்டாடக் கூடாது என வலியுறுத்தினார். இவர் தனது தாயாரின் மறைவுக்கு பிறகு தந்தை வில்லியம் ஆறு குழந்தைகள் கொண்ட தனது குடும்பத்தை கடுமையான சிரமங்களுக்கிடையே பராமரிப்பதை கண்டார்.

இது தான் தந்தையர் தினம் கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தை இவருக்கு தூண்டியது. இதன் படி 1910ம் ஆண்டு முதன்முதலில் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது. 1972ல் அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சனால் அந்நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது.

தந்தையர் தினம் கொண்டாடும் இந்த நாளில் மிக அதிகமான குழந்தைகளைப் பெற்ற தந்தையைப் பற்றி நாம் அறிந்து கொள்வோமா? சிலி நாட்டைச் சேர்ந்தவர் ஜெரோடோ. இவருக்கு வயது 65. இவரது மனைவி ஜூடி. இவருக்கு வயது 60. இந்தத் தம்பதியருக்கு எத்தனை குழந்தைகள் இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? உங்கள் கற்பனை உயரத்துக்கு எட்டாத குழந்தைகளைப் பெற்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற தம்பதிகள் இவர்கள். இவர்களூக்கு ஆணும் பெண்ணுமாகப் பிறந்தவர்கள் 64 பேர்கள்.


- நன்றி இன்று ஒரு தகவல்

பலூன்கள் மூலம் இணையதள இணைப்பு வசதி

மணக்கால் அய்யம்பேட்டை | 12:50 AM | Best Blogger Tips


அமெரிக்காவின் கலிபோர்னியாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கூகுள் நிறுவனம் இன்டர்நெட் பயன்பாட்டை அனைத்து மக்களும் பெறும் விதத்தில் ஒரு புதிய முயற்சியில் இறங்கி உள்ளது. ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட 30 பலூன்களில் இணையதள தொடர்புகளை அளிக்ககூடிய கருவிகள் பொருத்தப்பட்டு விண்வெளியில் பறக்கவிடப்படும்.

அவற்றின் பாதை தரையிலிருந்து கட்டுப்படுத்தப்படும். இதுவரை வசதிகளில்லாத தொலைதூரப் பகுதிகளில் வசிப்பவர்கள் இதன்மூலம் இணையதள வசதிகளைப் பெறமுடியும். கூடிய விரைவில் மக்கள் இதனைத் தொடர்ந்து பயன்படுத்துவதற்கு ஏற்றவாறு இதன் தொழில்நுட்பம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பலூன்கள் இன்று நியூசிலாந்து நாட்டில் உள்ள கிரைஸ்ட்சர்ச் என்ற இடத்திலிருந்து பறக்க விடப்பட்டுள்ளன. இவை ஆகாயவிமானங்களை விட இரண்டு மடங்கு உயரத்தில் பறக்கக்கூடியவை. இவை மூலம் 3ஜி வேகத்துடன் கூடிய இணையதளப் பயன்பாட்டை மக்கள் பெறமுடியும்.

தானியங்கி கார், கூகுள் கண்ணாடி போன்றவற்றைத் தயாரித்த கூகுள் நிறுவனத்தின் பிரத்தியேகக் குழு இந்த பலூனையும் தயாரித்துள்ளது. பிராஜெக்ட் லூன் என்று பெயரிடப்பட்ட இந்த திட்டத்தின் இயக்குனர் மைக் காசிடி இதனை ஒரு நிலவு வீச்சு என்று வர்ணித்தார். தான் சொல்லும் திட்டம் விஞ்ஞானக் கதை போலத் தெரியலாம் , ஆயினும் பெரிய பிரச்சினையைத் தீர்க்கக்கூடிய முடிவு இது என்று அவர் கூறினார்.

இதுபோன்ற பலூன்கள், பிற்காலத்தில் எங்கேனும் இயற்கைப்பேரழிவுகள் ஏற்பட்டு தகவல் தொடர்புகள் கிடைக்க இயலாத நிலையில் ஆகாயமார்க்கமாக மீட்புப் பணிகளில் ஈடுபட உதவக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.


Via மைலாஞ்சி ( Mylanchi )

தமிழ்நாடு இழந்த பகுதிகள்!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:49 AM | Best Blogger Tips
 
நம் அரசியல் தலைவர்கள் அக்கறை காட்டாததால் தமிழகம் அண்டை மாநிலங்களிடம் இழந்த நிலப்பகுதியின் அளவு சுமார் 70,000 சதுர கிலோமீட்டர்கள். அந்தப் பகுதிகள் நம்மிடம் இருந்திருந்தால் இன்று நாம் சந்திக்கும் நதி நீர்ப் பிரச்சினைகள் இருந்திருக்காது

'முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கேரளத்தவர் நடந்துகொள்ளும் முறையைப் பார்க்கும்போது கேரளாவோடு சேர்க்கப் பட்ட தமிழ் நிலப் பகுதிகளான தேவிகுளம், பீரிமேடு போன்ற பகுதிகளை மீண்டும் தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்று கேட்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது’ என்று இன்று அரசியல்வாதிகள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஆனால், வரலாற்றை திரும்பிப் பார்த்தால் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தமிழ்நாடு இழந்த பகுதிகள் பல. அவை தமிழ்நாட்டோடு இருந்திருந்தால் இன்று நாம் சந்திக்கும் நதி நீர்ப் பிரச்சினைகள் இருந்திருக்காது. முல்லைப் பெரியாறு மட்டுமல்ல, காவிரி, பாலாறு பிரச்சினைகள்கூட. நாம் இழந்த நிலப் பகுதிகளை ஒப்பிடுகையில் தேவிகுளம், பீரிமேடு என்பது, கஜானாவையே கொள்ளை கொடுத்து விட்டு ஒற்றை மூக்குத்தியை மட்டும் திரும்பக் கேட்பது போலத்தான். ஏனென்றால், தமிழகம் அண்டை மாநிலங்களிடம் இழந்த நிலப்பகுதியின் அளவு சுமார் 70,000 சதுர கிலோமீட்டர்கள்.

அப்படி பல்லாயிரம் சதுர கிலோ மீட்டர் நிலப் பகுதிகளை தமிழகம் இழக்கக் காரணம், நமது அரசியல் கட்சிகள். இந்தக் கட்சி, அந்த இயக்கம் என்ற பேதம் இல்லாமல் எல்லோருமே அந்த இழப்புக்கு துணை போன அரசியலையே செய்தார்கள் என்பது வரலாறு முன் வைக்கும் கசப்பான உண்மை.

நாடு விடுதலை பெற்றதும் மொழிவாரி அடிப்படையில் மாநிலங்களைப் பிரிக்க வேண்டும் என்ற குரல்கள் அடுத்தடுத்து இந்தியா முழுக்க எழுந்தன. அப்படிக் குரல் எழுப்பியவர்கள் பிரிவினைவாதிகள் அல்ல. வெள்ளையனை வெளியேற்ற வேண்டும் என்பதற்காக சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றுச் சிறை சென்றவர்கள். அதிலும் குறிப்பாக காங்கிரஸ் இயக்கத்தில் இருந்தவர்கள்.

முதன் முதலில் மராத்தி மொழி பேசும் மக்களுக்கு தனியாக மராட்டிய மாநிலம் அமைக்க வேண்டும் என்று ‘சம்யுக்த மகாராஷ்டிரா சமிதி’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, போராடத் துவங்கியவர் விடுதலைப் போராட்ட தியாகியான சங்கர்ராவ் தேவ். அடுத்து, குஜராத் மாநிலத்தில் ‘மகா குஜராத் ஜனதா பரிஷத்’ என்ற அமைப்பின் மூலம் போராடத் துவங்கினார் இந்துலால் யக்னிக்.

அதன் பிறகு தென்னிந்தியாவில் தனி ஆந்திர மாநிலப் போராட்டம் எல்லாவற்றையும்விட பெரிய அளவில் விஸ்வ ரூபம் எடுத்தது. அடுத்து கர்நாடகா, கேரளாவிலும் போராட்டங்கள். ஆனால், தமிழ்நாட்டில் அப்படி ஒரு போராட்டம் எழவே இல்லை. இங்கிருந்த தேசிய உணர்வு, திராவிட உணர்வு இரண்டுமே அதற்கு காரணம்.

வெள்ளையர் ஆட்சியில், சென்னை ராஜதானி என்ற பெயரில் இன்றைய நான்கு தென் மாநிலங்களும் ஒன்றாக இருந்தன. அதனால், சென்னையும் தமிழ் மண்ணும் அரசியல் சமூகரீதியாக கேரள, ஆந்திர, கன்னடர்களும் உரிமையோடு செயல்படும் நிலமாகவே இருந்தது.

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தென் இந்தியாவில் கேரள, கன்னட, ஆந்திர மாநிலத்தவர் காலகாலமாக தமிழ் நிலப் பகுதிகளாக இருந்த பகுதிகளை தங்கள் மாநிலத்தோடு இணைக்கக் கோரி போராடினர். அதில் முதன் முதலாக வெற்றி பெற்றவர்கள் கேரள மாநிலத்தவர்தான்.

அகஸ்தீஸ்வரம், தோவாளை, நெய்யாற்றுப் பகுதி, நெடுமங்காடு, இடுக்கி மாவட்டத்தின் பெரும்பகுதி, வண்டிப் பெரியாறு, தேவிகுளம், பீரிமேடு, குமுளி, கொச்சின், சித்தூர், பாலக்காடு பகுதிகள் போன்றவை எல்லாம் இன, மொழி, வரலாற்று, இலக்கிய ரீதியாக தொடர்புடைய தமிழகத்துடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நடக்கவில்லை.

மொழிவாரி மாநிலப் போராட்டம் பொங்கி பிரவகித்த நிலையில் 1954ம் ஆண்டு மொழிவாரி மாநிலம் பற்றி ஆராய்ந்து அறிக்கை தர, பசல் கமிஷன் என்ற ஒரு கமிஷனை மத்திய அரசு நியமித்தது. அந்த கமிஷனிடம் கேரளத்தவர்கள் மேலே குறிப்பிட்ட பகுதிகளைத் தவிர கோவை மாவட்டத்தின் மேற்குப் பகுதி, நீலகிரி, கூடலூர், ஊட்டி ஆகிய பகுதிகளையும் கேட்டனர்.

அன்று (இன்று போல) கேரளத்தவர்கள் அரசியலிலும் நிர்வாகத்திலும் செல்வாக்கோடு இருந்தனர். அன்று நேருவின் அமைச்சரவையிலும் வெளிநாட்டுக் கொள்கை ரீதியான பதவிகள், அயல்நாட்டு தூதரகப் பதவிகள், சர்வதேச நெருக்கடிகளுக்கு பரிகாரம் காணும் பதவிகள், மூன்று மெய்க்காப்பாளர் பதவிகள், நேருவின் அந்தரங்கச் செயலாளர் பதவி, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் பதவி, பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்று பல பொறுப்புக்களில் கேரளத்தவர் இருந்தனர்.

தவிர மொழிவாரி மாநிலம் பற்றி ஆராய்ந்து அறிக்கை தர அமைக்கப்பட்ட பசல் கமிஷனிலேயே கே.எம். பணிக்கர் என்ற மலையாளி பொறுப்பில் இருந்தார். தமிழகம் சார்பில் யாரும் இல்லை. அவர், ‘தனக்கு தேவிகுளம், பீரிமேடு பகுதிகளில் நிறைய தேயிலைத் தோட்டங்கள் இருப்பதால் அவற்றை தமிழ்நாட்டுக்குத் தர முடியாது’ என்று சொன்னதாகக் கூறப்படுகிறது (காண்க: பெட்டிச் செய்தி).

ஆனால், இந்த விஷயத்தில் கேரளத்தவரை மட்டும் குறை சொல்லிப் பயனில்லை. நம் அரசியல்கட்சிகளும், தலைவர்களும் தமிழ் மண்ணைவிடக் கட்சி விசுவாசத்திற்கே முக்கியத்துவம் அளித்தனர்.

தேவிகுளம், பீரிமேடு பகுதிகளை கேரளத்தோடு இணைப்பதற்கு எதிராகப் போராடிய பி.எஸ்.மணி என்ற தலைவர் சென்னை வந்து காமராஜரை சந்தித்து, ‘தேவிகுளம், பீரிமேடு பகுதிகள் காப்பாற்றப்பட வேண்டும்’ என வேண்டினார். அப்போது காமராஜர், ‘குளமாவது மேடாவது, இந்தியாவில்தானே இருக்கிறது மணி, காங்கிரஸ் வேலையைப் போய்ப் பார்’ எனச் சொல்லி அனுப்பினார். மணி, ‘தினமணி’ ஆசிரியர் ஏ.என்.சிவராமனைச் சந்தித்து பிரச்சினையை விளக்கினார். அவர், ‘குளமாவது மேடாவது’ என்ற தலைப்பில், ‘தினமணி’யில் தலையங்கம் ஒன்று எழுதினார். சி.சுப்ரமணியம் ஒருமுறை, ‘தேவிகுளம், பீரிமேடு நமக்கு வேண்டும்’ என சட்டமன்றத்தில் வாதிட்டவர். ஆனால், மத்திய தலைமையின் கருத்து வேறாக இருக்கிறது எனத் தெரிந்தபோது, 1956 மார்ச் 28ம் தேதி பசல் கமிஷனின் அறிக்கையை சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தி அதை ஏற்குமாறு வாதிட்டவரும் அவர்தான்.

தேவிகுளம், பீரிமேடு போராட்டம் பற்றி விவாதிக்க 1956ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி சென்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்று நடந்தது. அதில் அண்ணா கலந்து கொள்கிறார் என்ற காரணத்தால் பெரியார் அந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை (காண்க: அண்ணாவின் கடிதம்). ‘மொழிவழி பிரிந்து இனவழி ஒன்றுபட்டு சோஷலிச திராவிடக் குடியரசு கூட்டாட்சி’ காணும் கனவில் இருந்த திமுக, காங்கிரசிற்கு எதிராகக் கூட்டணி காண்பதிலும் மாநில உரிமைகள் சார்ந்த வேறு பிரச்சினையிலும் காட்டிய ஆர்வத்தை இந்தப் பிரச்சினையில் காட்டவில்லை. ‘பெரியாரும் அண்ணாவும் தட்சிணப் பிரதேசத் திட்டத்தை எதிர்ப்பதிலேதான் அதிக அக்கறை காட்டினார்கள். தேவிகுளம், பீரிமேடு பிரச்சினையில் அவ்வளவாக அக்கறை காட்டவில்லை’ என்று, ‘எனது போராட்டங்கள்’ நூலில் எழுதுகிறார் ம.பொ.சி.

பிரச்சினை வலுவாக இருந்தபோது அந்த ஆண்டு கம்யூனிஸ்டுக் கட்சியின் அகில இந்திய மாநாடு சென்னையில் நடக்க வேண்டி இருந்தது. ஆனால், கேரள மாநிலத்தவர் அதை தங்கள் செல்வாக்கால் கேரளாவுக்கு மாற்றினர். அங்கு திடீர் என அந்த மாநாட்டில், ‘தேவி குளம், பீரிமேடு பகுதிகள் கேரளாவுக்கே சொந்தம்’ என்று தீர்மானம் போட, தமிழக கம்யூனிஸ்ட் தலைவர்கள் அதை எதிர்க்காமல் கட்சிக் கட்டுப்பாடு என்ற பெயரில் அதை ஏற்றுக் கொண்டனர். (ஆனால், ஜீவா எல்லைகளை மீட்கத் தொடர்ந்து போராடினார்).

அப்போது தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்தவர் கேரளத்தைச் சேர்ந்தவர். தேவிகுளம், பீரிமேடு பகுதிகள் யாருக்கு சொந்தம் என்பது பற்றிப் பேச, தமிழக-கேரள மாநிலத் தலைமைச் செயலாளர்களின் கூட்டம் திருவனந்தபுரத்தில் நடந்தது. அப்போது தமிழக அரசின் தலைமைச் செயலாளரான வர்கீஸ் அந்தப் பகுதிகளை கேரளாவுக்குத் தர சம்மதம் தெரிவித்துக் கையெழுத்திட்டார். ‘தமிழக அரசின் தலைமைச் செயலாளரான நீங்கள் இப்படி தமிழகத்துக்கு எதிராக கையெழுத்துப் போடலாமா?’ என்று ஒரு நிருபர் கேட்டபோது, ‘அந்தப் பகுதிகள் இல்லாவிட்டால் கேரளா ரொம்பக் கஷ்டப்படும்’ என்றார் வர்கீஸ்.

இவற்றிற்கு எதிராக நேசமணி, ம.பொ.சிவஞானம் போன்றோர் செய்த சில போராட்டங்களின் விளைவாக கேரளத்தவர் தங்களுக்கு கொண்டு போக நினைத்த செங்கோட்டை, அகஸ்தீஸ்வரம், தோவாளை, கன்னியாகுமரி பகுதிகள் மட்டும் மீட்கப்பட்டன. ஆனால், தமிழகத்தோடு சேர வேண்டிய சுமார் 1,500 சதுர கிலோமீட்டர் நிலப் பகுதி கேரளாவுக்கு போயிற்று. அதில் முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியது செங்கோட்டை தாலுகாவில் இருந்த சில பகுதிகள். 1950களிலேயே ஆண்டுக்கு சுமார் எட்டு கோடி ரூபாய் வருமானம் தந்து கொண்டிருந்த வனப் பகுதியை தமிழகம் இழந்தது.

இந்த 1,400 சதுர கிலோமீட்டர் பகுதி மட்டும் நியாயமாக தமிழகத்துக்கு வந்திருந்தால்...

இன்று முல்லைப் பெரியாறு பகுதி முழுக்க நம்மிடம் இருந்திருக்கும். பிரச்சினையே கிடையாது.

பவானி நதிப் பிரச்சினை கிடையாது.

தமிழ்ப் பண்பாட்டு இலக்கிய வடிவமான கண்ணகிக் கோயில் நம்மை விட்டுப் போயிருக்காது. அங்கு நாம் வழிபடப் போனாலே, கேரள போலீசாரிடம் அடிபடும் நிலைமை வந்திருக்காது.

சிறுவாணி அணையின் ஒரு பகுதியை தம்மிடம் வைத்துக்கொண்டு சிறுவாணித் தண்ணீருக்கும் கடிவாளம் போட கேரளத்தவர் போடும் நினைப்புகளுக்கே வாய்ப்பிருந்திருக்காது.

எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம், தமிழகத்துடன் சேர வேண்டிய 1,400 சதுர கிலோமீட்டர் பரப்பை நாம் இழந்ததுதான்.

கேரளாவிடம் இழந்தது இப்படி என்றால், ஆந்திராவிடம் இழந்தது இன்னும் அதிகம்.

சுதந்திரம் வாங்குவதற்கு முன்பு ஆந்திராவின் ராயல சீமாவே தமிழர்கள் அதிகம் வாழ்ந்த பகுதிதான். திருப்பதிக் கோயில் கருவறை சுவர் கல்வெட்டுகளில்கூட தமிழ் எழுத்துகளே உள்ளன. திருப்பதியில் இருந்த தனித்தமிழ் பள்ளிகள், அங்கு தமிழ்க் கலை காலகாலமாக வளர்ந்த விதமே அழகு.

1912ம் ஆண்டு ஆந்திரப்பிரதேச காங்கிரஸ் சென்னை மாகாணத்தில் இருந்து ஆந்திரப் பகுதிகளை பிரித்து தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. தமிழகத்தில் திராவிடம் பேசிக் கொண்டிருந்த நீதிக் கட்சியின் ஆந்திரப்பிரதேசக் கிளையும் அதே கோரிக்கை வைத்தபோது இங்கிருந்த நீதிக்கட்சிப் புரவலர்கள் அதைக் கண்டிக்கவில்லை.

மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தமிழ் நாட்டுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டிய சித்தூர் மாவட்டம், நெல்லூர் மாவட்டம், இவற்றில் தங்கிய திருப்பதி, காளகஸ்தி, புத்தூர், நகரி, ஆரணியாறு, வடபெண்ணை ஆறு, பொன்வாணி ஆறு இவற்றின் வளமான பகுதிகள், நந்தி மலை இவை எல்லாம் ஆந்திராவோடு போயின.

இதன் பின்னால் விதியின் விளையாட்டு ஒன்றுண்டு.
மொழிவாரி மாநிலப் பிரிவினைக்காக அமைக்கப்பட்ட பசல் கமிஷன் ஒரு விதியை வரையறுத்தது. அதாவது, பிரச்சினைக்குரிய பகுதிகளில் வாழும் மக்களின் மொழி என்ன என்பது முக்கியம் இல்லை. அங்கு உள்ள நிலம் யாருக்கு அதிகம் உரிமைப்பட்டதாக உள்ளது என்பதைப் பொறுத்தே சம்பந்தப்பட்ட மாநிலத்துடன் இணைக்கப்படும் என்று முடிவு எடுத்தது. அதன்படியே கேரள எல்லையை ஒட்டிய தமிழ் நிலப்பகுதிகள் கேரளாவுடன் இணைக்கப்பட்டன.

ஆனால், தமிழ்நாடு-ஆந்திரப் பிரிவினையின்போது நடந்தது என்ன தெரியுமா?

வடக்கே இருந்து பிழைப்பு தேடி வந்த தெலுங்கு பேசும் மக்கள் நெல்லூர், சித்தூர் பகுதிகளில் குறிப்பிட்ட எண்ணிகையில் இருந்தனர். ஆனால், நிலத்தின் உரிமையாளர்கள், தமிழர்களாகவே இருந்தனர். ஆனாலும் இங்கு விதியைத் தலைகீழாக மாற்றியது அப்போது மத்திய அரசு அமைத்த படாஸ்கர் கமிஷன் என்ற கமிஷன், ‘நிலம் யாருடையது என்பது முக்கியம் அல்ல. வாழும் மக்களின் மொழிதான் முக்கியக் கூறு’ என்று சொல்லி எல்லா பகுதிகளையும் ஆந்திராவுடன் இணைத்தது.

வடபகுதியில் மங்கலங்கிழார், ம.பொ.சிவஞானம் போன்றோர் மட்டுமே இதை எதிர்த்து தீவிரமாகப் போராடினர். இராஜாஜி இவர்களுக்கு ஆதரவாக இருந்தார். ஆனாலும் தமிழத்தின் தேசிய திராவிட அரசியல் நிலவரம் இந்த அநியாயங்களை தடுக்க பெருவாரியாக முன் வராததால், முறைப்படி தமிழகத்துக்கு வர வேண்டிய நிலப் பகுதியில் திருத்தணி, வள்ளி மலை, திருவாலங்காடு போன்ற பகுதிகள் மட்டுமே தமிழகத்துக்கு கிடைத்தன.

1960ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி வரையறுக்கப்பட்ட எல்லைகள்படி தமிழ்நாட்டுடன் இருந்த 32,000 சதுர கிலோ மீட்டர் நிலப் பகுதி ஆந்திராவுக்கு தரப்பட்டது. சேலம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்து சுமார் 525 சதுர கிலோமீட்டர் பகுதி, ஆந்திராவுக்கு அளிக்கப்பட்டது. ஆரணியாறு அணைக்கட்டு ஆந்திராவுக்குப் போனது. திருப்பதி பறிபோனது. காளஹஸ்தி போனது. நந்தி மலை போனது. நந்தி மலை நம்மோடு இருந்திருந்தால் பாலாற்றுப் பிரச்சினை எழுந்திருக்காது.

சென்னையையே ஆந்திரர்கள் தங்களுக்குக் கேட்டார்கள். பல தமிழ் நிலப் பகுதிகளை இழந்து அதைத் தக்கவைத்துக் கொண்டார்கள் நம் அரசியல்வாதிகள்.

இந்த கேரள, ஆந்திர, சென்னை விவகாரங்களிலாவது அரசியல் கட்சிகள் சில போராட்டங்களை நடத்தின. அறிக்கைகள் விட்டன. ஆனால், கர்நாடகாவிடம் நாம் இழந்தது என்பது தூக்கத்தில் திருட்டுக் கொடுத்ததற்கு சமம்.

காவிரி எங்கே உற்பத்தி ஆகிறது என்றால், குடகு மலை என்று எல்லோருக்கும் தெரியும். பழந்தமிழில் குடக்கு என்றால், மேற்கு என்று பொருள். அங்கு வாழும் மக்கள் பேசும் மொழி கூர்க் மொழி. சுமார் முக்கால் நூற்றாண்டுக்கு முன்புவரை கன்னடர்களும் கூர்க் மக்களும் அரசியல் ரீதியாக விரோதம் பாராட்டிக் கொண்டிருந்தார்கள். அதனால், மொழிவாரி மாநிலப் பிரிவினையின்போது இந்த கூர்க் மக்கள், ‘நாங்கள் எங்கள் மொழி மற்றும் கலாச்சாரத்தின் அடிப்படையாக இருக்கும் தமிழ்நாட்டோடு இணைந்து விடுகிறோம்’ என்று சொன்னார்கள். அதற்காக அந்த மக்கள், கன்னடர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்தி சிறிய அளவில் போராடியதுகூட உண்டு. நாம் சற்றே கண் காட்டி இருந்தால்கூட அவர்கள் ஓடி வந்து ஒட்டிக் கொண்டிருப்பார்கள்.

அப்படி தமிழகத்தோடு இணைந்து இருந்தால், காவிரித்தாய் ‘தமிழகத்திலேயே’ உற்பத்தியாகி, தமிழகத்திலேயே கடலில் கலந்திருப்பாள். நமக்கு காவிரிப் பிரச்சினையே வந்திருக்காது. தமிழகத்தின் நெற்களஞ்சியம் பதராகி இருக்காது.

கன்னடர்கள் திட்டமிட்டுப் போராடியதால் முறைப்படி தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய பெங்களூரு, மைசூரு மாவட்டத்தின் ஒரு பகுதி, கோலார் தங்கவயல் பகுதிகள் கர்நாடகாவுக்குப் போயின.

பெங்களூரைத் தங்கள் வசமாக்கிக்கொள்ள கர்நாடகத்தினர் காய் நகர்த்திய விதம், அவர்கள் எவ்வளவு புத்திசாலிகள் என்பதைக் காட்டுகிறது. ஒரு மாநிலத்துடன் ஒரு பகுதி இணைக்கப்பட வேண்டும் என்றால் முதலில் நிலத் தொடர்பு, அடுத்து மொழித் தொடர்பு இருக்க வேண்டும் என்பது விதி. ஓசூரில் அப்போது தெலுங்கு பேசுவோர் 39 சதவிகிதமும் அடுத்து, கன்னடம் பேசுவோர் 35 சதவிகிதமும் இருந்தனர். தெலுங்கு பேசும் மக்களே அதிகம் இருந்தாலும் ஆந்திராவோடு நிலத்தொடர்பு இல்லை என்ற காரணத்தால், அதை ஆந்திரா கைவிட்டது. அன்று அது வறண்ட பூமி என்பது வெளியே சொல்லப்படாத காரணம். ஆந்திராவோடு அது இணைக்கப்படாத பட்சத்தில் கன்னடம் பேசுவோர் அதிகம் இருந்ததால், அதை கர்நாடகாவோடுதான் இணைத்திருக்க வேண்டும். ஆனால்-

பெங்களூரு விவகாரம் வந்தபோது, கன்னட மக்கள் அதிகம் இருந்தாலும் நாங்கள் ஓசூரை தமிழகத்துக்குக் தந்துவிட்டோம். அதற்குப் பதிலாக கன்னடம் பேசும் மக்களை விட தமிழ் பேசும் மக்கள் அதிகம் இருந்தாலும் நாங்கள் பெங்களூரை எடுத்துக்கொள்கிறோம் என்று கோரிக்கை வைத்தது கர்நாடகா.

தமிழகம் அதற்கு உரிமையான நிலப்பகுதிகளை இழந்ததற்கு, தமிழகத்தில் அன்று நிலவிய மண் சார்ந்த உணர்வு இல்லாத- வாய்ச்சவடால் அரசியல்தான் காரணம்.

இன்றைய தமிழகத்தின் பரப்பளவு 1,30,609 சதுர கிலோமீட்டர்கள் தமிழகம் அண்டை மாநிலங்களிடம் இழந்த நிலப்பகுதியின் அளவு சுமார் 70,000 சதுர கிலோமீட்டர்கள். இவையும் நம்மோடு இருந்திருந்தால் தமிழகம், கர்நாடகாவைவிட இன்னும் பெரிய மாநிலமாக இருந்திருக்கும். அப்போதும் ஆந்திராவைவிட சற்று சிறிய மாநிலமாக இருந்திருக்கும் என்றாலும்கூட, தமிழகமே மற்ற தென்னிந்திய மாநிலங்களைவிட வளமான மாநிலமாக இருந்திருக்கும்.

நன்றி - தமிழ் -கருத்துக்களம்