விவாதம் விவாகரத்தில் முடியும்...?! - தாம்பத்தியம் - 28

மணக்கால் அய்யம்பேட்டை | 3:00 PM | Best Blogger Tips

அன்பு நட்புகளே !

விடுமுறைக்கு பின் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்கிறேன்...தாம்பத்தியம் தொடரின் இந்த பாகத்தில் தம்பதிகளின் சாதாரண விவாதங்கள் கூட பெரிய பிரச்சனைக்கு வழிவகுத்துவிடும் என்பதை உணர்த்த எனக்கு தெரிந்தவரை எழுதி இருக்கிறேன்...படித்துவிட்டு நிறை குறைகளை சொல்லுங்கள்...தெளிவுபடுத்திகொள்கிறேன்.

* * *

கணவன் மனைவிக்குள் எந்த  பிரச்சனை என்றாலும் அது வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது...'நாலு சுவத்துக்குள்ளத்தான் இருக்கணும் துன்பங்களையும் வேதனைகளையும் மனதுக்குள் போட்டு புதைச்சுக்கோ' என்று பெண்ணுக்கும், 'எல்லாத்தையும் மென்னு முழுங்க பழகிக்கோ' என்று ஆணுக்கும் அறிவுரை சொன்ன காலங்கள் மலையேறி போய் லேட்டஸ்டா "சரி பட்டு வரலைனா டைவர்ஸ் பண்ணிடு " என்ற அட்வைஸ்கள் அதிகம் கேட்கின்றன.

விவாகரத்துக்கு இப்போதெல்லாம் நீண்ட நெடிய காரணங்கள் தேவையில்லை...
 
ஒரு சில வார்த்தைகள் போதும்...!!

கணவன் மனைவி இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல் மிக மிக முக்கியம். பேச்சு பரிமாற்றங்கள் சரியான விதத்தில் அமையாவிட்டால் பிரிவிற்கு இதுவே அடிப்படை காரணமாகி விடுகிறது. வெறுப்பாக, எரிச்சலுடன் எடுத்தெறிந்து பேசுவது, துணை பேசுவதில் இருக்கும் அர்த்தத்தை சரியாக புரிந்துக்கொள்ளாமல் பேசுவது, ஈகோவை காயப்படுத்துவது மாதிரி பேசுவது போன்றவை. கையாளுவதில் கவனம் இல்லையென்றால் ஆபத்தில் கொண்டு போய் விட்டுவிடும். இன்றைய அவசர யுகத்தில் தம்பதியினர் பரிமாறி கொள்ளும் உரையாடல்களும் sms அளவில் சுருங்கி விட்டன. பேசப்படுவது ஒரு சில வார்த்தைகள் என்கிற நிலையில் அதையும் கவனமின்றி உதிர்த்துவிட்டால் தொலைந்தது இல்லறம் !!

ஒருவரின் குணம், விருப்பு, வெறுப்பு, சந்தோசம், கோபம் எல்லாவற்றையும் வெளிப்படுத்துவது பேச்சுக்கள் தானே?

உரையாடல்களின் போது...

=>
தம்பதிகள் என்று இல்லை. காதலர்கள் இருவருக்கான உரையாடலில் ஒருவர் மற்றொருவரிடம் "ஏன் டல்லா இருக்கிற" என விசாரிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு இவர் காரணத்தை சொல்லி விட்டால் ' ஓ ! அப்படியா, சரி சரி கவலை படாத, சரியாய் போய்டும்' என்று ஆறுதல் கூறுவதுடன் மேட்டர் ஓவர். மாறாக 'ஒண்ணுமில்ல' என்று பதில் வந்தால் உடனே உஷாராகிடவேண்டும். ஆமாம் இனிதான் வார்த்தையை கவனமா கையாளனும் !! ஒண்ணுமில்ல என்றால், "ஏதோ இருக்கிறது அதை என்னவென்று கேட்கமாட்டியா, மனதில் இருப்பதை உன்னிடம் கொட்டி விட்டால் நான் சரியாகி விடுவேன்" என்ற ஏக்கம் ஆவலுடன் ஒளிந்திருப்பதை புரிந்துகொண்டாக வேண்டும்.  (இந்த 'ஒண்ணுமில்ல' வார்த்தையை சொல்வது அனேகமாக பெண்கள் )

இந்த நிலைமை புரியாம ஏதோ பர்சனல் ப்ராபளம் போலனு விட்டுட்டா போச்சு. கதை கந்தலாகிவிடும். அந்த ஏக்கம் பொறுத்து பொறுத்து பார்த்து முடிவில் விரக்தியில் போய் விழுந்து விடும். இதனால் பெரிய சிக்கல்கள் அப்போது வர வாய்ப்பு இல்லை என்றாலும் பல விரக்திகள் ஒன்று சேர்ந்தால்...?! யோசிங்க...!

=>
உரையாடல் ஒரு கட்டத்தில் சண்டையின் தொடக்கம் போல தெரிஞ்சா  எதுக்கு வம்புனு   'சரி உன் இஷ்டம்' என்று கூறி ஒதுங்கி விடுவது  அல்லது ஒன்றும் பேசாமல் மௌனமாகி விடுவது. இது இரண்டுமே தவிர்க்கப்பட வேண்டும். இது துணையின் மீதான அக்கறையின்மையை காட்டும்.  அமைதியா போய்விட்டால் அவர்களை மதிப்பது போலாகும் என்பது எல்லாம் பழைய கதை...இப்போது அப்படியே தலைகீழ், சைலென்ட்டா இருந்தா ' மதிக்கவில்லை' என்று பொருள்.

=>
சிலரது வீடுகளில் பேச்சு சூடு பிடிக்கத் தொடங்கியதும் உடனே சட்டையை மாட்டிகொண்டு வெளியே நடையை  கட்டிவிடுவார்கள் ஆண்கள்...

ரிலாக்ஸ் பண்ண, சிக்கலை தவிர்க்க வெளியேறுவது  உங்கள் உடலுக்கும் மனதுக்கும் நல்லது. ஆனால் அங்கே வீட்டில்  மனதிற்குள்  புழுங்கிக் கொண்டிருக்கும் மனைவியின் மனநிலை !? அதுவும் தவிர எவ்வளவு நேரம் தான் பிரச்னைக்கு பயந்து வெளியில் இருப்பீர்கள் மறுபடி வீட்டிற்குள் வந்து தானே ஆக வேண்டும் அப்போது எவ்வாறு அவளின் முகத்தை எதிர்கொள்வீர்கள்...அசட்டு சிரிப்புடனா? முறைத்துக்கொண்டா?  இரண்டையும் அலட்சியபடுத்தி விட்டு தன்னை(மட்டும்) பற்றிய  சிந்தனைக்குள் விழுந்து கொண்டிருப்பாள் மனைவி.

'
நான் தனியா தவிச்சி புலம்பிட்டு இருக்கிறப்போ நீ கண்டுக்காம வெளில போறியா, அப்படியே இரு, எனக்கும் ஒரு காலம் வரும்' என்பதாக இருந்து விட்டால் அதன் பின் அக்கணவனின் நிலை !!? சண்டையிட சந்தர்ப்பத்தை எதிர் நோக்கி காத்திருக்கும் மனைவி , பிரச்சனை தான் முடிந்து விட்டதே என சகஜமான நிலையில் இருக்கும் கணவன்!! வசமாக ஒரு சந்தர்ப்பத்தில் அகப்பட்டுக்கொண்டால் என்னாகும் கணவன் நிலைமை...யோசிங்க...!

=>
சரிக்கு சரி மல்லு கட்டும் சண்டை கோழிகள் சிலர். சின்ன சண்டை வந்தாலும் போதும் எடுத்ததுமே உச்சஸ்தாயில் கத்துவது...'வெட்டுவேன், குத்துவேன், நீ ஒழிஞ்சாத் தான் நிம்மதி...' இந்த ரேஞ்சில் போகும் இவர்களது உரையாடல்...அடுத்த சில மணி நேரம்/சில நாள் கழித்து ஒன்றுமே நடக்காத மாதிரி சகஜமாகி விடுவார்கள். இரண்டு நிலையில் எது உண்மை... சண்டை போட்டு கத்தியது உண்மை என்றால் அடுத்துள்ள சமாதானம்? விட்டுக் கொடுத்தலா? விட்டுக்கொடுத்தல் என்றால் அது ஏன் சண்டையின் ஆரம்பத்தில் இல்லை. தெருச்சண்டை ரேஞ்சுக்கு இறங்கி சண்டை போட்டாச்சு, அப்புறம் விட்டுகொடுக்கிறாங்களாம்...என்ன லாஜிக் இது ?

சண்டையின் போது ஏற்படும் மன அழுத்தம், மன உளைச்சல் ! அதன் விளைவு , எங்கே போய் முடியும் யோசிங்க...!

பழி வாங்கும் மனோபாவம்

நடந்த பிரச்சனையில் ஒருவர் வென்றதை போன்று இருந்தால், அதாவது ஒருவரின் பேச்சுடன் அப்பேச்சு முடிவுக்கு(?) வந்தது என்றால் தனக்கு அடுத்து எப்போது சந்தர்ப்பம் கிடைக்கும் என பழி வாங்க காத்திருக்கும் தம்பதிகள் உண்டு. இது மிகவும் ஆபத்தான ஒன்று. பழிவாங்குவது என்பது எங்கே சென்று முடியும் என்று சொல்ல முடியாது...தற்போது இது போன்ற மனநிலை அதிகரித்திருக்கிறது என்பது கசப்பாக இருந்தாலும் உண்மை !!

ஈகோ !
(
நான் என்னும் முனைப்பு)

"
நம்மை பற்றிய நினைப்பும் உணர்வுகளும் தலைத்தூக்கும் வரையில் தான் நமது செயல் ஒழுங்காக இருக்கும்...வாழ்க்கையும் முன்னேற்றப் பாதையில் பயணிக்கும். ஆனால் ஈகோவானது மற்றவர்களுடன் ஒப்பிடப்பட்டு உயர்வு மனப்பான்மையாக மாறுவது தான் தவறு. இது தான் தன்னுணர்வு அகம்பாவமாக மாறும்  நிலை" என்கிறார் சிக்மண்ட் பிராய்ட்

தம்பதிக்குள் நீயா நானா என்கிற ஈகோவுக்கு இடமே தரக்கூடாது அன்பான உறவை ஈகோ கொத்தி கிழித்து விடும். பெரும்பாலும் இது தலை தூக்கினால் எல்லாவற்றுக்கும் விவாதம் தொடங்கி விடும். இருவரில் ஒருவர் வாய் மூடும் வரை விவாதம்  நடந்து கொண்டே இருக்கும். அதே சமயம் தற்காலிகமாக துணையின் அடக்கி வைக்கபடும் உணர்ச்சிகள் எந்த நேரத்திலும் பெரிய பிரச்சனையாக வெடிக்கலாம்...

பெண்கள்

பொதுவாக சொல்வாங்க ஆண்களுக்குதான் 'தான்' என்கிற ஈகோ அதிகம் இருக்கும் என்று... அப்படியல்ல பெண்களிடமும் உண்டு.ஆணின் ஈகோ பெண்ணை மட்டும் தாக்கும், ஆனால் பெண்களின் ஈகோ மொத்த குடும்பத்தையும் பாதிக்கும். உன்னைவிட 'நான் எதில் குறைந்துவிட்டேன் நானும் உன் அளவு படித்திருக்கிறேன், வேலை பார்க்கிறேன் ' இந்த எண்ணம் விவாதத்தின் போது விஸ்வரூபம் எடுத்து ஈகோ பூதாகரமாக வெளிபடுகிறது.

ஆண்களை பொருத்தவரை அவர்கள் விவாதிப்பதை  அவ்வளவாக விரும்புவதில்லை. சில வார்த்தைகளை வேகமாக உச்சரித்து விட்டு அமைதியாகி விடுகிறார்கள், ஆனால் ஒரு சில பெண்கள் அத்தனைக்கும் தனித் தனி அர்த்தம் கண்டுபிடித்து வாதத்தை நீடித்துக் கொண்டே செல்வார்கள்...வாதத்திற்கு சளைத்தவர்களில்லை பெண்கள் ! இத்தகைய பெண்களை ஆண்கள் விரும்புவதில்லை...இதை புரிந்துகொண்டு  பெண்கள் குடும்பத்தை கொண்டு செல்லவேண்டும்....விவாதத்தில்  ஜெயிப்பது  முக்கியமில்லை... உறவில் ஜெயிப்பதே...!!

ச்சீ போடா,  முட்டாள், இடியட், ராஸ்கல் இதை தனிமையான நேரத்தில் சொன்னா இனிமையா  இருக்கும், அதையே சண்டை நேரத்தில் கோபமா சொன்னா ?!!

பல விவாதங்கள் விவாகரத்தில் போய் தான் முடிந்திருக்கின்றன என்பதை மனதில் வைத்து கொண்டு, பேச்சில் மிகுந்த கவனம் தேவை...'ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும்' என்று சொல்வாங்க...எப்படி பட்ட சொல்லை வெளிபடுத்த வேண்டும் என்பது உங்க சாய்ஸ் !!

பின் குறிப்பு-

இப்படியெல்லாம்  கூட நடந்து கொள்வார்களா என அவரவர் வீட்டு சூழலை ஒற்றுமை படுத்தி வினா எழுகிறதா ? பிரச்னையை ஏந்திக் கொண்டு என்னிடம் வந்தவர்களை வைத்துத்தான் தாம்பத்தியம் பதிவு எழுதுகிறேன்...தொடரை தொடர்ந்து வாசிக்கிறவர்களுக்கு இது தெரியும். தெரியாதவர்களுக்காக இந்த சிறு  விளக்கம். நன்றி.

தொடர்ந்து பேசுகிறேன்...உங்களின் மனதோடு  மட்டும்...

பிரியங்களுடன்
கௌசல்யா

ரத்தக் கொதிப்பை "கூல்' செய்ய...

மணக்கால் அய்யம்பேட்டை | 1:34 PM | Best Blogger Tips
இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் உயர் ரத்தஅழுத்தம் எனப்படும் "ஹைபர் டென்ஷன்' பலரின் வாழ்க்கையில் குடிகொண்டுள்ளது. இந்த உயர்ரத்த அழுத்தம் "சைலன்ட் கில்லர்' என்று அழைக்கப்படுகிறது.

ஏனென்றால் உடலில் அமைதியாகக் குடிகொண்டு உயிரையே பறித்துவிடும் தன்மை உடையது. தமனிகளில் உள்ள ரத்தத்தில் ஏற்படும் அழுத்தமே உயர் ரத்த அழுத்தமாகும். ரத்த அழுத்தத்திற்கு மருத்துவம் பார்க்காவிட்டால் மாரடைப்பு, இதயநோய், ஸ்ட்ரோக், சிறுநீரக செயலிழப்பு, இதயம், கண்கள் செயலிழத்தல் போன்றவை ஏற்படும்.

உயர் ரத்தஅழுத்தத்திற்கான முக்கியக் காரணங்கள்:

உடல் பருமன்
வாழ்க்கை முறை மாற்றம்
மரபணு காரணிகள்
அதிக அளவில் மது அருந்துதல்
வலி நீக்கும் மருந்துகளை அதிக அளவில் உட்கொள்ளுதல்
கருத்தடை மாத்திரைகள் உட்கொள்ளுதல்

பொதுவான காரணங்கள்:

சிறுநீரக வியாதிகள்
அசாதாரணமாக இயங்கும் ரத்த நாளங்கள்
கர்ப்பக் காலத்தில் வரும் வலிப்பு நோய்
தைராய்டு பிரச்னைகள்

வீட்டில் இருந்தே ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது எப்படி?

100 கிராம் முலாம்பழ விதைகளுடன், 100 கிராம் கசகசாவை சேர்த்து பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். தினமும் காலை, மாலை வேளைகளில் 1 தேக்கரண்டி பொடியை சாப்பிட்டு தண்ணீர் குடிக்க வேண்டும்.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிராம்பை மென்று தின்று, வாயைக் கழுவ வேண்டும். மென்று தின்ன முடியாதவர்கள் தண்ணீர் சேர்த்து விழுங்கலாம்.

25- 30 கறிவேப்பிலையுடன் 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்து, சாறெடுத்து, வடிகட்டி காலையில் எழுந்தவுடன் குடிக்கலாம். சுவை பிடிக்காதவர்கள் சிறிது எலுமிச்சை சாறையும் அதனுடன் சேர்த்துக் கொள்ளலாம்.

கொத்தமல்லி அல்லது வெந்தய இலைகளையும் சாறெடுத்துப் பருகலாம். ஒருவர் தன் உடலுக்கு எது ஏற்றது என்று பரிசோதித்துப் பார்த்துப் பருக வேண்டும்.

1 தேக்கரண்டி தேனுடன், 1 தேக்கரண்டி இஞ்சி சாறு, 1 தேக்கரண்டி சீரகப்பொடி ஆகியவயற்றைக் கலந்து, காலை, மாலை இருவேளைகளில் அருந்தலாம்.

"ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி"

மணக்கால் அய்யம்பேட்டை | 11:10 AM | Best Blogger Tips
விளக்கம்:

ஐந்து பெற்றால் என்பதில் வரும் அந்த ஐந்து விடயங்கள்:

1) ஆடம்பரமாய் வாழும் தாய்,

2) பொறுப்பில்லாமல் வாழும் தந்தை,

3) ஒழுக்கமற்ற மனைவி,

4) ஏமாற்றுவதும் துரோகமும் செய்யக்கூடிய உடன் பிறந்தோர் மற்றும்

5) சொல் பேச்சு கேளாத பிடிவாதமுடைய பிள்ளைகள் என்பதாகும்..

இவர்களை கொண்டிருப்பவன், அரசனே ஆனாலும் கூட அவனது வாழ்க்கை வேகமாய் அழிவை நோக்கி போகும்.

- அகரமுதலி

சுகப்பிரசவம் நடக்க சில வழிமுறைகள்…

மணக்கால் அய்யம்பேட்டை | 11:07 AM | Best Blogger Tips
கர்ப்பிணிகள் வீட்டு வேலைகளை செய்து வந்தாலே எளிதாக அவர்களுக்கு சுகப்பிரசவம் ஆகும். கர்ப்பிணிகள் முதல் 3 மாதத்தில் மல்லாந்து படுப்பதோ, மல்லாந்தபடி படுத்திருந்து அப்படியே எழுவதோ மிகவும் தவறு. முதல் 3 மாதங்களுக்கு ஒருக்களித்து படுத்தபடி இருப்பதுதான், கருவின் வளர்ச்சிக்கு உதவும். அதேபோன்று, ஒருக்களித்த படியே கையை ஊன்றித்தான் எழுந்திருக்க வேண்டும்.

ஒருக்களித்தபடி படுக்கும் போது வயிறு தளர்வான நிலையில் இருக்கும். ஆனால் மல்லாந்து படுத்தால் வயிறு இழுத்த நிலையில் இருக்கும். அப்படி இருக்கும் போது கரு குழந்தையாக உருவாவதில் சிக்கல் ஏற்படும். அதன் பிறகும் மல்லாந்து படுப்பதை தவிர்க்க வேண்டும். மல்லாந்து படுத்தால் குழந்தைக்கு குடல் சுற்றிக் கொள்ளும் ஆபத்து ஏற்படும்.

அதேப்போல, ஒரு பக்கம் ஒருக்களித்து படுத்திருக்கும் போது அடுத்த பக்கத்திற்கு அப்படியேத் திரும்பக் கூடாது. எழுந்து உட்கார்ந்து பிறகுதான் அடுத்த பக்கம் ஒருக்களித்துப் படுக்க வேண்டும். இது குழந்தை சுகப்பிரசவம் ஆக உதவும். இப்போதெல்லாம் இந்த பழக்கத்தை நிறைய கர்ப்பிணிகள் கடைபிடிப்பதில்லை. அதனால்தான் குழந்தை தலை திரும்புவதில் பிரச்சினை ஏற்படுகிறது.

தலை திரும்பாமல் இருந்தால் சிசேரியன் மூலமாகத்தான் பிரசவமாகும். மேலும், எல்லோருமே குனிந்து நிமிர்ந்து வேலை செய்தாலே சுகப்பிரசவமாகும். வீட்டு வேலைகளை தாங்களாகவே செய்து கொண்டால் எல்லோருக்கும் சுகப்பிரவமாகும் வாய்ப்பு உள்ளது. அதேப்போல கர்ப்பிணிகள் ஏற்கனவே யோகாசனம் செய்து வந்து கொண்டிருந்தாலும் முதல் மூன்று மாதங்களுக்கு செய்யக் கூடாது.

அதன் பிறகும் எளிதான பயிற்சிகளை செய்யலாம். ஆனால் கர்ப்பம் தரித்த பிறகு புதிதாக யோகாசனம் செய்யவேக் கூடாது. சுகப்பிரசவம் ஆவதற்கான ஆசனத்தையும் 7ஆம் மாதத்தில் இருந்து செய்யத் துவங்கலாம். ஆனால், சுகப்பிரசவம் ஆவதற்கு எந்த பயிற்சியும் தேவையில்லை. நீங்கள் சுறுசுறுப்பாக உங்கள் வேலைகளை செய்து கொண்டு வந்தீர்களானால்.

ஒரு வேளை எந்த வேலையும் செய்யாமல் இருப்பவர்களுக்குத்தான் இந்த பயிற்சிகள் தேவைப்படும். மேலும், வீட்டில் குனிந்து நிமிர்ந்து செய்யும் வேலைகளான வீட்டை பெருக்குதல், துணி துவைப்பது போன்ற வேலைகளை செய்யும் போது வயிறு சுருங்கி விரியும் தன்மையை பெறுகிறது. தற்போது சில பெண்களுக்கு சுகப்பிரவம் என்றால் பயம் ஏற்படுகிறது. சிசேரியன்தான் எளிது என்கிறார்கள். முதலில் அந்த பயத்தைப் போக்கிக் கொள்ள வேண்டும்.

புற்று நோய்க்கு எதிரான பாதிப்பிலிருந்து மீசை பாதுகாக்கிறது:ஆய்வில் தகவல்

மணக்கால் அய்யம்பேட்டை | 11:06 AM | Best Blogger Tips

ஒரு ஆண்மகனின் அழகுக்கு கம்பீரம் சேர்க்கும் வகையிலும், வீரத்தின் அடையாளமாகவும் திகழ்வது மீசை. வெறும் அழகியல் காரணங்களுக்காக மட்டுமில்லாமல், ரயில், பஸ் போன்றவற்றை கட்டி இழுப்பதற்காகவும் சிலர் அடர்த்தியான நீண்ட மீசையை வளர்த்துள்ளனர்.

ஆனால், உடலியல் ரீதியாகவும் மீசைக்கு முக்கிய பங்குண்டு என்பதை ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கண்டறிந்துள்ளனர். இந்த ஆராய்ச்சியின்படி, முகத்தில் அடர்த்தியான மீசை, தாடிகளை வளர்ப்பவர்களுக்கு புற்றுநோய்க்கு காரணமன கதிரியிக்கத்தின் பாதிப்பு மிகக் குறைவாகவே உள்ளதாக தெரிய வந்துள்ளது.

‘டோசி மெட்ரிக்’ தொழில் நுட்பத்தின் மூலம், தெற்கு குவீன்ஸ்லாந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், மீசை வளர்த்திருக்கும் மற்றும் மீசை மழித்திற்கும் ஆண்களிடையே பரிசோதனை மேற்கொண்டனர்.

இதில், அவர்களின் முக சருமத்தில் ஏற்படும் சூரியக்கதிர்களின் பாதிப்பு குறித்து கண்காணிக்கப்பட்டதில் பெரிய மீசை வளத்திருப்பவர்களின் சரும பாதிப்பு, மீசையை மழித்துவிட்டிருக்கும் நபர்களின் பாதிப்பில் மூன்றில் ஒரு பங்குதான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆராய்ச்சி முடிவுகளின்படி முகரோமம் எவ்வளவு நீளமாக உள்ளதோ…. அதற்கேற்ப புற்றுநோய்க்கு எதிரான பாதிப்பிலிருந்து மீசை நம்மை பாதுகாக்கின்றது என்பது தெளிவாகியுள்ளது.

மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும். .

மணக்கால் அய்யம்பேட்டை | 11:05 AM | Best Blogger Tips

*அருகம்புல் பவுடர் :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி

*நெல்லிக்காய் பவுடர் :- பற்கள் எல
ும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது

*கடுக்காய் பவுடர் :- குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

*வில்வம் பவுடர் :- அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது

*அமுக்கலா பவுடர் :- தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.

*சிறுகுறிஞான் பவுடர் :- சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.

*நவால் பவுடர் :- சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.

*வல்லாரை பவுடர் :- நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

*தூதுவளை பவுடர் :- நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.

*துளசி பவுடர் :- மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.

*ஆவரம்பூ பவுடர் :- இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.

*கண்டங்கத்திரி பவுடர் :- மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.

*ரோஜாபூ பவுடர் :- இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.

*ஓரிதழ் தாமரை பவுடர் :- ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா

*ஜாதிக்காய் பவுடர் :- நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.

*திப்பிலி பவுடர் :- உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.

*வெந்தய பவுடர் :- வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*நிலவாகை பவுடர் :- மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.

*நாயுருவி பவுடர் :- உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.

*கறிவேப்பிலை பவுடர் :- கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.

*வேப்பிலை பவுடர் :- குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*திரிபலா பவுடர் :- வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.

*அதிமதுரம் பவுடர் :- தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.

*துத்தி இலை பவுடர் :- உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.

*செம்பருத்திபூ பவுடர் :- அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.

*கரிசலாங்கண்ணி பவுடர் :- காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.

*சிறியாநங்கை பவுடர் :- அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.

*கீழாநெல்லி பவுடர் :- மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.

*முடக்கத்தான் பவுடர் :- மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது.

*கோரைகிழங்கு பவுடர் :- தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.

*குப்பைமேனி பவுடர் :- சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.

*பொன்னாங்கண்ணி பவுடர் :- உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.

*முருஙகைவிதை பவுடர் :- ஆண்மை சக்தி கூடும்.

*லவங்கபட்டை பவுடர் :- கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.

*வாதநாராயணன் பவுடர் :- பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.

*பாகற்காய் பவுட்ர் :- குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

*வாழைத்தண்டு பவுடர் :- சிருநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.

*மணத்தக்காளி பவுடர் :- குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.

*சித்தரத்தை பவுடர் :- சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.

*பொடுதலை பவுடர் :- பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.

*சுக்கு பவுடர் :- ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.

*ஆடாதொடை பவுடர் :- சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.

*கருஞ்சீரகப்பவுடர் :- சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.

*வெட்டி வேர் பவுடர் :- நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.

*வெள்ளருக்கு பவுடர் :- இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.

*நன்னாரி பவுடர் :- உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.

*நெருஞ்சில் பவுடர் :- சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.

*பிரசவ சாமான் பவுடர் :- பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.

*கஸ்தூரி மஞ்சள் பவுடர் :- தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.

*பூலாங்கிழங்கு பவுடர் :- குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.

*வசம்பு பவுடர் :- பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.

*சோற்று கற்றாலை பவுடர் :- உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.

*மருதாணி பவுடர் :- கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.

*கருவேலம்பட்டை பவுடர் :- பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்.