இன்றைய
 பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் உயர் ரத்தஅழுத்தம் எனப்படும் "ஹைபர் 
டென்ஷன்' பலரின் வாழ்க்கையில் குடிகொண்டுள்ளது. இந்த உயர்ரத்த அழுத்தம் 
"சைலன்ட் கில்லர்' என்று அழைக்கப்படுகிறது.
 
 ஏனென்றால் உடலில் 
அமைதியாகக் குடிகொண்டு உயிரையே பறித்துவிடும் தன்மை உடையது. தமனிகளில் உள்ள
 ரத்தத்தில் ஏற்படும் அழுத்தமே உயர் ரத்த அழுத்தமாகும். ரத்த 
அழுத்தத்திற்கு மருத்துவம் பார்க்காவிட்டால் மாரடைப்பு, இதயநோய், ஸ்ட்ரோக்,
 சிறுநீரக செயலிழப்பு, இதயம், கண்கள் செயலிழத்தல் போன்றவை ஏற்படும்.
 
 உயர் ரத்தஅழுத்தத்திற்கான முக்கியக் காரணங்கள்:
 
 உடல் பருமன்
 வாழ்க்கை முறை மாற்றம்
 மரபணு காரணிகள்
 அதிக அளவில் மது அருந்துதல்
 வலி நீக்கும் மருந்துகளை அதிக அளவில் உட்கொள்ளுதல்
 கருத்தடை மாத்திரைகள் உட்கொள்ளுதல்
 
  பொதுவான காரணங்கள்:
 
 சிறுநீரக வியாதிகள்
 அசாதாரணமாக இயங்கும் ரத்த நாளங்கள்
 கர்ப்பக் காலத்தில் வரும் வலிப்பு நோய்
 தைராய்டு பிரச்னைகள்
 
  வீட்டில் இருந்தே ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது எப்படி? 
 
 100 கிராம் முலாம்பழ விதைகளுடன், 100 கிராம் கசகசாவை சேர்த்து பொடி செய்து
 வைத்துக்கொள்ள வேண்டும். தினமும் காலை, மாலை வேளைகளில் 1 தேக்கரண்டி 
பொடியை சாப்பிட்டு தண்ணீர் குடிக்க வேண்டும். 
 
 தினமும் காலையில் 
வெறும் வயிற்றில் ஒரு கிராம்பை மென்று தின்று, வாயைக் கழுவ வேண்டும். 
மென்று தின்ன முடியாதவர்கள் தண்ணீர் சேர்த்து விழுங்கலாம்.
 
 25- 30
 கறிவேப்பிலையுடன் 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்து, சாறெடுத்து, 
வடிகட்டி காலையில் எழுந்தவுடன் குடிக்கலாம். சுவை பிடிக்காதவர்கள் சிறிது 
எலுமிச்சை சாறையும் அதனுடன் சேர்த்துக் கொள்ளலாம்.
 
 கொத்தமல்லி 
அல்லது வெந்தய இலைகளையும் சாறெடுத்துப் பருகலாம். ஒருவர் தன் உடலுக்கு எது 
ஏற்றது என்று பரிசோதித்துப் பார்த்துப் பருக வேண்டும். 
 
 1 தேக்கரண்டி தேனுடன், 1 தேக்கரண்டி இஞ்சி சாறு, 1 தேக்கரண்டி சீரகப்பொடி ஆகியவயற்றைக் கலந்து, காலை, மாலை இருவேளைகளில் அருந்தலாம்.
உயர் ரத்தஅழுத்தத்திற்கான முக்கியக் காரணங்கள்:
உடல் பருமன்
வாழ்க்கை முறை மாற்றம்
மரபணு காரணிகள்
அதிக அளவில் மது அருந்துதல்
வலி நீக்கும் மருந்துகளை அதிக அளவில் உட்கொள்ளுதல்
கருத்தடை மாத்திரைகள் உட்கொள்ளுதல்
பொதுவான காரணங்கள்:
சிறுநீரக வியாதிகள்
அசாதாரணமாக இயங்கும் ரத்த நாளங்கள்
கர்ப்பக் காலத்தில் வரும் வலிப்பு நோய்
தைராய்டு பிரச்னைகள்
வீட்டில் இருந்தே ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது எப்படி?
100 கிராம் முலாம்பழ விதைகளுடன், 100 கிராம் கசகசாவை சேர்த்து பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். தினமும் காலை, மாலை வேளைகளில் 1 தேக்கரண்டி பொடியை சாப்பிட்டு தண்ணீர் குடிக்க வேண்டும்.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிராம்பை மென்று தின்று, வாயைக் கழுவ வேண்டும். மென்று தின்ன முடியாதவர்கள் தண்ணீர் சேர்த்து விழுங்கலாம்.
25- 30 கறிவேப்பிலையுடன் 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்து, சாறெடுத்து, வடிகட்டி காலையில் எழுந்தவுடன் குடிக்கலாம். சுவை பிடிக்காதவர்கள் சிறிது எலுமிச்சை சாறையும் அதனுடன் சேர்த்துக் கொள்ளலாம்.
கொத்தமல்லி அல்லது வெந்தய இலைகளையும் சாறெடுத்துப் பருகலாம். ஒருவர் தன் உடலுக்கு எது ஏற்றது என்று பரிசோதித்துப் பார்த்துப் பருக வேண்டும்.
1 தேக்கரண்டி தேனுடன், 1 தேக்கரண்டி இஞ்சி சாறு, 1 தேக்கரண்டி சீரகப்பொடி ஆகியவயற்றைக் கலந்து, காலை, மாலை இருவேளைகளில் அருந்தலாம்.

 

