திருவாரூர் ⟩⟩ திருச்சி ⟩⟩ இராமேஸ்வரம்

மணக்கால் அய்யம்பேட்டை | 5:05 PM | Best Blogger Tips

May be an image of ‎train and ‎text that says "‎திருவாரூரில் இருந்து இராமேஸ்வரம் வரை தினமும் செல்லும் நேரடி ரயில் திருவாரூர் > திருச்சி இராமேஸ்வரம் தொடர் ரயில் சேவை 136454 सषया INDIAN ស CANERA MATLAS दिनीयश्रेणी SECONDCLASS 53張 كد= 1503 வழி: தஞ்சாவூர் திருச்சி புதுக்கோட்டை காரைக்குடி சிவகங்கை மானாமதுரை பரமக்குடி இராமநாதபுரம்‎"‎‎ 

 🔥திருவாரூரில் இருந்து திருச்சி வழியாக இராமேஸ்வரம் வரை செல்லும் தொடர் ரயில் சேவை இது 😱 இதில் ஏறினால் புதுக்கோட்டை காரைக்குடி மானாமதுரை இராமேஸ்வரம் வரை நேரடியாக செல்லமுடியும் 📌 வாருங்கள் இந்த தொடர் ரயில் சேவை எவ்வாறு உள்ளது என்று இப்போது பார்க்கலாம் 👇

🔀 தினமும் திருவாரூரில் இருந்து திருச்சி வரை செல்லும் பாசஞ்சர் ரயில் தொடர்ந்து திருச்சியில் இருந்து இராமேஸ்வரம் நோக்கி விரைவு ரயில் புறப்பட்டு செல்கிறது 📌 இதன் மூலமாக திருவாரூரில் ஏறினால் நேரடியாக இராமேஸ்வரம் வரை செல்ல முடியும் 🤩

📨 இதற்கு இரண்டு வகையில் நீங்கள் டிக்கெட் எடுக்க வேண்டியதாக இருக்கும் :- தஞ்சாவூர் திருச்சி வரை மட்டுமே பயணிக்கிறீர்கள் என்றால் நீங்கள் சாதாரண பாசஞ்சர் வகை டிக்கெட் எடுத்தால் மட்டும் போதும் // அதே திருச்சி தாண்டி உள்ள குமாரமங்கலம் முதல் இராமேஸ்வரம் வரை செல்வதற்கு நேரடியாக திருவாரூரில் இருந்து எக்ஸ்பிரஸ் வகை டிக்கெட் எடுக்க வேண்டும் :- அதைப் பற்றி விரிவாக கீழே நாம் பார்க்கலாம் ....

🚂 வண்டி எண் || 56805 ⟩⟩ 16849
• திருவாரூர் ⟩⟩ திருச்சி ⟩⟩ இராமேஸ்வரம்
" தொடர் ரயில் சேவை "

☢️ 56805 || திருவாரூர் டூ திருச்சிராப்பள்ளி பாசஞ்சர் ரயில் தினமும் காலை 04:35 மணிக்கு திருவாரூர் சந்திப்பு நிலையத்தில் புறப்பட்டு கொரடாச்சேரி நீடாமங்கலம் சாலியமங்கலம் வழியாக தஞ்சாவூருக்கு காலை 05:39 மணிக்கு வந்து 05:42 மணிக்கு தஞ்சாவூரில் புறப்பட்டு ஆலக்குடி பூதலூர் அயனாபுரம் சோலகம்பட்டி தொண்டமான்பட்டி திருவெறும்பூர் மஞ்சத்திடல் பொன்மலை வழியாக காலை 06:55 மணிக்கு திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வருகிறது ✅

🛜 திருச்சியிலிருந்து அதே ரயில் மீண்டும் அடுத்த 10 நிமிடங்களில் இராமேஸ்வரம் நோக்கி விரைவு ரயில் ஆக செல்லும் 🛜

☢️ 16849 || திருச்சிராப்பள்ளி to இராமேஸ்வரம் விரைவு ரயிலாக தினமும் காலை 07:05 மணிக்கு திருச்சி சந்திப்பில் புறப்படும் ரயில் குமாரமங்கலம் கீரனூர் வெள்ளனூர் புதுக்கோட்டை திருமயம் கோட்டையூர் காரைக்குடி தேவகோட்டை-ரோடு கல்லல் சிவகங்கை மானாமதுரை பரமக்குடி இராமநாதபுரம் உச்சிப்புளி மண்டபம் பாம்பன் வழியாக இராமேஸ்வரத்திற்கு மதியம் 12:35 மணிக்கு சென்று சேருகிறது ‼️

⏳ இதன் மூலமாக திருவாரூரில் காலை 04:35 மணிக்கு புறப்பட்டு மதியம் 12:35 மணிக்கு இராமேஸ்வரம் வந்துவிட முடியும் // மிகவும் குறைவான பயண நேரத்திலேயே ⏰

✅ இந்த ரயிலில் மொத்தமாக 9 UNRESERVED பெட்டிகள் உள்ளது || முழுவதும் முன்பதிவு இல்லா ரயிலாக தான் இயங்கி வருகிறது

🈁 திருவாரூரிலிருந்து திருச்சி வரை மட்டும் பயணிக்க இந்த ரயிலில் (( ORDINARY சாதாரண டிக்கெட் எடுத்தால் போதும் ))

• ₹15 = திருவாரூர் to  தஞ்சாவூர்
• ₹25 = திருவாரூர் 
to திருச்சிராப்பள்ளி

🈁 திருவாரூரிலிருந்து குமாரமங்கலம் கீரனூர் புதுக்கோட்டை திருமயம் காரைக்குடி சிவகங்கை மானாமதுரை பரமக்குடி இராமநாதபுரம் இராமேஸ்வரம் செல்வதற்கு (( MAIL EXPRESS ' மெயில் விரைவு டிக்கெட் நேரடியாக எடுக்க வேண்டும் ))

• ₹65 = திருவாரூர் 
to கீரனூர்
• ₹75 = திருவாரூர் 
to புதுக்கோட்டை
• ₹80 = திருவாரூர் 
to திருமயம்
• ₹85 = திருவாரூர் 
to காரைக்குடி
• ₹95 = திருவாரூர் 
to சிவகங்கை
• ₹105 = திருவாரூர் 
to மானாமதுரை
• ₹110 = திருவாரூர் v பரமக்குடி
• ₹120 = திருவாரூர் 
to இராமநாதபுரம்
• ₹140 = திருவாரூர் 
to ராமேஸ்வரம்

🟥 இந்த அடிப்படையில் தான் டிக்கெட் எடுக்க வேண்டும் // சாதாரண பாசஞ்சர் டிக்கெட்டை இராமேஸ்வரம் வரை எடுத்துக்கொண்டு சென்றால் அபராதம் கட்ட வேண்டியதாக இருக்கும் !! ஏனென்றால் திருச்சியில் இருந்து செல்லக்கூடிய ரயில் எக்ஸ்பிரஸ் ரயிலாக இராமேஸ்வரம் வரை செல்கிறது 📌 இதனை நினைவில் கொண்டு டிக்கெட் எடுங்கள் 📨

🔳 காலை நேரத்தில் இராமேஸ்வரம் வரை செல்வதற்கு இந்த ரயிலை பயன்படுத்திக் கொள்ளுங்கள் // திருவாரூர் தஞ்சாவூர் பகுதி மக்கள் நேரடியாக இந்த தொடர் சேவையை பயன்படுத்திக் கொள்ள முடியும் ❗

↔️ குறிப்பு நேரடி டிக்கெட் எடுத்து கொள்ள வேண்டும் // திருச்சியில் இறங்கி டிக்கெட் எடுப்பதற்கு போதுமான நேரம் இருக்காது எனவே திருவாரூரில் இருந்து நீங்கள் ஏறும் நிலையத்திலேயே இராமேஸ்வரம் வரை ஊர்களுக்கு டிக்கெட் எடுத்துக கொள்ளுங்கள்

📨 குறைவான கட்டணத்தில் நிறைவான பயணத்தை மேற்கொள்ள இந்த ரயிலில் உங்கள் பயணங்களை துவங்குங்கள் .....

Thanks to © SIBIKUMAR VLOGS