☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
☘️வாழ்க்கை கடவுள் தந்த பரிசு. பிறரிடம் ஒரு கடும் சொல்லை சொல்லும் முன் வாய் பேச முடியாதவர்களை நினைத்து பாருங்கள்.
☘️உங்கள் சாப்பாட்டை குறை கூறும் முன் சாப்பிடவே வழி இல்லாதவர்களை நினைத்து பாருங்கள்.
☘️உங்கள் கணவரையோ அல்லது மனைவியையோ குறை கூறும் முன் வாழ்க்கை துணை வேண்டி வருந்துபவர்களை நினைத்து பாருங்கள்.
☘️உங்கள் குழந்தைகளை குறை கூறும் முன் பிள்ளை வரம் வேண்டுபவர்களை நினைத்து பாருங்கள்.
☘️உங்களுடைய வீட்டை குறை கூறும் முன் வீடில்லாமல் வீதிகளில் வசிப்பவர்களை எண்ணிப்பாருங்கள்.
☘️உங்களுடைய வேலையை குறை கூறும் முன் வேலையில்லாமல் வாடுபவர்களை எண்ணிப் பாருங்கள்.
☘️சோகத்தில் உங்கள் முகம் வாடும் பொழுது கடவுள் தந்த வாழ்க்கை என்ற பரிசுக்கு நன்றி சொல்லி முகத்தில் புன்னகை தவழ விடுங்கள்....
☘️☘️☘️☘️☘️☘️☘️
எச்சரிக்கையாக இருக்க..கற்றுக் கொள்.
ஏனெனில்.. உன்னைச் சுற்றி இருப்பவர்கள்.. மகான்கள் அல்ல..
மனிதர்கள்.
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏
Ramesh


