*இன்பத்தில் என்னய்யா சிற்றின்பம் ...பேரின்பம்...!!*
*படைப்பினால் ஈர்க்கப் பட்டால் சிற்றின்பம்.*
*படைத்தவனால் ஈர்க்கப்பட்டால் பேரின்பம்.*
*படைப்புகளை அனுபவித்தால் சிற்றின்பம்.*
*படைப்புகளை ஆராதித்தால் பேரின்பம்.*
*படைப்புகளை படைப்புகளாய் கண்டால் சிற்றின்பம்.*
*படைப்புகளில் படைத்தவனைக் கண்டால் பேரின்பம்.*
*என்னால்
தான் இந்த வாழ்க்கை எனில் சிற்றின்பம்.*
*இறைவனால்
தான் இந்த வாழ்க்கை எனில் பேரின்பம்.*
*நான்
இந்த உடல் என எண்ணினால் சிற்றின்பம்.*
*நான்
இந்த உயிர் என எண்ணினால் பேரின்பம்.*
*அமைதி
ஆனந்தம் சிறிதே பெற்று பின் இழந்தால் சிற்றின்பம்.*
*அமைதி
ஆனந்தத்தை நித்தியமாகப் பெற்றால் பேரின்பம்.*
*செய்வதெல்லாம் தனக்காக என்றால் சிற்றின்பம்.*
*செய்வதெல்லாம் இறைவனுக்காக என்றால் பேரின்பம்.*
*செய்வது
நான் என எண்ணினால் சிற்றின்பம்.*
*செய்வது
இறைவன் என எண்ணினால் பேரின்பம்.*
*புறப்
பொருட்களில் நிகழ்வில் சுகமுறுவது சிற்றின்பம்.*
*அகத்திலேயே நித்திய சுகம் பெறுவது பேரின்பம்.*
*இன்பத்தை
அடைந்தாலும் மீண்டும் வேண்டுவது திருப்தி அடையாதது சிற்றின்பம்.*
*வேறு
எதனையும் விரும்பாதது பூரணமானது பேரின்பம்.*
*நிரந்தர
பேரின்பத்தை மறைப்பது சிற்றின்பம்.*
*நிலையற்ற
சிற்றின்பத்திற்கு அப்பாற்பட்டது பேரின்பம்.*
*உடலோடு
மனதை தொடர்புப்படுத்துவது சிற்றின்பம்.*
*உயிரோடு
மனதை இணைப்பது பேரின்பம்.*
*இன்பம்
என்கிற வடிவிலிருக்கும் துன்பமே சிற்றின்பம்.*
*துன்பம்
போல் அறியப்பட்டு இன்பமாவது பேரின்பம்.*
*எங்கோ
இருக்கிறான் இறைவன் எனில் சிற்றின்பம்.*
*எங்கும்
இருக்கிறான் இறைவன் எனில் பேரின்பம்.*
*பலவீனம்,
நோய், துன்பம், மரணம் தருவது சிற்றின்பம்.*
*மரணமிலாப்
பெருவாழ்வைத் தருவது பேரின்பம்.*
*பயம்,
சஞ்சலம், சந்தேகம், குற்ற உணர்வு தருவது சிற்றின்பம்.*
*பயமறியாதது, ஸ்திரமானது, தூய்மையானது பேரின்பம்.*
*சிறு
உணர்ச்சிகளில் இன்பம் அடைவது சிற்றின்பம்.*
*எல்லையற்ற
பிரம்மத்தில் கலப்பது பேரின்பம்.*
*பிறரை
தனக்காக பயன்படுத்துவது சிற்றின்பம்.*
*தன்னை
பிறருக்காக அர்ப்பணிப்பது பேரின்பம்.*
*அளவுடையது,
முடிவுடையது சிற்றின்பம்.*
*அளவற்றது,
முடிவிலாதது பேரின்பம்.*
*அறிவை
மழுங்கடிப்பது சிற்றின்பம்.*
*அறிவைப்
பிரகாசிக்கச் செய்வது பேரின்பம்.*
*அழகை
மட்டும் ஆராதித்தால் சிற்றின்பம்.*
*அழகற்றதும் அழகும் ஒன்றானால் பேரின்பம்.*
*பயன்
கருதி செயல் புரிந்தால் சிற்றின்பம்.*
*பயன்
கருதாது செயல் புரிந்தால் பேரின்பம்.*
*முதலில்
இனித்து பின் கசப்பது சிற்றின்பம்.*
*முதலில்
கசந்து பின் என்றும் இனிப்பது பேரின்பம்.*
*இரக்கமற்றது, ஒழுக்கமற்றது சிற்றின்பம்.*
*கருணையுடையது, தர்மமானது பேரின்பம்.*
*உடலாய்
அனைத்தையும் கண்டால் சிற்றின்பம்.*
*உயிராய்
அனைத்தையும் கண்டால் பேரின்பம்.*
*புலன்களில் இன்பம் துய்ப்பது சிற்றின்பம்.*
*புலன்களுக்கு அப்பால் சென்றால் பேரின்பம்.*
*மனம்
உலகில் அலைந்தால் சிற்றின்பம்.*
*மனம்
இறைவனில் ஒடுங்கினால் பேரின்பம்.*
*மரண
பயம் ஏற்படுத்துவது சிற்றின்பம்.*
*மரணத்தையும் வெல்வது பேரின்பம்.*
*மனமாய்
இருந்தால் சிற்றின்பம்.*
*மனதைக்
கடந்தால் பேரின்பம்.*
*வேறு
வேறாய்க் கண்டால் சிற்றின்பம்.*
*எல்லாம்
ஒன்றெனக் கண்டால் பேரின்பம்.*
*பகுதியாய்க் கண்டால் சிற்றின்பம்.*
*மொத்தமாய்
கண்டால் பேரின்பம்.*
*அகங்காரம்
கொண்டால் சிற்றின்பம்.*
*அகங்காரம்
துறந்தால் பேரின்பம்.*
*தசையில்
சுகம் பெறுவது சிற்றின்பம்.*
*அன்பில்
தன்னை இழப்பது பேரின்பம்.*
*ஆண்
பெண்ணில் இன்புறுவது சிற்றின்பம்.*
*ஆண்
பெண்ணை வணங்குவது பேரின்பம்.*
*துய்க்கும் நேரத்தில் மட்டும் இருப்பது சிற்றின்பம்.*
*துய்த்து
விட்டால் நீங்காதது பேரின்பம்.*
*ஜீவராசிகளால் தரமுடிந்தது சிற்றின்பம்.*
*இறைவனால்
தரப்படுவது பேரின்பம்.*
*உலகைப்
பற்றினால் சிற்றின்பம்.*
*இறைவனைப்
பற்றினால் பேரின்பம்.*
*பிறர்
நலனைக் காணாதது சிற்றின்பம்.*
*தன்
நலம் கொள்ளாதது பேரின்பம்.*
*இன்பம்
இல்லாத இன்பம் சிற்றின்பம்.*
*இன்பமான
இன்பமே பேரின்பம்.*
*அஞ்ஞானம்
விரும்புவது சிற்றின்பம்.*
*ஞானம்
விரும்புவது பேரின்பம்*
*பெற்று
மகிழ்வது சிற்றின்பம்.*
*கொடுத்து
மகிழ்வது பேரின்பம்.*
*சக்தியை
இழப்பது சிற்றின்பம்.*
*சக்தியாய்
மாறுவது பேரின்பம்.*
*பற்றுக்
கொள்வது சிற்றின்பம்.*
*பற்றற்று
இருப்பது பேரின்பம்.*
*மாறுவது,
தாவுவது சிற்றின்பம்.*
*மாறாதது
நிலைத்தது பேரின்பம்.*
*நிலையற்றது சிற்றின்பம்.*
*நிரந்தரமானது பேரின்பம்.*
நன்றி இணையம்