🎯🍎 பெண்கள் ஏன் சனிஸ்வர பகவான் கோவிலுக்கு செல்லக் கூடாது?

மணக்கால் அய்யம்பேட்டை | 4:00 PM | Best Blogger Tips


ஒரு ஆண் மகனை ஒரு இடத்திற்கு வரக் கூடாது என்று சொல்வதை வெளிப்படையாக அனைவர் மத்தியிலும் சொல்லலாம். ஆனால் பெண்கள் விசயத்தில் பட்டவர்த்தனமாக காரணத்தை கூருவது அந்த பெண்ணை அவமதிக்கும் செயலாகும். ஆதலால் சூசகமாக நம் முன்னோர்கள் வரக் கூடாது என்று மட்டும் சொல்லி வைத்தார்கள்.
மாதவிடாய்தான் அந்த காரணம்:
---------------------------------------------
---
பொதுவாக நிறைய பெண்களுக்கு மாதவிடாயானது சரியான தேதிகளுக்கு வருவதில்லை. சிலப் பெண்களுக்கு இரு மாதங்களுக்கு ஒரு முறை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கூட வரும்.
அச்சமயங்களில் பெண்கள் படும் இன்னல்கள்:
---------------------------------------------
---------------------
1.
இரத்த போக்கு அதிகம் இருக்கும்.
2.
தாங்க முடியாத வயிற்று வலி.
3.
சோர்வு.
4.
எண்ணப் பிரள்வு
5.
சோர்வு.
வழிபாடு சாத்தியமா?
-------------------------------
பெரிய பெரிய புண்ணிய ஸ்தலங்களில் மக்கள் எண்ணிக்கை அளவு கடந்து இரூக்கும் அந்த சூழ்நிலையில் பெண்களுக்கு மாதவிடாய் வந்துவிட்டால் அவர்கள் படும் இன்னலை சொல்லி மாளாது. நான் கூறும் கருத்துக்கள் அநேக பெண்களுக்கு புரியும் என்றே கருதுகிறேன்.
வழிபாடானது மனதில் எந்த சிந்தனையும் இல்லாமல் இறைவனை மட்டுமே நினைத்து அவர் காட்டும் வழியில் பயனிப்பதே ஆகும். பெண்கள் இத்தகைய சூழ்நிலையில் அவ்வாறான வழிபாடுகளில் ஈடுபட முடியுமா? சிந்தித்துப் பார்க்க வேண்டும் மக்களே.....
விரதம் மேற் கொள்ளலாமா?
-------------------------------------------
மனதை ஒருமுகப்படுத்தி 48 நாட்கள் நமது சிந்தனையை முழுவதையும் கடவுள் பக்கம் திருப்புவதே விரதமாகும். இந்த கால கட்டத்தில் நமது தீய எண்ணங்கள் யாவும் நம்மை விட்டு அகலும். மாத விடாய் தருணத்தில் பெண்களால் அவ்வாறு விரதங்கள் மேற்க் கொள்ள முடியுமா?
அப்போ மாதவிடாய் என்றால் இழிவா?
---------------------------------------------
------------
அவ்வாறு கூறுபவன் வடி கட்டிய முட்டாளாகவே இருப்பான். மாதவிடாய் என்பது பெண்களுக்கு ஏற்படும் உடலை தூய்மைப்படுத்து அன்றாட நிகழ்வு அவ்வளவுதான். சிதைந்த கருமுட்டைகள் வெளியில் வருவதுதான் மாதவிடாய். இந்த கால கட்டத்தில் பெண்கள் தங்கள் வலியை போக்கிக் கொள்ளவும். எண்ணத்தை சீராக வைத்துக் கொள்ளவும் நீச்சல் பயர்ச்சி, யோகா போன்றவற்றை கையாளலாம். மாதவிடாய் இல்லையெனில் குல விருத்தி ஏது?
---------------------------------------------
------------------------------------
ஆன்மீகம் பெண்களை ஒதுக்குகிறது என பலருக்கு எண்ணம் உண்டு. முக்கியமாக பெண்களுக்கே இத்தகைய எண்ணம் அதிகமாக உண்டு. உண்மையில் இக்கருத்து முற்றிலும் தவறானது. மதம் என்பதையும் ஆன்மீகம் என்பதையும் பலர் போட்டு குழப்பிக்கொள்கி
றார்கள். அதன் எதிரொலிப்பே இத்தகைய கருத்து.
சபரிமலைக்கு பெண்கள் ஏன் செல்லக்கூடாது என்பதில் பல முரண்பட்ட தகவல்கள் உண்டு. தற்சமயம் கோர்ட்டில் பெண்கள் சபரிமலைக்கு செல்ல அனுமதி வேண்டி வழக்கு நடைபெற்று வருகிறது.பெண்கள் சபரிமலைக்கு செல்லலாம் என்பதே உண்மை. ஆனால் கருப்பை செயல்படும் நிலையில் இருக்கும் பெண்களே அனுமதி மறுக்கப்படுகிறது.
குழந்தை பருவ பெண்களும், வயது முதிர்ந்த பெண்களும் சபரி மலை செல்ல தடையேதும் இல்லை. இதன் காரணம் என்ன?
யோக சக்தி என்பது மனிதனின் உடலில் கீழ் இருந்து மேல்நோக்கி செயல்பட வேண்டும். மேலிருந்து கீழ் நோக்கி செயல்படக் கூடாது. பிறப்புறுப்பு பகுதியில் செயல்கள் இருக்கும் பொழுது ப்ராண சக்தியானது உடலில் கீழ் நோக்கி பயணிக்கும். இந்நிலையில் ஆன்மீக எழுச்சி ஏற்படாமல் மன சிதறல்கள் ஏற்பட்டு, இது போன்ற பாதிப்புகள் பிறருக்கும் பரவும்.
இதை தவிர்த்து தலைப்பகுதியில் செயல்கள் இருந்தால் ப்ராணன் மேல் நோக்கி பயணித்து ஆன்மீக உயர்வுக்கு வழிகாட்டும்.
கருமுட்டையை தயார்படுத்துதல், கருப்பையில் அதை நிலைப்படுத்துதல் மற்றும் கருமுட்டையை உடைத்து வெளியேற்றுதல் என பெண்களின் கருப்பை மாதம் முழுவதும் செயல்படும் ஒர் உறுப்பு.
அப்படி கருப்பை செயல்படும் சமயம் அதீதமான இறைசக்தி உள்ள இடத்திற்கு சென்றால் (அபாணன்) கீழ் நோக்கி செயல்படும் ப்ராணன் திடீரென மேல்நோக்கி செயல் படத்துவங்கும். இதனால் கருப்பை தன் செயல்பாட்டை இழந்து கருமுட்டையை வெளிப்படுத்தும் தன்மையை விட்டு மலட்டுத்தன்மைக்கு செல்லும்.
கோவிலுக்கு சென்றால் வளர்ச்சி என்பது தான் நடக்க வேண்டுமே தவிர அழிவு நடக்கலாமா?
கருப்பை செயல்படும் பெண்கள் அனேகர் இத்தகைய இடத்திற்கு சென்றால் நம் எதிர்கால சந்ததிகள் என்ன ஆவது?
இதனாலேயே நம் கோவில்களில் கூட சில இடங்களில் இளம் பெண்கள் அனுமதிப்பதில்லை
.
சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்படுவ
ார்கள், கருப்பை செயல்படும் நிலையில் அல்ல...
சபரி மலையில் உள்ள பதினெட்டு படிகள் ஆன்மீக சக்தி நிறைந்த பகுதி. முழுமையான ப்ராணன் கொண்ட பகுதி. அதனால் தான் அதற்கு பூஜைகள் நடத்தப்படுகிறது. வேறு எந்த கோவிலிலும் படிக்கட்டுகள் கட்டிடங்களுக்கு வருடா வருடம் பூஜை செய்யமாட்டார்கள்.
இருமுடி கட்டி தலையில் அழுத்தம் கொடுத்தவண்ணம் தலையில் ப்ராணன் செயல்படும் நிலையில் அந்த படிக்கட்டுகளை அணுகினால் முழுமையான சக்திமாற்றம் ஏற்படும்.
கேரளத்தில் மன்னார்சாலை என்ற பாம்பு கோவில் உண்டு. இங்கே பெண் தான் பூஜை செய்ய முடியும். மேலும் ஆண்களுக்கு அனைத்து பகுதியிலும் அனுமதி இல்லை. காரணம் அக்கோவில் "அபாணா" என்ற ப்ராணனுக்கானது.
அதனால் பெண்களே தாய்மை என்ற உருவாக்கும் திறன் கொண்டவர்கள் என்பதால் இக்கோவிலின் உரிமை அவர்களிடமே உள்ளது.
இப்படியாக ஒவ்வொரு கோவிலின் சக்திக்கு ஏற்பவே நடைமுறைகளும் ஏற்படுத்தப்படுக
ிறது. இதை விடுத்து எல்லோருக்கும் சம உரிமை வேண்டும் என உளருவது முட்டாள் தனம். பெண்கள் அழகு நிலையத்திற்கு சென்று ஒரு ஆண் எனக்கும் முடி திருத்துங்கள் என சம உரிமை கேட்பதற்கு சமம்.
------------------------------------------------------------------------------------
யோகா முறையில் ஆண் பெண் என்ற வேறுபாடுக்கு இடம் இல்லை. ஆன்மிகதில் பெண்களுக்கு முழுமையான அணுகுதல் உண்டா? இதன் கருதினை நாம் கேட்டால் பெண்களே அதை ஏற்று கொள்ள மாட்டார்கள் காரணம் மாதம் மாதம் அவர்களின் உடலில் ஏற்படும் மாதவிலக்கு. முக்கியமாக பெண்களுக்கே இத்தகைய எண்ணம் அதிகமாக உண்டு.
பெண்ணின் கருப்பை மாதத்திற்கு ஒரு முறை தன்னை சக்தியூட்டிக் கொள்ளும் தாய்மை நிறைந்த செயலை இவர்கள்மாதவிலக்குஎன அழைக்கிறார்கள். இதற்கு மாத ஓய்வு என்று கூறுங்கள் ஏன் விலக்கு என முற்றிலும் விலக்க வேண்டும்? மதத்தை விலக்குங்கள் தவறில்லை, ஆனால் ஏன் மாத விலக்கு என பெண்களை விலக்குகிறீர்கள்.சளி பிடித்திருக்கும் சமயம் நாசியில் கபம் ஒழுகினாலும் கைக்குட்டையுடன் இறைவனை நினைப்பது தவறென்றால் மாத ஓய்வில் பெண்கள் இறைப்பணியில் ஈடுபடுவதும் தவறே..!
யோக சக்தி என்பது மனிதனின் உடலில் கீழ் இருந்து மேல்நோக்கி செயல்பட வேண்டும். மேலிருந்து கீழ் நோக்கி செயல்படக் கூடாது. பிறப்புறுப்பு பகுதியில் செயல்கள் இருக்கும் பொழுது ப்ராண சக்தியானது உடலில் கீழ் நோக்கி பயணிக்கும். இந்நிலையில் ஆன்மீக எழுச்சி ஏற்படாமல் மன சிதறல்கள் ஏற்பட்டு, இது போன்ற பாதிப்புகள் பிறருக்கும் பரவும்.
இதை தவிர்த்து தலைப்பகுதியில் செயல்கள் இருந்தால் ப்ராணன் மேல் நோக்கி பயணித்து ஆன்மீக உயர்வுக்கு வழிகாட்டும்.
கருமுட்டையை தயார்படுத்துதல், கருப்பையில் அதை நிலைப்படுத்துதல் மற்றும் கருமுட்டையை உடைத்து வெளியேற்றுதல் என பெண்களின் கருப்பை மாதம் முழுவதும் செயல்படும் ஒர் உறுப்பு. அப்படி கருப்பை செயல்படும் சமயம் அதீதமான இறைசக்தி உள்ள இடத்திற்கு சென்றால் (அபாணன்) கீழ் நோக்கி செயல்படும் ப்ராணன் திடீரென மேல்நோக்கி செயல் படத்துவங்கும். இதனால் கருப்பை தன் செயல்பாட்டை இழந்து கருமுட்டையை வெளிப்படுத்தும் தன்மையை விட்டு மலட்டுத்தன்மைக்கு செல்லும். கோவிலுக்கு சென்றால் வளர்ச்சி என்பது தான் நடக்க வேண்டுமே தவிர அழிவு நடக்கலாமா?
கருப்பை செயல்படும் பெண்கள் அனேகர் இத்தகைய இடத்திற்கு சென்றால் நம் எதிர்கால சந்ததிகள் என்ன ஆவது?
இதனாலேயே நம் கோவில்களில் கூட சில இடங்களில் இளம் பெண்கள் அனுமதிப்பதில்லை.
இத்தகைய செயல்பாடு ப்ராணன் தொடர்பு உடையது. இதை நன்கு புரிந்து கொள்ளுங்கள்.
இது ஒரு விழிப்புணர்வு பதிவு மட்டுமே! சிந்திப்போர் சிந்திக்க.....📚ஆன்மீகபயணத்தில் ரமேஷ்🌍🔚
நன்றி இணையம்