😊தெய்வம் நின்று
--------------------------------
கொல்லும்!
-----------------------
குருகுலத்தில் சீடன்
ஒருவன்,
தெய்வம்
நின்று
கொல்லும்
என்று
பாடம்
சொன்ன
குருவிடம்,
" தெய்வம்கூட
மன்னிக்காவிடில்,
தவறு
செய்வோர்
கதி
என்ன?
" எனக் கேட்டான்.
சீடனுக்கு அதை
விளக்க
விரும்பினார்
குரு.
ராவணன் தவங்கள் நிறையச்
செய்து
பிரம்மாவிடம்
வரம்
பல
பெற்றிருந்தான்.
அதனால் இறுமாப்புக் கொண்ட
அவன்,
எமனால்கூட தன்னை
எதிர்க்க
முடியாது
என்று கர்வத்தோடு அவருடன்
போருக்குச்
சென்றான்.
ராவணனுக்கும் எமதர்மனுக்கும்
நடந்தபோரின்
போது,
காலதண்டத்தை எமன்
உயர்த்தியபோது,
பிரம்மா
தோன்றி,
" எமனே!
இந்த
காலதண்டத்தை
ராவணன்
மீது
ஏவி
அவனைக்
கொன்று
என்
வரத்தைப்
பொய்யாக்கிவிடாதே!
என் வரத்தைப் பொய்யாக்குபவர்கள்
உலகத்தை
வஞ்சித்த
பாவத்துக்கு
ஆளாவார்கள்!"
என்றார்.
பிரம்மனின் வாக்கை
ஏற்று
தேரோடு
மறைந்தார்
எமன்.
விவரம் தெரியாத ராவணன்,
தனக்கு
பயந்துதான்
எமன்
ஓடி
ஒளிந்ததாக
எண்ணி,
நான் எமனையும் வென்று
விட்டேன்
என
கொக்கரித்தான்.
மேலும் மேலும் தவறுகளை
வளர்த்துக்
கொண்டான்.
சீதையை அபகரித்து அவற்றுள்
ஒன்று.
இப்படி தன் தவவலிமையால்
பாவங்கள்
செய்த
ராவணன்
மன்னிப்புக்கான அளவை
மீறி
இறுதியில்
ராமரால்
கொல்லப்பட்டான்.
" ராவணனை
மட்டுமல்ல,
நம்
எல்லோரின்
பாவங்களையும்,
கடவுள்
மன்னிக்கிறார்.
நம்மைத் திருத்திக்
கொள்ளத்
தரும்
வாய்ப்புகளே,
தெய்வம் நின்று
கொல்வதாய்
சொல்லப்படுவது.
வாய்ப்புகளை கோட்டைவிட்டு,
பாவச்சுமையை ஏற்றிக்கொண்டால்,
மன்னித்தது போதும்
என
தெய்வம்
தண்டிக்கிறது
" என்றார் குரு.
சீடன் தெளிவடைந்தான்.
நன்றி இணையம்