#ஆண், பெண் நட்பு...

மணக்கால் அய்யம்பேட்டை | 4:16 PM | Best Blogger Tips

அழகானது தான்..
களங்கம் ஏற்படாத வரை!
அருமையானதுதான்..
எல்லை மீறாத வரை!
அதிசயமானது தான்..
சலனமில்லாமல் பழகும் வரை!
பலமானது தான்..
உறவு பலவீனமாகாத வரை!
பாதுகாப்பானது தான்..
அத்து மீறாத வரை!
ஆரோக்கியமானது தான்..
பாதை மாறி போகாத வரை!
குறிப்பிடத்தக்கது தான்..
பொறுப்புணர்ந்து நடந்து கொள்ளும் வரை!
உணர்ச்சிமிக்கது தான்..
மகிழ்ச்சிக்கு குறைவில்லாத வரை!
பிரமிக்கத்தக்கது தான்..
பிரச்சனைகள் வளராத வரை!
பாராட்டுக்குரியது தான்..
பேதமில்லாமல் பழகும் வரை!
வரவேற்க்கத்தக்கது தான்..
பெற்றோரின் பெயரை காப்பாற்றும் வரை!
அனுபவமிக்கது தான்..
பாடம் கற்றுக்கொள்ளும் வரை!
கொண்டாடப்பட வேண்டியது தான்..
பாடம் கற்றுத்தரும் வரை!
போற்றுதலுக்குரியது தான்..
தன் நிலை மறக்காத வரை!
புனிதமானது தான்..
உயிரையும் கொடுக்க துணியும் வரை....

 நன்றி இணையம்