நேரம் பார்த்து காத்திருந்தார் மோடி ,,

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:02 | Best Blogger Tips

நேரம் பார்த்து காத்திருந்தார் மோடி ,, 
அதை எதிர்பார்த்து காத்திருந்தது அமெரிக்கா
பலுசிஸ்தான் பிரச்சனை கிட்டதட்ட காஷ்மீர் பிரச்சனை மாதிரிதான். பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் நடுவில் உள்ளது .. எட்டும் தொலைவில் ஈரான்உள்ளது. அதனால் ஈரானில் மாதிரியே இங்கும் ஸியாமுஸ்லிம்கள் அதிகமாக உள்ளனர்
பலுசிஸ்தான்.காஷ்மீர் மாதிரி யே மன்னராட்சி நடந்து வந்த பலுசிஸ்தான் 1947 ல்ஆகஸ்டு மாதம் 11 ம் தேதி ஆங்கிலேய ரிடமிருந்துவிடுதலை பெற்றது.காஷ்மீர் மாதிரியே பலுசிஸ்தானும்இந்தியாவுடனே இணைய விரும்பியது
பலுசிஸ்தானைஆண்டு வந்த அகமத்யர கான் என்கிற ராஜா நம்ம காஷ்மீர் ராஜா ஹரிசிங் மாதிரி இந்தியாவுடன் இணைய வே விரும்பினார். பாகிஸ்தான் காட்டு மிராண்டி களின் சங்காத்தியமே எங்களுக்கு வேண்டாம் இந்தியாவில் இணைகிறோம் என்று நேருவுக்கு கடிதம் எழுதினார்
ஆனால் ஆனால் நமது நேரு மறுத்து விடடார்,, நீங்கள் பாகிஸ்தானுடன் இருப்பது தான் நல்லது என்று உலகில் நான் தான் பெரிய " சமாதான புறா " என்று காட்டி கொண்டார்
பலுசிஸ்தானுக்கு அமெரிக்கா ஆதரவு உள்ளது ஏன் தெரியுமா ? இதற்கு பின்னால்இருக்கும் அரசியல் மிக தெளிவானது 
-----------------------------------------------------------------------------------
பலுசிஸ்தான் மாநிலத்தில் குவாடர் துறைமுகம் உள்ளது.சரி,, அதனால்என்ன என்கிறீர்களா.. இந்த குவாடர் துறைமுகம் தற்பொழுது சீனாவின் கஸ்டடியில் உள்ளது. இதற்கு பலுசி மக்கள்எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஒரு வேளை பலூசிஸ் தான் தனி நாடு கோரிக்கையை உலக நாடுகள் ஏற்றுக் கொண் டால் அதன் பாதிப்பு பாகிஸ்தானை விட சீனாவுக்கு
தான் அதிகம்
.
பலுசிஸ்தான் மாகாணத்தை தனி நாடாக்கினால் வளை குடா நாடுகளிலிருந்து பலுசிஸ்தான் வழியாக சீனாவுக்கு எண்ணெய் எடுத்துச் செல்லப்படுவது சிக்கலாகி விடும். 
பலுசிஸ்தானை சுற்றி சீனா பின்னியுள்ள வர்த்தக ரீதியிலான திட்டங்கள் அம்போவாகி விடும் . இதனால் சீனா தன் 30% பொருளாதாரத்தை இழந்து விடும் அபாயம் உள்ளது 
------------------------------------------------------------------------------------
வல்லரசு போட்டியில் பாய்ந்து செல்லும் சீனாவை தட்டி விட அமெரிக்காவும் நேரம் பார்த்து கொண்டு இருந்தது ,,
இந்நிலையில் மோடி ஆட்சிக்கு வந்தார் ,, பாகிஸ்தானும் சீனாவும் , மற்ற ஆட்சியாளர்கள் போல் இந்தியாவுக்கு குடைச்சல் கொடுத்து கொண்டு இருந்தது ,, நேரம் பார்த்து காத்திருந்தார் மோடி ,,
இந்நிலையில் பலுசிஸ்தான் பிரச்சனையை உலக அரங்கில் கொண்டு போவதாக கூறினார் ,, இதைத் தான் அமெரிக்கா எதிர்பார்த்தது . பாகிஸ்தான் அலறியது ,, ஏனென்றால் இந்த மாகாணத்தை வைத்து தான் சீனா பாகிஸ்தானுக்கு உதவி செய்கிறது ,, இது தனி நாடானால் சீன பொருளாதாரம் மிகவும் பின் தங்கி விடும் ,, பாகிஸ்தானுக்கு கடுகளவும் உதவி கிடைக்காது ...
இந்த ராஜ தந்திரத்தை மோடி வேகமாக முன்னெடுக்க ஆரம்பித்து விடடார் ,, அமெரிக்கா இதற்க்கு பின்பலமாக தீவிரமாக செயல் படுகிறது
நேரு தட்டிவிட்ட பலுசிஸ்தானை மோடி மட்டும் விரும்புகிறார் என்றால் அதற்குள் ஆயிரம் அரசியல் காரணங்கள் உள்ளது.
அன்று மட்டும் நேரு பலுசிஸ்தானை நம்முடன் இணைத்து இருந்தால் இன்று சீனா அடையும் 30% லாபம் இந்தியா அடைந்திருக்கும் ,,
இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து விரைவில் பலுசிஸ்தானை தனி நாடாக அங்கீகரிக்கும் என்பதில் ஐயம் இல்லை . அப்போது பலுசிஸ்தான் இந்தியாவின் நட்பு நாடாகி விடும் ,, அது ஆசியவில் இந்தியாவின் ஆதிக்கம் அதிகரிக்க வழி வகுக்கும்.

 நன்றி இணையம்