இனி இப்படி ஒருவரை நாம் பார்க்க முடியுமா ? இதை படித்து உங்கள் கண்களில் கண்ணீர் வருவதற்கு நான் உத்திரவாதம் அளிக்கின்றேன்
சம்பவம் 1
காமராஜர் முதல்வராக இருந்தப் பொழுது , அவரது அமைச்சரவையில் பங்கு பெற்ற
முன்னாள் ஜனாதிபதி ஆர் . .வெங்கட்ராமன் . ஒரு முறை விருதுநகரில் இருந்த
காமராஜரின் வீட்டிற்கு கோடை காலத்தின் பொழுது சென்றிருந்தார் . அப்பொழுது
அங்கு காமராஜரின் தாயார் சிவகாமி அம்மாள் பனை ஓலை விசிறியால் விசிறிக்
கொண்டிருந்தார் . உடனே தன்னுடைய சொந்த செலவில் ஒரு மின் விசிறியை வாங்கி
வந்து , அதை இயக்குவதைப் பற்றி அவரிடம் சொல்லிக் கொடுத்து விட்டுப் போனார் .
பிறகொரு சமயம் வீட்டிற்குப் போன போது மின் விசிறியைப் பார்த்துவிட்டு
விசாரித்த காமராஜர் , எத்தனையோ தாய்மார்கள் பனை ஓலை விசிறியால் தான்
விசிறிக் கொள்ளும் பொழுது , உனக்கு மட்டும் வெங்கட்ராமன் மின் விசிறி ஏன்
வாங்கித் தந்தார் ? முதல் அமைச்சரின் அம்மா என்பதால் தானே . இது கூட சலுகை
லஞ்சம் மாதிரி தான் என்று சொல்லி விட்டு அந்த மின்விசிறியை விருது நகரில்
உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு எடுத்துக் கொண்டு போகச்
சொல்லிவிட்டார் .
சம்பவம் 2
டெல்லியில் உலகக் கண்காட்சி
நடந்த சமயம் , அதன் துவக்க வ்ழாவுக்கு அன்றைய பிரதமர் நேருவுடன் காமராஜரும்
சென்றிருந்தார் . தற்பொழுது பேரூந்து நிலையங்களிலும் இரயில்
நிலையங்களிலும் வெகு சாதாரணமாகக் காணப் படுகிற எடை பார்க்கும் எந்திரம்
அந்தக் கண்காட்சியில் அறிமுகமாகியிருந்தது . நேரு எந்திரத்தில் ஏறி நின்று .
காசு போட்டு எடை பார்த்தார் . மத்திய அமைச்சர்கள் பலரும் அவ்வாறே செய்தனர்
... காமராஜர் மட்டும் சற்றே ஒதுங்கி நின்றிருந்தார் . நேரு அவரையும் எடை
பார்க்கும் படி கட்டாயப் படுத்தினார் . அவரோ மறுத்துவிட்டார் . சுற்றி
நின்றிருந்தவர்களுக்கு ,திகைப்பு பிரதமர் சொல்லியும் காமராஜர் மறுக்கிறாரே
என்று .
அப்பொழுது நேரு சொன்னார் ; " காமராஜர் எதற்கு
மறுக்கின்றார் என்று எனக்குத் தெரியும் , இந்த எந்திரத்தில் ஏறி நின்று
போடும் காசு கூட இபொழுது இவரிடம் இருக்காது " ,என்றார் பிறகு ,
காமராஜருக்கு தானே காசு போட்டு எடை பார்த்தார் நேரு .
சம்பவம் 3
தன்னுடைய பெயரை பயன் படுத்தி தனது குடும்பத்தினர் எந்த தவறான
காரியத்திலும் ஈடு படக் கூடாது என்று காமரஜார் மிகவும் கண்டிப்பாக
இருப்பார் . இதனாலேயே தனது தாயாரை தான் முதல்வரான பிறகும் விருது நகரிலேயே
தங்க .வைத்தார் . ஒரு முறை ஒரு காங்கிரஸ் பிரமுகர் , காம்ரஜாரின் தாய்
சிவகாமி அம்மாள் அவர்களை விருது நகரில் சந்தித்த பொழுது ... அவர் மிகவும்
வருத்ததுடன் சொன்னது : " என்னை எதுக்காக இங்கயே விட்டு வச்சிருக்கான்னே
தெரியல . , என்னையும் மெட்ராசுக்கு அழைச்சிக்கிட்டா நான் ஒரு மூலையில்
ஒன்டிக்கப் போறேன் " என்று சொல்ல . அதை அந்த பிரமுகர் காமராஜரிடம்
தெரிவிக்க , அதற்கு காமராஜர் சொன்ன பதில் :
" அடப்போப்பா , எனக்கு
தெரியாதா அம்மாவை கொண்டு வந்து வச்சிருக்கணுமா வேணாமான்னு ? . அப்படியே
கூட்டிட்டு வந்தா தனியாவா ?வருவாங்க அவங்க கூட நாலு பேரு வருவான் .
அப்புறமா அம்மாவை பாக்க , " ஆத்தாவை பார்க்கன்னு பத்து பேரு வருவான் .
இங்கேயே டேரா போடுவான் . இங்க இருக்குற டெலிபோனை யூஸ் பண்ணுவான் .
முதலமைச்சர் வீட்டிலிருந்து பேசறேன்னு சொல்லி அதிகாரிகளை .மிரட்டுவான்
எதுக்கு வம்புன்னு தான் அவங்களை விருது நகர்லயே விட்டு வச்சிருக்கேன் """""
என்றார் .....
சம்பவம் 4
காமராஜரின் குடும்பத்தினர்
அதிகாரப் பூர்வமாக கலந்துக் கொண்ட ஒரே பொது நிகழ்ச்சி அவரது இறுதிச் சடங்கு
நிகழ்ச்சி தான் . அவரது உடலுக்கு ஈமச்சடங்குகளை காமராஜரின் சகோதரி மகன்
ஜவஹர் வைதீக முறைப் படி செய்ய . அவரது சிதைக்கு அவரது தங்கை பேரன் கனகவேல்
தீ ..மூட்ட . தலைவா என்ற குரல் விண்ணை பிளக்க ... அங்கு வந்திருந்த அன்றைய
பிரதமர் இந்திரா காந்தி அழுகையை அடக்க முடியாது கை கொண்டு வாய் பொத்தி
.கதறினார் ...
-Kishore Kswamy & Arasiyal Galatta.
சம்பவம் 1
காமராஜர் முதல்வராக இருந்தப் பொழுது , அவரது அமைச்சரவையில் பங்கு பெற்ற முன்னாள் ஜனாதிபதி ஆர் . .வெங்கட்ராமன் . ஒரு முறை விருதுநகரில் இருந்த காமராஜரின் வீட்டிற்கு கோடை காலத்தின் பொழுது சென்றிருந்தார் . அப்பொழுது அங்கு காமராஜரின் தாயார் சிவகாமி அம்மாள் பனை ஓலை விசிறியால் விசிறிக் கொண்டிருந்தார் . உடனே தன்னுடைய சொந்த செலவில் ஒரு மின் விசிறியை வாங்கி வந்து , அதை இயக்குவதைப் பற்றி அவரிடம் சொல்லிக் கொடுத்து விட்டுப் போனார் . பிறகொரு சமயம் வீட்டிற்குப் போன போது மின் விசிறியைப் பார்த்துவிட்டு விசாரித்த காமராஜர் , எத்தனையோ தாய்மார்கள் பனை ஓலை விசிறியால் தான் விசிறிக் கொள்ளும் பொழுது , உனக்கு மட்டும் வெங்கட்ராமன் மின் விசிறி ஏன் வாங்கித் தந்தார் ? முதல் அமைச்சரின் அம்மா என்பதால் தானே . இது கூட சலுகை லஞ்சம் மாதிரி தான் என்று சொல்லி விட்டு அந்த மின்விசிறியை விருது நகரில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு எடுத்துக் கொண்டு போகச் சொல்லிவிட்டார் .
சம்பவம் 2
டெல்லியில் உலகக் கண்காட்சி நடந்த சமயம் , அதன் துவக்க வ்ழாவுக்கு அன்றைய பிரதமர் நேருவுடன் காமராஜரும் சென்றிருந்தார் . தற்பொழுது பேரூந்து நிலையங்களிலும் இரயில் நிலையங்களிலும் வெகு சாதாரணமாகக் காணப் படுகிற எடை பார்க்கும் எந்திரம் அந்தக் கண்காட்சியில் அறிமுகமாகியிருந்தது . நேரு எந்திரத்தில் ஏறி நின்று . காசு போட்டு எடை பார்த்தார் . மத்திய அமைச்சர்கள் பலரும் அவ்வாறே செய்தனர் ... காமராஜர் மட்டும் சற்றே ஒதுங்கி நின்றிருந்தார் . நேரு அவரையும் எடை பார்க்கும் படி கட்டாயப் படுத்தினார் . அவரோ மறுத்துவிட்டார் . சுற்றி நின்றிருந்தவர்களுக்கு ,திகைப்பு பிரதமர் சொல்லியும் காமராஜர் மறுக்கிறாரே என்று .
அப்பொழுது நேரு சொன்னார் ; " காமராஜர் எதற்கு மறுக்கின்றார் என்று எனக்குத் தெரியும் , இந்த எந்திரத்தில் ஏறி நின்று போடும் காசு கூட இபொழுது இவரிடம் இருக்காது " ,என்றார் பிறகு , காமராஜருக்கு தானே காசு போட்டு எடை பார்த்தார் நேரு .
சம்பவம் 3
தன்னுடைய பெயரை பயன் படுத்தி தனது குடும்பத்தினர் எந்த தவறான காரியத்திலும் ஈடு படக் கூடாது என்று காமரஜார் மிகவும் கண்டிப்பாக இருப்பார் . இதனாலேயே தனது தாயாரை தான் முதல்வரான பிறகும் விருது நகரிலேயே தங்க .வைத்தார் . ஒரு முறை ஒரு காங்கிரஸ் பிரமுகர் , காம்ரஜாரின் தாய் சிவகாமி அம்மாள் அவர்களை விருது நகரில் சந்தித்த பொழுது ... அவர் மிகவும் வருத்ததுடன் சொன்னது : " என்னை எதுக்காக இங்கயே விட்டு வச்சிருக்கான்னே தெரியல . , என்னையும் மெட்ராசுக்கு அழைச்சிக்கிட்டா நான் ஒரு மூலையில் ஒன்டிக்கப் போறேன் " என்று சொல்ல . அதை அந்த பிரமுகர் காமராஜரிடம் தெரிவிக்க , அதற்கு காமராஜர் சொன்ன பதில் :
" அடப்போப்பா , எனக்கு தெரியாதா அம்மாவை கொண்டு வந்து வச்சிருக்கணுமா வேணாமான்னு ? . அப்படியே கூட்டிட்டு வந்தா தனியாவா ?வருவாங்க அவங்க கூட நாலு பேரு வருவான் . அப்புறமா அம்மாவை பாக்க , " ஆத்தாவை பார்க்கன்னு பத்து பேரு வருவான் . இங்கேயே டேரா போடுவான் . இங்க இருக்குற டெலிபோனை யூஸ் பண்ணுவான் . முதலமைச்சர் வீட்டிலிருந்து பேசறேன்னு சொல்லி அதிகாரிகளை .மிரட்டுவான் எதுக்கு வம்புன்னு தான் அவங்களை விருது நகர்லயே விட்டு வச்சிருக்கேன் """"" என்றார் .....
சம்பவம் 4
காமராஜரின் குடும்பத்தினர் அதிகாரப் பூர்வமாக கலந்துக் கொண்ட ஒரே பொது நிகழ்ச்சி அவரது இறுதிச் சடங்கு நிகழ்ச்சி தான் . அவரது உடலுக்கு ஈமச்சடங்குகளை காமராஜரின் சகோதரி மகன் ஜவஹர் வைதீக முறைப் படி செய்ய . அவரது சிதைக்கு அவரது தங்கை பேரன் கனகவேல் தீ ..மூட்ட . தலைவா என்ற குரல் விண்ணை பிளக்க ... அங்கு வந்திருந்த அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அழுகையை அடக்க முடியாது கை கொண்டு வாய் பொத்தி .கதறினார் ...
-Kishore Kswamy & Arasiyal Galatta.