வாதநாராயணன் மரத்தின் மருத்துவ குணங்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:46 | Best Blogger Tips
புளிய இலைபோன்ற அமைப்புடைய இலைகளையும் சிவப்பு நிறமான அழகியப் பூக்களையும் தட்டையான காய்களையும் உடைய மரம். ஆதிநாராயணன், வாதரசு, வாதமடக்கி என்ற பெயர்களுமுண்டு. தமிழகமெங்கும் வளர்க்கப்படுகிறது.

மருத்துவ குணங்கள்:

வாதநாராயணன் இலைச்சாறுடன் கரிசலாங்கண்ணி, குப்பைமேனி, கறுப்பு வெற்றிலை ஆகியவற்றின் சாறுடன் வேப்பெண்ணெய், விளக்கெண்ணெய், நல்லெண்ணெய், சுக்கு, மிளகு, திப்பிலி, கருஞ்சீரகம், மஞ்சள் ஆகியவற்றை பசும் பாலுடன் கலக்கி காய்ச்சி 21 வெள்ளெருக்கம்பூ போட்டு கொதிக்க வைத்து தடவிவந்தால் முகவாதம் முக இசிவு குறையும்.

கண், வாய், நாக்கு, உதடு, இழுப்பு குணமாகவும் வாதநாராயணன் இலைச்சாறு பயன்படுகிறது.

வாதநாராயணன் இலைச் சாறுடன் விளக்கெண்ணெய், பூண்டு, சுக்கு, மிளகு, திப்பிலி, வெண்கடுகு அரைத்து காய்ச்சி காலை மட்டும் 2 தேக்கரண்டி சாப்பிட வாதரோகம், கீல்வாயு, முடக்கு வாதம், நடுக்குவாதம், நரம்புத்தளர்ச்சி, கை, கால் குடைச்சல் வலி, முழங்கால் முட்டி வீக்கம் தீர்ந்து குணமாகும். இது வாத மடக்கி தைலமாகும். வாதமடக்கித் தைலத்தை அரைத்தேக்கரண்டி முதல் ஒரு தேக்கரண்டி கொடுத்து வர வாதம் வராமல் தடுக்கலாம், சீதலச் சன்னி, இழுப்பு, செரியாமை, மலச்சிக்கலும் குறையும்.
வாதநாராயணன் இலைச் சூரணத்தை 3 கிராம் அளவு எடுத்து நாள்தோறும் 1 முறை வெந்நீரில் சாப்பிட்டு வர மேகம், வாயு சம்பந்தமான நோய்கள் குணமாகும்.
வாதநாராயணன் இலையைப் போட்டு தண்ணீரில் கொதிக்க வைத்து குளிக்க உடம்புவலி தீரும்
 
Via FB இயற்கை அளிக்கும் நிவாரணங்கள்