மனித
உடலின்
செயல்பாடுகளுக்கு
ஒவ்வொரு
உறுப்பும்
இன்றியமையாததாகும் .
இதில்
உடலுக்கு
மெயின்
சுவிட்சு
போல்
செயல்பட்டு ,
காற்றை
உள்வாங்கி ,
வெளிவிட்டு
உடலுக்கு
உயிர்
சக்தியைத்
தரும்
மோட்டார்தான்
நுரையீரல் .
வாயுப்
பரிமாற்றம்
(Exchange of gas) நுரையீரலின்
முக்கிய
பணியாகும் .
மேலும்
சில
முக்கிய
வேதிப்
பொருட்களை
உருவாக்குவதற்கும் ,
வேறு
சில
வேதிப்
பொருட்களை
செயலிழக்கச்
செய்வதும்
இதன்
மற்ற
பணிகளாகும் .
நுரையீரலானது
உடலியக்கத்திற்கு
ஆற்றல்
தரும்
ஆக்ஸிஜனை
உள்
எடுத்துக்
கொள்வதற்கும்
கார்பன் -டை - ஆக்ஸைடை வெளியேற்றுவதற்கும்
முக்கிய
உறுப்பாக
செயல்படுகிறது .
ஒரு
நாளைக்கு
சராசரியாக
ஒரு
மனிதன்
22,000 முறை
மூச்சு
விடுகிறான் .
கிட்டத்தட்ட
255 கன
மீட்டர்
(9000 கன
அடி )
காற்றை
உள்ளிழுத்து
வெளிவிடுகிறான் .
நுரையீரலின்
செயல்பாடு
நுரையீரல்
எவ்வாறு
தன்னுடைய
பணியை
திறம்பட
செய்கிறது
என்பதைப்
பார்ப்போம் .
மூக்கின்
வழியாக
நாம்
உள்ளிழுக்கும்
காற்று
மூச்சுக்
குழாய்
(Trachea) வழியாக
நுரையீரலுக்கு
செல்கிறது .
மூச்சுக்
குழாய்
மார்புப்
பகுதியில்
இரண்டாக
பிரிந்து
வலது ,
இடது
நுரையீரலுக்குச்
செல்கிறது .
நுரையிரலுக்குள்
நுழைந்தவுடன்
மூச்சுக்குழல்
ஒவ்வொன்றிலிருந்தும்
கிளைகள்
பிரியும் .
பின்னர்
அவற்றிலிருந்து
இன்னும்
சிறு
கிளைகள்
என
நிறைய
பிரிவுகள்
ஒரு
மரத்தின்
பெரிய
கிளையிலிருந்து
பரந்து
பிரிந்து
சின்னச்சின்ன
தளிர்கள்
வருவதுபோல்
பிரிகின்றன .
அதனாலேயே
இதனை
மூச்சுமரம்
(Respiratory tree) என்று
அழைக்கின்றோம் .
முதல்
நிலை
மூச்சுக்
குழல்
(Primary bronchi), இரண்டாம்
நிலை
மூச்சுக்
குழல் ,
மூன்றாம்
நிலை
மூச்சுக்குழல் ,
மூச்சுக்
குறுங்குழல்
(bronchiole) என்று
படிப்படியாகப்
பிரிந்து
கடைசியாக
சின்னச்
சின்ன
பலூன்கள்
மாதிரி
தோன்றும்
குட்டிக்குட்டி
அறைகளுக்குள்
இந்த
குழல்கள்
நீட்டிக்
கொண்டிருக்கும் .
இவற்றை
காற்று
நுண்ணறைகள்
(Alveoli) என்று
அழைக்கிறோம் .
நாம்
இழுக்கும்
மூச்சுக்காற்று
மூச்சு
மரம்
வழியாக
காற்று
நுண்ணறைகளுக்குள்
வந்துவிடும் .
உடலில்
பல
பாகங்களிலும்
இருந்து
பயன்படுத்தப்பட்ட
ரத்தம்
இதயத்தின்
வலது
வெண்டிரிக்கலை
அடையும் .
அங்கிருந்து
நுரையீரல் ,
தமணி
மூலம்
நுரையீரலுக்கு
கொண்டுசெல்லப்படுகிறது .
நுரையீரல்
தமணியும் ,
வலது
கிளை ,
இடது
கிளை ,
என்று
இரண்டாகப்
பிரிந்து
இரண்டு
நுரையீரலுக்கும்
செல்கிறது .
இதுவும்
பலமுறை
கிளைகளாகப்
பிரியும் .
இப்படிப்
பிரியும்போது
காற்று
நுண்ணறைகளின்
பக்கத்தில்
தமணிகளின்
மிக
மிகச்
சிறிய
கிளைகள்
அமைந்திருக்கும் .
இந்தச்
சின்ன
தமணிக்
கிளைகள்தான்
தந்துகிகள்
(Capillaries) எனப்படுகிறது .
காற்று
நுண்ணறை
பக்கத்திலேயே
தந்துகிகள்
இரண்டின்
சுவர்களும்
மிக
மிக
நுண்ணியவையாக
இருக்கும் .
அடுத்தடுத்து
நுண்ணறைக்குள்
காற்று
நிறைந்திருக்கும்
தந்துகிக்குள்
ரத்தம்
நிறைந்திருக்கும் .
வெளியிலிருந்து
மூச்சுக்குழல்
மூலம்
உள்ளிழுக்கப்பட்ட
காற்றில்
நிறைய
ஆக்ஸிஜன்
இருக்கும் .
எனவே ,
நுண்ணறைக்குள்ளும்
அதே
அளவு
ஆக்ஸிஜன்
இருக்கும் .
தந்துகியில்
உள்ள
ரத்தத்தின்
ஆக்ஸிஜன்
அளவு
குறைவு .
கார்பன்டை
ஆக்ஸைடின்
அளவு
அதிகம் .
உடலுக்கு
வேண்டாத
உடலிலிருந்து
வெளியேற்றப்பட
வேண்டிய
மற்ற
சில
பொருட்களும்
தந்துகியில்
உண்டு .
இந்த
நிலையில்
நுண்ணறை
– தந்துகி
சுவர்களின்
வழியாக
ஒரு
பரிமாற்றம்
நடக்கிறது .
நுண்ணறையில்
அடர்த்தியாக
இருக்கும்
ஆக்ஸிஜன்
தந்துகிக்குள்
பாயும் .
தந்துகியில்
அடர்த்தியாக
இருக்கும்
கார்பன்டை
ஆக் ø-ஸடு நுண்ணறைக்குள்
பாயும் .
இதுதான்
வாயுப்
பரிமாற்றம்
(Exchange & gases). இதைத்தான் ரத்த சுத்திகரிப்பு
என்று
அழைக்கிறோம் .
ஆக்ஸிஜன்
ஊட்டப்பட்ட
ரத்தம்
நுரையீரலிலிருந்து
சிரைகள்
மூலமாக
இதயத்தின்
இடது
வெண்டிரிக்கிளுக்குள்
எடுத்துச்
செல்லப்
படுகிறது .
அங்கிருந்து
மீண்டும்
உடலின்
பல
பாகங்களுக்கு
தமனிகள்
மூலம்
இந்த
சுத்த
ரத்தம்
எடுத்துச்
செல்லப்படுகிறது .
நுரையீரலைச்
சுற்றி
இரண்டு
உறைகள்
உள்ளன .
1. வெளிப்படலம் (Outer pleura)
2. உள்படலம் (Inner pleura)
இந்த
இரண்டு
படலங்களுக்கும்
இடையே
ஒரு
இடம்
உண்டு .
அதற்கு
ஃப்ளூரல்
இடம்
என்று
பெயர் .
இதனுள்
மிகச்
சிறிய
அளவு
ஃப்ளூரல்
திரவம்
இருக்கும் .
இந்தத்
திரவம்தான்
சுவாசத்தின்
போது
நுரையீரல்களின்
அசைவினால்
உராய்வு
ஏற்படாமல்
தடுக்கிறது .
சுவாசத்தைக்
கட்டுப்படுத்தி
சீராக
வைப்பதே
முகுளப்பகுதி .
அதாவது
ஒரு
நிமிடத்திற்கு
சராசரியாக
18 முதல்
20 சுவாசம்
என
சீராக
வைப்பது
மூளையில்
உள்ள
முகுளத்தின்
வேலை .
மொத்த
நுரையீரலின்
கொள்ளளவு
சராசரியாக
6 லிட்டர்
தான் .
மிகவும்
இழுத்து
மூச்சுவிடும்
போது
காற்றின்
அளவு
5 லிட்டர்தான் .
எப்போதும்
நுரையீரலுக்குள்ளே
இருந்துகெண்டிருக்கும்
காற்றின்
அளவு
1 லிட்டர் .
பொதுவாக
நுரையீரலில்
சுரக்கும்
சளி
போன்ற
நீர்மம்
சில
தூசிகளை
அகற்றி
வெளியேற்றும் .
இதுபோல்
மூச்சுக்
குழாய்களில்
மேல்
சிலியா
என்ற
பொருள்
இருக்கும் .
இதுவும்
மிக
நுண்ணிய
தூசியைக்
கூட
அகற்றிவிடும் .
இது
மூச்சுக்
குழாய்களில்
வரும்
தூசியை
மேல்நோக்கி
திருப்பி
அனுப்பிவிடும் .
நாம்
அறியாமலே
சில
சமயங்களில்
அதை
விழுங்கிவிடுவோம் .
உடல்
நலம்
சரியில்லாமல்
போனால்
மட்டுமே
அவை
சளியாக
மூக்கின்
வழியாக
வெளியேறும் .
இதையும்
தாண்டி
ஏதேனும்
தூசு
உள்ளே
நுழைந்தால்
இருமல் ,
தும்மல்
முதலியவற்றால்
வெளியேற்றப்
பட்டுவிடும் .
நுரையீரலின்
பணிகள்
காற்றில்
உள்ள
ஆக்ஸிஜனை
(ஆக்ஸிஜன் =
உயிர்வளி ,
பிராணவாயு )
இரத்தத்தில்
சேர்ப்பதும் ,
இரத்ததில்
உள்ள
கார்பன் -டை ஆக்ஸைடை
(கரியமில
வாயு )
பிரித்து
உடலிலிருந்து
வெளியேற்றுவதும்
நுரையீரலின்
முக்கிய
பணியாகும் .
இதயத்திற்கு
இரு
புறமும்
பாதுகாப்பாக
இருந்து
இதயத்தை
அதிர்வுகளிலிருந்து
காப்பாற்றுகிறது .
சில
முக்கிய
வேதிப்
பொருட்களை
உற்பத்தி
செய்வது ,
வேறு
சில
வேதிப்
பொருட்களை
செயலிழக்கச்
செய்வது
போன்ற
உடலுக்கு
உயிர்தரும்
வேலைகளை
நுரையீரல்
செய்து
வருகிறது .
நுரையீரல்
பாதிப்பு
உலகில்
இலச்சக்கணக்கான
மக்கள்
ஒவ்வொரு
வருடமும்
நுரையீரல்
சம்பந்தப்பட்ட
நோயின்
தாக்குதலுக்கு
ஆளாகின்றனர் .
காற்று
மாசுபாடு
காற்று
மாசுபாடு
அதாவது
சிலிகா ,
ஆஸ்பெட்டாஸ் ,
கந்தகம் ,
போன்றவற்றைப்
பயன்படுத்தும்
தொழிற்
சாலைகளில்
பணி
புரிபவர்களின்
நுரையீரல்கள்
அதிகம்
பாதிக்கப்படுவதாக
தகவல்கள்
தெரிவிக்கின்றன .
புகை
பிடிப்பது
உடல்
நலத்துக்கு
கேடு
என்ற
செய்தி
அனைவரும்
அறிந்ததே .
புகைபிடிப்பது
புகை
பிடிக்கும்போது
நிறைய
கரித்
துகள்கள்
(Carbon particles) நுரையீரலுக்குள்
சென்று
அங்கேயே
படிந்து
விடுகின்றன .
இதனால்
ஆக்ஸிஜன் -
கார்பன்டை
ஆக்ஸைடு
பரிமாற்றம்
தடைபடுகிறது .
மற்றும்
சிகரெட் ,
சுருட்டு ,
இவற்றிலுள்ள
நிகோடின்
என்ற
வேதிப்பொருள்
ரத்தத்தில்
உள்ள
ஆக்ஸிஜன்
அளவைக்
குறைத்து
கனிமப்
பொருள்களின்
அளவுகளில்
மாற்றத்தை
ஏற்படுத்தி ,
ரத்தக்
குழாய்களின்
அடைப்பை
உண்டாக்குகிறது .
புகைப்
பழக்கத்தால்
மூச்சுக்குழல்
அலர்ஜி ,
காற்றறைகளின்
சுவர்கள்
சிதைந்துபோதல் ,
எம்ஃபசிமா ,
நுரையீரல்
புற்றுநோய்
ஆகியவை
உண்டாகின்றன .
புகைப்
பிடிப்பவர்களுக்கு
மட்டுமல்ல ,
பக்கத்தில்
இருப்பவர்களுக்கும்
(Passive smoking) இதே
தீங்குகள்
நேரிடும் .
நுரையீரல்
பாதிப்பின்
அறிகுறிகள்
இருமல்
மூச்சு
வாங்குதல்
மூச்சு
இழுப்பு
நெஞ்சுவலி
ஹீமாப்டிஸிஸ்
(இருமும்போது
ரத்தம்
வெளியேறுதல் )
நுரையீரலைத்
தாக்கும்
சில
முக்கிய
நோய்கள்
மூச்சுக்குழாய்
அலர்ஜி (Bronchitis),
நுரையீரல்
அலர்ஜி
(Pneumonia), காற்றறைகள்
சிதைந்து
போதல் (Emphysema),
மூச்சுக்குழல்கள்
சுருங்கிக்
கொள்ளுதல்
(Asthma).
நுரையீரலை
பாதுகாக்க
சில
எளிய
வழிகள்
· தூசு நிறைந்த பகுதிகளுக்கு
செல்லும்
போது
மூக்கில்
துணியைக்
கட்டிக்கொள்வது
(Mask) நல்லது .
· பிராணயாமம் , நாடி சுத்தி , ஆழ்ந்த மூச்சுப்
பயிற்சி
போன்றவற்றை
தினமும்
கடைப்பிடிப்பது .
· புகைப் பிடிப்பதை தவிர்ப்பது
· உடலில் நோய் எதிர்ப்பு
சக்தியை
அதிகரிக்கும்
உணவு
வகைகளை
சாப்பிடுவது
இன்றைய
சூழ்நிலையில்
மாசடைந்த
காற்று
அதிகம்
இருப்பதால்
நுரையீரல்
சம்பந்தப்பட்ட
நோய்களின்
தாக்குதலும்
அதிகம்
இருக்கிறது .
இதனால்
எதிர்காலத்தில்
மினரல்
வாட்டர்
பாட்டிலைப்
போல்
ஆக்ஸிஜனை
பாக்கெட்டுகளில்
வாங்க
வேண்டிய
நிலை
ஏற்படலாம் .
இந்நிலை
மாற
சுற்றுப்புறத்தை
தூய்மையாகவும் ,
பசுமை
நிறைந்த
பகுதிகளாகவும்
மாற்றினாலே
போதும் ..
ஆரோக்கிய
வாழ்வைப்
பெற்றிட
முடியும் .