உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பார்த்த அதிசயம்!

மணக்கால் அய்யம்பேட்டை | 2:55 PM | Best Blogger Tips

 


உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பார்த்த அதிசயம்!

-dinamalar

{பார்வையற்றவர் படைத்த சாதனை என்றால், நம்மில் பலருக்கு, '#ஹெலன்_கெல்லர்' தான் நினைவுக்கு வருவார்}

உச்ச நீதிமன்றத்தில், அயோத்தி ராம ஜன்ம பூமி தொடர்பான வழக்கு விசாரணை பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது. இரு தரப்பிலும், வழக்கறிஞர்கள் ஆஜராகியிருந்தனர்.

இரு தரப்பிலும் சாட்சிகளாக பலர், நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர்.

'அயோத்தி தான் ராம ஜன்ம பூமி' என தெரிவித்து, தன் வாதங்களை மூத்த வழக்கறிஞர் பராசரன் எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்.

அப்போது நீதிபதி குறுக்கிட்டு, ''ராமர் இருந்தார் என்பதற்கு, வேதங்களிலிருந்தும், புராணங்களிலிருந்தும் பல்வேறு ஆதாரங்களை கூறுகிறீர்கள். ராமபிரானின் ஜன்ம பூமி பற்றி, எந்த வேதத்திலாவது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதா?' என, பராசரனிடம் கேட்டார்.

இதற்கு பராசரனால் உடனடியாக பதில் சொல்ல முடியவில்லை.

*

அப்போது, சாட்சிகள் அமர்ந்திருந்த பகுதியிலிருந்து, முதியவர் ஒருவர் எழுந்தார். அவரை தான், ராம ஜன்ம பூமிக்கு ஆதரவான முக்கியமான சாட்சியாக, பராசரன் தெரிவித்திருந்தார்.

அவருக்கு பெற்றோர் வைத்த பெயர் கிரிதர். அவர் நீதிபதியைப் பார்த்து கூறியதாவது:

'' மதிப்பிற்குரிய நீதிபதி அவர்களே... ரிக் வேதத்தில், 'ஜைமினியா சம்ஹிதா' பகுதியில், ராம ஜன்ம பூமி பற்றி தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், சரயு நதியின் கரையில், ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து, ராம ஜன்ம பூமிக்கு செல்வதற்கான வழிகளும், துாரமும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இந்த வழிகளை பின்பற்றிச் சென்றால், ஒருவரால், ராம ஜன்மபூமிக்கு நிச்சயம் செல்ல முடியும். ''

- இவ்வாறு, அவர் கூறினார். இதை அவர், எந்த புத்தகத்திலிருந்தும் படித்து காட்டவில்லை; எழுதியும் காட்டவில்லை. மடை திறந்த வெள்ளம் போல், மனதிலிருந்து கூறினார்.

*

கிரிதர் கூறியது சரிதானா என ஆய்வு செய்ய, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கிரிதர் கூறியது நுாற்றுக்கு நுாறு சரி என தெரிந்தது.

இதை அறிந்த நீதிபதி,

''இது ஒரு அபூர்வமான நிகழ்ச்சி; அதை, இன்று நான் நேரில் பார்த்தேன்'' என, ஆச்சரியத்துடன் கூறினார்.

இதைக் கேட்ட கிரிதர், மிகவும்அமைதியாக, எந்தவித உணர்வையும் வெளிப்படுத்தாமல் இருந்தார்.

நீதிபதி இப்படி மிகவும் ஆச்சரியமாகவும், அதிசயமாகவும் கூறியதற்கு பின்னணியில், முக்கியமான காரணம் உள்ளது. இதற்கு நாம், இந்திய வரலாற்றை திருப்பிப் பார்க்க வேண்டும். அப்படி பார்த்தோமானால், வரலாற்றை மாற்றி எழுத வேண்டிய அவசியத்தை உணர்வோம்.

*

உத்தர பிரதேசமாநிலம், ஜான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பண்டிட் ராஜ்தேவ் மிஷ்ரா - சசிதேவி தம்பதிக்கு, 1950ம் ஆண்டு, ஜனவரி, 14ம் தேதி, மறக்க முடியாத நாளாக அமைந்தது. ஆம், அன்றைய தினம் அவர்களுக்கு, அழகான, ஆரோக்கியமான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு, 'கிரிதர்' என, பெயர் வைத்தனர்.

இரண்டு மாதத்துக்குப் பின், குழந்தை கிரிதர், கடும் நோயால் பாதிக்கப்பட்டான். அது, குழந்தை கிரிதர் மற்றும் அவனது பெற்றோரின் வாழ்க்கையையே மாற்றிவிட்டது. ஆம்... கிரிதருக்கு பார்வை பறிபோனது.

குழந்தை வளர வளர, தன் மகனால் படிக்கவும், எழுதவும்முடியாது என்பதை, கிரிதரின்தந்தை ராஜ்தேவ் புரிந்து கொண்டார். ஆனால், கிரிதரிடம், எளிதில் புரிந்து கொள்ளும் தன்மையும், சொல்லிக் கொடுத்ததை மனப்பாடம் செய்யும் சக்தியும் இருப்பதை அறிந்தார்.

மேலும், கிரிதருக்கு மறதி என்ற பேச்சுக்கே இடமில்லாமல், அபார ஞாபக சக்தியும் இருந்தது.

இதனால், மகனின் அருகில் அமர்ந்து, அவனுக்கு வேதம் சொல்லிக் கொடுத்தார். வேதத்துக்கு அர்த்தமும் சொல்லி கொடுத்தார். கிரிதருக்கு, 8 வயதான போது, ராமானந்த் வழியைப் பின்பற்றும் மடம் ஒன்றில் சேர்த்தார்.

மடாதிபதி, கிரிதரை தன் சீடனாக ஏற்று, அவருக்கு, 'ராமபத்ரா' என்ற புதிய பெயரையும் வைத்தார். ராமபத்ராவுக்கு, புதிய வழியை காட்டினார். அவரது நினைவு திறனை அறிந்து, வேதங்கள், புராணங்கள், உபநிஷத்கள் என, அனைத்தையும் கற்பித்தார்.

குரு சொல்லச் சொல்ல, அதை மனப்பாடம் செய்து, நினைவில் வைத்துக் கொண்டார் ராமபத்ரா.

*

கல்வி மீது ராமபத்ராவுக்கு அதிக ஆர்வம் இருந்தது. படிக்க, எழுத முடியாவிட்டாலும், தன் நினைவுத் திறனால், 22 மொழிகளை கற்றுத் தேர்ந்தார்.

நான்கு வேதங்கள், உபநிஷத்கள் அனைத்திலும் மாபெரும் புலமை பெற்றார்.

துளசிதாசர் மீது மிகவும் பக்தி கொண்டிருந்த ராமபத்ரா, அவர் ஹிந்தியில் எழுதிய ராமாயணமான, 'ராமசரிதமானஸ்' பற்றி, உபன்யாசங்கள் நிகழ்த்த ஆரம்பித்தார்.

கற்பனை செய்து பாருங்கள்....

படிக்கவும், எழுதவும் முடியாத ஒருவர், மற்றவர் படிக்கக் கேட்டு, அதை மனப்பாடம் செய்து, நினைவில் வைத்து, உபன்யாசங்கள் செய்துள்ளார்.

தன், 38வது வயதில், ராமானந்தஆசிரமத்தில், நான்கு ஜகத்குருக்களில் ஒருவராக, ராமபத்ரா பொறுப்பேற்றார். ஜகத்குரு ராமபத்ராச்சார்யா என, அழைக்கப்பட்டார்.

*

ராமபத்ராச்சார்யாவின் திறமையும், சாதனைகளும் நம்மை வியக்க வைக்கிறது.

பல மொழி வித்தகர்,

ஆன்மிக தலைவர்,

கல்வியாளர்,

சமஸ்கிருத அறிஞர்,

கவிஞர்,

எழுத்தாளர்,

விமர்சகர்,

தத்துவஞானி,

பாடகர்,

இசையமைப்பாளர்.

உபன்யாசகர்,

நாடக எழுத்தாளர்

என, அவரை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.

-> அவர், 'கீதா ராமாயணம், ஸ்ரீ பார்கவ ராகவ விஜயம், அருந்ததி, அஷ்டாவக்ரா, விதுரா' உட்பட 100க்கும் அதிகமான நுால்களை எழுதியுள்ளார்.

-> 'ஸ்ரீ சீதாராம சுப்ரபாதம்' என்ற சுலோகத்தையும் அவர் எழுதி இசையமைத்து உள்ளார்.

-> கவிஞரான ராமபத்ராச்சார்யா, ஹிந்தியிலும், சமஸ்கிருதத்திலும் பல கவிதைகளை எழுதி உள்ளார். ராமாயணம், மஹாபாரதம் உட்பட பல புராணங்களை, கவிதை வடிவில் எழுதியுள்ளார்.

-> தானே இசையமைத்து பாடி, ஐந்து இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார்.

-> கல்வி மீது தீராத பற்று கொண்ட ராமபத்ராச்சார்யா, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக, ஜகத்குரு ராமபத்ராச்சார்யா பல்கலைக்கழகத்தை துவக்கினார்.

-> ஹிந்து மதம் பற்றி படித்து ஆய்வு செய்ய, துளசிதாசர்

பெயரில், 'துளசி பீடம்' என்ற குருகுலத்தை துவக்கினார்.

*

2015ம் ஆண்டு, மத்திய அரசு, 'பத்மவிபூஷன்' விருது வழங்கி, ராமபத்ராச்சார்யாவை கவுரவித்தது.

பிறந்து, இரண்டே மாதத்தில் பார்வையிழந்தும், மன தைரியத்துடன் போராடி, கல்வியிலும், அறிவிலும் உச்சம் பெற்றுள்ளார். அவரது வாழ்க்கை, அனைவருக்கும் பெரும் ஊக்க சக்தியாக அமைந்துள்ளது.

*

பார்வையில்லாமல், மாபெரும் சாதனை படைத்த இந்த மாமனிதரை, நம் நாட்டில் எத்தனை பேருக்கு தெரியும்?

பார்வையற்றவர் படைத்த சாதனை என்றால், நம்மில் பலருக்கு, 'ஹெலன் கெல்லர்' தான் நினனவுக்கு வருவார். அவரை பற்றி, பள்ளி பாடப் புத்தகங்களில் பாடங்கள் கூட வந்து உள்ளன.

ஆனால், நம் கல்வி முறையில், ஜகத்குரு ராமபத்ராச்சார்யாவின் பெயர் சிறிதும் இடம் பெறாதது வேதனை.

ஏனெனில், அவரை புகழ்ந்து பேசினால், நம் நாட்டின் #மதச்சார்பின்மை_மாயமாகிவிடும் என, போலி மதச்சார்பின்மைவாதிகள் குற்றம்சாட்டி, முதலைக் கண்ணீர் வடிப்பர்.

இதுதான், நம் நாட்டின் சாபக்கேடு!

- நமது நிருபர்

-https://www.dinamalar.com/news_detail.asp?id=2620905

___________________

-V Janakiraman Iyer

This absolutely true.. தற்போதும் சித்ரகூட் கார்வி என்னும் இடத்தில் வசிக்கிறார்.. இது மத்திய பிரதேசத்தில் உள்ளது.. இவர் ஆசிரமத்தை அடைய காச் மந்திர் கண்ணாடி கோவில் என்று கூறவேண்டும்.. துளசி ராமாயண் அத்துப்படி.. இவர் ஆசிரமத்தில் அரங்கத்தில் பகவத் கீதை முழுவதும் சுவர்களை அலங்கறிக்கிறது.. இன்றும் ஆஸ்தா சம்ஸ்கார் சானல்களில் பிரவசனம் செய்வார்..

 


நன்றி இணையம்


*"பக்குவம்" என்ற

மணக்கால் அய்யம்பேட்டை | 2:17 PM | Best Blogger Tips

 


*"பக்குவம்" என்ற தலைப்பில் கவியரசர் கண்ணதாசன் அசத்தலாகச் சொன்னது!*

*கவியரசு கண்ணதாசன்:*

கல்லூரியில் படிக்கும்போது, ஒரு இளைஞனுக்கு எல்லாமே வேடிக்கையாகத் தெரிகிறது.*

* கல்யாணமாகி குழந்தை குட்டிகளோடு அவன் வாழ்க்கை நடத்தும்போது, ஒவ்வொரு வேடிக்கைக்குள்ளும் வேதனை இருப்பது அவனுக்குப் புரிகிறது.*

* இளமைக் காலத்து ஆரவாரம், முதுமை அடைய அடையக் குறைந்து வருகிறது.*

* ஒவ்வொரு துறையிலும், நிதானம் வருகிறது.*

* இளம் பருவத்தில் இறைவனைப்பற்றிய சிந்தனை அர்த்த புஷ்டியற்றதாகத் தோன்றும்.*

* வாழ்வில் அடிபட்டு வெந்து, நொந்து ஆண்டவனைச் சரணடைய வரும்போது, அவனது மாபெரும் இயக்கம் ஒன்று பூமியில் நடைபெறுவது புத்தியில் படும்.*

* பக்குவமற்றவனுக்கு நாத்திகம், அராஜகம் எல்லாமே குஷியான தத்துவங்கள்.*


* பக்குவம் வர வர, ரத்தம் வற்ற வற்ற இந்தத் தத்துவங்கள் எல்லாம் மறுபரிசீலனைக்கு வரும்.*

* நடைமுறைக்கு ஒத்த சிந்தனை, பக்குவப்பட்ட பிறகே தோன்றும்.*

* இருபது வயது இளைஞனைப் பெண் பார்க்கச் சொன்னால் எல்லாப் பெண்களுமே அவன் கண்களுக்கு அழகாய்த்தான் தெரிவார்கள். நாற்பது வயதிற்கு மேலேதான், நல்ல பெண்ணைத் தேர்ந்தெடுக்கும் 'தெளிவு' அவனுக்கு வரும்.*

* கல்லூரி மாணவனைப் படிக்கச் சொன்னால் காதல் கதையையும், மர்மக் கதையையும் படிப்பதில்தான் அவன் கவனம் செலுத்துவான்.*

* காதலித்துத் தோற்றபின்தான், அவனுக்குப் பகவத் கீதையைப் படிக்கும் எண்ணம் வரும்.*

*விளையாட்டுத்தனமான மனோபாவம் பிடிவாதத்திற்குப் பெயர் போனது.*

* எதையும் சுலபத்தில் ஏற்றுக்கொண்டு 'அதைவிட உலகமே கிடையாதுஎன்று வாதாடும்.*

* எதிர்த்தால் வேரோடு பிடுங்க முயலும்.*

* பக்குவமற்ற நிலை என்பது இரண்டு 'எக்ஸ்ட்ரீம்நிலை.*

* ஒன்று, இந்த மூலையில் நின்று குதிக்கும், அல்லது அந்த மூலையில் இருந்து குதிக்கும்.*

* பக்குவ நிலைக்குப் பெயரே 'நடு நிலை'.*

* பரபரப்பான பருவ காலத்தில் கோயிலுக்குப் போனால் தெய்வம் தெரியாது என்பது மட்டுமல்ல, அங்கே சிலையில் இருக்கும் அழகுகூடத் தெரியாது.*

* ஐம்பது வயதில் கோயிலுக்குப் போனால், சிலையில் இருக்கும் ஜீவனும் தெரியும்.*

* இதில் வெறும் பருவங்களின் வித்தியாசம் மட்டுமில்லை. பக்குவத்தின் பரிணாம வளர்ச்சியும் அடங்கியிருக்கிறது.*

* ஏன், உடம்பேகூட இருபது வயதில் எந்த உணவையும் ஜீரணிக்கிறது. நாற்பதிற்கு மேலேதானே 'இது வாய்வு’, 'இது பித்தம்’, என்கிற புத்தி வருகிறது.*

* டென்ஷன்என்ற ஆங்கில வார்த்தைக்குச் சரியான தமிழ் வார்த்தை எனக்குப் புரியவில்லை.*

* 'முறுக்கான நிலைஎன்று அதைக் கூறலாம்.*

* அந்த நிலையில் 'எதையும் செய்யலாம், எப்படியும் செய்யலாம்என்கிற "துணிவு" வருகிறது.*

* அதில் நன்கு அனுபவப்பட்ட பிறகு, 'இதைத்தான் செய்யலாம்’, 'இப்படித்தான் செய்யலாம்என்ற "தெளிவு" வருகிறது.*

* இனி விஷயத்திற்கு வருகிறேன்.*

* 'ஞான மார்க்கப் பக்குவமும் அப்படிப்பட்டது தான்என்பதைக் கூறவே இவற்றைக் கூறினேன்.*

* உள்ளம் உடலுக்குத் தாவி, உடல் ஆன்மாவுக்குத் தாவிய நிலையே, பக்குவப்பட்ட நிலை.*

* தேளைப் பிடிக்கப் போகும் குழந்தை, அதையே அடிக்கப் போகும் மனிதனாக வளர்ச்சியடைகிறது. அதற்குப் பிறகு, அந்தத் தேளிடமே கூட 'அனுதாபம்' காட்டும் "ஞானி"யாக அந்த மனிதன் மாறி விடுகிறான்.*

* வெறும் உணர்ச்சிக் கொந்தளிப்பில், நன்மை தீமைகளை உணரும் 'நிதானம்' அடிபட்டுப் போகிறது.*

* ஆரம்பத்தில் `இதுதான் சரிஎன்று ஒன்றை முடிவு கட்டிவிட்டு, பின்னால் `இது தவறுஎன நாமே சொல்ல வேண்டிய நிலை வருகிறது.*

* சரியாகக் கணக்கிட்டால், மனித வாழ்க்கைக்கு மூன்று கட்டங்கள்.*

* முதற் கட்டம் ஒன்றுமே புரியாத 'உணர்ச்சிக் கூத்து'.*

* இரண்டாவது கட்டம் ஏதோ இருப்பதாக, ஆனால் தெளிவாகத் தெரியாத, 'மயங்கிய நிலை'.*

* மூன்றாவது கட்டம் பிரபஞ்சம் எவ்வளவு பெரியது என்றும், நமக்கும் மேலே ஒரு நாயகன் இருக்கிறான் என்றும் முழு நம்பிக்கை கொண்ட 'ஞானநிலை'.*

* இந்த மூன்றாவது நிலையை முதற் கட்டத்திலேயே எய்தியவர்கள் பலர் உண்டு. சுவாமி விவேகானந்தரைப் போல…*

* அவர்கள் எல்லாம் பூர்வ ஜென்ம புண்ணியத்தால் அந்த நிலையை எய்தியவர்கள்.*

* மற்றவர்கள், அனுபவத்தின் மூலமாகத்தானே பக்குவ நிலையை அடைய வேண்டியிருக்கிறது!*

* எகிப்து மன்னன் பாரூக், பட்டம் துறந்து பாரிஸ் நகரில் சீரழிந்த போதுதான் `மனிதாபிமானம்என்றால் என்ன என்பதை உணர முடிந்தது.*

* ஆனால், அரண்மனை வாசத்திலேயே அதனை உணர்ந்து கொண்ட சித்தார்த்தன், கெளதம புத்தரான வரலாறும் நம்முடைய நாட்டிலே உண்டு.*

* தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் நடுவே தடுமாறும் மனிதர்கள் அதிகம்.*

* ஒன்று, தூங்குவதென்றால் நிம்மதியாகத் தூங்கி விடவேண்டும். விழிப்பதென்றால் சுறுசுறுப்பாக விழித்துக் கொள்ள வேண்டும்.*

* தூக்கமும் விழிப்புமாக இருப்பதால் தூக்கத்தின் பலனும் கிட்டாது, விழிப்பின் பலனும் கிட்டாது.*

* 'மனப்பக்குவம்என்பது "அனுபவங்கள்" முற்றிப் பழுத்த நிலை.*

* அந்த நிலையில் எதையுமே 'இல்லைஎன்று மறுக்கின்ற எண்ணம் வராது.*

* 'இருக்கக்கூடும்என்றே சொல்லத் தோன்றும்.*

* எனது நண்பரும் முன்னாள் அமைச்சருமான தோழர் நெடுஞ்செழியன் அவர்கள், ஒரு கட்டுரையில் நாத்திகன் தன் கொள்கையில் தெளிவாகவே இருக்கிறான்என்றும், “ஆத்திகன் தான் தடுமாறுகிறான்என்றும், “கடவுள் இல்லை என்பதை நாத்திகன் உறுதியாகச் சொல்லுகிறான்என்றும், “உண்டு என்பதற்கு ஆத்திகன் ஒழுங்காக விளக்கம் தர முடியவில்லைஎன்றும் எழுதியிருக்கிறார். நல்லது.*

* 'இல்லைஎன்று சொல்பவனுக்கு எந்தப் புத்தியும் தேவையில்லை.*

* எதைக் கேட்டாலும் 'இல்லைஎன்று சொல்ல முட்டாளாலும் முடியும்.*

* ஆனால் 'உண்டுஎன்று சொல்பவனுக்குத் தான் அதை நிலைநாட்டப் போதுமான அறிவு தேவைப்படும்.*

* “பூமிக்குக் கீழே என்ன இருக்கிறதுஎன்று கேட்டால் எதுவுமே இல்லை, என்று குழந்தைகூடப் பதில் சொல்லிவிட முடியும்.*

* ஆனால், “அடியிலே நீர்; அதன் கீழே நெருப்புஎன்று சொல்ல விஞ்ஞான அறிவு வேண்டும்.*

* பாத்திரம் செய்பவனுக்குப் பல நாள் வேலை; போட்டு உடைப்பவனுக்கு ஒரு நாள் வேலை.*

* நாத்திகன் எப்போதுமே தெளிவாக இருக்க முடியும். காரணம் எதைக் கேட்டாலும், எந்திரம் போல் 'இல்லை இல்லைஎன்று மட்டுமே அவன் பதில் சொல்லப் போகிறான்.*

* ஆனால், ஆத்திகனோ, விபூதிக்கு ஒரு காரணம், குங்குமத்திற்கு ஒரு காரணம், திருமண்ணுக்கு ஒரு விளக்கம் சொல்லியாக வேண்டும். சொல்வது மட்டுமல்ல, எதிரியையும் புரிய வைக்க வேண்டும்.*

* ஒன்றை ஒப்புக்கொண்டு, அதன் உட்கீற்றுகளை விவரிப்பதற்குத் தகுந்த பக்குவம் தேவை.*

* ஆத்திகன், பிரபஞ்சத்தின் தோற்றம் முதல் இயக்கம் வரையில் கண்டுபிடிக்க முயலுகிறான். ஜனனம், மரணம் இரண்டையும் அவன்தான் ஆராய்கிறான்.*

* அப்படி ஆராய்ந்து, இந்து வேதாந்திகள் செய்த முடிவை இதுவரை விஞ்ஞானம் தாண்டியதில்லை.*

* வேதங்களின் முடிவையே, விஞ்ஞானம் தன் முடிவாக ஏற்றுக் கொண்டிருக்கிறது.*

* ஆனால், விஞ்ஞானமும் அறியாமல், மெய்ஞ்ஞானமும் அறியாமல், அஞ்ஞானத்தைக் கொண்டு உழலும் நாத்திகனுக்கு, எல்லாம் இயற்கையாக நடக்கின்றன என்று சொல்லத் தெரிகிறதே தவிர, அந்த இயற்கை என்பது என்னவென்று சொல்லத் தெரியவில்லை.*

* பக்குவ நிலைக்கும், பக்குவமற்ற நிலைக்கும் வேறுபாடு இதுதான்.*

* 'கடவுளே இல்லைஎன்று வாதாடியவன் எவனும் 'எனக்கு மரணமே இல்லைஎன்று வாதாட முடியவில்லையே!*

* 'மரணம்என்று உணரப்படும்போதே சிலருக்குப் பக்குவம் வருகிறது.*

* எனக்குத் தெரிந்த மிகப் பெரிய நாத்திகர் கூட தமது அந்திம காலத்தில் யார் கொடுத்த விபூதிகளையும் பூசிக் கொண்டார்கள்.*

* மரணத்தின் பின் எங்கே போகப் போகிறோம் என்று, நன்கு பக்குவப்பட்டவர்கள்தம் வாழ்நாளிலேயே காணமுடிகிறது.*

* இப்போதெல்லாம், 'போலித்தனம் எது? பொய் எது?’ என்பதைக் கண்டுகொள்ளக்கூடிய தெளிவு எனக்கு வந்து விட்டது.*

* காரணம், வயது மட்டுமல்ல, 'பக்குவம்'.*

* செருப்புப் போடாத காலத்தில், மலத்தை மிதித்திருக்கிறேன். அதனால், இப்போது செருப்புப் போடுகிறேன்.*

* என் முன்னால் ஒரு வாதியையும், பிரதிவாதியையும் கொண்டு வந்து நிறுத்தி, 'யார் நிரபராதிஎன்று சொல்லச் சொன்னால் அவர்களது வாக்குமூலங்கள் இல்லாமலேயே, நான் அவர்களைக் கண்டுபிடிப்பேன்.*

* என்னுடைய தீர்க்கதரிசனத்துக்கு முதல் அடிப்படை அறிவல்ல; 'அனுபவம்'.*

*தலைப்பை மீண்டும் நினைவுபடுத்துகிறேன். அதன் பெயரே 'பக்குவம்’.*

*பக்குவமாய் வாழுங்கள்;*

*வாழ்வதன் பயனை உணருங்கள்;*

*வாழ்வின் பலனை அனுபவியுங்கள் ...!*

*-கவியரசர் கண்ணதாசன்.*

 


நன்றி இணையம்