நாற்பதாவது வயது ஆரம்பத்தில்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:16 PM | Best Blogger Tips
Related image

😊👍😊👍😊👍
*உடம்பின் நடுப்பகுதி வயிறு.*


*அதுபோல வாழ்க்கையின் நடுப்பகுதி நாற்பது.*
*இந்த நாற்பதாவது வயது ஆரம்பத்தில்,*
*
நீங்கள் எப்படி இருப்பீர்களோ,* *அப்படித்தான் இறுதி வரையில் இருப்பீர்கள்.*
Related image
😊
*
தொந்தி கனக்க விடாதீர்கள்.*
*
தொந்தரவு வரும்.*
*
மனம் கனக்க* *விடாதீர்கள்*
*
மரணம் வரும்.*


😊
*ஒரு மனிதன்*
*
வியாதியுடன்* *வாழப்போகிறானா,*
*
வீரியமுடன் வாழப்போகிறானா,*
*
நெஞ்ச நிறைவோடு வாழப்போகிறானா* *என்பதைத் தீர்மானிக்கும்* *வயதுதான்*
*
இந்த நாற்பது.*


😊
*நிறைய வேலை செய்வதால்*
*
நமக்கு நிம்மதி போவதில்லை.*
*
உடம்பு உருக்குலைவதில்லை.*


😊
*என்ன நடக்குமோ என்ற*
*
பயமும் கவலையும்தான்*
*
மனிதன்மீது பாரமாக இறங்கி*
*
அவனை நொறுக்கிவிடுகின்றன.*


😊
*பரபரப்பின்றிச் செயல்படுங்கள்.*
*
கோபப்படாமல் காரியமாற்றுங்கள்.*
*
நிதானத்தைக் கடைபிடியுங்கள்.*
*
ஆரவாரம் வேண்டாம்.*
*
அலட்டிக் கொள்ளாதீர்கள்.*
*
பொறுப்புக்களை*
*
சீராக நிறைவேற்றுங்கள்.*


😊
*அவசியமற்ற சுமைகளைப் போட்டுக் கொள்ளாதீர்கள்.*
*
அடிக்கடி ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.*


😊
*தினசரி* *மத்தியானம்*
*
ஒரு அரைமணி நேரம் தூங்குங்கள்.*
*
இரவு பன்னிரண்டு மணிக்குமேல்*
*
எக்காரணத்தை முன்னிட்டும்*
*
விழித்திருக்காதீர்கள்.*


😊
*பத்துமணிக்கே படுத்துவிடுவது உத்தமம்.*
*
அதிகாலையில் எழுந்து கொள்ளுங்கள்.*


😊
*மனம் தளராமல் தினந்தோறும் ஆண்டவனை நினையுங்கள்.*
*
இறைவா இன்று முழுக்கவும் என்னுடன் இருந்து என்னை ஆட்கொள் ஆண்டவனே.*
*என்னை எந்த தவறும் செய்ய விடாதே இறைவனே."*
*
என்று வேண்டிக் கொள்ளுங்கள்.*


😊
*ஒவ்வொரு நாளும் முகத்தை மலர்ச்சியுடன் வைத்துக் கொள்ளுங்கள்.*
*
கடுகடுப்பும் சிடுசிடுப்பும் வேண்டாம்.*


😊
*டென்ஷன் இல்லாமல் இருங்கள்.*
*
நூறு வயது வரை வாழலாம்*


😊 *ஸ்ட்ரெஸ் உண்டாக்கிக் கொண்டால்,*
*அட்ரஸ் இல்லாமல் போய்விடுவீர்கள்.*

😊
*கவலையைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுங்கள் என்று !*
*
முடிந்தால் அடுத்தவர்களுக்கு உதவி செய்யுங்கள் ஒருபோதும் கெடுதல் நினைக்காதீர்கள்*
*மரணம் நம்மை கண்டு ஓடவேண்டும், மரணத்தை கண்டு நாம் ஓடக்கூடாது

*நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்*


நன்றி இணையம்

எனது எதிர்ப்பு உணர்ச்சியை விலக்கிக் கொண்டு

மணக்கால் அய்யம்பேட்டை | 10:37 AM | Best Blogger Tips
Image result for ஓஷோ
ஓய்வு விடுதியில், ஒரு நாள் இரவு
ஓஷோவும் மாநில அமைச்சர் ஒருவரும் அடுத்தடுத்த அறைகளில் தங்கி இருந்தனர்.

இரவு முழுவதும் முப்பது அல்லது நாற்பது நாய்கள் அந்த விடுதியைச் சுற்றி குரைத்துக் கொண்டே இருந்தன.

அமைச்சரால் தூங்கவே
முடியவில்லை.
அவர், அன்று காலை முழுவதும் பயணம் செய்திருந்தார்.
மறுநாளும் அலைச்சல்
இருக்கிறது.

அதை நினைக்க நினைக்க அமைச்சருக்குக் கோபம் அதிகமானது.

நாய்களோ வெறித் தனமாகக் குரைத்து, இரவின் அமைதியைக் கெடுத்தன.

ஆனால், இத்தனைக்கும் மத்தியில் ஓஷோ அடுத்த அறையில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார்.
ஓஷோவை எழுப்பிய அமைச்சர்,

''என்ன மனிதர் நீங்கள்...

இவ்வளவு சத்தத்துக்கு மத்தியில் உங்களால் எப்படி உறங்க முடிகிறது...???'' என்று புலம்பினார்.

ஓஷோ, தனது வழக்கமான கிண்டலுடன் கூறினார்:
''அந்த நாய்கள், உங்களுக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ இங்கு கூடவில்லை;

கோஷமிடவில்லை
அந்த நாய்களுக்கு
இங்கு ஒரு மந்திரி தங்கி இருப்பது தெரியாது.
அவை, பத்திரிகை படிப்பதில்லை.

அவற்றுக்கு அறிவும் கிடையாது.
அந்த நாய்களுக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

அவை, தங்களுக்கே உரிய குரைக்கும் வேலையைப் பார்க்கின்றன.

நீங்கள், தூங்குகிற வேலையைப் பாருங்கள்...!!!'' என்றார்.

''நாய்கள் இப்படி ஓயாமல் குரைத்தால், நான் எப்படி தூங்க முடியும்...???'' என்றார் அமைச்சர்.

உடனே ஓஷோ, ''நீங்கள், அவை குரைப்பதை எதிர்த்துப் போராடுகிறீர்கள்.
Image result for ஓஷோ
அப்படிப் போராடாதீர்கள்.

பிரச்னை குரைப்பொலி
அல்ல
உங்கள் எதிர்ப்பு
உணர்வு
நீங்கள், சத்தத்துக்கு எதிராக இருக்கிறீர்கள்;

இந்த நாய்கள் குரைப்பதை நிறுத்தினால் தான் தூங்க முடியும் என்று ஒரு நிபந்தனை ஏற்படுத்தி விட்டீர்கள்.
நாய்கள் உங்களது நிபந்தனையைக் கவனிக்கப் போவது இல்லை.

நீங்களும் உங்கள் நிபந்தனையை விலக்கப் போவது இல்லை.

ஆனால், நிபந்தனையை விலக்கினால் மட்டுமே நிம்மதி பெற முடியும்

நடைமுறைக்குச் சாத்தியமானதும் அதுதான்
நாய்களின் குரைப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்.
இந்த இரவிலும் எவ்வளவு சக்தியுடன் அவை குரைக்கின்றன பார்த்தீர்களா....???

ஏற்பு உணர்ச்சியுடன் கவனித்தால், குரைப்புச் சத்தமும் ஒருவகை மந்திரம்தான்...!!!'' என்றார் ஓஷோ
'உதவாக்கரை யோசனை' என்று மனதுக்குள் பழித்தபடி போனார் மந்திரி.

ஆனால் காலையில், மிகுந்த மகிழ்ச்சியுடன் வந்து ஓஷோவைச் சந்தித்தார் அமைச்சர்...!!!
''ஆச்சரியம்தான்....!!!

எனது எதிர்ப்பு உணர்ச்சியை விலக்கிக் கொண்டு, நாய்கள் குரைப்பதைக் கவனித்தேன். ஆழ்ந்து ரசிக்கவும் தொடங்கினேன். அப்படியே உறங்கிப் போனேன்'' என்றார் அமைச்சர்.

ஓஷோ நமக்குச் சொல்கிறார்:
இதை, நீ ஞாபகத்தில் வைத்துக் கொள்.
உன்னைச் சுற்றி இருப்பவற்றால் நீ எரிச்சல் அடைந்தால்,

உன் கவனத்தை உள்முகமாகத் திருப்பு..
எரிச்சலுக்கான காரணம் நீயாகத்தான் இருப்பாய்..
உனது எதிர்பார்ப்பு அல்லது ஆசை வேறாக இருந்திருக்கும்;

அல்லது ஏதோ ஒரு நிபந்தனையை உனக்குள் நீ விதித்திருப்பாய்.

அதுதான் உனது எரிச்சலுக்குக் காரணம்.. உலகத்தை நமக்கேற்ப நிர்ப்பந்தப்படுத்த முடியாது..

அதை எதிர்த்துப் போராடும்போது நீ வெறுப்படைகிறாய்'' என்கிறார்
ஓஷோ..!

👤✍ *இன்றைய நாள் இனிதாக அமைய வாழ்த்துக்கள்*



நன்றி *பெ.சுகுமார்*