27 நட்சத்திரங்களும் 4 பாத

மணக்கால் அய்யம்பேட்டை | 12:14 PM | Best Blogger Tips


27 நட்சத்திரங்களும் 4 பாதங்களைக் கொண்டுள்ளது. ஆக மொத்தம் 108 நற்பண்புகள் உள்ளன. அவை 12 வகைகளாக பிறிக்கப்படுகிறது. அதுவே 12 இராசி மண்டலமாகும். அவை
Image result for 27 நட்சத்திரங்களும்
✌மேஷம்
✌ரிஷபம்
✌ மிதுனம்
✊ கடகம்
💪 சிம்மம்
👋 கன்னி
👍 துலாம்
👇 விருச்சிகம்
☝ தனுசு
👌 மகரம்
👏 கும்பம்
👊 மீனம்


🔎ஒவ்வொரு இராசி மண்டலமும் தனித்துவம் வாய்ந்தவை. அதன் சிறப்பம்சங்களை பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


👆 மேஷம் :


1. வைராக்கியம் (Assertiveness)
2. தேசநலன் (Citizenship)
3. நிறைவேற்றுதல் (Chivalry)
4. துணிச்சல் (Courage)
5. கீழ்படிதல் (Obedience)
6. வெளிப்படையாக (Openness)
7. ஒழுங்குமுறை (Order)
8. ஏற்றுக்கொள்ளுதல் (Acceptance)
9. ஆன்மிகம் (Spirituality)


🎯 மேஷராசி மண்டலமானது ஜீரண மண்டலத்தின் ஆதாரமாகும்


✋ ரிஷபம் :


1. கருணை (Mercy)
2. இரக்கம் (Compassion)
3. காரணம் அறிதல் (Consideration)
4. அக்கறையுடன் (Mindfulness)
5. பெருந்தன்மை (Endurance)
6. பண்புடைமை (Piety)
7. அஹிம்சை (Non violence)
8. துணையாக (Subsidiarity)
9. சகிப்புத்தன்மை (Tolerance)


🎯 ரிஷபராசி மண்டலமானது சிறுநீரக மண்டலத்தின் ஆதாரமாகும்


✌ மிதுனம் :


1. ஆர்வம் (Curiosity)
2. வளைந்து கொடுத்தல் (Flexibility)
3. நகைச்சுவை (Humor)
4. படைப்பிக்கும் கலை (Inventiveness)
5. வழிமுறை (Logic)
6. எழுத்து கற்க பிரியம் (Philomathy)
7. காரணம் (Reason)
8. தந்திரமாக (Tactfulness)
9. புரிந்து கொள்ளுதல் (Understanding)


🎯 மிதுனராசி மண்டலமானது நரம்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.


✊ கடகம் :


1. பிறர் நலம் பேணுதல் ( Altruism )
2. நன்மை செய்ய விரும்புதல் (Benevolence)
3. அறம் (Charity)
4. உதவுகின்ற (Helpfulness)
5. தயாராக இருப்பது (Readiness)
6. ஞாபகம் வைத்தல் (Remembrance)
7. தொண்டு செய்தல் (Service)
8. ஞாபகசக்தி (Tenacity)
9. மன்னித்தல் (Forgiveness)


🎯 கடகராசி மண்டலமானது ஐம்புலன் மண்டலத்தின் ஆதாரமாகும்.







சிம்மம் :


1. வாக்குறுதி (Commitment)
2. ஒத்துழைப்பு (Cooperativeness)
3. சுதந்திரம் (Freedom)
4. ஒருங்கிணைத்தல் (Integrity)
5. பொறுப்பு (Responsibility)
6. ஒற்றுமை (Unity)
7. தயாள குணம் (Generosity)
8. இனிமை (Kindness)
9. பகிர்ந்து கொள்ளுதல் (Sharing)

சிம்மராசி மண்டலமானது தசை மண்டலத்தின் ஆதாரமாகும்.





கன்னி :


1. சுத்தமாயிருத்தல் (Cleanliness)
2. அருள் (Charisma)
3. தனித்திருத்தல் (Detachment)
4. சுதந்திரமான நிலை (Independent)
5. தனிநபர் உரிமை (Individualism)
6. தூய்மை (Purity)
7. உண்மையாக (Sincerity)
8. ஸ்திரத்தன்மை (Stability)
9. நல்ஒழுக்கம் (Virtue ethics)

கன்னிராசி மண்டலமானது தோல் மண்டலத்தின் ஆதாரமாகும்.







துலாம் :


1. சமநிலை காத்தல் (Balance)
2. பாரபட்சமின்மை (Candor)
3. மனஉணர்வு (Conscientiousness)
4. உள்ளத்தின் சமநிலை (Equanimity)
5. நியாயம் (Fairness)
6. நடுநிலையாக (Impartiality)
7. நீதி (Justice)
8. நன்னெறி (Morality)
9. நேர்மை (Honesty)


துலாராசி மண்டலமானது சுவாச மண்டலத்தின் ஆதாரமாகும்.







விருச்சிகம் :


1. கவனமாக இருத்தல்(Attention)
2. விழிப்புணர்வுடன் இருத்தல் (Awareness)
3. எச்சரிக்கையாக இருத்தல் (Cautiousness)
4. சீரிய யோசனை (Consideration)
5. பகுத்தரிதல் (Discernment)
6. உள் உணர்வு (Intuition)
7. சிந்தனைமிகுந்த (Thoughtfulness)
8. கண்காணிப்பு (Vigilence)
9. அறிவுநுட்பம் (Wisdom)




விருச்சகராசி மண்டலமானது நிணநீர் மண்டலத்தின் ஆதாரமாகும்.

Image result for 27 நட்சத்திரங்களும் 4 பாத

தனுசு :


1. லட்சியம் (Ambition)
2. திடமான நோக்கம் (Determination)
3. உழைப்பை நேசிப்பது (Diligence)
4. நம்பிக்கையுடன் (Faithfulness)
5. விடாமுயற்சி (Persistence)
6. சாத்தியமாகின்ற (Potential)
7. நம்பிக்கைக்குரிய (Trustworthiness)
8. உறுதி (Confidence)
9. ஊக்கத்துடன் முயற்சி (Perseverance)

தனுசு ராசி மண்டலமானது எலும்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.





மகரம்:


1. கண்ணியம் (Diginity)
2. சாந்த குணம் (Gentleness)
3. அடக்கம் (Moderation)
4. அமைதி (Peacefulness)
5. சாதுவான (Meekness)
6. மீளும் தன்மை (Resilience)
7. மௌனம் (Silence)
8. பொறுமை (Patience)
9. செழுமை (Wealth)

மகரராசி மண்டலமானது நாளமுள்ள சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.




கும்பம்

1. சுய அதிகாரம் (Autonomy)


2. திருப்தி (Contentment)
3. மரியாதை (Honor)
4. மதிப்புமிக்க (Respectfulness)
5. கட்டுப்படுத்துதல் (Restraint)
6. பொது கட்டுப்பாடு (Solidarity)
7. புலனடக்கம் (Chasity)
8. தற்சார்பு (Self Reliance)
9. சுயமரியாதை (Self-Respect)

கும்பராசி மண்டலமானது நாளமிள்ளா சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.




மீனம் :


1. உருவாக்கும் கலை (Creativity)
2. சார்ந்திருத்தல் (Dependability)
3. முன்னறிவு (Foresight)
4. நற்குணம் (Goodness)
5. சந்தோஷம் (Happiness)
6. ஞானம் (Knowledge)
7. நேர்மறை சிந்தனை (Optimism)
8. முன்யோசனை (Prudence)
9. விருந்தோம்பல் (Hospitality)

மீனராசி மண்டலமானது இரத்த ஒட்ட மண்டலத்தின் ஆதாரமாகும்.


நன்றி இணையம்

சந்திரபாபு நாயுடு - இந்து மத சொத்துகள் - நல்ல உத்தரவு

மணக்கால் அய்யம்பேட்டை | 12:13 PM | Best Blogger Tips
Image result for சந்திரபாபு நாயுடு
இருந்தால் இப்படி ஒரு முதல்வராக இருக்க வேண்டும். 
நியாயமாக நேர்மையாக உண்மையாக நடக்க வேண்டும்.
சந்திரபாபு நாயுடுவின் அதிரடியான உத்தரவு. ..
ஆந்திராவில் ஹிந்து கோயில்கள் மடங்குக்கு சுமார் 3 லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளன.
ஹிந்து ஆலயத்திற்கு சொந்தமான நிலங்களில் மாற்று மதத்தினரான
முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் விவசாயம் செய்து வந்தால் அதை உடனடியாக அரசிடம் ஒப்படைக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.
குறிப்பாக கிறிஸ்துவர்களாக மதம் மாறிய தலித்துகள் மற்றவர்கள் தங்களுடைய ஹிந்து பெயரில் இருந்து ஹிந்து கோயில் விவசாய நிலங்களில் விவசாயம் செய்து வருவதாக தகவல் உள்ளது.,
Related image
எனவே அவர்கள் தாங்கள் கிறிஸ்துவர்கள் இல்லை என்பதை நிரூபிக்க அந்தந்த பகுதியிலுள்ள சர்ச்சிலிருந்து தாங்கள் கிறிஸ்தவர்கள் இல்லை என்ற சான்று சமர்ப்பிக்க வேண்டுமென ஆந்திர முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
எப்படி ஹிந்துக்கள் வக்ப் வாரிய சொத்துக்களையும் கிறிஸ்தவ சர்ச் சொத்துக்களையும் அனுபவித்து வருமானம் ஈட்ட முடியாதோ அப்படித்தான் ஹிந்து ஆலய சொத்துகளை மாற்று மதத்தினர் அனுபவிக்க கூடாது என ஆந்திர மாநில அரசு தெளிவாக முடிவு எடுத்துள்ளது.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்களுக்கு....
இந்துகளின் சார்பில்,
மனமார்ந்த பாராட்டுகள்...

 நன்றி இணையம்

ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தன் பிள்ளை தானே வளரும்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:06 PM | Best Blogger Tips
Image result for Mercedes-Benz கார்

*அமெரிக்காவில், ஒருநாள், ஒரு நெடுஞ்சாலை ஓரமாக, ஒரு Mercedes-Benz கார் நின்றுகொண்டிருந்தது. பழுதான அதன் சக்கரத்தை மாட்டமுடியாமல், ஒருபெண், தவிப்புடன், வழியில் செல்வோரிடம் உதவி கேட்டுக்கொண்டிருந்தார். எல்லாருமே வேகமாக சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாகச்சென்ற ஒருவர், அந்தப்பெண்ணுக்கு உதவச்சென்றார்.*
*தன்னைப்பார்த்து அந்தப்பெண் பயப்படுவதை புரிந்துகொண்டார் அவர். அதனால், அவர், கனிவான குரலில், “நான் உங்களுக்கு உதவி பண்ணத்தாம்மா வந்திருக்கேன். ஏன் இந்தக்குளிர்ல வெளியே நிக்கறீங்க? கார் உள்ளே போய் உட்காருங்க. நான் நொடியில ஸ்டெப்னி மாட்டித்தரேன்”னு சொல்லி, கிடுகிடுன்னு வேலை செய்து அதை மாட்டிக்கொடுத்தார்.*
Image result for Mercedes-Benz கார்
*அந்த மனிதரின் உடம்பெல்லாம் அழுக்கு. முழங்கையில் இலேசாக சிராய்ப்பு. “ஓகேம்மா! வேலை முடிஞ்சுது. இனிமே நீங்க கிளம்பலாம்”னார். “உங்களுக்கு எவ்வளவு பணம் தரவேண்டும்?”என, அந்தப் பெண் கேட்டார். எவ்வளவு கேட்டாலும், அந்தப் பெண் கொடுக்கத்தயாராகவே இருந்தார்.*
*ஆயினும், அந்த மனிதர், ஒரு புன்னகையோடு, “நான் மெக்கானிக் இல்லம்மா. இது என் தொழில் இல்லை. இது ஓர் உதவிதான். அதனால, எனக்கு எதுவும் வேண்டாம். நீங்கள் பத்திரமாக போங்கள் என்றார்*
*இல்லப்பா… நீங்கள் இந்த நடுவழியில் உதவி செய்யவில்லையென்றால் என் கதி என்னவோ, அதனால், எவ்ளோ வேணும்னு தயங்காம கேளுங்கள்; கொடுக்கிறேன்” என்று அந்தப்பெண் சொன்னார்.*
*அதற்கு அவர், “அப்படின்னா ஒண்ணு பண்ணுங்க, மேடம். என் பெயர் பிரெய்ன் ஆண்டர்சன். அடுத்த முறை உதவி தேவைப்படற யாரையாவது பார்த்தீங்கன்னா, அப்போ எனக்குக்கொடுக்க நினைக்கிற தொகையை அவங்களுக்குக் கொடுத்துட்டு, என்னை மனசுல நினைச்சுக்கோங்க. அது போதும்!”னு சிரிச்சுட்டு, வந்த வழியைப்பார்த்து சென்றுவிட்டார் பிரெய்ன்.*
Image result for Mercedes-Benz கார்
*சில மைல் தூரம் போனதும், ஒரு சிறிய உணவகத்தில் காரை நிறுத்தி உணவருந்தச்சென்றார் அந்தப்பெண். அங்கு, ஒரு பணிப்பெண் வேகமாக வந்து, முகத்தைத்துடைக்க, முதலில் ஒரு துண்டைக்கொடுத்தார். "சாப்பிட என்ன வேண்டும் எனக்கேட்டு, சுறுசுறுப்பாக பரிமாறினார். அந்த பணிப்பெண், எட்டுமாத கர்ப்பிணியாக இருந்து கொண்டு, முகத்தில் எவ்விதச்சோர்வுமின்றி, இப்படி வேலை செய்வதை இரசித்தார் அந்தப்பெண். சாப்பிட்டு முடிந்ததும், அவர் நூறு டாலர் கொடுத்தார். அதைக்கொடுக்கும்போது பிரெய்ன் ஆண்டர்சனை நினைத்துக்கொண்டார்.*
*அந்தப் பணிப்பெண், கட்டணத்தொகை போக, கல்லாவிலிருந்து மீதி சில்லறை வாங்கிக்கொண்டு வருவதற்குள், அந்தப்பெண் வெளியேறி, காரில் கிளம்பிப் போய்விட்டார்.*
*"அடடா… மீதியை வாங்காமல் போயிட்டாங்களே!" ன்னு நினைத்துக்கொண்டே, மேஜையில் பார்த்தால், கைதுடைக்கும் துணிக்குக்கீழே, இன்னும் 400 டாலர் பணம் இருந்தது. கூடவே, ஒருதுண்டுச்சீட்டில், ‘மை டியர்! இந்தப்பணம் உனக்குத்தான். இந்தச்சமயத்தில் உனக்கு இது தேவைப்படலாம். மற்றபடி, நீ எனக்கு எதுவும் தரவேண்டியது இல்லை. ஒரு நெருக்கடியில், முகம் தெரியாத ஒருத்தர் எனக்கு உதவி செய்தார். அதன் தொடர்ச்சியாக, இப்போது உனக்கு நான் செய்திருக்கிறேன். ஒருவேளை, எனக்கு நீ ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்தால், இந்த அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி தேவைப்படும் வேறு ஒருவருக்கு உன்னால் முடிந்த உதவியைச்செய்" என்று எழுதி வைத்திருந்தார்கள்..*
*அடுத்த மாதம் பிரசவச்செலவுக்கு என்ன செய்யவதென்று அந்த பணிப்பெண்ணும், அவர் கணவரும் அதிகமாகவே கவலைப்பட்ட நேரத்தில், இந்தப்பணம் அவர்களுக்குப்பெரிய உதவி! இரவு வீட்டுக்குப்போனதும், அந்தப்பணிப்பெண், தன் கணவரிடம் நடந்ததை மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாக விவரித்து, “எல்லாம் நல்லபடியா போயிட்டிருக்கு. கவலையை விடுங்க, மை டியர் பிரெய்ன் ஆண்டர்சன்!”னு சொன்னாராம்.*
Image result for Mercedes-Benz கார்
*ஸ்கேட்போர்ட் விளையாட்டில் புகழ்பெற்றவர்தான் பிரெய்ன் ஆன்டர்சன். இந்த உண்மை நிகழ்வை கேட்கும்போது, உதவி தேவைப்படும் ஒருவருக்கு நாமும் உதவ வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறதல்லவா ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தன் பிள்ளை தானே வளரும் என்பார்கள்.*
*தக்கநேரத்தில், யாருக்கோ நாம் செய்த உதவி, நமக்கு உதவி தேவைப்படும்போது, வேறு யாரோ ஒருவர் வழியாக கிடைப்பதை நீங்கள் அனுபவித்திருக்கலாம்.*
*இரக்கச்செயல் சங்கிலி அறுந்துவிடாமல் இருக்க கரம் கோர்ப்போம். நாம் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்றால், யாரோ ஒருவர் நம்மீது காட்டும் அன்பினால்தான்*
*எனவே, அன்பர்களே, தேவை இருப்போருக்கு, நம் இரக்கக்கரங்களை நீட்டுவோம்.* இச்செய்தியை பகிரவது கூடஒரு உதவிதான்

 நன்றி இணையம்