‪‎தியானம்

மணக்கால் அய்யம்பேட்டை | 11:28 AM | Best Blogger Tips


‪#‎தியானத்தின் போது மூளை அணுக்களின் பலம் கூடுகிறது. தினமும் பதினைந்து நிமிடங்களாவது தியானம் செய்ய வேண்டியது அவசியமாகும். காலையிலோ மாலையிலோ எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.
தியானத்தின் போது அவசரம் இருக்கவே கூடாது. ஏதாவது ஒரு வேலையச் செய்ய மனதில் நினைத்துக் கொண்டு தியானம் செய்ய ஆரம்பிக்கக் கூடாது. உணவு உட்கொள்வதற்கு முன் செய்ய வேண்டும். உண்ட பின் மூன்று மணிநேர இடைவெளியின் பின் தியானம் செய்யலாம்.
*
யார் வாழை இலையில் சாப்பிட்டு வருகிறார்களோ அவர்களுக்குத் தலைமுடி கறுப்பாகவே இருக்கும். சீக்கிரத்தில் நரைக்காது. வாழையிலையில் தனலஷ்மி வாசம் செய்வதாகப் புராணங்கள் கூறுகின்றன. வறுமை, கஷ்டங்கள் நீங்க வேண்டுமானால் வாழை இலையிலேயே சாப்பிட வேண்டும்.
இப் பழக்கம் மேற்கொண்டவர்கள் லஷ்மி கடாட்சம் பெறுவார்கள் என்பது திண்ணம். அத்துடன் வாழை இலையில் சாப்பிடுவதால் முகம் பளபளப்பாகி அழகும் வசீகரமும் உண்டாகும். பித்த - சிலேட்டும வியாதிகள் தணியும். ( தற்போது வாழை இலை கிராம பகுதிகளில்தான் கிடைக்கின்றது, பண்டிகை நாட்களில் நகரத்தில் கிடைக்கின்றது. மேலைநாடுகளிலோ இலை கிடைப்பது இன்னமும் அரிது.
ஆகையால் வாழை இலை கிடைக்கக் கூடியவர்கள் மட்டும் வாழை இலையில் உண்பது நன்று. இலை கிடைத்தும் உண்ணாது இருத்தல் போல் ஒரு அறிவற்ற செயல் வேறு எதுவும் இருக்கமுடியாது. இலை கிடைக்காதவர்கள் அவர்கள் முறைப்படியே உணவருந்தலாம். தவறில்லை.)
*
சுமங்கலிப் பெண்கள் ஸ்நானம் செய்யும் போது வெறும் தலையில் குளிக்கக் கூடாது. சிறிது மஞ்சளை உரைத்து முகத்தில் பூசிக்கொண்டுதான் தலை முழுக வேண்டும்.
*
துளசி மாடத்திலிருந்து பூஜைக்கு வேண்டிய துளசியை ஒடிக்கக்கூடாது. துளசி மாடம் பூஜைக்குரியது. பூஜைத் தேவைக்கு வேண்டிய துளசியை தனியாக வேறு துளசிச் செடிகளில் இருந்து பறிக்க வேண்டும்.
*
சுபகருமங்களுக்கெல்லாம் முதல் தேவையான பொருள் மஞ்சள், மங்கல கருமங்களுக்கு சிட்டை எழுதும்போது முதலில் எழுதப்படுவது மஞ்சள்தான்.

நன்றி இணையம்

சுவாமி விவேகானந்தர்

மணக்கால் அய்யம்பேட்டை | 11:26 AM | Best Blogger Tips


உலக அரங்கில் இந்து மதத்தின் புகழைத்
தன் சொற்பொழிவால் நிலை நிறுத்தியவர்
சுவாமி விவேகானந்தர்.
அன்று 1893 லே சிகாகோவில் சகோதர சகோதரிகளே என
பேச தொடங்கி உலக சமய தலைவர்களை தன்பால்
ஈர்த்தார்.
சொற்பொழிவு முடிந்த மறுநாள் அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் இவர் உருவ படங்கள் ஆங்காங்கே வைக்கபட்டிருந்தன.அதை அமெரிக்க மக்கள் தலை சாய்த்து வணங்கி சென்ற படி இருந்தனர்.
இந்தியா முழுமைக்கும் சுற்றுபயணம்
செய்து நல்ல கருத்துக்களை இளைஞர்களிடம்
பரப்பினார்.
உலகம் முழுவதும்
சுற்றுபயணத்தை முடித்துவிட்டு 1897 ல் பாம்பன்
வந்தார்,அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
"ஆன்மீக சிந்தனைகளை முழுவதும்
அறிந்து அதன்படி நடக்க வேண்டும்,அவ்வாறு இல்லாதவர்
நாத்திகராக இருப்பதே மேல் "என்று கூறினார்,
மேலும்
நான் சிகாகோ செல்ல உதவிய ராமநாதபுரம் மன்னர்
சேதுபதி அவர்களுக்கு நானும் இந்து சமயமும்
கடமைபட்டுள்ளது என கூறி முடித்தார்.
நன்றி:::மறைக்கப்பட்ட உண்மைகள்'
சினிமா பைத்தியம் தலைக்கேறிய காலகட்டத்தில் இந்திய இளைஞா்களின் ஹீரோவை பற்றி இங்கே கூறுவதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன்.

 நன்றி இணையம்

*ஆடியில்... விளக்கேற்றி வழிபடுவோம்!

மணக்கால் அய்யம்பேட்டை | 11:24 AM | Best Blogger Tips

ஆடி மாதம் என்பது கலைத்துப் போடும் காற்றும் நனைக்கிற அளவுக்கு பெய்யும் மழையும் கைகோர்க்கும் காலம். இதுதான் மழைக்காலத்தின் துவக்கம். இப்படியான பருவநிலை மாற்றத்தால் ஏற்படுகிற நோய்க் கிருமிகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் வேப்பிலைக்கும் எலுமிச்சைக்கும் உண்டு. எனவே, ஆடி வழிபாடுகளில் இவை இரண்டும் முக்கியத்துவம் பெறுகின்றன.
திருமணமாகாத பெண்கள் ஆடி வெள்ளிக்கிழமைகளில் குத்துவிளக்கினை அலங்கரித்து தீபம் ஏற்றி, மானசீகமாக அதில் அம்மனை எழுந்தருளச் செய்து, லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்து வழிபட நல்ல கணவன் அமைவது உறுதி!
மேலும், ஆடி வெள்ளிக்கிழமைகளில் கன்யா பூஜை, ராகு கால பூஜை, நாக தோஷ பூஜை செய்வதால், குடும்பத்தில் சந்தோஷம் பெருகும். சுபிட்சம் குடிகொள்ளும்

 நன்றி இணையம்

பெற்றோர்கள் தவறாமல் படிக்க வேண்டிய பதிவு...!

மணக்கால் அய்யம்பேட்டை | 11:23 AM | Best Blogger Tips

ஃபேஸ்புக்கில் ஒருவன் உங்களுக்கு ப்ரெண்ட் ரிக்வஸ்ட் அனுப்புகிறான், அவனை உங்களுக்கு தெரியாது, ஆனால் அழகான படத்தை அவன்ப்ரொபைல் பிக்சராக வைத்துள்ளான். அதனால நீங்க அவனை ப்ரெண்ட்டா அக்ஸப்ட் பண்ணுறீங்க..
உங்கள் சின்ன குழந்தையின் பள்ளி முதல் நாள் அது. அவள் மிக மிக அழகாக உள்ளாள் அவளின் புது பள்ளி சீருடையில். நீங்கள் அவளை புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் உங்கள் நண்பர்களும் குடும்பமும் பார்ப்பதற்கு போஸ்ட் பண்ணுறீங்க.
உங்களை குழந்தையை விட நீங்கள் குதூகலமாக உள்ளீர்கள். குழந்தையை பள்ளியில் விட்டுவிட்டு பேஸ்புக்கில் பள்ளியின் முகவரியில் 'செக் இன்' பண்ணுறீங்க. நம்பவே முடியவில்லை என் குழந்தை எவ்வளவு பெரிதாகிவிட்டாள். நாங்கள் பெருமையான பெற்றோர் என ஸ்டேட்டஸ் கூட போடுறீங்க .
அதே சமயம் நீங்கள் என்றோ ப்ரெண்ட்டாக சேர்த்த அந்த மர்ம நபர், பள்ளி சீருடையில் அழகாக உள்ள உங்கள் குழந்தையின் படத்தை அவன் போனில் டவுன்லோட் செய்கிறான். டவுன்லோடு செய்த கையோடு அதை அவனை போல 60 திருடர்களுக்கு அனுப்புகிறான்.
இந்திய பெண் வயது : 5
கருப்பு கூந்தல் 
கருப்பு நிற கண்கள்
RS:70,000/-
நீங்கள் உங்கள் குழந்தையின் படத்தை மட்டும் குழந்தை திருடர்களுக்கு கொடுக்கவில்லை, குழந்தையின் பெயர் அவளின் பள்ளி முகவரி அனைத்தையும் வெள்ளித்தட்டில் வைத்து நீட்டி உள்ளீர்கள்.
மதியம் 3 மணிக்கு குழந்தையை அழைத்துவர பள்ளிக்கு செல்கிறீர்கள். ஆனால் குழந்தையை பள்ளியில் எங்கும் காணவில்லை.
உங்களுக்கு தெரியாதது, உங்களின் செல்ல மகள் 43 வயது கிழட்டு காமுகனுக்கு விற்கப்பட்டது அதுவும் நீங்கள் காலையில் பள்ளியை விட்டு வெளியேறும் முன்பே விற்கப்பட்டது. அவள் இப்போது ஒரு பையில் அடைக்கப்பட்டு தென்னாப்பிரிக்காவிற்கு பயணித்துக்கொண்டிருக்கிறாள். குழப்பமான பயத்துடன் அழுதுகொண்டே செல்கிறாள். இன்று அவளை பள்ளியில் இருந்து அழைத்து வந்த ஆளை அவள் இதற்கு முன் பார்த்ததே இல்லை. இப்போது அவளுக்கு அவளின் பெற்றோர் இருக்குமிடம் தெரியாது. எங்கு சென்றுகொண்டிருக்கிறாள் என்பது தெரியாது, அவளுக்கு என்ன நடக்கப்போகிறது என்பதும் தெரியாது.
* தெரியாதவர்களை நட்பு வட்டத்தில் இணைக்காதீர்கள். 
*
உங்கள் வாழ்க்கையின் முக்கியமான நிகழ்வுகள் அனைத்தையும் பேஸ்புக்கில் போடாதீர்கள். 
*
உங்கள் குழந்தையின் படங்களை ப்ரொபைல் பிச்சராக வைக்காதீர்கள்.
இதை குழந்தைகள் மற்றும் பெற்றோரின் நன்மைக்கு உங்களுக்கு தெரிந்தவர்களுடன் ஷேர் பண்ணுங்கள்.
இந்த பதிவை பகிர்வதை நிறுத்தாதீர்கள்.. விழிப்புணர்வை பரப்புங்கள் !

 நன்றி இணையம்