ஜெராக்ஸ் இயந்திரம்..!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:16 PM | Best Blogger Tips
ஜெராக்ஸ் இயந்திரம்..!

"ஒரு சராசரி மனிதன் வரலாற்றின் பக்கங்களில் விஞ்ஞானியாக பதிவு செய்யப்பட்டான்"

உலகமெங்கும் நகலெடுக்க பயன்படும் ஜெராக்ஸ் இயந்திரம் மனித வாழ்வில் பிரிக்கமுடியாதவை ஆகிவிட்டது.
ஆனால் அந்த ஜெராக்ஸ் இயந்திரத்தை கண்டுபிடிக்க செஸ்டர் கார்ல்சன் எனும் தனி மனிதனுக்கு முப்பது வருடங்கள் ஆயிற்று இடைப்பட்ட காலத்தில் செஸ்டர் கார்ல்சன் பட்ட அவமானங்களும் துயரங்களும் சொல்லில் அடங்காதவை.

வருங்கள் நண்பர்களே நகலெடுக்கும் இயந்திரத்தின் வரலாற்றை
புரட்டிப்பார்போம்.

1960 மார்ச் மாதம்
"ஜெராக்ஸ் 914" எனும் நகலெடுக்கும் கருவி நடைமுறைக்கு வருவதற்குமுன்,
நகலெடுப்பது என்பது மிகவும் சிக்கலான விஷயமாக இருந்தது.

அதாவது புகைப்படக்கலையின் நுட்பங்களை பயன்படுத்தி பயிற்சிபெற்ற பணியாளர்கள் பலவிதமான இரசயனங்களில் நனைத்து மணிக்கணக்கில் காயவைத்து ஒன்றுடன் ஒன்று ஒட்டி கவனமாக நகலெடுத்தனர்.

கொஞ்சம் கவனம் சிதறினால் நகலெடுக்க வேண்டிய
முக்கிய தாள்கள் பாதிப்புக்கு உள்ளாகிவிடும் .

1906ஆம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலாத்தில் ஒரு வறுமைகுடும்பத்தில் பிறந்த செஸ்டர் கார்ல்சன்,
பகுதி நேரம் உழைத்து இயற்பியலில் பட்டம் பெற்றார்.

தனது குடும்பத்தின் வறுமையை போக்க பல இடங்களில் பணியாற்றினார்.

“பேடண்ட்” துறையில் பணியாற்றியபோது கார்ல்சனுக்கு தனது அலுவலகத்தில் நகலெடுக்கபட்ட கஷ்டங்களை பார்த்து நகலெடுக்க வேண்டிய தாளை ஒரு கருவி மேலேவைத்தால் ஈரம் படாமல் நகல் வந்துவிழுந்தால் எப்படி இருக்குமென்று
ஜீ பூம்பா கணக்கில் யோசித்தார்.

தனது யோசனையை அலுவலக நண்பர்களிடம் சென்னார் ஒட்டுமொத்த அலுவலகமோ கை கொட்டி சிரித்தது தனது யோசனையை நடைமுறைபடுத்தப்போகிறேன் என்று சொன்னதிற்கு பெரிய பெரிய விஞ்ஞானிகள் எல்லாம் முயற்சித்து தோற்றுவிட்டனர் உனக்கென்ன பைத்தியம் பிடித்து விட்டதா என ஏளனம் செய்தனர் .

முயற்சியே மூலதனம்

கையிலோ காசில்லை ஆனாலும் தனது சிந்தனையின் மேல் அபாரநம்பிக்கை கொண்டு இருந்தார் அவருடைய நல்ல காலம் ஒளிமின் நிகழ்வு ( photo electricity) அவருடைய கவணத்தை ஈர்த்தது இருட்டாக இருக்கும் போது மின்சாரம் பாயமல் தடுக்கும் இயல்பு கொண்ட சில பொருள்களின் மீது ஒளிக்கதிர்கள் படும் போது அவைகள் மின்சாரத்தை கடத்தும் இது ஒளிமின் நிகழ்வு அது போல முடி, பட்டுத்துணி, எண்ணைதோய்த காகிதம்
ஆகியவற்றை அழுத்தி தேய்தால் நிலை மின்சாரம் உண்டாகும் இந்த இரண்டு நிகழ்வுகளையும் இணைத்து நகலெடுக்கும் கருவிக்கு வடிவம் கொடுத்தார் செஸ்டர் கார்ல்சன் . கருவியின் மேற்பரப்பில் தகடு ஒன்றில் ஒளிஉணர் பொருளினால் பூச்சு ஏற்படுத்தி அதில் நிலை மின்சாரத்தை ஏற்படுத்தி அதற்கு மேல் நகலெடுக்க வேண்டிய ஒளி ஊடுருவும் தாளை வைத்து அதன் வழியே ஒளியை பாய்ச்சினார் தாளின்
எழுத்துகள் இல்லாத வழியே ஒளி பாய்ந்தது அதற்கு அடியில் உள்ள தகட்டில் ஒளி பட்டதும் நிலைமின்சாரம் அகன்று விட்டது எனவே இந்த அமைப்பை அப்படியே ஒரு தாளில் பதிய வைத்து வெற்றியும் பெற்றார் அக்கருவிக்கு உரிமமும் பெற்றார்

இரண்டாம் உலகப்போரினால் கார்ல்சன் பட்ட கஷ்டம்

தனது கருவியை 1938 இல் சந்தைக்கு அறிமுகம் செய்தார் . பார்பதற்கு காம , சோமா வென்ற கருவி தெளிவில்லாத எழுத்துகள் , ஒளி ஊடுருவும் தாளில் இருந்தால் மட்டுமே நகலெடுக்க முடியும் சாதாரண தாள்களை நகலெக்க முடியாது போன்ற பல காரணங்களால் கருவி தோல்வி அடைந்து விட்டது கருவியில் உரிய மாற்றங்களை செய்ய வேண்டும் அதற்கு பணம் நிறைய வேண்டும் எல்ல நிறுவனங்களும் கார்ல்சனை
கிண்டலடித்தார்களே தவிர யாரும் உதவ முன் வரவில்லை இதற்க்கிடையில் இரண்டாம் உலகபோர் தொடங்கி விட்டது தான் பட்ட பாடெல்லாம் வீணாகி விடுமோ என்ற அச்சம் கார்ல்சனுக்கு தோன்றி விட்டது

தோல்வி மேல் தோல்வி

எதிர்பாரத விதமாக நியூயார்க்கை சேர்ந்த ஹோலாய்ட் கார்பரேஷன் என்ற நிறுவனத்தை நடத்தி வந்த வில்சன் என்பவர் பண உதவி செய்ய முன் வந்தார் சாதாரண தாளினை நகலெடுக்கும் இயந்திரத்தை கண்டுபிடிக்க ஹோலாய்ட் கார்பரேஷன் பல லட்ச கணக்கான டாலர்களை செலவிட்டதால் பணமின்மையால் நகலெடுக்கும் கருவியை முழுமையடையாமலே 1950 இல் வெளிட்டது மீண்டும் செஸ்டர் கார்ல்சனுக்கு தோல்வி
இருப்பினும் லித்தோகிராபிக் அச்சுத்துறைக்கும் இராணுவதில் பெரிய வரைபடங்களை நகலெடுக்க உதவியதால் செஸ்டர் கார்ல்சனின் கருவி இந்த முறை தப்பித்தது

சாதித்த ஜெராக்ஸ் 914

பல வித இடர்பாடுகளுக்கு பின் 1960ஆம் ஆண்டு மார்ச் மாதம் “ ஜெராக்ஸ் 914 “ சந்தைக்கு வந்தது இருப்பினும் பெரிய நிறுவனங்கள் யாரும் ஆதரவு தராததால் ஹோலாய்ட் கார்பரேஷன் வாடிக்கையாளர்களுக்கு நேரிடையாகவே வாடகைக்கு விட்டது கருவியின் விரைவான நகலெடுக்கும் தன்மையும், நகல் எழுத்துகளின் துல்லியமும் வாடிக்கையாளர்களை கவர்ந்து விடவே ஹோலாய்ட் கார்பரேஷனுக்கு ஆர்டர்கள்
குவிந்தன நிறுவனத்தின் பங்கு மதிப்பு எக்கச்சக்கமாக உயர்ந்தது செஸ்டர் கார்ல்சனுக்கு உரிமைத்தொகையாக மட்டும் இரண்டரை கோடிக்கும் அதிகமான டாலர்கள் கிடைத்தது கடைசியில் ஜெராக்ஸ் இயந்திரம் மட்டும் ஜெயிக்க வில்லை அதை கண்டுபிடித்த ஒரு சராசரி மனிதன் வரலாற்றின் பக்கங்களில் விஞ்ஞானியாக பதிவு செய்யப்பட்டான்.

Xerox இந்த என்கிற பெயர்தான்
பின்னாளில் அனைத்து நகலெடுக்குமியந்திரங்களுக்குமான (photo state copying machine)

பொதுப்பெயராகிவிட்டதையும்,
இப்படி தனிப்பட்டவொன்றின் பெயரை
அதுசார்ந்த அனைத்திற்கும் பொதுவான பெயரிட்டழைப்பதை
ஆங்கிலத்தில் "Eponym" என்று சொல்கிறார்கள்.

via ஃபீனிக்ஸ் பாலா.

ரிலாக்ஸ் ப்ளீஸ் ஆங்கிலத்திலும் @[297395707031915:274:Relaxplzz]
உலகமெங்கும் நகலெடுக்க பயன்படும் ஜெராக்ஸ் இயந்திரம் மனித வாழ்வில் பிரிக்க முடியாதவை ஆகிவிட்டது ஆனால் அந்த ஜெராக்ஸ் இயந்திரத்தை கண்டுபிடிக்க செஸ்டர் கார்ல்சன் எனும் தனி மனிதனுக்கு முப்பது வருடங்கள் ஆயிற்று இடைப்பட்ட காலத்தில் செஸ்டர் கார்ல்சன் பட்ட அவமானங்களும் துயரங்களும் சொல்லில் அடங்காதவை வருங்கள் நண்பர்களே நகலெடுக்கும் இயந்திரத்தின் வரலாற்றை புரட்டிப்பார்போம்.

1960 மார்ச் மாதம் “ ஜெராக்ஸ் 914 “ எனும் நகலெடுக்கும் கருவி நடைமுறைக்கு வருவதற்க்கு முன் நகலெடுப்பது என்பது மிகவும் சிக்கலான விஷயமாக இருந்தது அதாவது புகைப்படக்கலையின் நுட்பங்களை பயன்படுத்தி பயிற்ச்சி பெற்ற பணியாளர்கள் பலவிதமான இரசயனங்களில் நனைத்து மணிக்கணக்கில் காயவைத்து ஒன்றுடன் ஒன்று ஒட்டி கவனமாக நகலெடுத்தனர் கொஞ்சம் கவனம் சிதறினால் நகலெடுக்க வேண்டிய முக்கிய தாள்கள் பாதிப்புக்கு உள்ளாகி விடும் .

1906 ஆம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலாத்தில் ஒரு வறுமைகுடும்பத்தில் பிறந்த செஸ்டர் கார்ல்சன் பகுதி நேரம் உழைத்து இயற்பியலில் பட்டம் பெற்றார் தனது குடும்பத்தின் வறுமையை போக்க பல இடங்களில் பணியாற்றினார் “பேடண்ட்” துறையில் பணியாற்றிய போது கார்ல்சனுக்கு தனது அலுவலகத்தில் நகலெடுக்க பட்ட கஷ்டங்களை பார்த்து நகலெடுக்க வேண்டிய தாளை ஒரு கருவி மேலே வைத்தால் ஈரம் படாமல் நகல் வந்து விழுந்தால் எப்படி இருக்குமென்று ஜீ பூம்பா கணக்கில் யோசித்தார் தனது யோசனையை அலுவலக நண்பர்களிடம் சென்னார் ஒட்டுமொத்த அலுவலகமோ கை கொட்டி சிரித்தது தனது யோசனையை நடைமுறைபடுத்தப்போகிறேன் என்று சொன்னதிற்கு பெரிய பெரிய விஞ்ஞானிகள் எல்லாம் முயற்சித்து தோற்றுவிட்டனர் உனக்கென்ன பைத்தியம் பிடித்து விட்டதா என ஏளனம் செய்தனர் .

முயற்சியே மூலதனம்

கையிலோ காசில்லை ஆனாலும் தனது சிந்தனையின் மேல் அபாரநம்பிக்கை கொண்டு இருந்தார் அவருடைய நல்ல காலம் ஒளிமின் நிகழ்வு ( photo electricity) அவருடைய கவணத்தை ஈர்த்தது இருட்டாக இருக்கும் போது மின்சாரம் பாயமல் தடுக்கும் இயல்பு கொண்ட சில பொருள்களின் மீது ஒளிக்கதிர்கள் படும் போது அவைகள் மின்சாரத்தை கடத்தும் இது ஒளிமின் நிகழ்வு அது போல முடி, பட்டுத்துணி, எண்ணைதோய்த காகிதம் ஆகியவற்றை அழுத்தி தேய்தால் நிலை மின்சாரம் உண்டாகும் இந்த இரண்டு நிகழ்வுகளையும் இணைத்து நகலெடுக்கும் கருவிக்கு வடிவம் கொடுத்தார் செஸ்டர் கார்ல்சன் . கருவியின் மேற்பரப்பில் தகடு ஒன்றில் ஒளிஉணர் பொருளினால் பூச்சு ஏற்படுத்தி அதில் நிலை மின்சாரத்தை ஏற்படுத்தி அதற்கு மேல் நகலெடுக்க வேண்டிய ஒளி ஊடுருவும் தாளை வைத்து அதன் வழியே ஒளியை பாய்ச்சினார் தாளின் எழுத்துகள் இல்லாத வழியே ஒளி பாய்ந்தது அதற்கு அடியில் உள்ள தகட்டில் ஒளி பட்டதும் நிலைமின்சாரம் அகன்று விட்டது எனவே இந்த அமைப்பை அப்படியே ஒரு தாளில் பதிய வைத்து வெற்றியும் பெற்றார் அக்கருவிக்கு உரிமமும் பெற்றார்

இரண்டாம் உலகப்போரினால் கார்ல்சன் பட்ட கஷ்டம்

தனது கருவியை 1938 இல் சந்தைக்கு அறிமுகம் செய்தார் . பார்பதற்கு காம , சோமா வென்ற கருவி தெளிவில்லாத எழுத்துகள் , ஒளி ஊடுருவும் தாளில் இருந்தால் மட்டுமே நகலெடுக்க முடியும் சாதாரண தாள்களை நகலெக்க முடியாது போன்ற பல காரணங்களால் கருவி தோல்வி அடைந்து விட்டது கருவியில் உரிய மாற்றங்களை செய்ய வேண்டும் அதற்கு பணம் நிறைய வேண்டும் எல்ல நிறுவனங்களும் கார்ல்சனை கிண்டலடித்தார்களே தவிர யாரும் உதவ முன் வரவில்லை இதற்க்கிடையில் இரண்டாம் உலகபோர் தொடங்கி விட்டது தான் பட்ட பாடெல்லாம் வீணாகி விடுமோ என்ற அச்சம் கார்ல்சனுக்கு தோன்றி விட்டது

தோல்வி மேல் தோல்வி

எதிர்பாரத விதமாக நியூயார்க்கை சேர்ந்த ஹோலாய்ட் கார்பரேஷன் என்ற நிறுவனத்தை நடத்தி வந்த வில்சன் என்பவர் பண உதவி செய்ய முன் வந்தார் சாதாரண தாளினை நகலெடுக்கும் இயந்திரத்தை கண்டுபிடிக்க ஹோலாய்ட் கார்பரேஷன் பல லட்ச கணக்கான டாலர்களை செலவிட்டதால் பணமின்மையால் நகலெடுக்கும் கருவியை முழுமையடையாமலே 1950 இல் வெளிட்டது மீண்டும் செஸ்டர் கார்ல்சனுக்கு தோல்வி இருப்பினும் லித்தோகிராபிக் அச்சுத்துறைக்கும் இராணுவதில் பெரிய வரைபடங்களை நகலெடுக்க உதவியதால் செஸ்டர் கார்ல்சனின் கருவி இந்த முறை தப்பித்தது

சாதித்த ஜெராக்ஸ் 914

பல வித இடர்பாடுகளுக்கு பின் 1960ஆம் ஆண்டு மார்ச் மாதம் “ ஜெராக்ஸ் 914 “ சந்தைக்கு வந்தது இருப்பினும் பெரிய நிறுவனங்கள் யாரும் ஆதரவு தராததால் ஹோலாய்ட் கார்பரேஷன் வாடிக்கையாளர்களுக்கு நேரிடையாகவே வாடகைக்கு விட்டது கருவியின் விரைவான நகலெடுக்கும் தன்மையும், நகல் எழுத்துகளின் துல்லியமும் வாடிக்கையாளர்களை கவர்ந்து விடவே ஹோலாய்ட் கார்பரேஷனுக்கு ஆர்டர்கள் குவிந்தன நிறுவனத்தின் பங்கு மதிப்பு எக்கச்சக்கமாக உயர்ந்தது செஸ்டர் கார்ல்சனுக்கு உரிமைத்தொகையாக மட்டும் இரண்டரை கோடிக்கும் அதிகமான டாலர்கள் கிடைத்தது கடைசியில் ஜெராக்ஸ் இயந்திரம் மட்டும் ஜெயிக்க வில்லை அதை கண்டுபிடித்த ஒரு சராசரி மனிதன் வரலாற்றின் பக்கங்களில் விஞ்ஞானியாக பதிவு செய்யப்பட்டான்

புதினாக்கீரையின் ம‌க‌(த்துவ‌ம்..!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:14 PM | Best Blogger Tips
புதினாக்கீரையின் ம‌க‌(த்துவ‌ம்..!

சிறு குழந்தைகளின் வயிற்றுப் போக்கு, வாந்தி குணமாக:
சிறு குழந்தைகளுக்கு ஆகார விகற்பத்தின் காரணமாக வயிற்றுப் போக்கு வாந்தி ஏற்படுவதுண்டு. இதற்குப் பல வகையான மருந்துகள் உண்டு என்றாலும் புதினாக்கீரைக் கஷாயம் கைகண்ட மருந்தாக இருக்கிறது. புதினாக்கீரை இலைகளை மட்டும் ஆய்ந்து எடுத்து ஒரு கைப்பிடியளவு அம்மியில் வைத்து லேசாக நைத்து, அதை ஒரு சட்டியில் போட்டு அடுப்பில் வைத்து, நன்றாக வதக்கி அதில் ஆழாக்களவு தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். அரை ஆழாக்களவாகச் சுண்டியபின் சட்டியை இறக்கி வடிகட்டி, அதில் வேளைக்குச் சங்களவு வீதம் காலை மாலையாக மூன்று வேளை கொடுத்தால் போதும், வயிற்றுப் போக்கு, வாந்தி நின்று விடும்.

கர்ப்பஸ்திரீகளுக்கு ஏற்படும் வாந்தியை நிறுத்த:

கருத்தரித்த இரண்டாவது மாதம் முதல் கருத்தரித்திருப்பதை மெய்ப்பிக்க, காலை வேளையில் வாந்தி உண்டாகும். சில சமயம் ஆகாரம் உண்டவுடன் வாந்தி வரும். தலைச் சுற்றல், சோம்பல், அரோசிகம் ஏற்படும். இதை மசக்கை வாந்தி என்று கூறுவார்கள். தினசரி இப்படி இருக்கும். 2, 3 வாரங்களுக்குப் பின் இது தானே மாறிவிடும். சில பெண்களுக்கு பிரசவிக்கும் வரை வாந்தி சாயந்திர வேளைகளில் ஏற்படும். இந்த மாதிரி வாந்தியை நிறுத்த புதினா நன்கு பயன்படுகிறது.

புதினாக்கீரையைக் கொண்டு வந்து ஆய்ந்து எடுத்து, உரலில் போட்டு இடித்து அதை எடுத்துச் சாறு பிழிய வேண்டும். பிழிந்த சாறு இரண்டு ஆழாக்களவு எடுத்து அதைத் துணியில் வடிகட்டி ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு, களிம்பு ஏறாத ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து அதில் இந்தச் சாற்றைவிட்டு அதில், ஒரு சீசா அளவு அதாவது சின்னபடிக்கு ஒரு படியளவு சீமைக் காடியை விட்டு நன்றாகக் கலந்து ஒரு மணி நேரம் வைத்திருந்து, பிறகு அத்துடன் அரை கிலோ பழுப்புச் சர்க்கரைச் சேர்த்து நன்றாகக் கரைத்து, இந்தச் சாற்றை வேறு ஒரு பாத்திரத்தின் மேல் துணி வேடு கட்டி அதன் மூலம் வடிகட்டி எடுத்து, முதல் பாத்திரத்தைக் கழுவி அதில் இதைவிட்டு, அடுப்பில் வைத்து, நன்றாகக் காய்ச்ச வேண்டும். இந்த சமயம் மருந்து சர்பத் போல பாகுபதமாகும். நன்றாக ஆறியபின் அதை ஒரு சுத்தமான சீசாவில் விட்டு பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். வாந்தி வரும் சமயம் இந்தப் பாகில் அரைத் தேக்கரண்டியளவு எடுத்து உள்ளங்கையில் விட்டு, நாவால் நக்கி அதை வாயில் வைத்துச் சுவைத்து விழுங்க வேண்டும். இந்த விதமாக ஒரு நாளைக்கு எத்தனை தரம் வேண்டுமானாலும் சுவைக்கலாம். எந்த விதமான கெடுதலும் ஏற்படாது.

ரொட்டி, ஆப்பம், தோசை, இட்டிலி இவைகளை இந்தப் பாகில் தொட்டுத் தின்னலாம். ருசியாக இருக்கும். காலை வேளையில் இவ்விதம் சாப்பிடுவது நல்லது.

புதினாக்கீரையை இரண்டு அவுன்ஸ் எடுத்து, ஆறு அவுன்ஸ் நீரில் போட்டு, மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு நீரை தெளிய வைத்து குடித்து வரவும். இக்குடிநீரை அருந்துவதால் வாந்தி, வாயுவு கோளாறுகள், வயிற்றுப் போக்கு, பொருமல் போன்ற நோய்கள் குணமாகும்.

புதினாக்கீரையைத் துவையலாகவோ அல்லது அவித்து பிற உணவுகளுடன் சேர்ந்து சாப்பிட்டு வந்தால் பெண்களின் மாதவிலக்கு கோளாறுகள் சீர்படும். புதினாக்கீரையை கஷாயமாகவோ அல்லது சூப்பாகவோ தயாரித்து அருந்திவரின் இருதய சம்பந்தமான நோய்கள் நிவாரணம் பெறும். தொண்டைப்புண், மூச்சுத்திணறல் போன்ற கோளாறுகளுக்கு புதினாக்கீரையை நன்கு அரைத்து கழுத்தில் வலியுள்ள பகுதியில் பற்றுப் போட்டு வர குணம் தெரியும்.

புதினாக்கீரையைக் கொண்டு ஒரு அருமையான பற்பொடி கூட தயார் செய்யலாம். இந்த புதினா பற்பொடியைக் கொண்டு தினசரி பல் துலக்கி வந்தால் பல் சம்பந்தமான எல்லா வியாதிகளும் குணமாகும். கஷ்டத்தைப் பாராமல் ஒவ்வொருவரும் புதினா பற்பொடி தயாரித்து பல்துலக்கி வந்தால், பற்கள் முத்தைப் போல வெண்மையாகவும், பிரகாசமாகவும் தோன்றும். பல் சம்பந்தமாக எந்த வியாதியும் வராது. இதைத் தயாரிப்பதும் சுலபம் தான்.

புதினாக்கீரையை எடுத்து, சுத்தம் பார்த்து, அதை ஒரு பெரிய தட்டு அல்லது முறத்தில் போட்டு வெய்யிலில் நன்றாகக் காயவைக்க வேண்டும். புதினா காய்ந்து சருகான பின் உரலில் போட்டு இடிக்கவேடும். இந்த சமயம் இலை இருக்கும் அளவில் எட்டில் ஒரு பங்கு கறி உப்பையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இடித்துச் சல்லடையில் சலித்து, கண்ணாடி அல்லது மங்கு ஜாடியில் போட்டு வைத்துக் கொண்டு உபயோகப்படுத்த வேண்டும். தகர டப்பா கூடாது.

அடிக்கடி புதினாக்கீரையைச் சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள இரத்தம் சுத்தமாகும். புதிய இரத்தம் உற்பத்தியாகும்.

எக்காரணத்தினாலாவது வயிற்றுப் போக்கு ஏற்பட்டிருந்தால், அந்தச் சமயம் புதினாக்கீரைத் துகையலைச் சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு நின்றுவிடும்.

- செங்கை நில‌வ‌ன்

உடலின் உறுப்புகள் தானம் பற்றிய தகவல்...!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:06 PM | Best Blogger Tips
உடலின் உறுப்புகள் தானம் பற்றிய தகவல்...!

குருதி கொடை மட்டுமே கேள்விபட்ட நாம் சமீபமாக உடல் தானம், உடலின் உறுப்புகள் தானம் பற்றி பேசி வருகிறோம், கேட்க பெறுகிறோம் இதை பற்றி நிறைய பேருக்கு சரியான விவரம் தெரியாததால் தெரிந்து கொள்ளுங்கள். இது போக உங்களுக்கோ அல்லது உங்களை சார்ந்த அல்லது தெரிந்தவர்களுக்கோ இதயம், சிறுநீரகம், கண்கள், லிவர், லங்க்ஸ்,எலும்பு, இதயவால்வுகள், தோல் போன்ற பல குறைபாடுகள் இருந்தால் இந்த லின்க்கில் உள்ள அரசு அப்ருவ் செய்த மருத்துவமனைகளில் நீங்கள் பதிவு செய்தால் உங்களுக்கு இந்த உறுப்புகள் புக்கிங் அடிப்படையில் இலவசமாக கிடைக்க பெறூம். இதற்க்கு புரோக்கர்கள் தேவை இல்லை.

அது மட்டுமல்ல உங்கள் அல்லது உங்களது மைனர் மற்றும் தெரிந்தவர்களின் உடம்பை மருத்துவ ஆய்வுக்கு கூட நீங்கள் கொடுத்து உதவலாம்.

இந்தியாவிலே தமிழ் நாட்டில் தான் அதிக உடல் மற்றும் உறுப்பு தானம் செய்யும் நெ 1 திகழ்கிறது. தானம் செய்யும் அட்டை படிவம் மற்றூம் மற்ற எல்லா அப்ளிகேஷனும் இனைத்துள்ளேன் பலன் பெருங்கள். ஒன்றும் பெறாத பேப்பர் கூட ரீசைக்கிள் ஆகி இன்னொரு வாழ்வை கொடுக்கும்போது நம் கூட நம்மின் உடலையோ அல்லது உடல் பாகங்கலையோ இல்லாதவர்களுக்கு வழங்கலாம்.

Hyper Links

To Donate your body after death & Government Order - http://www.dmrhs.org/tnos/orders-of-tn-govt/donation-of-body-after-death-procedure-for-donation


FAQ about Each and Every Organ Donation and how it is used - http://www.dmrhs.org/tnos/faq-for-public


Organ Waiting List Details - http://tnos.org/


Approved Hospitals for Organ Donors & Organ Transplants by Govt - http://www.dmrhs.org/tnos/notifications/list-of-approved-hospitals-for-kidney-transplantation-as-on-13-02-2012
(Please follow the same link for all organs)

Please fill your form and send it by email OR post :

Cadaver Transplant Program,
165 A, Tower Block I, 6th Floor, [Next to Bone Bank],
Government General Hospital
Chennai – 600 003

E-Mail : organstransplant@gmail.com

Phone : (91)44 25305638

Fax : (91)44 25363141
Like here first -->> @[433124750055265:274:இன்று ஒரு தகவல். Today A Message.]
உடலின் உறுப்புகள் தானம் பற்றிய தகவல்...!

குருதி கொடை மட்டுமே கேள்விபட்ட நாம் சமீபமாக உடல் தானம், உடலின் உறுப்புகள் தானம் பற்றி பேசி வருகிறோம், கேட்க பெறுகிறோம் இதை பற்றி நிறைய பேருக்கு சரியான விவரம் தெரியாததால் தெரிந்து கொள்ளுங்கள். இது போக உங்களுக்கோ அல்லது உங்களை சார்ந்த அல்லது தெரிந்தவர்களுக்கோ இதயம், சிறுநீரகம், கண்கள், லிவர், லங்க்ஸ்,எலும்பு, இதயவால்வுகள், தோல் போன்ற பல குறைபாடுகள் இருந்தால் இந்த லின்க்கில் உள்ள அரசு அப்ருவ் செய்த மருத்துவமனைகளில் நீங்கள் பதிவு செய்தால் உங்களுக்கு இந்த உறுப்புகள் புக்கிங் அடிப்படையில் இலவசமாக கிடைக்க பெறூம். இதற்க்கு புரோக்கர்கள் தேவை இல்லை.

அது மட்டுமல்ல உங்கள் அல்லது உங்களது மைனர் மற்றும் தெரிந்தவர்களின் உடம்பை மருத்துவ ஆய்வுக்கு கூட நீங்கள் கொடுத்து உதவலாம். 

இந்தியாவிலே தமிழ் நாட்டில் தான் அதிக உடல் மற்றும் உறுப்பு தானம் செய்யும் நெ 1 திகழ்கிறது. தானம் செய்யும் அட்டை படிவம் மற்றூம் மற்ற எல்லா அப்ளிகேஷனும் இனைத்துள்ளேன் பலன் பெருங்கள். ஒன்றும் பெறாத பேப்பர் கூட ரீசைக்கிள் ஆகி இன்னொரு வாழ்வை கொடுக்கும்போது நம் கூட நம்மின் உடலையோ அல்லது உடல் பாகங்கலையோ இல்லாதவர்களுக்கு வழங்கலாம்.

Hyper Links

To Donate your body after death & Government Order - http://www.dmrhs.org/tnos/orders-of-tn-govt/donation-of-body-after-death-procedure-for-donation

FAQ about Each and Every Organ Donation and how it is used - http://www.dmrhs.org/tnos/faq-for-public

Organ Waiting List Details - http://tnos.org/

Approved Hospitals for Organ Donors & Organ Transplants by Govt - http://www.dmrhs.org/tnos/notifications/list-of-approved-hospitals-for-kidney-transplantation-as-on-13-02-2012 (Please follow the same link for all organs)

Please fill your form and send it by email OR post :

Cadaver Transplant Program,
165 A, Tower Block I, 6th Floor, [Next to Bone Bank],
Government General Hospital
Chennai – 600 003

E-Mail : organstransplant@gmail.com

Phone : (91)44 25305638

Fax : (91)44 25363141

குடியரசு தினம் என்பதன் விளக்கம் -

மணக்கால் அய்யம்பேட்டை | 1:52 PM | Best Blogger Tips
netaji subhash chandra bose க்கான பட முடிவு
குடியரசு தினம் என்பதன் விளக்கம் -

ஒவ்வொரு வருடமும், சனவரி திங்கள் 26 நாள் அன்று, இனிப்பு வழங்கி விடுமுறை அளிக்கப்படும். இவை மட்டுமே, என் அகவை 20 வரை... என் மனதில் நான் வைத்திருந்த குடியரசு தினத்தை பற்றிய பிம்பங்கள். ஒரு நாள், நூலகத்தில் சட்ட மாமேதை முனைவர் அம்பேத்கார் பற்றிய புத்தகத்தை படிக்க நேர்ந்தது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்ற அவர் எடுத்த முயற்சிகள் மற்றும் சட்டம் பற்றிய விழிப்புணர்வுக் கூட்டங்கள் பற்பல அறிய நேர்ந்தது.
netaji subhash chandra bose க்கான பட முடிவு

1947 ஆண்டு, ஆகஸ்ட் திங்கள் 15 ம் நாள், ஆங்கிலேயர்கள் வெளியேறி.. நமக்கு சுதந்திரம் கிடைத்தது. ஆனால், பல இனம், சாதிகள் மற்றும் மொழிகளால் வேறுபட்ட மக்கள் இருக்கும் இந்திய தேசம், மாநில மற்றும் மாவட்ட எல்லைகள் சரியாகப் பிரிக்கப்படாமலும் மற்றும் பெயரிடப்படாமலும் இருந்தது. இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல், இந்திய பிராந்தியங்களை மற்றும் அதன் எல்லைகளை ஒழுங்கு படுத்தும் முயற்சி மேற்கொண்டார். அதன் படி, இரண்டரை ஆண்டுகள் அயராது உழைத்து, 1950 இந்திய தேசத்தைப் பல மாநிலங்களாக பிரித்து பெயரிட்டார். இவ்வாறாக, இந்திய ராணுவம், தரைப்படை, கப்பல் படை மற்றும் விமான படை ஆகியவை உருவாக்கப்பட்டது. அவைகள், வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் காவலுக்கு அமர்த்தப்பட்டன. பண்டைய இந்தியா, முறையே பாகிஸ்தான், வங்காளதேசம், அந்தமான் நிகோபார், லட்சத்தீவுகள் மற்றும் தற்போதைய இந்தியா என பிரிக்கப்பட்டது.
modi republic க்கான பட முடிவு
மக்களாட்சி செவ்வனே நடக்க... சட்டங்கள் அவசியமாக இருந்தது. அதனை இயற்றும் பொறுப்பை, சட்ட மாமேதை முனைவர் அம்பேத்கார் ஏற்றார். அவர் இரண்டு வருடம் கடினமாக உழைத்து, இந்திய ஆட்சிமைக்கான ஆவணமாக இந்திய அரசு சட்டம் 1935 இன் மாற்றாக புதிய இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1950 ஆண்டு கொண்டு வந்தார். இவர் இயற்றிய சட்டம், மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்தியாவின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க இவர் இயற்றிய சட்டங்கள் உதவியது.

modi republic க்கான பட முடிவு
முடிவில், இந்திய தேசியக் கொடி, தேசியச் சின்னம், தேசிய மொழி, தேசியப் பறவை, தேசியப் பண் மற்றும் தேசிய மலர் ஆகியவை அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்திய நாட்டின் முதல் குடிமகன் (சனாதிபதி) மற்றும் இந்திய பிரதமர் மக்களின் ஆதரவுடன் நியமிக்கப்பட்டார்கள். ஒவ்வொரு மாநிலத்திற்கென, ஆளுனர் மற்றும் சட்டபேரவை தலைவர், முதலமைச்சர் உருவாக்கப்பட்டார்கள்.
modi republic க்கான பட முடிவு
இவ்வாறு இந்தியா, "உலக அரங்கில் தனக்கென ஒரு அடையாளத்தை அடைந்த நாளை நாம் ஒவ்வொரு வருடமும் குடியரசு தினமாக" கொண்டாடுகிறோம்.


  Thanks for
1. மணிகண்டன் பாரதிதாசன்
2. தமிழ் கவிதை [Tamil Kavithai] ( FACEBOOK)


அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா

மணக்கால் அய்யம்பேட்டை | 12:45 PM | Best Blogger Tips

அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா?
நம் உடலின் ஆரோக்கியத்தைக் காக்க நம் உடலே உற்பத்தி செய்யும் பல்வேறு பொருட்களில் ஒன்று தான் இந்த கொலெஸ்ட்ரோல் (Cholestrol).

*
இது வெண்மை நிறத்திலான கொழுப்பு வகையைச் சேர்ந்த ஒரு பொருளாகும். இது உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்கு மிகவும் அவசிமாகும். இன்னும் பல்வேறு முக்கியமான ஹார்மோன்கள் , பித்த நீர், வைட்டமின் D மற்றும் உடலின் பல்வேறு முக்கிய புரதச் சத்துகள் , திரவங்களின் தயாரிப்பிற்கு மிகவும் தேவையானது.


கொலஸ்ட்ரால் எங்கிருந்து கிடைக்கிறது?

கொலெஸ்ட்ரோல் பொதுவாக இரண்டு விதங்களில் உடலில் சேர்கிறது.

1. நமது உடல் கொலெஸ்ட்ரோலைத் தன்னிலிருந்தே உற்பத்தி செய்து கொள்கிறது. நம் கல்லீரல் நாளொன்றுக்குச் சுமார் 1000 மில்லிகிராம்கள் வரை கொலெஸ்ட்ரோலை உற்பத்தி செய்கிறது.கல்லீரலும் மற்ற செல்களும் சேர்ந்து இரத்தத்தின் மொத்த கொலஸ்ட்ரால் அளவில் 75% உற்பத்தி செய்கின்றன.

2. 25% கொலஸ்ட்ரால் நாம் உட்கொள்ளும் உணவு வகைகளான முட்டைக் கரு, மாமிசம், கோழியிறைச்சி, பால் மற்றும் பால் தயாரிப்புகளிருந்து கிடைக்கிறது.

கொலெஸ்ட்ரால் வகைகள்:

நம் இரத்தத்தில் 'கொலெஸ்ட்ரால்' மற்றும் 'டிரைகிளிஸெரைட்ஸ்' (Triglycerides) ஆகிய இரண்டு வித கொழுப்புகள் உள்ளன.

டிரைகிளிஸெரைட்ஸ் என்பது கல்லீரலால் தயாரிக்கப்படும் ஒருவிதக் கொழுப்பே! இது நம்முடைய அன்றாடச் செயல்பாட்டிற்குத் தேவையான சக்தியை உடலுக்கு வழங்குகின்றது. கொலெஸ்ட்ரோலைப் போலவே இரத்தத்தில் டிரைகிளிசெரைடுகள் அதிக அளவில் இருந்தாலும் இருதய நோய்களின் அபாயத்தை அதிகப் படுத்திவிடும்.

கொலெஸ்ட்ரோல் புரதங்களுடன் இணைந்து ஒரு லிப்பொ ப்ரொடீன் ஆகி, அதன் மூலம் உடல் முழுவதும் பயணிக்கிறது. லிபோபுரோட்டீன்கள் என்பவை இரண்டு வகைகளாகும்.

அவை:

1. குறைந்த அடர்த்தியுள்ள (Low density) லிப்போ புரோட்டின் (LDL)

2. அதிக அடர்த்தியுள்ள (High density) லிப்போ புரோட்டின் (HDL)

***
அடர்த்திக் குறைவான லிப்போ புரோட்டீன் (LDL):

இது 'தீய கொலெஸ்ட்ரோல்' என்று குறிப்பிடப்படுகிறது. ஏனெனில், இந்த (LDL) அதிக அளவில் இரத்த ஓட்டத்தில் கலந்து செல்லும்போது, இருதயத்திற்கும் மூளைக்கும் செலுத்தப்படும் இரத்தக் குழாய்களின் சுவரில் கொஞ்சம் கொஞ்சமாக ஒட்டிக் கொள்கிறது.காலப் போக்கில் இரத்தக்குழாய்களை குறுகச் செய்கிறது

அடர்த்திமிகு லிபோபுரோட்டீன் (HDL):

இது 'நல்ல கொலெஸ்ட்ரோல்' என்று குறிப்பிடப்படுகிறது. ஏனெனில் இது இரத்தத்திலிருந்து அதிக அளவிலான கொலெஸ்ட்ரோலை தமனியிலிருந்து அகற்றி பின் கல்லீரலுக்குக் கொண்டு செல்கிறது. இரத்தத்திலிருந்து அதிக அளவிலான கொலெஸ்டொரோலை இவ்வாறு அகற்றுவதவன் மூலம் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்களின் தாக்குதலிலிருந்து இது நம்மைப் பாதுகாக்கிறது.

மிகை கொலெஸ்ட்ரோல் எவ்வாறு பாதிக்கிறது?

தேவைக்கு அதிகமாக உருவாகும் கொலெஸ்ட்ரோல் தமனிக் குழாய்களின் உள் சுவரில் ஒட்டிக் கொள்ளும. நாளடைவில் சிறிது சிறிதாகச் சேர்ந்து இருதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் தமனிக் குழாய்களின் உள் சுற்றளவைக் குறுக்கி விடுகின்றது. இதனால் குறைவான இரத்தத்தை இருதயம் பெறுகிறது.

அதனால் இரத்ததில் கலந்துள்ள 'ஆக்ஸிஜன்' (Oxygen) எனும் பிராண வாயு தேவையான அளவு இதயத்துக்குக் கிடைக்காது.இதன் காரணம் இதயத்தின் செயல் பாடு பாதித்து Angina எனும் நெஞ்சு வலி ஏற்படலாம். தொடர்ந்து இருதயத்தின் பகுதிகளுக்கு இரத்தம் செலுத்தப்படுவது தடை பட்டால் heart attack எனும் மாரடைப்பு ஏற்படுகிறது.

சில நேரங்களில் இந்தக் கொழுப்புச் சில்லுகள் இடம் பெயர்ந்து கட்டிகளாக இரத்தக் குழாய் தமனிகளில் இரத்த ஓட்டத்தில் தடையை ஏற்படுத்திவிடுவதும் உண்டு.அல்லது இந்த கொழுப்புக் கட்டிகள் உடைந்து அதனால் இரத்தம் உறைந்து இரத்தக்குழாய்களில் தடையுண்டாக்கும். அதன் விளைவாக நெஞ்சுவலி அல்லது மாரடைப்பு ஏற்படுகிறது.

அளவைவிட அதிகமான கொலெஸ்ட்ரோலின் விளைவாக சீறுநீரகச் செயலிழப்பு (Kidney failure) உட்பட டெமென்ஷியா (மறதி நோய்),பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.

அதிக கொலஸ்டராலுக்குக் காரணம் என்ன?

•அதிக அளவிலான கொழுப்புகள் கலந்த உணவுப் பழக்கம்

•அதிக மாமிச உணவு உண்பது

•அதீத உடற்பருமன் (Obesity)

•உடல் இயக்கக் குறைவான பணிகள்.

•உடற் பயிற்சியின்மை

•அதிக தூக்கம்

•புகைப் பழக்கம்

•மன அழுத்தம்

•மதுப் பழக்கம்

•சக்கரைநோய், சிறுநீரகம் மற்றும் தைராய்டு சுரப்பி நோய்கள்.

•கருத்தடை மாத்திரைகள்.

•வயோதிகம்

•பரம்பரை -உங்கள் பெற்றோர்களுக்கு மிகை கொலெஸ்ட்ரால் இருக்குமானால் அதற்கு காரணமான ஜீன்களை நீங்களும் பெற்றிருக்கக் கூடும்.

இரத்தத்தில் அதிக அளவில் கொலெஸ்ட்ரோல் இருப்பதன் அறிகுறிகள் என்ன?

பொதுவாக எந்த ஓர் அறிகுறியையும் அது ஏற்படுத்துவதில்லை; ஆகையால்தான் அது "அமைதியான உயிர்க்கொல்லி" என்று அறியப்படுகிறது.

உடல் பருமன் இல்லாதவர்களுக்கு இரத்தத்தில் கொலெஸ்ட்ரால் அதிகம் இருக்காது என்று சொல்ல முடியாது. யாருக்கும் வரலாம். இரத்த சோதனை செய்து பார்த்தால் தான் தெரிய வரும்.20 வயதுக்கு மேல் ஒவ்வொரு 5 வருட இடைவெளியிலும் இரத்தத்தை சோதனை செய்வது நல்லது.

இரத்தத்தில் உள்ள கொலெஸ்ட்ரோலை எப்படி தீர்மானிப்பது?

இரத்தத்தில் உள்ள கொலெஸ்ட்ரோல் அளவு என்பது, 12 மணி நேரம் ஏதும் உட்கொள்ளாத நிலையில் காலையில் எடுக்கப்பட்ட மாதிரி (sample) இரத்தத்திலிருந்து கணக்கிடப்படுகிறது.

அதிலும் 'லிபோபுரோட்டீன் ப்ரொஃபைல்' (lipoprotein profile) எனும் இரத்தப் பரிசோதனை செய்வது மிகவும் சிறந்தது.

இதன் வாயிலாக

•இரத்தத்திலுள்ள மொத்த கொலெஸ்ட்ரோல்
•LDL (தீய) கொலெஸ்ட்ரோல்
•HDL (நல்ல) கொலெஸ்ட்ரோல்
•டிரைக்ளைஸெரைட்ஸ்
ஆகியவற்றின் விபரங்களை அறியலாம்.

இரண்டு விதமான அளவுகோல்கள் மூலம் கொலெஸ்ட்ரோல் அளவு கணக்கிடப்படுகின்றது.

1.எடையின் அடிப்படையில். அதாவது ஒரு டெசி லிட்டரில் உள்ள மில்லி கிராம் (mg/dl) எண்ணிக்கையளவு முறை.

2.மூலக்கூறு எண்ணிக்கையளவு (molecular count) அதாவது ஒரு லிட்டரில் உள்ள மில்லிமோல்கள் (mmol/L) முறை.
உங்களது கொலெஸ்ட்ரோல் பரிசோதனையில் இந்த இரு விதங்களில் எவ்விதத்தில் உங்கள் கொலெஸ்ட்ரோல் அளவு கணக்கிடப்பட்டது என்பதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

1) மொத்த கொலெஸ்ட்ரோல்:

200 mg/dl க்கும் குறைவாக (5.2 mmol/L க்கும் குறைவாக) -- இயல்பான அளவு

200–239 mg/dL ------------------------------ --- எச்சரிக்கைக் கோடு
239 mg/dL க்கு மேல் ------------------------ ----அதிகம்

2) LDL (தீய)கொலெஸ்ட்ரோல்:

130 mg/dl க்கும் குறைவாக (3.37 mmol/L க்கும் குறைவாக) -- இயல்பான அளவு

130–159 mg/dL ------------------------------------------ --- எச்சரிக்கைக் கோடு
160–189 mg/dL ------------------------------------------- --- அதிகம்.
189 mg/dL க்கு மேல் ------------------------------------------ - -- மிக அதிகம்

3) HDL (நல்ல) கொலெஸ்ட்ரோல்:

40 mg/dl க்கும் குறைவாக (1.0 mmol/L க்கும் குறைவாக) --இதய நோய் வர சாத்தியம் இருக்கிறது

40 mg/dl முதல் 60 mg/dl (1.0 mmol/Lமுதல்1.54 mmol/L) -- அதிகம் (நல்லது)
60 mg/dL(1.54 mmol/L) க்கு மேல் --- இதய நோயிலிருந்து பாதுகாப்பு

4) டிரிக்ளைஸெரைட்ஸின் இயல்பான அளவு :

150 mg/dl க்கும் குறைவாக (1.69 mmol/L க்கும் குறைவாக)

நம் உணவில் உள்ள கொழுப்புச் சத்து வகைகள் (Fats) :

திடக் கொழுப்புகள் (saturated):

முக்கியமாக, மாமிச உணவு வகையில் இருந்து திடக் கொழுப்பு வகைகள் கிடைக்கின்றன. Hydrogenated எண்ணெய்களில் இந்த வகை திடக் கொழுப்புகள்தாம் 'தீய' (LDL) கொலெஸ்ட்ரொலை இரத்தத்தில் அதிகப் படுத்துவது.

திடக் கொழுப்புகளை உள்ளடக்கிய உணவு வகைகள் :

பால், வெண்ணெய், இறைச்சி, பாமாயில், தாவர நெய்.

திரவக் கொழுப்புகள் (1) (polyunsaturated):

எண்ணெய், விதை மற்றும் தானிய உணவுப் பொருட்களிலிருந்து திரவக் கொழுப்புகள் உருவாகின்றன. திரவக் கொழுப்புகள் LDL எனும் தீய கொலெஸ்ட்ரோலை இரத்தத்திலிருந்து குறைத்து, இருதயத்திற்கு நலம் விளைவிக்கக் கூடியவை. ஆயினும், திரவக் கொழுப்புகள் நம் இரத்தத்தில் கூடிவிட்டாலும் அவை HDL எனும் நல்ல கொலெஸ்ட்ரோலைக் குறைத்து விடக்கூடும். ஆகையால் கீழ்க்காணும் திரவக் கொழுப்பு வகைகளை அதிகமாகவுமில்லாமல் குறைவாகவுமில்லாமல் நடுநிலை அளவிலேயே உட்கொள்ள வேண்டும்.

திரவக் கொழுப்புகளை உள்ளடக்கிய எண்ணெய் உணவு வகைகள் :

தேங்காய் எண்ணெய்,சோள எண்ணெய் (Corn oil), சூரியகாந்திப்பூ எண்ணெய் (Sunflower oil), ஸாஃப்பூ (Safflower) எண்ணெய், ஸோயாபீன் எண்ணெய் (Soya been oil).


திரவக் கொழுப்புகள் (2) MonoUnsaturated:

மோனோஅன்ஸேச்சுரேடெட் எனும் திரவக் கொழுப்புகள் தானிய வகைகளில் அதிகம் கிடைக்கின்றன. பாலி அன்ஸேச்சுரேடெட் கொழுப்பு வகைகள் பேன்றே மொனோஅன்ஸேச்சுரேடெட் கொழுப்புகளும் இருதயத்திற்கு நலம் விளைவிக்கக் கூடியவையாகும்.
*
ஏனெனில் அவை நம் இரத்தத்திலுள்ள LDL எனும் தீய கொலெஸ்ட்ரோலை குறைத்து HDL எனும் நல்ல கொலெஸ்ட்ரோலை அதிகரிக்கச் செய்கின்றன. ஆயினும் இவற்றையும் ஒரு குறிப்பிட்ட அளவில்தான் உட்கொள்ளவேண்டும்.

திரவக் கொழுப்புகளை உள்ளடக்கிய எண்ணெய்/தானிய உணவு வகைகள் :
ஓலிவம் எனும் ஜைத்தூன் எண்ணெய், கனோலா canola எண்ணெய், பாதாம், முந்திரி, வேர்கடலை, பிஸ்தா பருப்பு போன்றவை.


அமிலக் கொழுப்பு:

ஒமேகா-3 (Omega 3 acids) எனும் கொழுப்பு அமிலங்கள் இன்னொரு வகை பாலி அன்ஸேச்சுரேடெட் கொழுப்புவகை ஆகும். இவை முக்கியமாக மீன் எண்ணெயில் கிடைக்கின்றன. இவையும் இருதய நோய்கள் உருவாவதைக் குறைப்பவையாகும்.

அமிலக் கொழுப்பு மீன் வகைகள் :

TUNA (ஐலா/கும்பலா) KING FISH (வஞ்சிரம்/ஐகுரா), SALMON கெண்டை, SARDINES சூடை/மத்தி போன்ற மீன்கள்.

நீரகக் கொழுப்பு (Hydrogenated):

பாலி அன்ஸேச்சுரேடெட் அல்லது மொனொ அன்ஸேச்சுரேடெட் கொழுப்புகளுடன் கலந்து நீரகக் கொழுப்பு தயாரிக்கப்படுகிறது. இதன் மூலம் நீரகக் கொழுப்பு, திடநிலைக்கு மாற்றம் பெறுகிறது. இந்த முறை மூலம் அன்ஸேச்சுரேடெட் கொழுப்புகளை ஸேச்சுரேடெட் கொழுப்புகளாக அது மாற்றுகிறது. அவசர (fast food) உணவுகளில் நீரகக் கொழுப்பு உபயோகிக்கப் படுகின்றது.

தாவர எண்ணெயால் கொலெஸ்ட்ரால் கூடுமா?

பழங்கள் காய்கறிகள், தானியங்கள் பருப்புகள் மற்றும் விதைகள் போன்ற தாவர உணவுகளில் கொலெஸ்ட்ரோல் இல்லை.
கொலஸ்டிரால் என்பது வேறு; கொழுப்புச் சத்து என்பது வேறு. "கொலஸ்டிரால் இல்லாத எண்ணெய்' போன்ற விளம்பரங்களைப் பார்த்து மயங்கி, குறிப்பிட்ட எண்ணெயை வாங்கிப் பயன்படுத்தாதீர்கள்.

ஏனெனில் தாவர வகைகளிலிருந்து பெறப்படும் எந்த எண்ணெய்யிலும் கொலஸ்டிராலுக்கு இடமில்லை. பிராணிகளிடமிருந்து கிடைக்கும் பால் மற்றும் பால் சார்ந்த பொருள்களான வெண்ணெய், நெய் போன்றவற்றில் மட்டுமே கொலஸ்டிரால் உண்டு.

எந்த சமையல் எண்ணெய் உடல் நலத்திற்கு சிறந்தது?

1. கனோலா எண்ணெயில் அதிக அளவில் மொனொஸெடுரேடெட் கொழுப்பு உள்ளது.

2. சோள எண்ணெய், சூரியகாந்திப்பூ (Sun flower) எண்ணெய், ஸஃப்போலாப்பூ (Saffola) எண்ணெய் மற்றும் ஸோயாபீன் (Soya bean) எண்ணெய்களில் அதிக அளவில் பாலி அன்ஸேச்சுரேடெட் கொழுப்பு உள்ளது.

3. இயற்கையாகக் கிடைக்கும் தேங்காய் எண்னெயும் இதயத்துக் நல்லது தான்.

'கொலெஸ்ட்ரோல்' அளவைக் கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்?

சரியான உணவைத் தேர்ந்தெடுத்தல்:

ஸேச்சுரேடெட் கொழுப்பு அதிகம் உள்ள உணவைத் தவிர்க்க வேண்டும்.பட்டினி கிடப்பது என்பது இதன் பொருளல்ல.


தவறாத உடற்பயிற்சி:

ஒவ்வொருவரும் போதிய உடல் அசைவு ஏற்படும் வகையிலான பயிற்சிகளில் ஈடுபடுவது நல்லது. அதனால் நல்ல கொலெஸ்ட்ரோல் (HDL) அதிகரிக்கும்; தீய கொலெஸ்ட்ரோல் (LDL) குறையும்; அளவுக்கு அதிகமான உடலின் எடையைக் குறைக்கவும் உதவும்.

எந்த உடற்பயிற்சியையும் தொடங்கும் முன் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.


புகைப் பழக்கத்தைக் கைவிடுதல்:

புகைப் பழக்கம் இருதய நோய்கள் மற்றும் இதர கேடுகளின் அபாயத்தை இரட்டிக்கச் செய்கிறது. இது நல்ல கொலெஸ்ட்ரொலை (HDL) குறைக்கிறது. தீய கொலெஸ்ட்ரொலை (LDL) அதிகரிக்கிறது.

மன அழுத்தத்தைக் (stress) கட்டுப்படுத்துதல்:

மன அழுத்தம் என்பது காலப்போக்கில் கொலெஸ்ட்ரோல் அளவினைக் கூட்டுவதாகக் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. மன அழுத்தம் என்பது நம் அன்றாட வாழ்க்கையில் தாக்கத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தி விடுகிறது. உதாரணமாக, சிலர் மன அழுத்தத்தில் இருக்கும்போது தங்கள் மனதை நிலைப்படுத்திட கொழுப்புகள் கலந்துள்ள நொறுக்குத்தீனி கொறிக்கும் பழக்கத்திற்கு ஆளாகி விடுகின்றனர். அவற்றில் உள்ள அதிக அளவிலான திடமான (saturated fats) கொழுப்புகள் கொலெஸ்ட்ரோல் அளவை அதிகரிக்கச் செய்துவிடுகிறது.

மருத்துவம்

ஓரளவிற்கு கொலஸ்ட்ரால் நம் உடலுக்கு முக்கியமாகத் தேவை. அதுவே அளவிற்கு மீறினால் உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கும். கொலஸ்ட்ரால் அளவுக்கதிகம் இருந்து ,அதோடு

•உயர் இரத்த அழுத்தம் (140/90 mg/dL அல்லது அதற்கு மேல்)

•சர்கரை நோய்.

•முதுமை -ஆண் 45 க்கு மேல் பெண் 55 வயதுக்கு மேல்

•பரம்பரை ஜீன் - குடும்பத்தில் தந்தை,சகோதரன் யாருக்கவது 55 வயதுக்கு முன் , அல்லது தாய், சகோதரி யாருக்காவது 65 வயதுக்குமுன் இதய நோய் தாக்கியிருந்தால்.

•உடல் இயக்கமின்மை, உடல் பருமன்,

•புகை, மது போன்ற பழக்கம் போன்ற காரணங்கள் இருந்தால் எல்லாம் சேர்ந்து இதயத்தை பதம் பார்ப்பதில் கை கோர்த்துக் கொள்ளு(ல்லு)ம்.

*

கொலெஸ்ட்ரால் அதிகம் இருந்தும் மேல் கண்ட பிற காரணங்கள் இல்லாததால் இதயம் பழுது படாமல் ஆரோக்கியமாக வாழ்பவர்களும் உண்டு. இருந்தாலும் தலைக்கு மேல் கத்தி தான் .

*

இங்குக் கூறப்பட்ட உணவுப் பழக்க வழக்கங்கள் மற்றும் வழிகாட்டும் விஷயங்களை முறையாகக் கடைப்பிடித்து வந்தால் கொலெஸ்ட்ரோல் அளவைக் கட்டுப்பாட்டில் வைக்க எளிதாக இருக்கும்.

*

இவற்றுள் எதுவும் பயனளிக்காத நிலையில் உள்ளவர்கள், தகுந்த மருத்துவரை அணுக வேண்டும். அவருடைய ஆலோசனையில் மாற்றமின்றி அவர் தருகின்ற மருந்துகளை அதே அளவில் உட்கொள்ள வேண்டும். இதில் கவனமாக இருக்க வேண்டும்.

*

கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த பல் வேறு மருந்துகள் மருத்துவர்கள் பரிந்துரைத்தாலும் எல்லமே பக்க விளைவுகள் உள்ளது. அதிக விலையுள்ள
இம் மருந்துகள் கொலெஸ்ட்ராலைக் குறைப்பதில் உண்மையாகப் பலன் தருவதில்லை என்ற கருத்துக்களும் உண்டு.

*

எல்லா மருந்துகளும் தற்காலிகமாக கொலெஸ்ட்ரால் அளவை ஓரளவு கட்டுப் படுத்த மட்டும் தான் உதவும் . நிரந்தர தீர்வு சரியான உணவுப்பழக்கமும் உடல் உழப்புமே.போதுமான தண்ணீர் தினமும் அருந்துவது கூட இதயத்தைக் காக்கும்


"அளவுக்கு மி்ஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" என்பது கொலஸ்ட்ராலுக்கு நன்றாக பொருந்தும்.