‘பாகற்காய்’ நீரழிவு நோயை கட்டுப்படுத்துமா..

மணக்கால் அய்யம்பேட்டை | 1:13 PM | | Best Blogger Tips
பாகற்காய் வேக வைத்த நீரை மதிய உணவிற்கு முன்பாக பருகுவதும் வாரம் 2-3 முறை பாகற்காயை உணவில் சேர்த்துக் கொள்வதும் நீரிழிவுக்காரர்களின் கட்டுப்படாத சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க பெரிதும் பயன்படும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறிப்பு: நீரிழிவு என்பது ஒரு நோயல்ல. அது உடலில் உள்ள ஒருவிதமான வளர்சிதை மாற்றக் கோளாறே ஆகும். எனவும் நீரிழிவை முழுமையாக குணப்படுத்த இயலாது. கட்டுப்பாட்டில் வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். அதிலும் பாகற்காயை நம்பி எடுத்துக் கொள்ளும் மருந்து மாத்திரைகளை நிறுத்துவதும் கூடாது.

மருந்து மாத்திரைகளுடன் பாகற்காயையும் வேண்டுமானால் சர்க்கரையின் அளவினை கட்டுக்குள் வைக்க பயன்படுத்தலாம். வெறும் பாகற்காய் மட்டும் நீரிழிவு நோய்க்கு மருந்தல்ல.

மூலம்: தினசரி காலை 2 தேக்கரண்டி அளவு பாகற்காய் இலைகளின் சாற்றை அரை டம்ளர் அளவு மோரில் கலந்து 30 நாட்கள் காலை வெறும் வயிற்றில் பருகி வர மூல நோய் குணமாகும்.

பித்தம்: பித்தம் அதிகமாக உள்ளவர்களும் கல்லீரல் பாதிப்பிற்கு உள்ளானவர்களும் காலை வெறும் வயிற்றில் 2-3 தேக்கரண்டி அளவு பாகற்காய் சாற்றை தண்ணீரில் கலந்து பருகிவர நல்ல பலன் தெரியும்.

மூட்டுவலி: ரத்தத்தில் அதிகமான யூரிக் அமிலம் உள்ளதால் ஏற்படக்கூடிய ரூமாட்டிஸம், ஆர்த்ரைடிஸ் மற்றும் கவுட் போன்ற மூட்டுவலி உடையவர்கள் பாகற்காயை உண்டுவர நல்ல பலன் தெரியும். வலி அதிகமாக உள்ள இடங்களில் பாகற்காயை அரைத்து பற்று போல போட்டு வர வலி குறையும். மூட்டுவலி நிவாரணம் கிடைக்கும்.

குழந்தை பிறந்த ஒரு மாதத்தில் தாய்க்கு உண்டாகும் பிரச்னைகள்

மணக்கால் அய்யம்பேட்டை | 1:05 PM | | Best Blogger Tips
குழந்தை பிறந்த ஒரு மாதத்தில் தாய்க்கு உண்டாகும் பிரச்னைகளை உணவின் மூலம் தவிர்ப்பது குறித்து விளக்கம் அளிக்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா. குழந்தை தூங்கும்போது தாயும் தூங்குவதன் மூலம் ஓரளவு ரெஸ்ட் கிடைக்கும். குழந்தைக்கு ஏற்படும் கக்குதல், வயிற்றுப்போக்கு பிரச்னைகளுக்கு மருத்துவரின் ஆலோசனைப்படி உணவில் சிறு மாற்றங்களை செய்யலாம். முற்றிலுமாக பத்திய உணவுகள் வேண்டியதில்லை. தாயின் உடல் இழந்த சத்துகளை திரும்பப் பெற வேண்டியிருப்பதால் புரத உணவுகள் அவசியம்.
சோர்வை நீக்கவும், அஜீரணக் கோளாறுகளைத் தவிர்க்கவும் தினம் ஏதேனும் ஒரு பழச்சாறு சேர்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைக்கு தேவையான கால்சியம், தாது உப்புகள் ஆகியவை தாய்ப்பாலில் கிடைப்பதால் இந்தக் காலகட்டத்தில் தாயின் உணவில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். தானிய உணவு, முளைக்கட்டிய பயறு, காய்கறி மற்றும் கீரைகள் உணவில் சேர்க்கவும்.

காபி, டீக்கு பதிலாக பால் அருந்தலாம். பாலுடன் இரண்டு பிரெட் துண்டுகள் சாப்பிடுவதன் மூலம் பால் ஊறுவது அதிகரிக்கும். மட்டன், மீன், முட்டை ஆகியவற்றில் விருப்பம் இருந்தால், எண்ணெயில் பொரிக்காமல் குழம்பாக எடுத்துக்கொள்ளலாம்.

மாலை நேர சிற்றுண்டிக்கு காய்கறி சூப், ஃபுரூட் சாலட் நல்லது. பால், பால் சார்ந்த பொருட்களை கண்டிப்பாக எடுத்துக் கொள்ளவும். மலச்சிக்கல்தான் மிகப்பெரிய பிரச்னையாக இருக்கும். இதற்கு நார்ச்சத்து உணவுகள்தான் தீர்வு.

உடலால் ஏற்படும் சோர்வை உணவின் மூலம்தான் சரிக்கட்ட முடியும். ஒரு மாதம் வரை உடல் எடை கூடுமே என கவலைப்பட வேண்டியதில்லை.
தாய்ப்பால் சுரப்புக்கான ஹார்மோனை தூண்டும் வேலையை பூண்டு செய்கிறது. முடிந்த அளவு உணவில் பூண்டு சேர்ப்பது நல்லது.

வெள்ளரிக்காயின் சிறப்பு மற்றும் மருத்துவ குணம் !!!!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:52 PM | Best Blogger Tips


வெள்ளரிக்காய்:

வெள்ளரிக்காயை நம்மில் சாப்பிடாதவர்கள் சிலர் தான் இருப்பர். மிக குறைந்த விலையில் உடல்நலத்திற்கு ஏற்றது. வெள்ளரியை மூன்று வகையாக பிரிக்கலாம்.

பிஞ்சு வெள்ளரிக்காய்

பச்சையாக சாப்பிடுவதற்கு ஏற்றது. இதில் விதைகள் சிறிதாக இருக்கும் இதனால் சாப்பிடவதற்கு சுவையாகவும் இருக்கும். இதை சாப்பிடும்போது கொஞ்சம் உப்பு, மிளகாய்த்தூள், மிளகு தூள் கலந்து சாப்பிட்டால் இதன் சுவை சொல்லிமளாது. அப்படியே சாப்பிடுவதற்கு ஏற்றது இதுதான். வெள்ளரி வாங்கும் போது பிஞ்சு வெள்ளரியாக பார்த்துவாங்க வேண்டும்.

வெள்ளரிக்காய்

இது பிஞ்சுக்கும் அடுத்தநிலை. இதை குழம்பு வைக்க பயன் படுத்தலாம். இதை வைத்து பழ வகை குழம்பு வைக்கலாம்.

வெள்ளரிபழம்

வெள்ளரி நன்கு பழத்து இருக்கும் பெரியதாகவும் இருக்கும். பழத்தை ஜூஸ் செய்து சாப்பிட ஏற்றது. இல்லை எனில் நாட்டுச்சக்கரை கலந்து அதனுடன் பழத்தை சேர்த்து சாப்பிடலாம். வெப்ப காலத்தில் உடலுக்கு அதிக குளிர்ச்சியைத் தரும்.

வெள்ளரியின் பயன்கள்:

விட்டமின் ஏ, பொட்டாசியம் அதிகம் உள்ளது
சிறுநீர் பிரியாமல் அவதிபடுபவர்கள், நீரிழிவு நோயாளிகள் வெள்ளரிக்காய், வெள்ளரி விதை சாப்பிட உடனடி நிவாரணம் கிடைக்கும்.

வெள்ளரிக்காய் சாறை கண்களை சுற்றி தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். வாரம் ஒரு முறை இவ்வாறு செய்ய கருவளையம் நீங்கும்.

வெள்ளரிக்காயை நறுக்கி கண்களின் மேல் சிறிது நேரம் வைத்திருந்தாலும் கருவளையம் மறையும்.

உடலுக்கு குளிர்ச்சியைத் தந்து சிறுநீர் வெளியேற உதவும்.

கண் பொங்குதல், உடல் சூடு, மலக்கட்டு, தீர்க்கும் உயர்ந்த உணவு
கடல் உப்பை உடலில் குறைக்கும் உணவு.

சீறுநீரக எரிச்சல், கல் அடைப்பு, மூலச்சூடு, மூலவியாதிகள் ஒரு வாரத்தில் சரியாகும்.

உடல் பருமன், உடல் தொப்பை, மூட்டுப் பிணிகள், வலிமைகளை குறைத்திடும் இரத்த அழுத்தம்.

நீரிழிவு நோயாளிகளுக்கு அவசிய உணவுச் சாறு
.
நீரிழிவு பிணியாளர்களின் மருந்துகளைக் குறைப்பதில் வெள்ளரிச்சாறு விடிவெள்ளியாய் இருக்கிறது

உங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா

மணக்கால் அய்யம்பேட்டை | 12:51 PM | Best Blogger Tips
உங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா….? அதற்கு முன் கீழே உள்ள தகவல்களைப் பற்றிச் சிந்தியுங்கள்…!!! எல்லா பெட்ரோல் பம்புகளும் தங்கள் சேமிப்புத் தொட்டிகளை நிலத்துக்கு அடியில் பதித்து வைத்திருக்கின்றன.

நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் போதே எரிபொருள் அடர்த்தியுடன் இருக்கும். வெப்பநிலை அதிகரிக்கும்போது, பெட்ரோல் விரிவடையும். எனவே, மதியம், மாலையில் நீங்கள் ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கினால், அது மிகச்சரியாக ஒரு லிட்டர் இருக்காது.

எனவே, நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் அதிகாலை நேரங்களில் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்புங்கள். பெட்ரோல் வணிகத்தில் வெப்ப அளவும், அடர்த்தியும் மிக முக்கியமானவை. பெட்ரோல் ஒரு டிகிரி அதிக வெப்பநிலையில் இருந்தால் அது மிகப் பெரிய மாற்றம். ஆனால் பெட்ரோல் பங்கில் இதுபோன்ற கட்டுப்பாடுகள் பார்க்கப்படுவதில்லை. அதேபோல உங்கள் வாகனத்தின் பெட்ரோல் தொட்டியை எப்பொழுதும் முழுமையாக நிரப்பாதீர்கள்.

அதனால் உங்களுக்கு நஷ்டமே ஏற்படும். பாதி மட்டுமே நிரப்புங்கள். அதிக எரிபொருள் இருந்தால், அந்தத் தொட்டியில் காற்று குறைவாகவே இருக்கும். நாம் நினைப்பதைவிட வேகமாக பெட்ரோல் ஆவியாகக் கூடியது. பங்கின் பெட்ரோல் சேமிப்புத் தொட்டிகளில் மிதக்கும் கூரைகள் இருக்கும். இதன் காரணமாக உள்ளே பெட்ரோலுக்கும் காற்றுமண்டலத்துக்கும் இடையே இடைவெளி இருக்காது. எனவே, ஆவியாதல் குறையும்.

வாகன பெட்ரோல் தொட்டியில் பாதி நிரப்பினால், பெட்ரோல் ஆவியாவதை ஓரளவு குறைக்க முடியும். அதேபோல நீங்கள் பெட்ரோல் நிரப்பப் போகும் போது தான், அந்த பங்கில் லாரியில் இருந்து பெட்ரோல் இறக்கப்படுகிறது என்றால், அப்போது வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள். கிடங்கின் அடியில் தேங்கியிருந்த கசடுகள் அப்போது கலங்கி இருக்கும். இது எஞ்சினை பாதிக்கும்.

நன்றி
விக்னேஷ்

உங்களுக்கு தொப்பையிருக்கா? அப்ப இதை படிங்க!

மணக்கால் அய்யம்பேட்டை | 4:35 PM | Best Blogger Tips
தொப்பை உள்ளவர்களுக்கு திடீர் மரணம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. சராசரி எடை இருப்பவர்களுக்கும் கூட தொப்பை ஏற்பட்டு பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்திவிடுகிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உண்ணும் உணவானது உடல்முழுவதும் சீராக பரவினால் தப்பில்லை. ஆனால் ஒரே இடத்தில் வயிற்றுப் பகுதியில் மொத்தமாக தேங்கிவிடுவதால் சிக்கல் ஏற்படுகிறது.

வயிறும், இடுப்பும் சுற்றளவு அதிகமாக, அதிகமாக மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம் என்கின்றனர் நிபுணர்கள். எனவேதான் உடல் எடையை குறைக்க காட்டும் அக்கறையை தொப்பையை குறைக்கவும் காட்டுங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.

வயிறு கொழுப்பு அதிகமாவதால் இன்சுலின் சுரப்பு குறைபாடு ஏற்படுகிறது. இதனால் நீரிழிவு ஏற்படுகிறது. பெண்களுக்கு புரோஜெஸ்ட்ரோன் சுரப்பின் அளவு குறைகிறது. பெண்மைத் தன்மைக்கான ஹார்மோன் சுரப்பு குறைவதால் முகத்தில் முடி முளைக்கிறது. மலட்டுத்தன்மை, பாலிசிஸ்டிக் ஓவரி பிரச்சினை ஏற்படுகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே தொப்பை அதிகம் உள்ளவர்களுக்கு திடீர் மரணங்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதற்குக் காரணம் கெட்ட கொழுப்புகள் அதிகமாக படிவதே காரணம் என்பது நிபுணர்களின் கருத்து. இது குறித்து National Health and Nutrition Examination Survey (NHANES III) ஆய்வாளர்கள் 12 ஆயிரத்து 785 பேரிடம் ஆய்வு மேற்கொண்டனர்.

அந்த ஆய்வின் படி ஆண்,பெண்களில் பி.எம்.ஐ ரிப்போர்ட்படி தொப்பை இருந்த 2,562 பேருக்கு திடீர் மரணங்கள் ஏற்பட்டது தெரியவந்தது. அதேபோல் 1,138 பேருக்கு இதயம் தொடர்பான நோய் ஏற்பட்டதும் கண்டறியப்பட்டது. சராசரி எடையோடு இருப்பவர்களைக் காட்டிலும் வயிற்றில் கொழுப்பு அதிகம் சேர்ந்தால் 2.75 சதவிகிதம் அளவிற்கு ஆபத்து அதிகம் ஏற்படும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

எனவே உடல்பருமனை குறைக்கும் அதே நேரத்தில் வயிற்றில் தொப்பையை குறைக்கவும் முயற்சி மேற்கொள்ளவேண்டும் என்பது நிபுணர்களின் அறிவுரையாகும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவுகள்!

மணக்கால் அய்யம்பேட்டை | 1:26 PM | Best Blogger Tips

உணவுப்பழக்கம் மாறியதாலேயே உடலில் புதிது புதிதாய் நோய்கள் தோன்றுகின்றன. சரிவிகித சத்துணவு சாப்பிடதா காரணத்தினால்தான் இன்றைக்கு பெரும்பாலோனோர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு பல பிரச்சினைகளுக்கு ஆளாகியுள்ளனர். எனவே மருந்து மாத்திரைகள் இன்றி இயற்கையான முறையில் நீரிழிவை கட்டுப்படுத்த நிபுணர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.

வெந்தையம்

நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற மிகச்சிறந்த மருந்து வெந்தையம். வெந்தையத்தை இரவு முழுவதும் ஊறவைத்து அந்த தண்ணீரை அதிகாலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். இதனால் உடலில் இன்சுலின் சுரப்பு சரியான அளவில் நடைபெறும். ஊறவைத்த விதைகளை களியாக செய்து சாப்பிடலாம்.

இயற்கை ஜூஸ்

நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இயற்கை ஜூஸ் பருகுவது அவர்களின் ஆரோக்கியத்திற்கு எற்றது. ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிரம்பிய காய்கறிகளை ஜூஸ் ஆக எடுத்து பருகலாம். பாகற்காய் ஜூஸ், திராட்சை ஜூஸ் குடிக்கலாம். மா மரத்தின் இலைகளை பறித்து வேகவைத்து அதனை வடிகட்டி அந்த சாறினை ஜூஸ் ஆக பருகலாம். இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது.

கற்றாழை ஜெல்

நீரிழிவு நோயாளிகளுக்கு கற்றாழை மிகச்சிறந்த நிவாரணி. பிரிஞ்சி இலையை பொடி செய்து அதனுடன் சிறிதளவு மஞ்சள்தூள், இரண்டு டீஸ்பூன் சோற்றுக் கற்றாழை ஜெல் கலந்து சாப்பிடலாம். தினசரி மதிய உணவுக்குப் பின்னரும், இரவு உணவருந்துவிட்டும் சாப்பிடுவதன் மூலம் நீரிழிவு கட்டுப்படும்.

சப்பாத்தி சாப்பிடுங்க

நீரிழிவு நோயாளிகள் தினசரி சப்பாத்தி சாப்பிடவேண்டும். இது நார்ச்சத்துள்ள உணவுப்பொருள். கோதுமை மட்டும் இல்லாமல், கொண்டைக்கடலை, சேயா போன்றவைகளை சேர்த்து அரைத்துவைத்துக்கொண்டு சப்பாத்தி செய்து சாப்பிடுவதன் மூலம் உடலுக்குத் தேவையான நார்ச்சத்து கிடைக்கும்.

மூலிகை கசாயம்
 
வேப்பிலை, துளசி, வில்வம், நெல்லி போன்றவை நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற சிறந்த நிவாரணம் தரும் மூலிகைகள். இவைகளை காயவைத்து அரைத்து பொடி செய்து வைத்துக்கொள்ளலாம். அதை காய்ச்சி வடிகட்டி அதன் தண்ணீரை மூலிகை நீராக பருகலாம்.

கூந்தல் உதிருவதற்கான காரணங்கள்?

மணக்கால் அய்யம்பேட்டை | 1:25 PM | Best Blogger Tips

அழகைத் தரும் கூந்தல் உதிருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால் கூந்தல் உதிருவதற்கு சுற்றுச்சூழலும், மனஅழுத்தமும் பெரும்பாலும் காரணமாகின்றன. அவ்வாறு கூந்தல் உதிர்ந்து மெலிதாவதைத் தடுக்க, முதலில் அவரவர்கள் கூந்தல் உதிருவதற்கான காரணத்தை அறிய வேண்டும். இத்தகைய கூந்தல் மேலும் சில வழக்கத்திற்கு மாறான செயல்களாலும் கூந்தல் உதிருகிறது. அத்தகைய செயல்கள் என்னென்னவென்று அறிந்து, அதனை செய்யாமல் தடுத்தால் கூந்தலானது

உதிராமல் ஆரோக்கியமாக வளரும். அந்த செயல்கள் என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...

1. சூடான நீரில் முடியை அலசுதல்...

சுடு நீரில் குளிப்பதை விட, குளிர்ந்த நீரில் குளிப்பதே மிகவும் சிறந்தது என்று பலர் சொல்கின்றனர். ஆனால் சிலர் இதற்கு எதிர்மாறாக சொல்கின்றனர். எதுவானாலும் உண்மையில் சுடு தண்ணீரில் குளித்தால் கூந்தலானது பாதிக்கப்படும். ஏனெனில் சுடு தண்ணீர் கூந்தலை பலவீனமடையச் செய்து கூந்தல் உதிர்தலை ஏற்படுத்துகிறது.

2. ஹெல்மெட் அணிதல்...

ஹெல்மெட் ஆனது பயணத்தின் போது மிகவும் அவசியமானதே. ஆனால் இதை அணிவதால் கூந்தலானது உதிரும். ஏனெனில் ஹெல்மெட்-ஐ நீண்ட நேரம் அணிவதால் அதிக வியர்வையின் காரணமாக கூந்தலின் வேர்கள் வலுவிழந்து அதிகமாக உதிர ஆரம்பிக்கும்.

3. அவசரமாக சீவுதல்...

சீவுவதற்கு ஒரு சில முறைகள் இருக்கிறது. அப்படி சீவாமல் அவசர அவசரமாக சீவினால் கூட கூந்தல் உதிரும். தலை சீவும் போது அழுத்தி சீவ வேண்டும் தான். அதற்காக கூந்தலின் முனையில் சிக்கு இருக்கும் போது அந்த சிக்கை எடுக்காமல் சீவினால் கூந்தலானது கொத்தாகத் தான் வரும். ஆகவே சீவும் முன் கூந்தலின் முனையில் இருக்கும் சிக்கை எடுத்துவிட்டு பின் சீவ வேண்டும். இதனால் கூந்தல் உதிர்வதை தடுக்கலாம்.

4. ஈரமான கூந்தலை சீவுதல்...

கூந்தலானது ஈரமாக இருக்கும் போது வலுவற்ற நிலையில் இருக்கும். ஆனால் நிறைய பேர் கூந்தலை ஈரமாக இருக்கும் போதே சீவுகின்றனர். அவ்வாறு சீவினால் கூந்தல் நன்றாக இருக்கும் என்றும் நம்புகின்றனர். ஆனால் இதுவே கூந்தல் உதிருவதற்கான பெரும் காரணம் ஆகும். ஆகவே இதனை தவிர்த்தால் நல்லது.

5. கூந்தலை இறுக்கமாக கட்டுதல்...

இன்றைய காலத்தில் 'போனி டைல்' போடுவது ஃபேஷனாகிவிட்டது. ஆனால் அதையே ரொம்ப இறுக்கமாக போடுவதால் கூந்தல் உதிர ஆரம்பிக்கும். இருப்பினும் இதுவே பெரும் காரணம் என்று பலருக்கும் தெரியாது. இவ்வாறு கூந்தலை கட்டுவதால், கூந்தலானது பாதியிலேயே கட் ஆகிவிடுகிறது. ஆகவே மெல்லிய முடியை கொண்டவர்கள், இறுக்கமாக கட்டுவதை தவிர்த்தால் நல்லது.
இன்றைய இளைஞர்களுக்கு கூந்தல் உதிருவதே பெரும் தொல்லையாக இருக்கிறது. ஆகவே இத்தகைய தொல்லை தவிர்க்க வேண்டுமென்றால், மேற்கூரிய வழக்கத்திற்கு மாறான செயல்களை தவிர்த்தால், கூந்தலானது உதிராமல் இருக்கும்.

உடல் எடையை அதிகரிக்க வேண்டுமா?

மணக்கால் அய்யம்பேட்டை | 12:24 PM | Best Blogger Tips
https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-ash4/s480x480/255244_409498515766815_1694211041_n.jpg
இந்த காலத்தில் உடல் எடை அதிகமாக இருப்பதால், அதனை குறைக்க பலரும் முயற்சி செய்கின்றனர். அதே சமயம், சிலர் என்ன தான் உணவுகளை உண்டு உடல் எடையை அதிகரிக்க நினைத்தாலும், எடை மட்டும் கூடாமல் இருக்கும். ஆகவே அவ்வாறு எடையை அதிகரிக்க தேவையற்ற ஆரோக்கியமில்லாத உணவுகளை எல்லாம் உண்டால், எடை கூடாது. எடையை அதிகரிக்க அதிக அளவு கலோரி நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஏனெனில் சரியான அளவு ஊட்டச்சத்துக்கள், புரோட்டீன், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகள் உடலுக்கு கிடைத்தால் தான், விரைவில் உடல் எடையை கூட்ட முடியும். எனவே எந்த உணவுகளை உட்கொண்டால், உடல் எடை அதிகரிக்கும், என்பதை சற்று படித்து தெரிந்து கொண்டு, பின்பற்றிப் பாருங்களேன்...

புரோட்டீன்

புரோட்டீன் அதிகம் இருக்கும் உணவுப் பொருட்களான இறைச்சி, மீன்கள், முட்டை, வான் கோழி, சிக்கன், டோஃபு போன்றவற்றை அதிகம் தினமும் உணவில் சேர்த்து வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோ, உடல் எடையை அதிகரிக்க நினைப்போருக்கு ஒரு நல்ல ஈஸியான வழியாகும். அதிலும் சோயா பொருட்களை அதிகம் சேர்த்துக் கொண்டால் நல்லது.

கார்போஹைட்ரேட்

ஓட்ஸ் மீல், தானியங்கள், பிரட் போன்றவற்றில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளது. மேலும் பழங்களில் மாம்பழம், ஆப்பிள், செர்ரி, திராட்சை, பீச் போன்றவையும், காய்கறிகளில் கார்ன், பிராக்கொலி, கேரட், வால் மிளகு, முள்ளங்கி போன்றவையும், பாஸ்தா, சிவப்பு அரிசி உணவுகள், கொண்டைக் கடலை போன்றவற்றையும் தினமும் உணவில் சிறிது சாப்பிட்டு வந்தால், உடல் நன்கு இருக்கும். மேலும் உடலுக்கு தினமும் குறைந்தது 40% கார்போஹைட்ரேட் தேவைப்படுகிறது, அதற்கு இந்த உணவுகளை உண்டால், விரைவில் உடல் எடையை அதிகரிக்க முடியும்.

கொழுப்புகள்

பாதாம் பருப்பு, ஆலிவ் ஆயில், சூரிய காந்தி எண்ணெய், நல்லெண்ணெய், முந்திரி பருப்பு, வேர் கடலை, வெண்ணெய், பால் போன்ற அனைத்திலும் கொழுப்புகள் அதிகம் நிறைந்துள்ளது. ஆகவே இதற்கான டயட் இருக்கும் போது, தினமும் உடலில் 10% கொழுப்பு சத்தானது உடலில் சேர வேண்டும். இவை அனைத்துமே ஆரோக்கியமான கொழுப்புகள் தான்.

மேலும் உடல் எடையை அதிகரிக்க அடிக்கடி ஏதேனும் சாப்பிட்டுக் கொண்டிருப்பீர்கள். அவ்வாறு ஏதேனும் ஒன்றை சாப்பிடுவதற்கு, உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் வகையில் இருக்கும் ஸ்நாக்ஸ் ஆன நட்ஸ், ஆப்பிள், புரோட்டீன் பார், உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்றவற்றை சாப்பிடுவது நல்லது. அதிலும் சீஸ் மற்றும் காய்ந்த பழங்களை சாப்பிடுவதும், உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் உணவுகள் ஆகும். அதுமட்டுமல்லாமல் சாக்லேட்டில் கூட அதிக கலோரிகள் நிறைந்துள்ளன.

ஆகவே இத்தகைய உணவுகளை உண்டால், உடல் எடை அதிகரிப்பதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும். முக்கியமாக உடனே உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்று எதையும் அதிக அளவில் ஒரே நேரத்தில் சாப்பிட்டால், அந்த அமிர்தம் கூட நஞ்சாக மாறிவிடும்.