குழந்தை பிறந்த ஒரு மாதத்தில் தாய்க்கு உண்டாகும் பிரச்னைகள்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:05 | | Best Blogger Tips
குழந்தை பிறந்த ஒரு மாதத்தில் தாய்க்கு உண்டாகும் பிரச்னைகளை உணவின் மூலம் தவிர்ப்பது குறித்து விளக்கம் அளிக்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா. குழந்தை தூங்கும்போது தாயும் தூங்குவதன் மூலம் ஓரளவு ரெஸ்ட் கிடைக்கும். குழந்தைக்கு ஏற்படும் கக்குதல், வயிற்றுப்போக்கு பிரச்னைகளுக்கு மருத்துவரின் ஆலோசனைப்படி உணவில் சிறு மாற்றங்களை செய்யலாம். முற்றிலுமாக பத்திய உணவுகள் வேண்டியதில்லை. தாயின் உடல் இழந்த சத்துகளை திரும்பப் பெற வேண்டியிருப்பதால் புரத உணவுகள் அவசியம்.
சோர்வை நீக்கவும், அஜீரணக் கோளாறுகளைத் தவிர்க்கவும் தினம் ஏதேனும் ஒரு பழச்சாறு சேர்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைக்கு தேவையான கால்சியம், தாது உப்புகள் ஆகியவை தாய்ப்பாலில் கிடைப்பதால் இந்தக் காலகட்டத்தில் தாயின் உணவில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். தானிய உணவு, முளைக்கட்டிய பயறு, காய்கறி மற்றும் கீரைகள் உணவில் சேர்க்கவும்.

காபி, டீக்கு பதிலாக பால் அருந்தலாம். பாலுடன் இரண்டு பிரெட் துண்டுகள் சாப்பிடுவதன் மூலம் பால் ஊறுவது அதிகரிக்கும். மட்டன், மீன், முட்டை ஆகியவற்றில் விருப்பம் இருந்தால், எண்ணெயில் பொரிக்காமல் குழம்பாக எடுத்துக்கொள்ளலாம்.

மாலை நேர சிற்றுண்டிக்கு காய்கறி சூப், ஃபுரூட் சாலட் நல்லது. பால், பால் சார்ந்த பொருட்களை கண்டிப்பாக எடுத்துக் கொள்ளவும். மலச்சிக்கல்தான் மிகப்பெரிய பிரச்னையாக இருக்கும். இதற்கு நார்ச்சத்து உணவுகள்தான் தீர்வு.

உடலால் ஏற்படும் சோர்வை உணவின் மூலம்தான் சரிக்கட்ட முடியும். ஒரு மாதம் வரை உடல் எடை கூடுமே என கவலைப்பட வேண்டியதில்லை.
தாய்ப்பால் சுரப்புக்கான ஹார்மோனை தூண்டும் வேலையை பூண்டு செய்கிறது. முடிந்த அளவு உணவில் பூண்டு சேர்ப்பது நல்லது.