எது? உலக அதிசயம்

மணக்கால் அய்யம்பேட்டை | 11:13 AM | Best Blogger Tips

 May be an image of temple and monument


நான் தாஜ் மஹாலை பார்க்க சென்று

இருந்தேன்.  

 

பார்த்து திரும்பி பஸ்ஸில் வரும்

பொழுது தாஜ் மஹாலை விட அழகான ஒரு

கட்டிடம் உலகில் வேறு எதுவுமே இல்லை

என்பதை போல் என்னுடன் பஸ்ஸில் பயணம்

செய்தவர்கள் பேசி கொண்டார்கள். 

 No photo description available.

 தாஜ் மஹால்

மிக அழகான கட்டிடம் தான். அதை யாரும்

மறுக்க முடியாது. ஆனால்?

 

தாஜ் மஹால் மட்டும் தான் உலகில் அழகான

கட்டிடமா. அதை விட அழகான ஒரு கட்டிடம்

உலகில் வேறு எதுவும் இல்லையா. ஏன்?

இல்லை. நிறையவே இருக்கிறது. சரி உலக

அதிசயம் என்றால் என்ன? ஒன்று உருவான பின்

அதே போல் ஒன்றை உருவாக்க முடியாது

என்பது தான் உலக அதிசயம்.

 

நெல்லையப்பர் கோவிலில் கல் தூனை

தட்டினால் ச, ரி, க, ம, ப, த, நி என்கிற ஏழு

இசை ஸ்வரங்கள் ஒலிக்கும். கல்லுக்குள் 7

ஸ்வரங்களை வைத்தார்களே. அது உலக

அதிசயம்.

 அதிசயமனா இப்படி இருக்கணும்!!!!!!!!! - Sebosa Software Services


 திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத

பைரவர் கோவிலில். குழந்தை தாயின்

வயிற்றில் இருக்கும் பொழுது. குழந்தை

இந்த, இந்த மாதத்தில் இந்த, இந்த வடிவத்தில்.

இவ்ளவு விதமான Positions ல இருக்கும்

என்பதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே

கல்லில் சிற்ப்பங்களாக வடித்து

வைத்துள்ளார்கள் என் முன்னோர்கள். அது

உலக அதிசயம்.

 

அன்னியர் படை எடுப்பின் பொழுது கூட.

இந்த அதிசய சிற்ப்பங்களை அவர்களால் சிதைக்க

முடியவில்லை.

தமிழக கோவில் கட்டிட கலையின் சிறப்பம்சங்கள்

 உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு தொடங்கியது

இன்றும் நிறைய கோவில்களில் சூரிய ஒளி

குறிப்பிட்ட ஒரு தேதி, நேரத்தில் மாலை

போல் வந்து சிவலிங்கத்தின் மீது விழும். அப்ப

எவ்ளவு துல்லியமாக Measure செய்து

ஆலயங்களை கட்டி இருப்பார்கள் என்று

பாருங்கள். சில கோவில்களில் தினமுமே

சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது மாலை

போல் வந்து விழும்.  


 வியாசர்பாடி ரவீஸ்வரர் ஆலயம் / Vyasarpadi Raveeswarar temple at in Chennai /  வியாசர் வழிபட்ட தலம்

வட சென்னையில் உள்ள

வியாசர் பாடி ரவீஸ்வரர் சிவன் கோவிலில் 3

வேளையும் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது

மாலை போல் வந்து விழும். இந்த கோவிலில்

உள்ள சிவலிங்கம் எவ்ளவு ஆண்டுகள்

பழமையான லிங்கம் தெரியுமா? ஐயாயிரம்

ஆண்டுகள்.  

 மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகப் பணிகள் 90% நிறைவு - அறங்காவலர்  குழு அறிக்கைதஞ்சையின் அடையாளம்: பெரிய கோயிலின் கட்டிடக்கலை ரகசியங்கள்!

இது உலக அதிசயம். மதுரை

மீனாக்ஷி அம்மன் கோவில், தஞ்சை பெரிய

கோவில் சிற்ப்ப, கட்டிட வேலைபாடுகளில்

உள்ள அதிசயங்களை பற்றி சொல்வதென்றால்.

அதற்கு எனக்கு இந்த ஒரு பிறவி பத்தாது.

 

 

ஓசோன் 20 ம் நூற்றாண்டில் கண்டு

பிடிக்கப்பட்ட படலம். 700 ஆண்டுகளுக்கு

முன்பே மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில்

ஓசோன் படலத்தின் படம், அதன் முக்கியத்துவம்,

அதை நாம் எவ்வாறு பாதுக்காக்க வேண்டும்

அனைத்தும் அங்கே வைக்கப்பட்டு உள்ளது.

 

அது உலக அதிசயம். யாழி என்கிற மிருகத்தின்

சிலை. பல பழங்கால கோவில்களில் இருக்கும்.

டைனோசர் போல். அதுவும் உலகில் வாழ்ந்து

அழிந்த மிருகம் என்று சொல்கிறார்கள்.  

 

சில

பழம்கால கோவில்களில் உள்ள யாழி

சிலையின் வாயில் ஒரு உருண்டை

இருக்கும். அந்த உருண்டையை நாம்

உருட்டலாம். ஆனால் ஆயிரம் குன்பூ வீரர்கள்

ஒன்று சேர்ந்து முயற்சித்தாலும். யாழி

வாயில் உள்ள உருண்டையை வெளியே உருவ

முடியாது. அது உலக அதிசயம்.

 

இன்று தாஜ் மஹாலை விட மிகப்பெரிய

மார்பிள் கட்டிடங்கள் உலகில் உருவாகி

விட்டது. இன்று ஒரு வல்லரசு நாடு

நினைத்தால். ஆயிரம் தாஜ் மஹாலை

உருவாக்க முடியும். ஆனால் கல்லுக்குள் 7

ஸ்வரங்களை வைக்கும் அந்த வித்தையை. எந்த

வல்லரசாலும் செய்ய முடியாது.  

 

வாயில்

உள்ள உருண்டையை உருட்டலாம். ஆனால்

உருவ முடியாது. இந்த வித்தையை இன்று

எந்த வல்லரசாலும் செய்ய முடியாது.

மிகப்பெரிய பிரும்மாண்ட கற் கோவில்களை.

 கங்கைகொண்ட சோழபுரம் | Gangaikonda Cholapuram - Tamil Nativeplanet

அழகிய கலை வேலைபாடுகளோடு

உருவாக்குவது. இதை எந்த உலக

வல்லரசாலும் செய்ய முடியாதது.

அது போல் ஜெயங்கொண்டத்தில் உள்ள கங்கை

கொண்ட சோழபுரம் கோவில் ஒரு வரலாற்று

சிறப்பு மிக்கது. அக்கோவிலில் உள்ள

கிணற்றிற்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம்

இருக்கும். சிங்கத்தின் வாயில் ஒரு கதவு

தென்படும். அதன் மூலம் கீழே இறங்கினால்

கிணற்றில் குளிக்கலாம். ஆனால்

மேலேயிருந்து பார்த்தால் நாம் குளிப்பது

தெரியாது.அன்றைய ராணிகளுக்காகவே

கட்டப்பட்ட கிணறு அது.

 தஞ்சை பெரிய கோவில் - தஞ்சை பெரிய கோயிலில் புதைந்திருக்கும் ரகசியம் ! உலகின்  பாரம்பரியச் சின்னமும் இந்தியாவின் பெருமையுமான தஞ்சைப் பெரிய ...

அது போல் அக்கோவிலில் உள்ள கருவறையில்

சுவர்களில் மரகதகற்கள் பதித்துள்ளனர். அதனால்

வெளியே வெயில் அடித்தால் உள்ளே

குளிரும். வெளியே மழை பெய்தால் உள்ளே

கதகதப்பாக இருக்கும்.

அது போல் கோவில் மேற்கூரையில் ஒரு ஆள்

பதுங்கும் உயரத்தில் பாதுகாப்பு பெட்டகம்

உள்ளது. போர் காலத்தில் ஆயுதங்களும்

படைவீரர்களும் பதுங்கும் வகையில்

கட்டியுள்ளார் நமது ராஜேந்திர சோழர்.

 

மறதமிழரின் கட்டிடகலையை வாழ்த்துவோம்.

தமிழர் பண்பாட்டை போற்றி பாதுகாப்போம்.

[படித்ததை பகிா்ந்தது ]

 தஞ்சை பெரிய கோவிலில் உயிர் பெற்ற சிற்பங்கள்..!; வலைத்தளங்களில் வைரலாகும் ஏஐ  வீடியோ

முன்னோா்களின் திறமையையும்&

கலைநயத்தையும் போற்றி தலை

வணங்குவோம்

ராஜ ராஜ சோழனின் அதிசய தொழில்நுட்பம் | தஞ்சை பெரிய கோவில் கட்டிடக்கலை  மர்மங்கள்| Thanjai Periya kovil 

இம்மண்ணில் பிறந்தமைக்கு பெருமிதம்

கொள்வோம்.

 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 May be an image of one or more people, horizon and fog🌷 🌷🌷 🌷

 

கொசு - செயல் ஒரு விஞ்ஞான அதிசயம்!

மணக்கால் அய்யம்பேட்டை | 5:00 PM | Best Blogger Tips

 May be an image of text that says "கொசுவின் 6 ஊசிகளின் தொகுப்பு லேப்ரம் (இரத்தம் உறிஞ்சும் குழாய்) லேபியம் (வெளிப்புற உ உறை- மடங்கும்) மேக்சிலா (வாள்- தோலை அறுத்தல்) மேண்டிபில்ஸ் (தோலை விரிப்பவை) ஹப்போபாரிங்ஸ் (உமிழ்நீர் உட்செலுத்தி) லேபியம் உமிழ்நீர் (இரத்தம் உறைவதைத் தடுப்பது அரிப்பிற்கான காரணம்) இரத்தக் குழாய் (இலக்கு)"

ஒரு சிறிய கொசு… ஆனால் அதன் செயல் ஒரு விஞ்ஞான அதிசயம்!

🔴🟢🔴

நம்மை ஒரு கொசு கடிக்கும் போது,
“சின்ன கடி தானே” என்று நினைக்கிறோம்.


ஆனால் உண்மையில் அந்த ஒரு நிமிடத்தில் கொசு செய்யும் வேலை மிகவும் திட்டமிட்டதும், ஆபத்தானதும் ஆகும்.

இந்த படத்தில், கொசு நம்மை கடிக்கும் போது நடக்கும் முழு செயல்முறையும் காட்டப்பட்டுள்ளது.
இதை எளிய தமிழில் புரிந்துகொள்வோம் 👇

கொசு கடிக்கும் போது என்ன நடக்கிறது?

1. வெளிப்புற தோல் திறப்பு (Labium)
கொசுவின் வெளிப்புற மூடி முதலில் தோலில் மடங்கி ஒதுங்கும்.
இது உள்ளே இருக்கும் கூர்மையான ஊசிகள் வேலை செய்ய வழி செய்யும்.

2.தோலை வெட்டும் ஊசிகள் (Maxilla & Mandibles)
மிகச் சிறிய அரிவாள் போல, தோலை மெதுவாக வெட்டி திறக்கிறது.
நாம் உடனே வலி உணராமல் இருப்பதற்கு காரணம் இதுதான்.

3. இரத்தக் குழாயை கண்டுபிடித்தல்
கொசு நேராக இரத்தக் குழாயை தேடி பிடிக்கும்.
அதனால் தான் சில சமயம் அதிகமாக இரத்தம் வருகிறது.

4. உமிழ்நீர் செலுத்துதல் (Hypopharynx)
கொசு உமிழ்நீரை செலுத்துகிறது.
இதில்:

இரத்தம் உறையாமல் தடுக்கும் ரசாயனம்

வலி உணர்வை தாமதப்படுத்தும் பொருள்

இதே உமிழ்நீர்தான் அரிப்பு, வீக்கம் ஏற்பட காரணம்.

5. இரத்தத்தை உறிஞ்சுதல்
இப்போது கொசு நிதானமாக இரத்தத்தை உறிஞ்சுகிறது.
நாம் கவனிக்கும் நேரத்தில் வேலை முடிந்திருக்கும்!

🔴ஏன் கொசு கடி ஆபத்தானது?

ஏனெனில்:

டெங்கு

மலேரியா

சிக்குன்குனியா

ஜப்பானீஸ்
என்செபலிட்டிஸ்

போன்ற நோய்கள் இதே கொசு கடியால் தான் பரவுகின்றன.

🔴 பாதுகாப்பு என்ன?

தேங்கிய நீரை அகற்றுங்கள்
கொசு வலை, கொசு விரட்டிகள்
பயன்படுத்துங்கள்
முழு கை உடைகள் அணியுங்கள்

ஒரு கொசு – எளிதான உயிரினம் அல்ல.
அது ஒரு “இயற்கை மருத்துவ ஊசி” + “நோய் பரப்பும் இயந்திரம்”.
 

 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 

No photo description available.🌷 🌷🌷 🌷

 

வேலியில் காலி பாட்டில்கள் ஏன்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:42 PM | Best Blogger Tips

 

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் உள்ள வேலியில் காலி பாட்டில்கள் ஏன் தொங்கவிடப்படுகின்றன தெரியுமா?
 
இந்திய எல்லைகளில் முள்வேலி வேலியில் தொங்கும் கண்ணாடி பாட்டில்களை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? அவை அங்கு ஏன் வைக்கப்பட்டுள்ளன என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
 
இந்திய எல்லைகளைப் பற்றி நினைக்கும் போது, முதலில் நினைவுக்கு வருவது முள்வேலிகளே. 
 
இந்தக் காட்சிகளைப் பெரும்பாலும் திரைப்படங்களிலும் தொலைக்காட்சியிலும் பார்த்திருப்போம். ஆனால் இந்த வேலியில் தொங்கும் கண்ணாடி பாட்டில்களை கவனித்திருக்கிறீர்களா?
 
அவை சாதாரணமாக தோன்றினாலும், நாட்டின் பாதுகாப்பில் அவை முக்கியமான பங்கு வகிக்கின்றன. வீணாகத் தோன்றும் இந்த பாட்டில்கள், எல்லையை காக்கும் வீரர்களின் உயிரைக் காப்பாற்றும் எச்சரிக்கை சமிக்ஞைகளாக செயல்படுகின்றன.
 
இந்திய எல்லைகள் அடர்ந்த காடுகள், உயரமான மலைகள் மற்றும் பனிபகுதிகள் வழியாக செல்கின்றன. எல்லா இடங்களிலும் உயர் தொழில்நுட்ப சென்சார்கள் மற்றும் சிசிடிவி கேமராக்களை நிறுவுவது சாத்தியமில்லை. 
 
மழை, கடும் பனி மற்றும் மின்சாரம் இல்லாத காரணங்களால் மின்னணு சாதனங்கள் வேலை செய்யாமல் போகலாம். ஆனால் இந்த கண்ணாடி பாட்டில்களுக்கு மின்னோட்டம், பேட்டரிகள் அல்லது நெட்வொர்க் தேவையில்லை. அவை எந்த வானிலையிலும் 24 மணி நேரமும் திறம்பட செயல்படும்.
 
வீரர்கள் இந்த காலி பாட்டில்களை முள்வேலி வேலியில் கட்டிவிடுகிறார்கள், இதனால் அவை ஒன்றுக்கொன்று நெருக்கமாக இருக்கும். 
 
இருட்டில், ஏதேனும் ஊடுருவும் நபர், பயங்கரவாதி அல்லது காட்டு விலங்கு வேலியைத் தொட்டால், கம்பிகள் நகர்ந்து, இந்த பாட்டில்கள் மோதுகின்றன. அந்த நேரத்தில் வரும் 'டன் டன்' சத்தம் நீண்ட தூரத்திலிருந்து கேட்கும். இந்த சத்தத்தைக் கேட்டதும், ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள் உடனடியாக எச்சரிக்கப்பட்டு நடவடிக்கை பணியில் ஈடுபடுகிறார்கள்.
 
லட்சக்கணக்கான ரூபாய் செலவாகும் வெப்ப இமேஜிங் கேமராக்கள் மற்றும் லேசர் அலாரங்களுடன் ஒப்பிடும்போது இந்த முறை மிகவும் மலிவானது. காலி பாட்டில்கள் எளிதில் கிடைக்கின்றன. அவற்றை அமைத்து பராமரிக்க அதிக செலவு இல்லை. அதனால் தொழில்நுட்பம் கிடைக்காத தொலைதூரப் பகுதிகளில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
 
குளிர்காலத்தில், குறிப்பாக பஞ்சாப் மற்றும் ஜம்மு பகுதிகளில் அடர்த்தியான மூடுபனி இருக்கும். அந்த நேரத்தில் தெரிவுநிலை கிட்டத்தட்ட பூஜ்ஜியமாகக் குறைகிறது. மிகவும் அதிநவீன கேமராக்களால் கூட ஊடுருவும் நபர்களைக் கண்டறிய முடியாது. 
 
பின்னர் BSF வீரர்கள் இந்த 'போர் நுட்பத்தை' பெரிதும் நம்புகின்றனர். இது 'அனைத்து வானிலைக்கும் எதிரான பாதுகாப்பு அமைப்பு' என்பது குறிப்பிடதக்கது.
 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 



🌷 🌷🌷 🌷

 
 

திருமணத்தில் ஆசீர்வாதம் எப்படி செய்ய வேண்டும்?

மணக்கால் அய்யம்பேட்டை | 1:04 PM | Best Blogger Tips

 இன்றைய தினம், நாம் பூஜைகளின் போது பயன்படுத்துகின்ற மங்கல அக்ஷதையைப் (அட்சதை) பற்றியும் அதன் மகத்துவங்களைப் பற்றியும் அறிந்து கொள்வோம். 

அப்படி என்ன விசேஷம் இருக்கிறது இந்த அக்ஷதைக்கு?

இறை பூஜைகளிலும், திருமணங்களிலும், சுப நிகழ்வுகளிலும், இதற்கென ஏன் ஒரு தனியிடமே அளிக்கப்பட்டிருக்கிறது? 

இதன் ‘தாத்பர்யம்’ (அர்த்தம்) என்ன? என்பதையெல்லாம் சற்று புரிந்து கொள்ள முற்படுவோம்.

 ‘க்ஷதம்’ என்ற வார்த்தைக்கு ‘குத்துவது’ அல்லது ‘இடிப்பது’ என்று பொருள். ‘‘அக்ஷதம்’’ என்றால் இடிக்கப்படாதது என்று பொருள். 

உலக்கையால் இடிக்கப்படாத, முனை முறியாத அரிசி ‘அக்ஷதை’ எனப்படுகிறது. முனை முறிந்த அரிசியைக் கொண்டு ‘அக்ஷதை’ தயாரிப்பது உசிதமல்ல. 

இப்படி முனை முறியாத அரிசியோடு மஞ்சளை இணைப்பது ஏன்?

பூமிக்கு மேல் விளையும் பொருள் அரிசி. பூமிக்குக் கீழ் விளையும் பொருள் மஞ்சள். இவை இரண்டையும் இணைக்கப் பயன்படுவது தூய பசுநெய் என்கிற ஊடகம்.

எதற்கு இப்படிச் செய்கிறார்கள்?

சந்திரனின் அம்சம் கொண்ட அரிசி, குருவின் அம்சம் கொண்ட மஞ்சள், மகாலட்சுமியின் அருள்கொண்ட நெய் இவை யாவும் ஒன்று சேரும்போது, அங்கே நல்ல அதிர்வு உண்டாகி, அந்த இடமே சுபிட்சமாகும் என்பது நம்பிக்கை. 

வெள்ளை அரிசியோடு மஞ்சள் நிறம் சேர்ந்து நெய்யின் மினுமினுப்போடு விளங்கும் இந்த அட்சதை, பெரியோர்களின் ஆசிகளைச் சுமந்து வரும் வாகனமாகவே உணரப்படுகிறது. 

அதன்றியும், அரிசியை உடலாகவும், மஞ்சளை ஆன்மாவாகவும், நெய்யை தெய்வ சக்தியாகவும் ஆன்றோர்கள் குறிப்பிடுகிறார்கள். 

இப்படி, ‘உடல், ஆன்மா, தெய்வசக்தியோடு இணைந்து வாழ்த்துகிறோம்’ என்ற பொருளிலேயே அட்சதை தூவப்படுகிறது என்று சொல்வோரும் உண்டு.

திருமணங்களில், மணமக்களை வாழ்த்துவதற்கு, மலர்களைவிட, அட்சதைக்கே முக்கியத்துவம் ஏன் வழங்கப் படுகிறது?

சற்றே யோசித்தால், பூமிக்கு மேலேயும், பூமிக்கு கீழேயும் விளைகின்ற அரிசியையும் மஞ்சளையும் போன்றே மணமக்கள் இரு மாண்பினர். வெவ்வேறு குணநலன்கள் கொண்டவர்கள். ஒருமித்து வாழவிழைபவர்கள். 

அரிசியும் மஞ்சளுமான மணமக்களை இணைக்கும் பசுநெய்யாகப் பாசமிகு உற்றார் உறவினர்கள் உள்ளனர். இதுவே தத்துவம்.

ஆகவே, உற்றார் உறவினர்கள், பெரியோர்கள், நண்பர்கள் என அனைவரும் மணமக்களை வாழ்த்தும்போது, மணமேடைக்கு அருகே வந்து, ஒருவர் பின் ஒருவராக, மணமக்கள் சிரசில் (தலையில்) அட்சதை தூவி வாழ்த்துவதே சாஸ்திர ரீதியாகச் சிறந்தது என்பர் பெரியோர். இதை வீசி எறிவது தவறான விஷயம். 

திருமணக் கூடங்களில் எங்கோ இருந்து கொண்டு, வீசி எறிவதைப் பார்க்கிறோம். அது ஆகாத செயலாகும்.

அட்சதையைப் போல முழுமையாக எல்லா நிகழ்வுகளும், திருமணம் கண்டவர்களின் வாழ்விலும் நடைபெற வேண்டும் என்பதே அட்சதையின் குறியீடு. 

இப்படிப்பட்ட அட்சதையை இறைவன் திருவடிகளில் வைத்து வணங்கிய பின்னர், மணமக்களை ஆசீர்வதித்து அவர்கள் சிரசில் தூவுவதே, அவர்களுக்கு நன்மையான பலன்களைக் கொடுக்கும். 

அதே போன்று, புதிதாகத் தொழில் துவங்கும் போதும், சந்திரன் சக்தி அதிகம் அமைந்த அரிசியும், குருபகவானின் சக்தி அதிகம் அமைந்த மஞ்சளும், மகாலட்சுமியின் பரிபூரண சக்தி கொண்ட நெய்யினால் சேர்த்து, பெரியோர்களால் அட்சதையாகத் தூவப்பட்டு ஆசி வழங்கப்படும் பொழுது, அந்தப் புதிதாகத் தொடங்கப்பட்டத் தொழில் வாழையடி வாழையாக அவர்களுக்கு அதிர்ஷ்டத்துடன் கூடிய நன்மைகளை விளைவிக்கும் என்பது சாஸ்திர ரீதியான உண்மையாகும்.🌹 

 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 


🌷 🌷🌷 🌷

 

இறைவன் செஞ்ச இந்த படைப்பு ஒரு மேஜிக்...🙏

மணக்கால் அய்யம்பேட்டை | 2:57 PM | Best Blogger Tips

மனித உடலில் மறைந்துள்ள ரகசியங்கள்... உங்க உடம்புக்குள்ள ஓராயிரம் அதிசயம்  இருக்கு தெரியுமா? | Unknown Secrets About Human Body - Tamil BoldSky

💐💐இன்றைய சிந்தனைக்கு💐💐


இறைவன் செஞ்ச இந்த படைப்பு ஒரு மேஜிக்...🙏 

பாத்து செஞ்ச  நம்ம உடம்பு ஒரு லாஜிக்!
How to change a tire the right way | Plymouth Rock
டயரு தேயுது ரோட்டுல... ஆனா,
நம்ம பாதம் இரண்டு பாருங்க 
நாடு சுற்றியும் தேய்மானம் இல்லை.. 😂
செருப்பு தான் அடிக்கடி பிஞ்சு போகுது,
 

ஆனா உள்ளங்கால் இன்னும் வழ வழப்பா இருக்குது!😂

உடம்புல முக்கால்வாசி தண்ணி இருக்கு,
ஆனா ஆயிரமாயிரம் ஓட்டை இருந்தும்
அரை சொட்டு கூட ஒழுகாம நிக்குது!😂

நூறு வாட்ஸ் பல்புக்கே வயரு சுவிட்ச் வாங்க வேணும்,


ஆனா பேட்டரி இல்லாமலே இதயம் துடிக்குது – அதுவும்
ரீசார்ஜ் இல்லாமலேயே ரிதமா அடிக்குது!😂

லட்சம் ரூபாய் கேமரா கூட மக்கர் பண்ணும்,சர்வீஸ் கேட்கும்!
நம்ம கண்ணு மட்டும் பளிச்சின்னு படத்தை பாக்க வைக்கும். 
 பாத்ததை பட்டுனு மூளைக்கு சொல்லும் 😂
நம்ம உடம்பு – chinnuadhithya
நாக்குல மைக்ரோஸ்கோப் எதுவுமே இல்லை,
சாப்பிடும் உணவுல உப்பு குறைஞ்சா – அது
சப்பு கொட்டி சண்டை
போடும் 😂
 
எப்பவோ தின்னது எல்லாம் செரிச்சு முழங்கை அளவு பிறந்த நம்மை முழுசா ஆக்கி முழங்க வைக்குது!

படிச்சதை எல்லாம் படிய வைக்குது, பட்டுனு பதில் சொல்லி பகுமானம் காட்டுது!
எங்கள் Blog: கேட்டு வாங்கிப் போடும் ...
மிஷினுக்கு எல்லாம் சர்வீஸ் வேணும்,
நம்ம ரத்த ஓட்டத்துக்கு – எந்த
ஆயிலும்
தேவையில்ல, 
on off  எதுவும் தேவையில்ல!
தொடர் ஓட்ட சாதனை புரியும்!

சென்சார் இல்லாமலே தோலு உணருது,
கொசு கடிச்சா – கை
சரியான ஸ்பாட்டுக்கு தானே பாயுது👏

எல்லா சத்தத்தையும் காது பிரிச்சு மேயுது!
ஆனா பொண்டாட்டி/கணவன் கூப்பிட்டா மட்டும் – அது
ஏனோ கேட்காத மாதிரி நடிக்குது!😂
வடகாயிலின் காப்பகப்படுத்தப்பட்ட கருத்துகள் ...
எண்ணி எண்ணி பார்த்தும் எண்ணி முடியல!
இறைவன் செஞ்ச மேஜிக் அளவில்லை👌

பார்த்து பார்த்து நாம் செய்ய முடியுமா 👍

தினமும் காலையில
எழுவது கூட எவ்வளவு 
பெரிய
மிராக்கிள் 🙏

 எல்லா படைப்பையும்
பார்த்து
வியப்போம்!
பக்குவமா நடப்போம்!!

படைச்ச இறைவனுக்கு
நன்றி சொல்லி 
பத்திரமா பாத்துக்குவோம் 🙏

தீக்ஷ்ண தங்ஷ்ட்ரா பைரவாஷ்டகம் ...


உடல் நலன், மனநலன் இணைந்த வாழ்க்கை இல்லையேல் இறையருளால் நமக்கு கிடைத்த வசதிகள், கிடைத்து கொண்டிருக்கும் வசதிகள், கிடைக்கப் போகும் வசதிகள் என அனைத்தும் பூஜ்யமே என்பதை முதலில் உணர்ந்து, புரிந்து கொள்ள வேண்டும்.  நல்ல எண்ணங்களுடன் வாழ்க்கையில் உடல்,மன நலனுக்கு முன்னுரிமை கொடுத்து ஆரோக்கியமாக வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும். 

வாழ்க நலமுடன். 

 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 May be an image of tree🌷 🌷🌷 🌷