தீர்க்க சுமங்கலி பவ 🌹🌹🌹🌹🌹🌹

மணக்கால் அய்யம்பேட்டை | 3:23 PM | Best Blogger Tips

 தீர்க்க சுமங்கலி யோகம் அருளும் கிரக அமைப்புகள்! - News4 Tamil | Online  Tamil News | Entertainment | Sports

தீர்க்க சுமங்கலி பவ

அறிந்து கொள்வோம்

தீர்க்க சுமங்கலி பவா என்ற ஆசிக்கு மனைவி கணவனிடம் ஐந்து மாங்கல்யங்கள் பெற வேண்டும் என்று அர்த்தம்
What will solve Sumangalis-married life? | தீர்க்க சுமங்கலி வாழ்க்கை எது?
1 திருமணத்தில் ஒன்று

2. 60 வயதில் சஷ்டியப் பூர்த்தியில்  ஒன்று

3. 70 வயதில்
பீமா ரத சாந்தியில் ஒன்று

4. 80 வயதில் சதாபிஷேகத்தில் ஒன்று

5. 96 வயதில் கனகாபிஷேகத்தில் ஒன்று

இவைகளைப் பற்றி ஒரு சிறு விளக்கம்

சஷ்டியப்த பூர்த்தி. பீமரத சாந்தி. சதா அபிஷேகம் கனக அபிஷேகம் போன்ற சடங்குகளை நடத்திக் கொள்வது என்பது எல்லோருக்கும் வைத்து விடுவதில்லை
அறுபதாம் கல்யாணம் ஏன் செய்ய வேண்டும்.... தெரியுமா உங்களுக்கு.?! -  Seithipunal
பெரும் பாக்கியமும் பூர்வ *புண்ணியமும் செய்தவர்களுக்கு இந்த மணவிழா காணும் பாக்கியம் அமைகிறது
Actor Senthil, Bhimaratha Shanti worship | நடிகர் செந்தில், பீமரத சாந்தி  வழிபாடு
இது போன்ற வைபவங்கள் பொதுவாக ஆயுள் விருத்தியை பிரதானமாக கொண்டு அமைகின்றன
significance of shastipoorthi rituals : ஷஷ்டியப்த பூர்த்தி முதல்  கனகாபிஷேகம் வரை...இந்த சடங்குகள் எதற்காக நடத்தப்படுகிறது தெரியுமா ?
சகல தேவர்களையும் மகிழ்விக்கும் பொருட்டு அன்றைக்கே வேத பாராயணங்களும் ஓமங்களும் நடைபெறுகின்றன

உறவுமுறைகள் கூடி நின்று குதுகலப்படும்போது சஷ்டியப்த பூர்த்தி தம்பதியரின் மனம் மகிழும்

நமக்கென்று இத்தனை *சொந்தங்களா என்கின்ற சந்தோசம் அவர்களின் மனதில் பரவசத்தை ஏற்படுத்தும்
பூமியில் 360 பாதைகளாகவும் அந்த 360 பாதைகளும் 12 ராசி வீடுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன

இந்த 360 பாதைகளையும் கடந்து சென்று ஒரு வட்டப்பாதையை பூர்த்தி செய்வதற்கு சூரியனுக்கு ஒரு ஆண்டு ஆகும்

செவ்வாய்க்கு ஒன்றரை ஆண்டும் சந்திரனுக்கு ஒரு *மாதமும் புதனுக்கு ஒருவரிடம் வியாழனுக்கு 12 வருடங்களும் வெள்ளிக்கு ஒரு *வருடமும் சனி பகவானுக்கு வருடம் 30 வருடங்களும் ராகுவுக்கு *ஒன்றரை வருடங்களும் கேதுவுக்கு ஒன்றரை வருடங்களும் ஆகின்றன
அறுபதாம் கல்யாணம்…..! நடத்துவது ஏன்? – today news in tamil | daily news  tamil | தமிழ் நியூஸ்
இந்த சுழற்சியில் அடிப்படையில் ஒருவர் ஜனித்து அறுவது *வருடங்கள் நிறைவடைந்த தினத்திற்கு அடுத்த தினம் அவர் பிறந்த *நாளன்று இருந்த கிரக அமைப்புகளும் வருடம் மாதம் போன்றவையும் மாறாமல் அப்படியே அமைந்திருக்கும் மிகவும் புனித தினமான அன்றுதான் சம்பந்தப்பட்டவருக்கு சஷ்டி ஆப் த பூர்த்தி வைபவம் மிகவும் முக்கியமானது இந்த நிகழ்வு தெய்வ அம்சத்துடன் நிகழ வேண்டும்
தீர்க்க சுமங்கலி பவா என்று ஏன் சொல்கிறார்கள்! |  thirkka-sumangali-bava-yendru-yen-solgirargal
சஷ்டியப்த பூர்த்தி தினத்தன்று வேத பண்டிதர்களின் முன்னிலையில் நிகழ்த்தப்படும் பூஜையின் போது 84 கலசங்கள் தூய்மை நீரை நிரப்பி மந்திரங்கள் உச்சரித்து ஏமங்கள் நடைபெறும்

அங்கே உச்சரிக்கப்படும் வேத மந்திரங்களின் சத்தம் மூலம் கலசத்தில் உள்ள நீர் தெய்வ சக்தி பெற்று புனிதம் அடைகிறது

பின்னர் அந்த கலசங்களில் உள்ள நீரைக் கொண்டு சஷ்டியப்த பூர்த்தி தம்பதியினருக்கு அபிஷேகம் நடைபெறும் அபிஷேகத்திற்கு பயன்படுத்தும் இந்த 84 கலசங்கள் எதை குறிக்கின்றன

தமிழ் வருடங்கள் மொத்தம் 60 என்பதையும் நாம் அறிவோம்

இந்த அறுபது ஆண்டுகளுக்கான தேவதைகளின் அதிபதிகளாகிய

அக்கினி சூரியன் சந்திரன் வாய்வு வருணன் அஷ்டதிக்கு பாலகர்கள் பாலாம்பிகை அமிர்தகடேஸ்வரர் நவ நாயகர்கள் சேர்த்து குறிப்பதற்காகத்தான் 84 கலசங்கள் என்பது ஐதீகம்

பிரபவ முதல் விஷ் யூ வறையான 15 ஆண்டுகள் அக்னி பகவானுக்கும்

சித்ரா பானு முதல் துன்முகி வரையிலுள்ள 15 ஆண்டுகளுக்கு சூரிய பகவானும்

ஹேவிமளபி முதல்
விரோதிகிருது
வரையில் உள்ள
 15 ஆண்டுகள் சந்திரன் பகவானும்

பரிதாபி முதல் அட்சய வரையிலுள்ள 15 ஆண்டுகள் கங்கு வாய்வு பகவானும் அதிபதிகள் ஆவார்கள்

தன்னுடைய 60 வயதில் ஐம்புலன்களால் வரும் ஆசையை வென்று மனிதன் 60 வயதில் இருந்தான் தனது என்ற பற்றியும் துறக்க முயல வேண்டும்

தன்னுடைய மகன் மகள் சொந்த பந்தம் என்ற கண்ணோட்டம் மறைந்து உற்றார் உறவினர் அனைவரும் தன் மக்களே எல்லோரும் ஒரே கோலம் என்கிற எண்ணம் எழுவது வயது நிறைவில் பூர்த்தி ஆக வேண்டும்

தான் தனது என்ற நிலை மறந்து அனைவரையும் ஒன்றாக காணும் நிலை பெற்றவர்களே 70 வயதை நிறைவில் பீஷ்மரத சாந்தியை கொண்டாடும் தகுதியை பெறுகிறார்கள்

காமத்தை முற்றிலும் துறந்த நிலையை பீஷ்ம ரத சாந்திக்கான அடிப்படை தகுதியாகும்

70 வயதில் இருந்து ஒவ்வொரு மனிதனும் தன்னைச் சுற்றி உள்ள எல்லா உயிர்களிலும் இறைவனை காண முயல வேண்டும்

ஒவ்வொரு உயிரிலும் உறையும் இறைவனுடன் உரையாட பழகிக் கொள்ள வேண்டும்

அவனுக்கு ஜாதி மதம் இன பேதம் எதுவும் இல்லை இப்படி அனைத்திலும் இறைவனை அனைத்தையும் இறைவனாக காணும் நிலையே ஒரு மனிதன் என்பது வயதில் பெரும்போது சதாபிஷேக சந்திர தரிசன சாந்தி ஆயிரம் பிறை கண்டவன் காணும் தகுதியே அவன் *அடைகிறார்
அப்போது *சதாபிஷேகம் செய்து கொள்ள வேண்டும்

இறைவனோடு இரண்டாக கலந்து இறை சிந்தனை கொண்ட *தம்பதிகளுக்கு 96 வயதில் *கனகாபிஷேகம் செய்து இந்த ஜென்மாவின் ஐந்தாவது மாங்கல்யம் பூட்டி தீர்க்க சுமங்கலி பவ ஆசிக்கு உரியதாக அமைகிறது


தீர்க்க சுமங்கலி பவ என்கின்ற ஆசிக்கு மனைவி கணவனிடம் ஐந்து மாங்கல்யம் பெற வேண்டும்

தெரிந்து கொள்வோம் படித்ததை பகிர்ந்தேன் 


🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷

திருமயம் ஸ்ரீ சத்யகிரீஸ்வரர்

மணக்கால் அய்யம்பேட்டை | 9:59 AM | Best Blogger Tips

 No photo description available.

திருமயம் ஸ்ரீ சத்யகிரீஸ்வரர்.
 
சுவாமியின் பெயர்:- ஸ்ரீ சத்யகிரீஸ்வரர். 
 
அம்பாளின் பெயர் :- ஸ்ரீ வேணுவனேஸ்வரி. 
 
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் தொட்டில் செய்து வேணுவனேஸ்வரி அம்பாளை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. 
 
தீர்த்தம்:- சந்திர புஷ்கரணி. ஸ்தல விருக்ஷம்:- மூங்கில்.
 66. திருமயம் சத்திய மூர்த்தி பெருமாள் கோவில் / 108 திவ்ய தேசம் / Sai  Motivation / 108 Divya desam - YouTube
சத்திய மகரிஷி பூஜை செய்த தலம். மதுரைக் கோயிலைப் போலவே சுவாமி சன்னதியும், அம்மன் சன்னதியும் கிழக்கு திசை நோக்கியே இருக்கிறது. இந்த சிவாலயத்தை தனியே சுற்றி வர முடியாது. சிவன், பெருமாள் ஒரு சேர மலையை சுற்றி வந்தால் மட்டுமே கிரிவலம் செய்தல் முடியும். 1300 வருடங்களுக்கு முன்பு மகேந்திர பல்லவன் கட்டிய குடவரைக்கோயில் இதுவாகும்.
 Arulmigu Sathyagiriswarar Temple in Thirumayam,Pudukkottai - Temples near  me in Pudukkottai - Justdial
அருகில் உள்ள பெருமாள் கோயிலுடன் இணைந்து கட்டப்பட்டிருக்கும் இந்த சத்தியகிரீஸ்வரர் சமேத ஸ்ரீ வேணுவனேஸ்வரி அம்பாள் திருக்கோயில் அருள் வாய்ந்தது. தர்மம் தாழ்ந்து அதர்மம் ஓங்கிய காலத்தில் சத்திய தேவதை மான் உருக்கொண்டு இங்கு ஓடி ஒளிந்து கொண்டு பெருமாளை வணங்கிவந்தாளாம். 
 
அப்பொழுது இந்த இடம் வேணு வனமாக (அதாவது மூங்கில் காடாக) இருந்திருக்கிறது. அதனால் இக்கோயிலில் எழுந்தருளி இருக்கும் அம்பாள் வேணுவனேஸ்வரி எனும் திருநாமத்துடன் அருள் பாலிக்கிறாள். 
 Satya Giriswarar Temple : Satya Giriswarar Satya Giriswarar Temple Details  | Satya Giriswarar- Thirumayam | Tamilnadu Temple | சத்திய கிரீஸ்வரர்
சத்திய கிரீஸ்வரர் அழகிய லிங்கரூபமாக காக்ஷி அளிக்கிறார். இத்தலத்தில் மாதந்தோறும் பௌர்ணமி அன்று கிரிவலத்தின்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.
 Satya Giriswarar- Thirumayam
இந்த மிகத் தொன்மையான திருக்கோவில் புதுக்கோட்டையில் இருந்து (மதுரை செல்லும் நெடுஞ்சாலையில்) சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மிகவும் தொன்மையான சக்தி வாய்ந்த புகழ் பெற்ற திருக்கோயில் இதுவாகும்.
 
சத்தியகிரீஸ்வரர் கோவிலில், மூலவர் லிங்க வடிவில் காக்ஷியளிக்கிறார். குடைவரைக் கோவிலான இதில் சிற்பங்கள் மிக அழகாக உள்ளன. துவாரபாலகர் சிற்பம் அழகுமிக்கவை. 
 Sri Sathya Murthy Perumal - Thirumayam | India Temple Tour
மண்டபத்தின் சுவர்களிலும், மேல் விதானத்திலும் ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்ததற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. ஆனால் தற்போது அவை முழுமையாக அழிந்துவிட்டன. கோவிலில் முதல் மண்டபத்தில் உமாபதீஸ்வரர், ராஜ ராஜேஸ்வரி அம்மன், பைரவர், நவக்கிரகங்கள் சன்னிதிகள் உள்ளன.
 Thirumayam Sathyagiriswarar | பாவங்களை போக்கும் திருமயம் சத்தியகிரீஸ்வரர்
கோவிலில் வேணுவனேஸ்வரி அம்மன் சன்னிதியே உள்ளது. 'வேணுவனேஸ்வரி' என்பதற்கு 'மூங்கில் காட்டு அரசி' என பொருள்படும். ஒரு காலத்தில் இப்பகுதியில் மூங்கில் காடு அதிகம் இருந்ததால், இயற்கை சூழலையொட்டி அம்மனுக்கு இப்பெயர் வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. 
 Satya Giriswarar Temple : Satya Giriswarar Satya Giriswarar Temple Details  | Satya Giriswarar- Thirumayam | Tamilnadu Temple | சத்திய கிரீஸ்வரர்
இந்த கோவில் கி.பி. 8-9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் காலத்து குகைக்கோவிலாகும். திருமயம் கோட்டைக்கு சுற்றுலா வருபவர்கள் சிவன், விஷ்ணு சன்னிதியில் வழிபாடு நடத்தி செல்கின்றனர். மேலும் ஆன்மிக சுற்றுலா வருபவர்களின் பயணத்தில் இக்கோவிலும் இடம் பெறுகிறது.
 திருமயம் குடைவரைக்கோவில் – சரவணன் அன்பே சிவம்
சத்தியகிரீஸ்வரரை மனதார நினைத்தால் அவர்களது பாவங்கள் நீங்கும். தொழிலில் வெற்றி, திருமண தடை நீங்கும். குழந்தை பேறு உண்டாகும் என்பது பக்தர்களின் அதீத நம்பிக்கையாக உள்ளது.
 Satya Giriswarar- Thirumayam
தீரர் ஸ்ரீ சத்தியமூர்த்தி அவர்களின் பிறந்த ஊர் இந்த திருமயமாகும்.
 
பக்தர்கள் அனைவரும் அவசியம் இந்த திருக்கோவிலுக்கு வந்து இங்குள்ள ஸ்ரீ சத்யகிரீஸ்வரை வணங்கி இறையருள் பெற அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
 
திருமயம் மலைக்கோட்டை || Thirumayam Fort || உயரமான இடத்தில் சிவன் கோவில் -  YouTube

 🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷

இன்றைய இளைஞர்கள் வாழ்க்கை

மணக்கால் அய்யம்பேட்டை | 2:49 PM | Best Blogger Tips

 May be an illustration

ஒரு கிராமத்தில் யார் அறிவாளி என்று ஒரு போட்டி!
 
இளைய தலைமுறை தான் அறிவாளிகள் என்று இளைஞர்கள் சொல்ல!
 
வயதில் பெரியவர்கள் தான் என்று பெரியவர்கள் சொல்ல!
 
சரி யார் அறிவாளிகள் என்று பார்க்க இருவருக்கும் ஒரு செடியை கொடுத்து ஒரு மாதம் டைம் கொடுத்து யார் இந்த செடியை நன்றாக வளர்க்கிறார்கள் என்று பார்க்கலாம் என்றார்கள்!
 
இளைஞன் செடியை நல்ல இடமாக தோண்டி நட்டு வைத்து தினமும் நீரும் உரமும் தெளித்து நன்றாக வளர்த்தான்!
 
ஆனால் பெரியவர் நட்டு வைத்ததோடு சரி! தண்ணீரும் ஊற்ற வில்லை உரமும் போட வில்லை!
 
ஒரு மாதம் ஓடியது இளைஞன் வைத்த செடி நன்றாக வளர்ந்து இருந்தது.
 
பெரியவர் வைத்த செடி சிறியதாக வளர்ந்து இருந்தது.
 
அன்று இரவு திடீர் என்று பெரிய காற்றுடன் மழை !
 
இளைஞன் வைத்த செடி காற்றில் ஒடிந்து மழையில்
அடித்து செல்லப்பட்டது!
 
ஆனால் பெரியவர் வைத்த செடி அப்படியே மழை
புயல் தாங்கி நின்றது!
 
மறு நாள் காலை இளைஞன் பெரியவர் கிட்ட இது எப்படி சாத்தியம்! நான் தினம் நீர் ஊற்றி உரம் போற்று
 
நன்றாக வளர்ந்து இருந்த செடி ஒடிந்து மழையில்
அடித்து செல்லப்பட்டது! நீங்கள் தண்ணீர் கூட ஊற்ற வில்லை ஆனால் செடி எப்படி புயல் மழையை
 
தாங்கி நிற்கிறது என்று கேட்க ! அதற்கு அவர் சொன்னார் ! நீ எல்லாம் அதற்கு கொடுத்தால் அது சுகமாக வேர் விடாமல் அப்படியே இருந்து விட்டது.
 
 
நான் வைத்த செடி நான் நீர் ஊற்றாததால் உயிர் வாழ நிலத்தில் வேர் ஊன்றி நன்கு வளர்ந்து விட்டது!
 
இன்றைய இளைஞர்கள் வாழ்க்கையும் அப்படித்தான் என்றார்.💚

 🙏🌹 நன்றி இணையம்            🌹🙏 

🌷 🌷🌷 🌷  May be an image of 1 person, lake and grass 🌷 🌷🌷 🌷

1940 - 1980 ... பழைய தஞ்சை ... 'பொத்த காசு காலணா'

மணக்கால் அய்யம்பேட்டை | 10:16 AM | Best Blogger Tips

 May be an image of 1 person

1940 - 1980 ...
பழைய தஞ்சை ...
'பொத்த காசு காலணா'
(ஓட்டை காலணா) காணாமல் போன கதை
1930 - 1940 களில் ...
மின்சக்தி வருகையால் வாழ்க்கை தரம் வெகுவாக 1940-50 களில் இருந்து மாற தொடங்கின ... முன்பு சொன்னது போல .... வசதி பெற்ற வீடுகளில் மெதுவாக குண்டு பல்பு லைட், பேன், மற்றும் ரேடியோ புக ஆரம்பித்தன .. மண்எண்ணெய் அரிக்கன் விளக்குகள்.. பனை விசிறிகள் போன இடம் தெரியவில்லை.
1930- 40 களில் சினிமா கொட்டைகைகள், டெலிபோன்கள் சேவை ஆரம்பித்தன ... 1930 - 1940களில் ட்ராமா கொட்டகைகள் மற்றும் சபாக்கள், சினிமா கொட்டைகளாக மாற்றப்பட்டன .. தஞ்சையின் முதல் சினிமா கொட்டகை
"டவர் சினிமா"
(பிறகு ஞானம் டாக்கீஸ் என பெயர் மாற்றம்) . ..
1950களில் எனக்கு தெரிந்த முதல் காசு ... பொத்த காசு காலணா .. பெரிய காலணா .. அரைணா... ஒரு அணா... நாலணா எட்டணா .. ஒரு ருபாய் காசு .....
(16 அணா = 1 ரூபாய்) ... காசுக்கு மதிப்பு இருந்த காலம் ... ஒரு முட்டை ஒரு அணா , கோழியின் விலை முக்கால் ரூபாய் ... ஒரு பவுன் தங்கத்தின் விலை ருபாய் 54/= ... ஆனால் ஒரு பவுண்ட் ஆஸ்திரேலியா திராட்சை ரூபாய் 20க்கு விற்கப்பட்டது ...
உள்நாட்டில் அப்போது திராட்சை உற்பத்தி இல்லாத காலம் .. அப்போது ஒரு காலன் பெட்ரோல் சுமார் இரண்டு ரூபாயாக இருந்தது .. ஒரு காலன் என்றால் 4.5 லிட்டர் க்கு சமம்.
தங்கம்.. குண்டுமணி கணக்கில் எடை போடுவார்கள் ..
தானியம்/ அரிசி ... படி கணக்கில் .. சின்ன படி .. பெரிய படி.. மரக்கால் கணக்கிலும் அளப்பார்கள்....
மது பாட்டில்.. டானிக் .. மருந்து... அவுன்ஸ் கணக்கில் .. ஒரு அவுன்ஸ் 30 ml க்கு சமம்.
எண்ணெய்.. பால் ... சேர் கணக்கில் .. ஒரு சேர் சுமார் 170 ml க்கு சமம்
பெட்ரோல் ... காலன் கணக்கில்
எடை ... பவுண்ட் கணக்கில் .. ஒரு பவுண்ட்= 0.45 கிலோ.
அளவு ... அடி கணக்கில்
1958ஆம் ஆண்டு மெட்ரிக் முறை அறிமுகமானது ... மெதுவாக செல்லாமல் போனது அணா .. படி .. சேர் ..
அணா பைசாவானது ... படி மற்றும் சேர் .. லிட்டர் ஆனது ,
பெட்ரோலுக்கு காலனுக்கு பதிலாக லிட்டர் அளவு அறிமுகமானது ..
எடை ... பவுண்ட் கணக்கில் இருந்து கிலோகிராம் கணக்காக மாறியது ...
சாலைகளில் மைல் கற்கள் .. கிலோமீட்டர் கற்களாக மாறின
ஆனால் ... அடி ... மீட்டராக மாறினாலும் இன்று வரை அடி கணக்கே உபயோகத்தில் இருக்கின்றது ... பாடத்திட்டங்களில் உள்ள கணக்கு பாடங்களும் மெட்ரிக் முறைக்கு மாற்றப்பட்டன ..
1962ல், காமராஜர் ஆட்சியில், கரூர் - திருச்சி - தஞ்சை - நாகை ஸ்டேட் ஹய்வே சிமெண்ட் ரோடாக மாறிய காலங்களில் கூட மைல் கற்கள் மற்றும் பர்லாங் கற்கள் தான் இருந்தன
(8 பர்லாங் ஒரு மைல்) ...
படித்ததில் மனம் கவர்ந்தது ...

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

 

இரயில்களில் #DEMU & #MEMU & #EMU

மணக்கால் அய்யம்பேட்டை | 9:41 AM | Best Blogger Tips

DEMU - MEMU - EMU - LHB - ICF , back to back , skipping Asaoti & SMDP in  high speed , Railfanning


இரயில்களில் #DEMU & #MEMU & #EMU என மூன்று வகைகள் உள்ளன.
 May be an image of 1 person, train, railway and text
🚂 #EMU வகை இரயில்களில் படிகட்டுகள் இல்லை.எனவே இரயில்நிலையங்களில் தனி நடைமேடை தேவைப்படும்.
 May be an image of text
இதில் 6&9&12 என்ற எண்ணிக்கையில் பெட்டிகள் இருக்கும்.சென்னையில்[TN] மட்டும் இயங்குகிறது.
 
🚂#DEMU வகை இரயில்களில் 8 பெட்டிகள் மட்டுமே இருக்கும் குறுகிய தூரம் மட்டுமே இயக்கப்படும்.டாய்லெட் வசதி உண்டு.
May be an image of 1 person, train, railway and text
 May be an image of text that says "DEMU Train டீசல் எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட் என்பது DEMU ரயிலின் முழு வடிவமாகும். அதாவது டீசல் இன்ஜின் மூலம் இயங்குவது இதன் அர்த்தம். குறுகிய தூர பயணங்களுக்கு DEMU ரயில்கள் யயன்படுத்தப்படுகின்றன. இதில் டீசல் எலக்ட்ரிக் DEMU, டீசல் மெக்கானிக்கல் DEMU மற்றும் டீசல் ஹைட்ராலிக் DEMU என மூன்று வகைகள் உள்ளன. மணிக்கு 120 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது, ஒவ்வொரு மூன்று பெட்டிகளுக்கும் பிறகு ஒரு பவர் கோச் இருக்கும்."
🔹️தஞ்சை-திருச்சி,
தஞ்சை-காரைக்கால் 
 
🚂#MEMU வகை இரயில்களில் 8,12,14என பெட்டிகளின் எண்ணிக்கை காணப்படும்.நெடுந்தூரம் இயக்கப்படும்.டாய்லெட் வசதி உண்டு.
May be an image of train, railway and text
 May be an image of text that says "MEMU Train மெயின்லைன் எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட் என்பது MEMU ரயிலின் முழு வடிவமாகும். மின்சாரத்தை கொண்டு குறைந்த மற்றும் நடுத்தர தூரம் பயணம் செய்யும் ரயிலாகும். ஒவ்வொரு 4 பெட்டிகளுக்கும் பிறகு ஒரு பவர் கார் பொருத்தப்படிருக்கும். மணிக்கு அதிகபட்சம் 160 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது, 200 கி.மீ.க்கும் அதிகமான தூர பயணங்களுக்கு MEMU ரயில்கள் பயன்படுத்தப்படுகின்றன."
🔸️மயிலாடுதுறை-சேலம்
🙏🌹 நன்றி இணையம்May be an image of 1 person and smiling            🌹🙏

உண்மையான வறுமை என்பது மனிதநேயத்தின்

மணக்கால் அய்யம்பேட்டை | 10:31 AM | Best Blogger Tips

 யானை - சென்னையில் உள்ள ஒரு உணவகத்தில் பணிபுரியும்... | Facebook

சென்னையில் உள்ள ஒரு உணவகத்தில் பணிபுரியும் பணிப்பெண் சாரா.

பணக் கஷ்டம் காரணமாக உணவுக்கு பணம் செலுத்த முடியாத ஒரு தம்பதியரை தன் டேபிளில் சந்தித்தார்.

விலை கம்மியான உணவுகளை பரிந்துரைக்கும்படி அவர்கள் அவளிடம் கேட்டார்கள், சாரா அவர்கள் சொன்னபடி கொடுத்தாள்.

அந்த தொகையை கூட அவர்களால் செலுத்த முடியாது என்று சாரா புரிந்து கொண்டார். மிக எளிமையான தம்பதிகள்.
ஆத்தூரார் பெ. மாரிமுத்து | சென்னையில் உள்ள ஒரு உணவகத்தில் பணிபுரியும்  பணிப்பெண் சாரா, பணக் கஷ்டம் காரணமாக உணவுக்கு பணம் செலுத்த முடியாத ...
அவர்கள் சாப்பிட்டு முடித்த பிறகு, அவள் அவர்களிடம் ஒரு குறிப்பைக் கொடுத்தாள்:

உங்களுக்காக, எனது தனிப்பட்ட கணக்கிலிருந்து உங்கள் உணவு கட்டணத்தைச் செலுத்தி விட்டேன்.
அதோடு எனது சிறிய உதவியாக
இந்த 100 ரூபாயை வைத்துக் கொள்ளுங்கள், வந்ததற்கு நன்றி. - சாரா"

சாராவை ஆச்சரியப்படுத்தியது என்னவெனில், தனக்கு பணப் பிரச்சனைகள் இருந்தபோதிலும் இந்த உதவியால், அவள் மகிழ்ச்சியாக உணர்ந்தாள்.

கிட்டத்தட்ட ஒரு வருடமாக வாஷிங் மெஷினுக்கான பணத்தைச் சேமித்து வந்தாள். தன் தேவையை விட மற்றவர்களின் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுப்பதாக
அவளுடைய தோழி அவளைத் திட்டினாள்.

இதற்கிடையில், சாராவின் தாய் தொலைபேசியில் அழைத்து, "என்ன செய்தாய், சமூக வலைதளங்கள் உன் செயலைப் பாராட்டுகின்றன!"

சாராவின் கருணை செயல் குறித்து இந்த ஜோடி பேஸ்புக்கில் நன்றியோடு பதிவிட்டிருந்தது, அது வைரலானது.
money problem solution astrology : பணக்கஷ்டம் தீர வேண்டுமா? இந்த ஒரு பொருளை  உடன் வைத்துக் கொள்ளுங்கள்
சாரா தனது முகநூல் கணக்கைத் திறந்து பார்க்கும்போது , அவரைச் சந்திக்க விரும்பும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் மற்றும் செய்தியாளர்களிடமிருந்து நூற்றுக்கணக்கான குறுஞ் செய்திகள் வந்திருந்தன.

அடுத்த சில நாளில், அவர் ஒரு பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றி, பின்வரும் பரிசு பொருட்களை பெற்றார் :

■   ஒரு ஆடம்பரமான வாஷிங் மெஷின்
■   ஒரு நவீன தொலைக்காட்சி பெட்டி
■   எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திடமிருந்து ரூ.5,000 ஷாப்பிங் வவுச்சர்

அவள் பெற்ற மொத்தத் தொகை ரூ.1,00,000 ஐத் தாண்டியது.

 தம்பதியரின் உணவுக்காக அவள் செலவழித்த 100 ரூபாய் காரணமாக அவள் வாழ்க்கை மாறியது.

உண்மையான தாராள உதவும் மனப்பான்மை என்பது உங்களுக்குத் தேவையில்லாத ஒன்றைக் கொடுப்பது அல்ல, ஆனால் உங்களுக்குத் தேவையானதை உங்களைவிட
அதிகம் தேவைப்படும் ஒருவருக்குக் கொடுப்பதாகும்.

உண்மையான வறுமை என்பது மனிதநேயத்தின் வறுமை.......

 

🙏🌹 நன்றி இணையம்   May be an image of 1 person, lake and grass         🌹🙏