
இயற்கை சூழ்ந்த அழகிய ஊர் ! 18 கோவில்களும் ! 18 குளங்களும் ! 18 தெருங்களும் இருக்கும் அழகிய கிராமம் ! பழமையான பெயர் திருப்பெருவேளூர் ! தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 92வது தலம். ! அழகா அமைத்துள்ள தெருங்கள் ! எங்கள் ஊா்.
சேஷாத்ரி ஸ்வாமிகளின்
மற்றவர்கள் பெருமையாக ..... வாழ்வதைவிட, உங்கள் நிம்மதிக்காக வாழுங்கள்.... 🙏🙏🙏❤️❤️❤️
"பெருமை" உங்களுக்கு என்ன செய்யும்!
30 ஆண்டுகளுக்கு பிறகு எனது வகுப்பு தோழனை அன்று சந்தித்தேன்.
நான் அவரை ஒரு ஹோட்டல் லாபியில் மீண்டும் பார்த்தபோது, அவர் எளிமையானவராக இருந்தார்.
அவர் எளிய உடைகளை அணிந்திருந்தார்.
நான் கொஞ்சம் நிம்மதியாக உணர்ந்தேன்.
அவர் என்னிடம் நடந்து வந்து என்னை மீண்டும் பார்த்ததில் மகிழ்ச்சி என்றார். என்னுடன் ஒப்பிடுகையில் என்னைவிட கொஞ்சம் வசதி கம்மியானவராகவே தெரிந்தது.
நாங்கள் தொலைபேசி எண்களையும், தொடர்பு விவரங்களையும் பரிமாறிக்கொண்டோம்.
என்னுடையதை கொடுத்தபோது அவர் முகத்தில் ஒரு மகிழ்ச்சியைக் காண முடிந்தது.
பெருமிதத்துடன் எனது புத்தம் புதிய ரேஞ்ச் ரோவரில் அவரை வீட்டில் இறக்கி விடுகிறேன் என்று அவரிடம் சொல்லி அதை அவரிடம் காட்டினேன்.
அவர் மறுத்து, அவர் ஏற்கனவே தனது காரை வரச்சொல்லி இருப்பதாக கூறினார்.
அது பழையதாகத் தோன்றியது.

'2001 ஹோண்டா'
மறுநாள் அவரை என் வீட்டில் மதிய உணவுக்கு அழைத்தேன்.
எனது வெற்றியையும் செல்வச் செழிப்பையும் அவருக்குக் காட்ட வேண்டும்.
நான் வசித்த பார்க்வியூவுக்கு அவர் காரில் வந்தார்.
எனது வீட்டைப் பார்த்து அவர் ஈர்க்கப்பட்டார்.
அந்த வீட்டை லோன் போட்டு கடனில் தான் வாங்கி இருந்தேன்.
நாங்கள் மதிய உணவு சாப்பிட்டோம்.
அவர் சிறு வணிகம் மற்றும் ரியல் எஸ்டேட்டில் இருப்பதாக என்னிடம் கூறினார்.
நான் அவருக்கு எப்படி உதவுவது என்று கேட்டேன்.
அவர் நலமாக இருப்பதாக கூறி மறுத்து விட்டார்.
ஆர்வமிருந்தால் கொஞ்சம் கடனை அடைக்க உதவுகிறேன் என்று கூட சொன்னேன்...
அவர் என்னைப் பார்த்து சிரித்தார்.
அவர் என்னை விரைவில் அவரது வீட்டிற்கு அழைப்பதாக என்னிடம் கூறினார்.
அவருடைய பழைய கார் வந்தது. என்னிடம் இருப்பவற்றிற்கு நான் கடவுளுக்கு நன்றியுள்ளவனாக இருந்தேன்.
“விரல்கள் அனைத்தும் சமமாக இல்லை” என மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்...
நான் அதிர்ஷ்டசாலி.
நான் நல்ல கம்பெனியில் வேலை செய்கிறேன்.
இரண்டு வாரங்கள் கழித்து, அவரைப் பார்க்க நானும் என் மனைவியும் சென்றோம்.
அந்த நண்பனின் அந்தஸ்தில் அவள் ஈர்க்கப்படாததால் கூட வர தயங்கினாள்.
கல்லூரியில் நாங்கள் நெருங்கிய நண்பர்கள் என்பதை சொல்லி என்னால் அவளை எளிதில் சமாதானப்படுத்த முடிந்தது.
எஸ்டேட்டைப் பார்த்தோம்.
அவரது வீட்டிற்குச் செல்லும் வழியைக் கேட்டோம்.
எங்களை வழிநடத்துபவர்கள் அவருடைய பெயரை கேட்டவுடன் மரியாதையுடன் பேசினார்கள்.
அது ஒரு எளிய ஆனால் அழகான வீடு. ஒரு 4 படுக்கையறை பங்களா. முன்னால் 4 கார்கள் நிற்பதைப் பார்த்தேன்.
நாங்கள் அவரது வீட்டிற்குள் நுழைந்தோம்.
அது உள்ளே மனதை தொடும் அழகுடன் எளிமையாக நேர்த்தியாக இருந்தது. எங்களை அன்புடன் வரவேற்றார்.
மதிய உணவு நன்றாக பரிமாறப்பட்டது.
மதிய உணவின் போது, அவர் எனது எம்.டி பற்றி கேட்டார்.
அவர்கள் இருவரும் நண்பர்கள் என்று கூறினார்.
அருகில் இருந்த அவரது டேபிள் ஒன்றில் கம்பெனி கிஃப்ட் ஒன்றைப் பார்த்தேன். நான் பணிபுரிந்த கம்பெனியின், சுமார் 38% பங்குகளை அந்த கம்பெனி வைத்திருந்தது.
அவரிடம் இதுபற்றி விசாரித்தேன். அவர் சிரித்தார் . அவர் என்னிடம், அந்த கம்பெனி தன்னுடையது என்று சொன்னார்.
இந்த பெரிய தோட்டமும் அவருக்குச் சொந்தமானது என்றார்.
எப்போது "சார்" என்று கூப்பிட்டேன் என்று தெரியவில்லை...
எனக்கும் அவர் மீது பிரமிப்பு ஏற்பட்டது.
பணிவு பற்றி நான் ஒரு பாடம் கற்றுக்கொண்டேன்.
ஒரு பெரிய பாடம்.
தோற்றம் ஏமாற்றும்.
என் அசௌகரியத்தை அவர் கவனித்தார்.
வீட்டிற்குத் திரும்பும்போது நான் மிகவும் அமைதியாக இருந்தேன்.
என் மனைவி பணிவாகவும் மிகவும் அமைதியாகவும் இருந்தாள்.
அவள் மனதில் உள்ள எண்ணங்களை என்னால் உணர முடிந்தது.
கார் கண்ணாடியில் நான் என்னையே பார்த்தேன்.
கடன்கள், அதிக சுமைகள் ஆகியவற்றில் வாழ்கிறேன், ஆனால் எனக்குச் சம்பளம் கொடுப்பவர் மிகவும் அமைதியானவர், எளிமையான வாழ்க்கை வாழ்கிறார்..!
உண்மையில் ஆழமான ஆறுகள் அமைதியாக ஓடுகின்றன..!
மற்றவர்கள் பெருமையாக பேசவேண்டும் என்று வாழ்வதைவிட, உங்கள் நிம்மதிக்காக வாழுங்கள்....
🙏🙏🙏❤️❤️❤️
#படித்ததில்_ பிடித்தது
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏
Ramesh
கொஞ்சம் சிரிப்போமே..!!!!!!
![]()
😂😂😂😂
மெதுவா படிச்சுட்டு சிரிச்சுட்டு படுங்க நிம்மதியா தூக்கம் வரும் !!
தத்துவம் படிங்க கெட்டியா புடிங்க...
1. உலகத்திலேயே சிறந்த ஜோடி
செருப்புதான்... ஒன்றை பிரிந்தால் மற்றொன்று வாழவே வாழாது..!
2. எல்லா பெண்களையும் விசிலடித்து திரும்பி பார்க்க வைத்தாலும் செருப்படி வாங்காத ஒரே ஜீவன் குக்கர் தான்..!
3. மாமா பொண்ணும், உப்புமாவும் ஒன்னு! வேற எதுவுமே கிடைக்காத பட்சத்துல நம்மளோட தலையில கட்டப்படும்!
4. நிம்மதியாக இருக்கும் வயதில் மனைவியைத் தேடுவதும், மனைவி வந்தப்பின் நிம்மதியைத் தேடுவதுமே.. ஆண்களின் வாழ்க்கை தேடல்..!
5. இந்த உலகத்தில் என்னையும் ஒரு மனிதனாக மதித்து பொன்னாடை போர்த்தும் ஒரே நபர்.. சலூன் கடைக்காரர் மட்டுமே..!
"நீங்க வெட்டுங்க பாஸ்.."..!! .
6. ஒரு புடவை வாங்க முன்னூறு புடவைகளைப் புரட்டிப் பார்த்த மனைவியிடம் எரிச்சலுடன் கணவன் சொன்னான்:
"ஆதிகாலத்தில் ஏவாள் வெறும் இலையை மட்டுமே உடுத்தி இருந்தாள். இது போன்ற தொல்லைகள் நல்ல வேளை ஆதாமுக்கு இல்லை."
இதற்கு மனைவி சொன்ன பதில்:
"அதுக்கு அவன் எத்தனை மரம் ஏறி இறங்கினானோ?"
7. தொலைபேசியில் ஒரு பதற்றமான குரல்..
"டேய் மச்சான்... எங்கடா இருக்க?"
"வீட்லதான்டா இருக்கேன்..."
"அப்பாடா... இப்பதான்டா நிம்மதியா இருக்கு...!!"
"ஏன்டா? என்ன விஷயம்??"
"அதில்லடா.....
காலையில பேப்பரை பார்த்தேன். அதுல, உங்க தெருவுல வெட்டியா சுத்திகிட்டிருந்த நாய்களை எல்லாம் கார்பரேசன்காரங்க புடிச்சுட்டு போனதா செய்தி போட்டிருந்துச்சு.
அதான்... எங்க நீ மாட்டிகிட்டீயோன்னு பயந்தே போயிட்டேன்....."
8. அம்மா: என்னடி உன் புருஷன் தினமும் இப்படி குடிச்சுட்டு வராரே
நல்லாவா இருக்கு.?
மகள் : தெரியலை அம்மா நான் இன்னும் டேஸ்ட் பண்ணி பார்க்கலை!
9. நீ என் தங்கக் குட்டியாம்… தாத்தா சொல்றதைக் கேப்பியாம்…
நான் உன் புத்தகப் பையைத் தூக்கிட்டு வருவேனாம்…. பாப்பா நடந்து வருவியாம்.
வேண்டாம் தாத்தா… என் பையைத் தூக்கி நீ கஷ்டப்பட வேணாம். நானே என் பையைத் தூக்கிக்கிறேன். நீ என்னைத் தூக்கிக்கிட்டு வந்தாப் போதும்…
10. “ஏன் ஸ்கூட்டரை திருடினே…?”
“டிராபிக் போலீஸ்காரர்தாங்க சீக்கிரம் வண்டிய எடு, வண்டிய எடுன்னு அவசரப்படுத்தினாரு எசமான்..!”
11. பகல்ல உங்களுக்குக் கண் தெரியாதா டாக்டர்….?”
“தெரியுமே…ஏன் கேட்கறீங்க….. ?”
“இல்ல…பார்வை நேரம் மாலை ஆறிலிருந்து எட்டுவரைன்னு போர்டு
வெச்சிருக்கீங்களே… அதான் கேட்டேன்.!”
12. முதலாளி: டேய் முனியா, நான் கொஞ்சம் வீட்டுக்குப்போய் ஓய்வு
எடுத்துக்கிட்டு வர்றேன்… நீ
கடையைப் பார்த்துக்க…
முனியன்: உங்களுக்கு எதுக்கு சிரமம் முதலாளி? நானே போய் ஓய்வை எடுத்துக்கிட்டு வந்துடறேனே!
13. டீச்சர் கேட்டார்...
பார்வதி ஏன் சிவபெருமானை மணந்தார் ?
குறும்புக்கார மாணவனின் பதில்...
எப்பவும் தலையில் சந்திரன் இருப்பதால் வெளிச்சமாக இருக்கும்... EB பில் வராது..!!
ஜடாமுடியிலிருந்து கங்கை நதி கொட்டுவதால் மோட்டார் போட்டு டேங்க்கில் தண்ணீர் ஏற்ற வேண்டாம்..!
சிவன் பச்சை காய்கறி சாப்பிடுவதால் சமைத்து கொட்ட வேண்டாம்..!
சிவனுக்கு அம்மா அப்பா இல்லாததால் மாமியார் தொல்லை இல்லை...
மாணவனின் பதிலை கேட்டு மயங்கி விழுந்த டீச்சர் எழுந்திருக்கவேயில்லை.
14. ஜட்ஜ் : நீங்க ரொம்ப வேகமா வண்டி ஓட்டியதா போலீஸ் சொல்லுறாங்க? நீங்க இல்லேன்னு சொல்லுறேங்க! இதுக்கு ஆதாரம் ஏதாவது உண்டா?

ஐயா நான் என் பொண்டாட்டிய கூட்டிட்டு வர மாமனாரு வீட்டுக்கு போய்கிட்டு இருந்தேன்யா!
நீங்களே சொல்லுங்கய்யா எவனாவது பொண்டாட்டிய வீட்டுக்கு கூட்டிட்டு வர வேகமா போவானா... ?
ஜட்ஜ் : கேஸ் டிஸ்மிஸ்ட்...!

முதல்ல அவரை விடுதலை செய்ங்க...!
படித்ததில் ரசித்தது...
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏
Ramesh


