சேஷாத்ரி ஸ்வாமிகளின்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:46 PM | Best Blogger Tips

 No photo description available.

மகான்கள் பதிவு 1: ஒரு அற்புத ஞானி.....
 
சேஷாத்ரி ஸ்வாமிகளின் சிறந்த பக்தர் குழுமணி நாராயண சாஸ்திரி. 
 
அவர் ஒருநாள் காலை 6 மணிக்கு சாது சத்திரத்திற்கு பக்கத்தில் ஸ்வாமியை தேடி வந்து பார்த்து வணங்கினார். 
 
''என்ன நாணா விடிகாலம்பற இந்த பக்கம்?''
 
''சுவாமி, நான் ஊருக்கு போகிறேன், உங்க கிட்டே ஆசிர்வாதம் வாங்கிண்டு உத்தரவு தர வேண்டும்னு கேட்க வந்தேன் ''
 
சாஸ்திரியின் கழுத்தை கட்டிக் கொண்டு ஸ்வாமிகள் மேலே பார்த்தார். 
 
ஏதோ பக்ஷி ஒன்று பறப்பது போல்
வெகு உயரத்தில் ஒரு சிறிய உருவம் தென்பட்டது.
 
''அது என்ன கருடனா பறக்கிறது, பார்த்து சொல்லு ?''
 
''ஆமாம் சுவாமி, கருடன் போல தான் தோன்றுகிறது''
 
சுவாமி மேலே கையை மூன்று தடவை காட்டி ''வா'' என்று சைகை செய்தார். 
 
''அது வரும் நீ போ''
 
சாஸ்திரி ரயில் நிலையம் நோக்கி நடந்தார்.
ரயிலடிக்கு போகும் வழியில் ஐந்து நிமிஷத்தில் ரெண்டு கருட பக்ஷிகள். இடதும் வலதும் தலைக்கு மேல் பறந்தன. 
 
இன்னும் சற்று நேரத்தில் ஐந்தாறு கருடன்கள் அவ்வாறே சென்றன..... 
 
ஸ்டேஷன் போய் சேர்வதற்குள் கிட்டத்தட்ட நூறு கருடன்கள் தலைக்கு மேல் வட்டமிட்டுக் கொண்டிருந்தன.... 
 
தற்செயலாக இவ்வளவு கருடன்களை சேர்ந்தாற் போல் எங்காவது பார்க்க முடியுமா? இப்படி எங்காவது கூட்டமாக வருமா? 
 
எப்போது ஸ்வாமிகள் அவைகளை ''போகலாம்'' என்று சொன்னாரோ?
 
இன்னொரு சம்பவம் இதே போல் நடந்தது....
வெங்கடாசல முதலியாரும் அவர் மனைவி சுப்புலட்சுமியும் ஸ்வாமியின் நெருங்கிய பக்தர்கள்..... 
 
திடீரென்று அடிக்கடி அவர்கள் வீட்டுக்கு சேஷாத்ரி ஸ்வாமிகள் வருவார்... கொடுத்ததை சாப்பிடுவார்.... 
 
அந்த வீட்டில் ஒரு பூவரச மரம், ரெண்டு முருங்கை மரம் இருந்தது.... 
 
அன்று அமாவாசை....
 
முற்றத்தில் அவர்களோடு சிரித்துப் பேசிக்கொண்டே இருந்த ஸ்வாமிகள் ''சுப்புலக்ஷ்மி உனக்கு ஒரு வேடிக்கை காட்டட்டுமா வந்து பார்'' என்று ஸ்வாமிகள் ஆகாயத்தை நோக்கி கையைத் தூக்கி ''வா'' என்று ஜாடை காட்டினார்... 
 
முதலில் ஒரு காக்கை, அப்புறம் ரெண்டு மூன்று, அப்புறம் பத்து, ஐம்பது, நூறு போல திரண்டது. அவற்றோடு கிளிகள், குருவிகள், மஞ்சள் குருவி, கருங்குருவி , எல்லாமுமே முற்றத்தில் தரையில், மரங்களில், ஓட்டின் மேல் நிரம்பி விட்டன. காச் மூச் என்று சத்தம்.... 
 
நடுவில் அவைகளோடு நின்று ஸ்வாமிகள் ஏதோ பேசுகிறார்... 
 
அவை திரும்ப ஏதோ சப்தம் கொடுக்கின்றன....
சுப்புலட்சுமி இந்த வேடிக்கையை ரசித்து கொண்டு ஏழெட்டு நிமிஷங்கள் நின்றாள்.....
''சுப்புலக்ஷ்மி, விளையாடியது போதும். பொழுது போய் விட்டதே. அவர்கள் எல்லோரும் தங்கள் வீட்டுக்கு போகவேண்டாமா? பசிக்காதா?
வீட்டில் குஞ்சுகள் காத்திருக்காதா? '' 
 
என்று சொல்லி ஸ்வாமிகள் தனது மேல் துணியில் இருந்து ஒரு நூலை பிய்த்து வாயால் ''பூ'' என்று ஊதி 'போ' என்று ஜாடை காட்ட அந்த பறவைகள் எல்லாமே பறந்து போய்விட்டன....
மஹான் என்ன அதிசயம் வேண்டுமானாலும் நிகழ்த்துவார்.... 
 
சந்தேகமே இல்லை....
 
ஓம் சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் திருவடிக்கே!!!!
 
நன்றி:
பகிர்வு:
திரு நங்கநல்லூர் JK SIVAN Sir
 

🌷 🌷🌷 🌷  🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🙏✍🏼🌹

Ramesh

 
🙏✍🏼🌹