"பெருமை" உங்களுக்கு என்ன செய்யும்!
30 ஆண்டுகளுக்கு பிறகு எனது வகுப்பு தோழனை அன்று சந்தித்தேன்.
நான் அவரை ஒரு ஹோட்டல் லாபியில் மீண்டும் பார்த்தபோது, அவர் எளிமையானவராக இருந்தார்.
அவர் எளிய உடைகளை அணிந்திருந்தார்.
நான் கொஞ்சம் நிம்மதியாக உணர்ந்தேன்.
அவர் என்னிடம் நடந்து வந்து என்னை மீண்டும் பார்த்ததில் மகிழ்ச்சி என்றார். என்னுடன் ஒப்பிடுகையில் என்னைவிட கொஞ்சம் வசதி கம்மியானவராகவே தெரிந்தது.
நாங்கள் தொலைபேசி எண்களையும், தொடர்பு விவரங்களையும் பரிமாறிக்கொண்டோம்.
என்னுடையதை கொடுத்தபோது அவர் முகத்தில் ஒரு மகிழ்ச்சியைக் காண முடிந்தது.
பெருமிதத்துடன் எனது புத்தம் புதிய ரேஞ்ச் ரோவரில் அவரை வீட்டில் இறக்கி விடுகிறேன் என்று அவரிடம் சொல்லி அதை அவரிடம் காட்டினேன்.
அவர் மறுத்து, அவர் ஏற்கனவே தனது காரை வரச்சொல்லி இருப்பதாக கூறினார்.
அது பழையதாகத் தோன்றியது.
'2001 ஹோண்டா'
மறுநாள் அவரை என் வீட்டில் மதிய உணவுக்கு அழைத்தேன்.
எனது வெற்றியையும் செல்வச் செழிப்பையும் அவருக்குக் காட்ட வேண்டும்.
நான் வசித்த பார்க்வியூவுக்கு அவர் காரில் வந்தார்.
எனது வீட்டைப் பார்த்து அவர் ஈர்க்கப்பட்டார்.
அந்த வீட்டை லோன் போட்டு கடனில் தான் வாங்கி இருந்தேன்.
நாங்கள் மதிய உணவு சாப்பிட்டோம்.
அவர் சிறு வணிகம் மற்றும் ரியல் எஸ்டேட்டில் இருப்பதாக என்னிடம் கூறினார்.
நான் அவருக்கு எப்படி உதவுவது என்று கேட்டேன்.
அவர் நலமாக இருப்பதாக கூறி மறுத்து விட்டார்.
ஆர்வமிருந்தால் கொஞ்சம் கடனை அடைக்க உதவுகிறேன் என்று கூட சொன்னேன்...
அவர் என்னைப் பார்த்து சிரித்தார்.
அவர் என்னை விரைவில் அவரது வீட்டிற்கு அழைப்பதாக என்னிடம் கூறினார்.
அவருடைய பழைய கார் வந்தது. என்னிடம் இருப்பவற்றிற்கு நான் கடவுளுக்கு நன்றியுள்ளவனாக இருந்தேன்.
“விரல்கள் அனைத்தும் சமமாக இல்லை” என மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்...
நான் அதிர்ஷ்டசாலி.
நான் நல்ல கம்பெனியில் வேலை செய்கிறேன்.
இரண்டு வாரங்கள் கழித்து, அவரைப் பார்க்க நானும் என் மனைவியும் சென்றோம்.
அந்த நண்பனின் அந்தஸ்தில் அவள் ஈர்க்கப்படாததால் கூட வர தயங்கினாள்.
கல்லூரியில் நாங்கள் நெருங்கிய நண்பர்கள் என்பதை சொல்லி என்னால் அவளை எளிதில் சமாதானப்படுத்த முடிந்தது.
எஸ்டேட்டைப் பார்த்தோம்.
அவரது வீட்டிற்குச் செல்லும் வழியைக் கேட்டோம்.
எங்களை வழிநடத்துபவர்கள் அவருடைய பெயரை கேட்டவுடன் மரியாதையுடன் பேசினார்கள்.
அது ஒரு எளிய ஆனால் அழகான வீடு. ஒரு 4 படுக்கையறை பங்களா. முன்னால் 4 கார்கள் நிற்பதைப் பார்த்தேன்.
நாங்கள் அவரது வீட்டிற்குள் நுழைந்தோம்.
அது உள்ளே மனதை தொடும் அழகுடன் எளிமையாக நேர்த்தியாக இருந்தது. எங்களை அன்புடன் வரவேற்றார்.
மதிய உணவு நன்றாக பரிமாறப்பட்டது.
மதிய உணவின் போது, அவர் எனது எம்.டி பற்றி கேட்டார்.
அவர்கள் இருவரும் நண்பர்கள் என்று கூறினார்.
அருகில் இருந்த அவரது டேபிள் ஒன்றில் கம்பெனி கிஃப்ட் ஒன்றைப் பார்த்தேன். நான் பணிபுரிந்த கம்பெனியின், சுமார் 38% பங்குகளை அந்த கம்பெனி வைத்திருந்தது.
அவரிடம் இதுபற்றி விசாரித்தேன். அவர் சிரித்தார் . அவர் என்னிடம், அந்த கம்பெனி தன்னுடையது என்று சொன்னார்.
இந்த பெரிய தோட்டமும் அவருக்குச் சொந்தமானது என்றார்.
எப்போது "சார்" என்று கூப்பிட்டேன் என்று தெரியவில்லை...
எனக்கும் அவர் மீது பிரமிப்பு ஏற்பட்டது.
பணிவு பற்றி நான் ஒரு பாடம் கற்றுக்கொண்டேன்.
ஒரு பெரிய பாடம்.
தோற்றம் ஏமாற்றும்.
என் அசௌகரியத்தை அவர் கவனித்தார்.
வீட்டிற்குத் திரும்பும்போது நான் மிகவும் அமைதியாக இருந்தேன்.
என் மனைவி பணிவாகவும் மிகவும் அமைதியாகவும் இருந்தாள்.
அவள் மனதில் உள்ள எண்ணங்களை என்னால் உணர முடிந்தது.
கார் கண்ணாடியில் நான் என்னையே பார்த்தேன்.
கடன்கள், அதிக சுமைகள் ஆகியவற்றில் வாழ்கிறேன், ஆனால் எனக்குச் சம்பளம் கொடுப்பவர் மிகவும் அமைதியானவர், எளிமையான வாழ்க்கை வாழ்கிறார்..!
உண்மையில் ஆழமான ஆறுகள் அமைதியாக ஓடுகின்றன..!
மற்றவர்கள் பெருமையாக பேசவேண்டும் என்று வாழ்வதைவிட, உங்கள் நிம்மதிக்காக வாழுங்கள்....
🙏🙏🙏❤️❤️❤️
#படித்ததில்_ பிடித்தது
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏
Ramesh


