அனுமனை நினைப்பதால் கிடைப்பவை!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:33 AM | Best Blogger Tips

Photo: அனுமனை நினைப்பதால் கிடைப்பவை!

Click the Link....Like the Page ---> http://www.facebook.com/Meipporul

புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா
அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனூமத் ஸ்மரணாத் பவேத்

அனுமனை
வணங்குவதால் கிடைக்கும் பயன்களைப் பேசும் இந்த சுலோகம் பிரபலமானது. இந்த 
சுலோகத்தைப் பொருளுணர்ந்து சொன்னாலே போதும் ஒருவித மனவலிமை பெருகுவதை 
உணரமுடியும். நல்லவை செய்வதற்கு எவையெல்லாம் தேவையோ அவையெல்லாம் அனுமனை 
நினைப்பதால் கிடைக்கும் என்று இந்த சுலோகம் கூறுகிறது.

புத்திர் பலம் - அறிவில் வலிமை
யசோ - புகழ்
தைர்யம் - துணிவு
நிர்பயத்வம் - பயமின்மை
அரோகதா - நோயின்மை
அஜாட்யம் - ஊக்கம்
வாக் படுத்வம் - பேச்சு வலிமை
ச - இவையெல்லாம்
ஹனூமத் ஸ்மரணாத் - அனுமனை நினைப்பதால்
பவேத் - பிறக்கின்றன.

அறிவுக்கூர்மை, புகழ், துணிவு, பயமின்மை, நோயின்மை, ஊக்கம், பேச்சுத்திறன் போன்றவை அனுமனை நினைத்தவுடன் கிடைக்கின்றன!

ஜெய் ஹனுமான் ஞான குண சாகர!புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா
அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனூமத் ஸ்மரணாத் பவேத்

அனுமனை
வணங்குவதால் கிடைக்கும் பயன்களைப் பேசும் இந்த சுலோகம் பிரபலமானது. இந்த
சுலோகத்தைப் பொருளுணர்ந்து சொன்னாலே போதும் ஒருவித மனவலிமை பெருகுவதை
உணரமுடியும். நல்லவை செய்வதற்கு எவையெல்லாம் தேவையோ அவையெல்லாம் அனுமனை
நினைப்பதால் கிடைக்கும் என்று இந்த சுலோகம் கூறுகிறது.

புத்திர் பலம் - அறிவில் வலிமை
யசோ - புகழ்
தைர்யம் - துணிவு
நிர்பயத்வம் - பயமின்மை
அரோகதா - நோயின்மை
அஜாட்யம் - ஊக்கம்
வாக் படுத்வம் - பேச்சு வலிமை
ச - இவையெல்லாம்
ஹனூமத் ஸ்மரணாத் - அனுமனை நினைப்பதால்
பவேத் - பிறக்கின்றன.

அறிவுக்கூர்மை, புகழ், துணிவு, பயமின்மை, நோயின்மை, ஊக்கம், பேச்சுத்திறன் போன்றவை அனுமனை நினைத்தவுடன் கிடைக்கின்றன!

ஜெய் ஹனுமான் ஞான குண சாகர!
 
Via மெய்ப்பொருள்
 
நாத்திக மன்னருக்கு விவேகானந்தரின் பதிலடி!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:33 AM | Best Blogger Tips

Photo: நாத்திக மன்னருக்கு விவேகானந்தரின் பதிலடி!
-------------------------
தன்னுடைய சொற்பொழிவுகளாலும் கருத்துக்களாலும் உலகெங்கும் புகழ் பெறும் முன் சுவாமி விவேகானந்தர் ஒரு திருவோடு ஏந்திய துறவியாக இந்தியா முழுவதும் சுற்றினார். இன்றைய ராஜஸ்தான் பகுதியில் அவர் சுற்றிக் கொண்டிருந்த பொழுது நடந்த ஒரு சம்பவம்.

ஆல்வார் நாட்டு திவானான மேஜர் ராம்சந்திரர் சுவாமிஜியைப் பற்றி கேள்விப்பட்டு, தமது வீட்டிற்கு அழைத்தார். அந்நாட்டு மன்னரான மங்கள் சிங் ஆங்கில மோகம் கொண்டவராக இருந்தார். சிந்தனை, செயல் அனைத்திலும் ஆங்கிலேய பாணியைப் பின்பற்றுவதில் நாட்டம் கொண்டிருந்தார். திவானுக்கு அது பிடிக்கவில்லை. மன்னர் சுவாமிஜியைச் சந்தித்தால் நல்லது என்று எண்ணினார் திவான். எனவே அவருக்கு, ‘ஆங்கிலத்தில் அபார அறிவு கொண்ட ஒரு பெரிய சாது இங்கே உள்ளார்’ என்று எழுதினார். மன்னர் மறுநாளே திவானின் வீட்டிற்கு வந்து சுவாமிஜியைச் சந்தித்தார்.

மன்னர் வந்து சுவாமிஜியை வணங்கி அமர்ந்து பேச்சைத் தொடங்கினார்.

மன்னர்: ‘சுவாமிஜி, நீங்கள் மிகவும் படித்தவர் என்று கேள்விப்பட்டேன். உங்கள் படிப்பிற்கு நீங்கள் கை நிறைய சம்பாதிக்கலாமே! ஏன் இப்படி பிச்சையெடுத்துத் திரிகிறீர்கள்?’

சுவாமிஜி: ‘மகாராஜா, நாட்டிற்கு செய்ய வேண்டிய கடமைகள் உங்களுக்கு எவ்வளவோ இருக்கின்றன, அவற்றை விட்டுவிட்டு நீங்கள் ஏன் வேட்டை அது இதென்று ஆங்கிலேயர்களுடன் நேரத்தைச் செலவிடுகிறீர்கள்?’

சிறிதும் தயக்கமின்றி வந்த சுவாமிஜியின் கேள்வி அங்கிருந்தோர் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மன்னர் அதைச் சாதாரணமாக எடுத்துக் கொண்டார்.

மன்னர்: ‘ஏன் என்பதற்கு குறிப்பாக எந்த காரணத்தையும் சொல்ல முடியாது. எனக்கு அது மிகவும் பிடித்திருக்கிறது.’

சுவாமிஜி: ‘அதுபோல்தான்; எனக்கு இது பிடித்திருக்கிறது. நான் பிச்சையெடுத்துச் சாப்பிடுகிறேன்.’

சிறிது நேரத்திற்குப் பிறகு 

மன்னர், ‘சுவாமிஜி எனக்கு உருவ வழிபாட்டில் எல்லாம் நம்பிக்கை இல்லை. என் கதி என்னவாகும்?’ என்று கேட்டார். இதைக் கேட்கும்போது அவர் சற்று சிரித்த முகத்துடன் கேலி செய்வது போன்ற தொனியில் கேட்டார். அவர் கேட்டவிதம் சுவாமிஜிக்கு எரிச்சலை மூட்டியது.

சுவாமிஜி: ‘நீங்கள் கேலி செய்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.’

மன்னர்: ‘இல்லை சுவாமிஜி, எல்லோரையும் போல், ஏனோ என்னால் இந்த மண்ணையும் மரத்தையும் கல்லையும் கட்டையையும் வழிபட முடியவில்லை. மறு உலகத்தில் துன்பப்படுவதுதான் என் தலை விதியா?’

சுவாமிஜி: ‘நல்லது, ஒவ்வொருவரும் அவரவர் நம்பிக்கைக்கு ஏற்ப வாழ வேண்டும். அதுதான் நல்லது’

இந்தப் பதிலை அங்கிருந்தயாரும் எதிர்பார்க்கவில்லை. சுவாமிஜி உருவ வழிபாட்டை ஏற்றுக் கொள்பவர். அவர் மன்னருக்கு தகுந்த விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்த்தவர்கள் ஏமாந்து போனார்கள். ஆனால் சுவாமிஜி தமது பதிலைக் கூறிவிட்டு அந்த அறையைச் சுற்றிப் பார்த்தார். அங்கே தொங்கிக் கொண்டிருந்த ஒரு படம் அவரது கருத்தைக் கவர்ந்தது. உடனே அதனைக் கொண்டுவருமாறு கூறினார்.

சுவாமிஜி: ‘இந்தப் படத்தில் இருப்பது யார்?’

திவான்: ‘அது மன்னரின் படம்.’

சுவாமிஜி திவானிடம் அடுத்ததாகக் கூறியது அனைவரையும் அதிர்ச்சியால் உறைய வைத்தது.

சுவாமிஜி: ‘திவான்ஜி, இந்தப் படத்தின்மீது துப்புங்கள்.’

அனைவரும் அதிர்ச்சியில் அசைவற்று நின்றனர். சுவாமிஜி அதைக் கண்டுகொள்ளாமல் ‘துப்புங்கள் திவான்!’ என்று மீண்டும் திவானிடம் கூறினார். திவான் அசையவில்லை. உடனே சுவாமிஜி அங்கிருந்த மற்றவர்களைப் பார்த்து, ‘திவான் இல்லாவிட்டால் இங்கே இருக்கின்ற வேறு யாராவது ஒருவர் முன்வாருங்கள். இந்தப் படத்தில் அப்படி என்ன தான் உள்ளது? வெறும் காகிதம் தானே! இதன் மீது துப்புவதற்கு ஏன் தயங்குகிறீர்கள்?’ என்று கேட்டார்.

அங்கிருந்த மற்றவர்களும் சுவாமிஜி கூறியதைச் செய்ய முன்வரவில்லை. அனைவரும் சுவாமிஜியையும் மன்னரையும் மாறி மாறி பார்த்தபடி திகைத்து நின்றனர். அப்போது சுவாமிஜி மீண்டும் திவானிடம், ‘என்ன, அப்படியே நிற்கிறீர்களே! இந்தப் படத்தின் மீது துப்புங்கள்’ என்று அழுத்தமாகக் கூறினார். அதன் பிறகும் திவானால் பொறுத்துக் கொண்டிருக்க முடியவில்லை; பதைபதைத்தவாறே நடுங்கிய குரலில்,

திவான்: ‘சுவாமிஜி, என்ன சொல்கிறீர்கள்? சொல்வதைப் புரிந்து கொண்டு தானா சொல்கிறீர்கள்? இது மன்னரின் படம். இதன் மீது என்னால் எப்படி துப்ப முடியும்?’ என்று கேட்டார்.

சுவாமிஜி: ‘இருக்கட்டுமே! மன்னரின் படம் தானே, மன்னர் அல்லவே! இந்தப் படத்தில் மன்னர் உயிருணர்வுடன் இல்லையே! இது வெறும் காகிதத் துண்டு. மன்னரின் எலும்போ சதையோ ரத்தமோ இதில் இல்லை, இது பேசுவதில்லை, நடப்பதில்லை, மன்னர் செய்வது போல் எதையும் செய்வதில்லை. இருந்தாலும் இதன் மீது துப்ப நீங்கள் யாரும் முன்வர மறுக்கிறீர்கள். ஏன்? ஏனெனில் இந்தப் படத்தில் மன்னரின் பிரதிபிம்பத்தை நீங்கள் காண்கிறீர்கள். இதன் மீது துப்பினால் மன்னரையே அவமதிப்பதாக உணர்கிறீர்கள்.’

இதனைக் கூறிவிட்டு சுவாமிஜி மன்னரைப் பார்த்து தமது பேச்சைத் தொடர்ந்தார்: ‘பாருங்கள் மகாராஜா! இந்தப் படம் நீங்கள் அல்ல. ஆனால் ஒரு விதத்தில் இது நீங்களே. அதனால் தான் இதன் மீது துப்புமாறு சொன்னபோது உங்களிடம் பக்தி கொண்ட உங்கள் சேவகர்கள் மறுத்துவிட்டார்கள். இது உங்கள் பிரதிபிம்பம். இந்தப் படத்தைப் பார்க்கும்போது நீங்களே அவர்களின் நினைவிற்கு வருகிறீர்கள். அதனால் தான் உங்களுக்கு கொடுக்கின்ற மரியாதையை அவர்கள் இந்தப் படத்திற்குக் கொடுக்கிறார்கள். கல்லிலும் மண்ணிலும் மரத்திலும் செய்யப்பட்ட தெய்வ வடிவங்களை வழிபடுகின்ற பக்தர்களின் விஷயமும் இது தான். அவர்கள் வழிபடுகின்ற உருவம் அவர்களுக்கு அந்தப் பரம்பொருளை நினைவுபடுத்துகிறது. எத்தனையோ இடங்களில் நான் யாத்திரை செய்துள்ளேன். எந்த இந்துவும், “ஏ கல்லே, உன்னை வணங்குகிறேன். ஓ மண்ணே , எனக்கு அருள் செய்” என்று வழிபடுவதை நான் காணவில்லை. மகாராஜா! எங்கும் நிறைந்த, பேரானந்த வடிவான முழுமுதற் கடவுளையே ஒவ்வொருவரும் வழிபடுகின்றனர். கடவுளும் அவர்களின் பக்குவத்திற்கு ஏற்ப ஒவ்வொருவருக்கும் அருள் புரிகிறார்.’

Swami Vidyananda

கிரகங்கள் செய்யும் அனுக்கிரங்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:31 AM | Best Blogger Tips
Photo: கிரகங்கள் செய்யும் அனுக்கிரங்கள்

மேலும் தகவல்கள் பெற இங்கு கிளிக் செய்து இணையவும் -> http://www.facebook.com/Meipporul

சூரியன்- உடல்நலம், அறிவு, ஆன்மவிருத்தி
சந்திரன்- புகழ், பெருமை, அழகு, மனநலம்
செவ்வாய்- செல்வம், வீரம் இரத்தவிருத்தி
புதன்- கல்வி, அறிவு
குரு- (வியாழன்)- நன்திப்பு, செல்வம்
சுக்ரன்(வெள்ளி)- அழகு, நாவன்மை, இன்பம்
சனி- மங்களங்கள், மகிழ்ச்சி, செயலாற்றல்
ராகு- எதிரிபயம் நீங்கல், காரிய சித்தி
கேது- குல அபிவிருத்தி, ஞானம், முக்திபேறு

நல்ல செய்திகளை பகிர்வோம், பயனடைவோம்...

பஞ்சபூத ஸ்தலங்கள் - நீர் - திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:28 AM | Best Blogger Tips

Photo: பஞ்சபூத ஸ்தலங்கள் - நீர் - திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில்

மேலும் தகவல்கள் பெற இங்கு கிளிக் செய்து இணையவும் -> http://www.facebook.com/Meipporul

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில் திருச்சி மாவட்டத்தில் புகழ் மிக்க ஸ்ரீரங்கத்துக்கு அருகில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களுள் ஒன்று. பஞ்சபூதங்களுள் ஒன்றான நீருக்கு புகழ் பெற்றது இந்தத் தலம். 

இங்கு உள்ள சிவபெருமான் ஜம்பு எனும் பெயருடைய நவாப்பழ மரத்தின் கீழ் இருந்ததால் அவர் ஜம்புகேஸ்வரர் என்றும், அவரது துணைவியார் அகிலாண்டேஸ்வரி என்றும் அழைக்கப்படுகின்றனர். அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் ஆகிய நால்வராலும், தாயுமானவராலும், சேக்கிழாராலும் பாடல் பெற்ற தலம் இது. 

வரலாறு:
இந்தக் கோவில் கோச்செங்கட் சோழனால் 1800 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது. பின்னர் பாண்டியர்களாலும் மதுரை நாயக்கர்களாலும் புதுப்பிக்கப்பட்டது. 18 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தக் கோவிலில் நான்கு கோபுரங்களும், ஐந்து பிரகாரங்களும் உள்ளன.  

ஐந்தாம் பிரகாரத்தில் அமைந்துள்ள மேற்கு கோபுரமே ராஜ கோபுரமாகும். இக்கோபுரம் ஒன்பது அடுக்குகளை கொண்டது. நான்காம் பிரகாரத்தில் அமைந்துள்ள கிழக்கு கோபுரம் பாண்டிய மன்னன் சுந்தரபாண்டியானால் கட்டப்பட்டது. இந்தக் கோபுரம் ஏழு அடுக்குகளை கொண்டது.  மேலும் நான்காம் பிரகாரத்தில் அமைந்துள்ள மேற்கு கோபுரம் ஆதித்ய தேவனால் கி.பி 1435 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.  

 இக்கோவிலில் பிரம்ம தீர்த்தம், இந்திர தீர்த்தம், ஜம்பு தீர்த்தம், ராம தீர்த்தம், ஸ்ரீமத் தீர்த்தம், அக்னி தீர்த்தம், அகத்திய தீர்த்தம், சோம தீர்த்தம், சூர்ய தீர்த்தம் என ஒன்பது தீர்த்தங்கள் உள்ளன.  25 அடி உயர மதில் சுவர்கள் கொண்ட இந்தக் கோவிலின் இரண்டாம் மற்றும் மூன்றாம் பிரகாரங்கள் பதிமூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்தவை என்பதற்கான வரலாற்றுச் சான்றுகளும் உள்ளன. 

மேலும் இந்தக் கோவிலில் வடமேற்கில் ஆயிரம் கால் மண்டபமும், வடகிழக்கில் நூறு கால் மண்டபமும் அமைந்துள்ளன. வசந்த மண்டபம், சோமாஸ்கந்த மண்டபம், நடராஜ மண்டபம், திருமூர்த்தி மண்டபம் ஆகிய மண்டபங்களையும் இங்கு காணலாம். 

சிறப்பு: 

இக்கோவிலின் சிறப்பு, சிவலிங்கம் தரைமட்டத்திற்கு கீழ் உள்ளது, இதனால் எப்போதும் கோவில் கருவறையில் நீர்கசிவு இருந்து கொண்டே இருக்கும். கோடை காலங்களில் கூட நீர் வற்றாமல் கசிந்து கொண்டிருக்கும். இதனால் இங்கு உள்ள சிவலிங்கம் எப்போதும் பாதி நீரில் நனைந்தபடியே இருக்கிறது. 

அகிலாண்டேஸ்வரியின் ஆட்சித்தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது. இங்கு உள்ள அம்மனின் காதணிகளை தாடகங்கள் என்று அழைப்பர்.  முன்னர் அம்பாள் கொடூரமாக இருந்ததால் ஆதிசங்கரர் இக்காதணிகளை அணிவித்து, முன்புறம் விநாயகரையும், பின்புறம் முருகனையும் பிரதிஷ்டை செய்து உக்கிரத்தை தணித்தார். 

தல புராணம்:
இங்கு உள்ள லிங்கம், ஒரு முறை அம்பிகை பூமிக்கு வந்தபோது காவேரியில் சிறிது நீர் எடுத்து உருவாக்கப்பட்டது. இந்த லிங்கம் காட்டில் நாவல் மரத்தின் அடியில் இருந்தது. சிவகணங்களில் இருவர் சாபம் காரணமாக இந்த காட்டில் யானையாகவும், சிலந்தியாகவும் பிறந்தனர். அச்சமயம் அந்த சிவலிங்கம் கூரையில்லாததால் வெயில் மற்றும் மழையினால் சேதத்துக்கு உள்ளாக இருந்தது. சிலந்தி சிவனின் மேல் வலை பின்னி காத்தது. அந்த வலையை அழித்து யானை காவிரியில் இருந்து நீரும், பூவும் கொண்டு வழிபட்டது. இதனால் சிலந்தி யானையின் தும்பிக்கையினுள் புகுந்ததால் இரண்டும் செத்து மடிந்தது. 

பின்னர் சிவபெருமான் யானையை சிவகணங்களுக்குத் தலைவனாக ஆக்கி சிலந்தியை கோச்செங்கட் சோழனாக ஆக்கினார். கோச்செங்கட் சோழன் சிவனுக்காக கட்டிய 70 மாடக்கோவில்களுள் முதல் மாடக்கோவிலே இந்த திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில்.

இத்தலத்தின் நான்காவது திருச்சுற்று மதிலை எழுப்பிய பணியாளர்களுக்கு இறைவனே நேரில் ஒரு சித்தரைப் போல் வந்து திருநீறை கூலியாகக் கொடுத்ததாகவும் அது தங்கமாக மாறியதாகவும் வரலாறு உண்டு. இதனால் இம்மதிலை திருநீற்றான் மதில் என்றும் அழைக்கிறார்கள்.

சிற்பக்கலை:
இங்கு உள்ள மூன்று கால் முனிவர் சிலையும், அகிலாண்டேஸ்வரி சந்நிதிக்கு வெளியே உள்ள ஏகநாதர் சிலையும், நான்கு கால் தூணில் காணப்படும் மங்கையர் சிற்பமும் இக்கோவிலில் உள்ள மிகச்சிறந்த சிற்பங்களாகும். 

விழாக்கள்:
மற்ற கோவில்களைப் போல இக்கோவிலிலும் ஆறு கால பூஜை நடைபெறுகிறது. இந்தக் கோவிலின் உச்சிக் கால பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்தது.  உச்சிக் காலத்தில் லிங்கத்துக்கு தினமும் அன்னாபிஷேகமும் நடைபெறுகிறது. இங்கு உள்ள அர்ச்சகர் பெண் வேடமிட்டு லிங்கத்துக்கு அபிஷேகம் செய்வார்.  மேலும் வருடந்தோறும் பங்குனி பிரமோத்சவம், பஞ்ச பிரகாரம், வசந்த உத்சவம், தைப்பூசம், ஆடிபூரம், பிடாரி அம்மன் திருவிழா போன்ற திருவிழாக்களும் நடைபெறுகின்றன. 

கோவில் திறந்திருக்கும் நேரம்: காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 9.30 மணி வரை. 

தொடர்புக்கு - 91-0431-2230257

எப்படி செல்வது?

1)திருவானைக்காவலுக்கு திருச்சி மற்றும் ஸ்ரீரங்கத்தில் இருந்து பல பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

2)அருகில் உள்ள ரயில் நிலையம் - திருச்சி 5 கி.மீ தொலைவில்.

3)அருகில் உள்ள விமான நிலையம் - திருச்சி (விமான நிலையம் திருச்சி நகரத்தில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது)
.

Tnks- tamilmahantt

விரதத்தின் [Fasting] மகிமை!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:26 AM | Best Blogger Tips

Photo: விரதத்தின் [Fasting] மகிமை!

மேலும் தகவல்கள் பெற இங்கு கிளிக் செய்து இணையவும் -> http://www.facebook.com/Meipporul

விரதம். அது நம் உடலுக்குள் இயங்கும் இயந்திரங்களை சுத்தப்படுத்துவதற்கும், சுத்திகரிப்பதற்கும் உருவான ஒரு அறிவியல் முறை. எப்படி என்கிறீர்களா?

மிருகங்கள் முதற்கொண்டு மனிதர்கள் வரை உடல் நோய்வாய்ப்ப்படும்போது சாபிடாமல் அல்லது குறைந்த உணவு உட்கொள்வது பழக்கம். அதை நாம் ஒரு ஒழுங்கு முறையாக செய்தோமானால் நமது உடல் மீண்டும் நல்ல நிலைக்கு வந்துவிடும். இதுவே உடலின் இயங்கும் முறையாகும். இதற்கு என்ன ஆதாரம் என்கிறீர்களா?

அறிவியலாளர்கள் ஒரு உண்மையை தற்சமயம் கண்டு பிடித்திருக்கிறார்கள். அது என்னவென்றால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிட்டால் அது எலி உடம்பில் இருக்கும் புற்று நோயின் அளவை குறைக்கிறது. நம்ப முடிய வில்லையா? இந்த வலைத்தளத்தை படியுங்கள் http://www.sciencenews.org/view/generic/id/40242/title/Possible_anticancer_power_in_fasting_every_other_day. ஏன்? இந்த முறையால் நமது புற்றுநோய்க்கு கூட விடை கிடைக்கலாம்.

எனவே வாரத்துக்கு ஒரு முறையாவது உங்கள் உடலுக்கு உணவிடம் இருந்து விடுதலை கொடுங்கள். பிறகு பாருங்கள் வித்தியாசத்தை. ஆனால் சர்க்கரை நோயாளிகள் அவரவர் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று இதை கடைபிடியுங்கள்.

Om Namasivaya _/\_