திமிங்கிலம் பற்றிய சில தகவல்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:18 PM | Best Blogger Tips


1) நீலத் திமிங்கிலமே உலகின் மிகப்பெரிய பாலூட்டியாகும். (பொதுவாக 100 அடி நீளம் 150 டன் எடை)
2) திமிங்கிலம் நுரையீரல் வழி உயிர்ப்பிக்கின்றன (மூச்சு விடுகின்றன).
3) நீலத் திமிங்கிலத்தின் நாக்கில் 50 பேர் உட்காரக்கூடிய அளவு இடமிருக்கும்.
4) திமிங்கிலம் ஒரு சாதுவான விலங்காகும், இவை எப்போதும் முரடாக நடந்து கொள்ளாது.
5) திமிங்கிலங்கள் மீன் வகையைச் சேர்ந்தது அல்ல, எனவே இவை உடலில் பிற மீன்களைப் போல செதில்கள் இருக்காது. மாறாக, தோல் கொண்ட உடலும், உடலின் மேற்புறத்தில் மயிரையும் கொண்டிருக்கும்.
6) இவற்றின் தோலின் உட்புறம் ஒரு கொழுப்பு அடுக்கினைக் கொண்டுள்ளன. இது திமிங்கிலங்களுக்கு உடல் சூட்டைத் தக்க வைக்க உதவுகிறது.
7) திமிங்கிலங்களின் தலைப்பகுதியில் குழாய் போன்ற மேல் நோக்கிய துளை ஒன்று உள்ளது. இவை இத்துளைகளின் வழியாகவே உயிர்ப்பிக்கின்றன.
8) வெளிச்சம் இல்லாத ஆழ்க்கடலில், இரையைப் பிடிக்க பயன்படுத்தும் எதிரொலி உத்தி (echo location) வழி இரையின் இருப்பிடத்தைத் திமிங்கிலங்கள் துல்லியமாக அறிந்து கொள்கின்றன.
9) பிற மீன்களைப் போல செதிள்கள் இல்லாமல் நுரையீரல் கொண்டு உயிர்ப்பிப்பதால், அவை நீரின் மேற்பரப்புக்கு வந்து காற்றை மூக்கு வழியாக உள்ளிழுத்துச் செல்லும்.
10) திமிங்கிலத்தின் மூக்கு அவற்றின் தலைப்பகுதியில் அமைந்திருக்கும். சில திமிங்கிலம் இரண்டு மூக்குகளையும் கொண்டிருக்கும்.
11) இவை 70 ஆண்டுக்காலம் உயிர் வாழக்கூடியவை.
12) மிகுதியான எடைக் கொண்ட திமிங்கிலங்கள் விரைவாக நீந்தும் திறன் படைத்தவையாகும்.
13) நீலத் திமிங்கிலங்கள், நீரில் உள்ள விலங்கு மிதவை உயிரினங்களையும், விந்துத் திமிங்கிலங்கள், மீன் மற்றும் கணவாய்களை உண்டும் வாழ்கின்றன.
14) பெண் திமிங்கிலங்களின் பேறுக்காலம் 12 முதல் 17 திங்கள் வரை ஆகும். குட்டியை ஈன்றெடுக்கும் பொழுது, மற்ற திமிங்கிலங்கள் தாய் திமிங்கிலத்தைச் சூழ்ந்து கொண்டு செவிலித் தாயார் போன்று உதவுகின்றன.
15) குட்டித் திமிங்கிலம் பிறந்த உடன் மற்ற செவிலித் திமிங்கிலங்கள் அதை நீரின் மேல் மட்டத்திற்கு தூக்கி, முதல் சுவாசத்தை ஏற்படுத்துகின்றன.|
16) திமிங்கிலக் குட்டி பிறக்கும்போது 25 அடி நீளமுடன் ஒரு யானையின் எடையுடன் இருக்கும். ஒரு நாளைக்கு 200 லிட்டர் பாலைத் தம் தாயிடம் இருந்து குடித்து மணிக்கு 5 கிலோ எடை வீதம் வளருகிறது.
17) 1700 மற்றும் 1800 களில் திமிங்கிலங்கள் அவற்றின் கொழுப்பு எண்ணெய்க்காக முரட்டுத்தனமாக வேட்டையாடப்பட்டு கொன்று குவிக்கப்பட்டன. அந்தக் காலக்கட்டங்களில் திமிங்கில எண்ணெய் தான் விளக்கெரிக்கப் பயன்படுத்தப்பட்டது.
18) தற்பொழுது திமிங்கிலங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து கொண்டு வருகிறது, எத்தனையோ அமைப்புகள இருப்பினும் இன்னமும் திமிங்கில வேட்டை ஓயவில்லை. யப்பான், நோர்வே போன்ற நாடுகள் இன்னமும் பல தேவைகளுக்காக இவ்விலங்கைக் கொன்று குவிக்கின்றன.

திமிங்கிலம் பற்றிய சில தகவல்கள்

1) நீலத் திமிங்கிலமே உலகின் மிகப்பெரிய பாலூட்டியாகும். (பொதுவாக 100 அடி நீளம் 150 டன் எடை)
2) திமிங்கிலம் நுரையீரல் வழி உயிர்ப்பிக்கின்றன (மூச்சு விடுகின்றன).
3) நீலத் திமிங்கிலத்தின் நாக்கில் 50 பேர் உட்காரக்கூடிய அளவு இடமிருக்கும்.
4) திமிங்கிலம் ஒரு சாதுவான விலங்காகும், இவை எப்போதும் முரடாக  நடந்து கொள்ளாது. 
5) திமிங்கிலங்கள் மீன் வகையைச் சேர்ந்தது அல்ல, எனவே இவை உடலில் பிற மீன்களைப் போல செதில்கள் இருக்காது. மாறாக, தோல் கொண்ட உடலும், உடலின் மேற்புறத்தில் மயிரையும் கொண்டிருக்கும்.
6) இவற்றின் தோலின் உட்புறம் ஒரு கொழுப்பு அடுக்கினைக் கொண்டுள்ளன. இது திமிங்கிலங்களுக்கு உடல் சூட்டைத் தக்க வைக்க உதவுகிறது.
7) திமிங்கிலங்களின் தலைப்பகுதியில் குழாய் போன்ற மேல் நோக்கிய துளை ஒன்று உள்ளது. இவை இத்துளைகளின் வழியாகவே உயிர்ப்பிக்கின்றன.
8) வெளிச்சம் இல்லாத ஆழ்க்கடலில், இரையைப் பிடிக்க பயன்படுத்தும் எதிரொலி உத்தி (echo location) வழி இரையின் இருப்பிடத்தைத் திமிங்கிலங்கள் துல்லியமாக அறிந்து கொள்கின்றன. 
9) பிற மீன்களைப் போல செதிள்கள் இல்லாமல் நுரையீரல் கொண்டு உயிர்ப்பிப்பதால், அவை நீரின் மேற்பரப்புக்கு வந்து காற்றை மூக்கு வழியாக உள்ளிழுத்துச் செல்லும். 
10) திமிங்கிலத்தின் மூக்கு அவற்றின் தலைப்பகுதியில் அமைந்திருக்கும். சில திமிங்கிலம் இரண்டு மூக்குகளையும் கொண்டிருக்கும்.
11) இவை 70 ஆண்டுக்காலம் உயிர் வாழக்கூடியவை.
12) மிகுதியான எடைக் கொண்ட திமிங்கிலங்கள் விரைவாக நீந்தும் திறன் படைத்தவையாகும்.
13) நீலத் திமிங்கிலங்கள், நீரில் உள்ள விலங்கு மிதவை உயிரினங்களையும், விந்துத் திமிங்கிலங்கள், மீன் மற்றும் கணவாய்களை உண்டும் வாழ்கின்றன.
14) பெண் திமிங்கிலங்களின் பேறுக்காலம் 12 முதல் 17 திங்கள் வரை ஆகும். குட்டியை ஈன்றெடுக்கும் பொழுது, மற்ற திமிங்கிலங்கள் தாய் திமிங்கிலத்தைச் சூழ்ந்து கொண்டு செவிலித் தாயார் போன்று உதவுகின்றன.
15) குட்டித் திமிங்கிலம் பிறந்த உடன் மற்ற செவிலித் திமிங்கிலங்கள் அதை நீரின் மேல் மட்டத்திற்கு தூக்கி, முதல் சுவாசத்தை ஏற்படுத்துகின்றன.|
16) திமிங்கிலக் குட்டி பிறக்கும்போது 25 அடி நீளமுடன் ஒரு யானையின் எடையுடன் இருக்கும். ஒரு நாளைக்கு 200 லிட்டர் பாலைத் தம் தாயிடம் இருந்து குடித்து மணிக்கு 5 கிலோ எடை வீதம் வளருகிறது. 
17)  1700 மற்றும் 1800 களில் திமிங்கிலங்கள் அவற்றின் கொழுப்பு எண்ணெய்க்காக முரட்டுத்தனமாக வேட்டையாடப்பட்டு கொன்று குவிக்கப்பட்டன. அந்தக் காலக்கட்டங்களில் திமிங்கில எண்ணெய் தான் விளக்கெரிக்கப் பயன்படுத்தப்பட்டது.
18) தற்பொழுது திமிங்கிலங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து கொண்டு வருகிறது, எத்தனையோ அமைப்புகள இருப்பினும் இன்னமும் திமிங்கில வேட்டை ஓயவில்லை. யப்பான், நோர்வே போன்ற நாடுகள் இன்னமும் பல தேவைகளுக்காக இவ்விலங்கைக் கொன்று குவிக்கின்றன.

மேலும் சில பொது அறிவு தகவல்கள் - https://www.facebook.com/media/set/?set=a.532454403454081.124235.246712722028252&type=3

கச்சத்தீவு தமிழர்களின் சொத்தா ?

மணக்கால் அய்யம்பேட்டை | 12:17 PM | Best Blogger Tips
1974 இல் ஆரம்பித்து 2010 வரை தொடரும் இந்த பிரச்சனையின் மூலம் தான் என்ன? உண்மையில் நமக்கு கச்சதீவில் உரிமை இருக்கிறதா? அதற்கு என்ன சாட்சி? வரலாற்றின் பக்கங்களில் கச்சதீவு இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியா? இது எல்லாவற்றிற்கும் விளக்கம் தரும் வகையில் இந்த இடுகையை சமர்பிக்கிறேன். எல்லோர்க்கும் தெரிந்த விஷயம் தான், தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில், அவர்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

1480 ம் ஆண்டில் ஏற்ப்பட்ட கடல் கொந்தளிப்பால் பெரும் புயல் ஏற்ப்பட்டு வங்கக் கடலில் ராமேஸ்வரம் தீவும் அதை சுற்றி 11 தீவுகளும் உண்டாயின.

01 ராமேஸ்வரம்

02 குந்துகால்

03 புனவாசல்

04 முயல் தீவு

05 பூமரிசான் தீவு

06 முல்லைத் தீவு

07 மணல் தீவு

08 வாலித் தீவு (கச்சத் தீவு)

09 அப்பா தீவு

10 நல்ல தண்ணீர் தீவு

11 உப்பு தண்ணீர் தீவு

12 குடுசடி தீவு

ராமநாதபுரம் மாவட்ட அரசு வரலாற்று குறிப்பு 11891ம் பக்கம் 14ல் இதற்கான ஆதாரம் உள்ளது. 1480 ம் ஆண்டு தோன்றிய இத் தீவுகள் யாவும் ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுக்கு சொந்தமாக இருந்தன.

1802ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட ஜமிந்தாரி நில உரிமைச் சட்டப்படி கச்சத்தீவு ராமநாதபுரம் ராஜாவிற்கு அரசுடமையாக்கப்பட்டது. அதற்கு பிறகு ராமநாதபுரம் ராஜா அவர்கள் அந்த இடத்தை தனி நபர்களுக்கு குத்தகையாக கொடுத்து அவர்கள் மூலமாக பயன் பெற்று இருகின்றனர்.

1905ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சேர்ந்த சீனி கருப்பன் படையாச்சி என்ற மீனவர் புனித அந்தோனியார் கோயிலைக் கட்டினார். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 4ம் நாள் திருவிழா நடக்கும். இதில் தமிழர்கள் யாருடைய அனுமதியும் பெறாமல் செல்லாம். இலங்கை பக்தர்கள் இலங்கை அரசின் அனுமதி பெற்று தான் வரவேண்டும்.

1947 ம் ஆண்டு ஜமீன்தாரி ஒழிப்பு சட்டம் கொண்டு வரும் வரையில் கச்சதீவு சேதுபதி மன்னர்களின் ஆட்சியில் இருந்தது.

இதற்கு 1822 ம் ஆண்டிலிருந்து நிறைய சான்றுகள் உண்டு. கிழக்கிந்திய கம்பெனி 1822ல் இஸ்திமிரர் சனட் என்ற ஒப்பந்தத்தில் ராமநாதபுரம் ராஜாவிடமிருந்து கச்சத்தீவை பயன்படுத்தி கொள்ளும் உரிமை பெற்றது. 69 கடற்கரை ஊர்களும் 8 தீவுகளும் சேதுபதிக்கு உரியது. இந்த 8 தீவுகளில் ஒன்று தான் கச்சத்தீவு. கிழக்கிந்திய கம்பனி இவை யாவற்றையும் பயன்படுத்தி கொள்ள ராஜாவிடம் இருந்து இசைவு பெற்று இருந்தது.

இங்கிலாந்து பேரரசி விக்டோரியாவின் காலத்தில் இலங்கை பற்றி வெளியிடப்பட்ட பொது அறிவிப்பில் இலங்கையின் எல்லையை பற்றி குறிப்பிடும் போது கச்சத்தீவை குறிக்காமலும், ராமநாதபுரம் அரசை பற்றி குறிப்பிடுகையில் கச்சத்தீவு அவருக்கு உரியதென்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனை முந்நாளைய இலங்கை அமைச்சரவை செயலாளர் பி. ஈ. பியரிஸ் உறுதிபடுத்தி உள்ளார்.

1947 டிசம்பர் திங்களில் சண்முக ராஜேந்திர சேதுபதியிடமிருந்து வீ. பொன்னுசாமி பிள்ளை, கே.எஸ். மொகம்மது மீர்சா மரைக்காயர் ஆகிய இருவரும் கச்சத்தீவை குத்தகைக்கு எடுத்துள்ளனர். இலங்கையின் பழைய வரலாற்று அவணங்களிலோ, நூல்களிலோ எதிலும் கச்சத் தீவு பற்றிய எந்த விவரமும் இல்லை. இதுவரையில் கச்சத் தீவில் எங்களுக்கு உரிமை உண்டு என்பதற்கான ஆதாரங்களை இலங்கை அரசாங்கம் வெளியிடவும் இல்லை.

டச்சுக்காரர்கள், போர்சுகீசியர்கள் என்று யார் தயாரித்த இலங்கை தேசப்படங்களிலும் கச்சத்தீவு இல்லை. 17 ம் நூற்றாண்டில் பர்நோப் எனும் வரலாற்று ஆய்வாளர் இலங்கைக்கு வந்தார் அவர் இலங்கை தேசப்படம் ஒன்றை உருவாக்கினார். அதிலும் கச்சத்தீவு இல்லை.

1857 – 61 ம் ஆண்டுகளில் இலங்கை தேசப்படங்களை வெளியிட்ட ஜே.ஆரோஷ்மிக் மற்றும் டெண்னன்ட் ஆகியோரும் இலங்கை தேசப்படத்தில் கச்சத்தீவை சேர்த்து வெளியிடவில்லை.

1920 ம் ஆண்டில் கச்சத் தீவு எங்களுக்குத் தான் சொந்தம் என்று இலங்கை அரசு கூற ஆரம்பித்தது. இந்தியா 1956ம் ஆண்டிற்குப் பின்னால் தன்னுடைய கடல் எல்லை கோட்டை 3 கடல் மைல்களில் இருந்து 6 கடல்மைல்களாக விரிவுப்படுத்தியது. அத்துடன் மீன்பிடிக்கும் உரிமையை 100 கடல் மைல்கள் தூரத்திற்கு விரிவுபடுத்தியது. கச்சத்தீவை கைப்பற்ற இந்தியா எடுக்கும் முயற்சி என்று இதனை இலங்கை அரசு கருதி போட்டியாக 1970ல் அதே போன்ற ஒரு அறிவிப்பை இலங்கை வெளியிட்டது.

1973ம் ஆண்டு அன்றைய பிரதமரான இந்திராகாந்தி இலங்கை சென்றார். 1974ம் ஆண்டு இலங்கை அதிபர் சிறிமாவோ பண்டார நாயகே இந்தியா வந்தார். இந்திராவும், சிறிமாவோவும் நடத்திய பேச்சு வார்த்தையில் தமிழகத்தை கேட்காமலே கச்சத்தீவு கை மாறியது.

1976ம் ஆண்டு ஒப்பந்தம் (இரு நாடுகளின் அதிகாரிகளுக்கு இடையே மீன்பிடி உரிமை பற்றிய கடிதப் போக்குவரத்து நடந்தது. அந்த கடிதங்களே 1976 மார்ச் மாதம் ஒப்பந்தமாக அங்கீகரிக்கப்பட்டது) கச்சத் தீவு பகுதிக்கு தமிழக மீனவர்கள் செல்லவும் கூடாது. மீன் பிடிக்கவும் கூடாது. கச்சத்தீவு அந்தோனியார் கோயில் திருவிழாவிற்கு மக்கள் செல்லகூடாது என்று முற்று புள்ளி வைத்தே விட்டது.

1974ம் ஆண்டு ஆகஸ்ட் 21லிருந்து இன்றுவரை நாம் தீர்மானம் நிறைவேற்றி கொண்டே இருக்கிறோம். சிங்களவன் நம் மீனவர்களை சுட்டுக் கொண்டே இருக்கிறான்

சீர்காழி கோவிந்தராஜன்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:16 PM | Best Blogger Tips


சீர்காழி கோவிந்தராஜன் 19/01/1933 அன்று சிவசிதம்பரம் & அவையாம்பாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். சீர்காழியின் தந்தை சிவசிதம்பரம் கலைநாட்டம் மிக்கவர் . சீர்காழி கோவிலொன்றில் இராமயண இசை நாடம் நடத்தி வந்தார். அதில் குட்டி ராமனாக நடித்து பாடல்களும் பாடினார்.

கோவிந்தராஜன்,இளைமையிலேயே தேவி நாடகக் குழுவிலும் , பாய்ஸ் கம்பெனியிலும் இணைந்து தனது நடிப்புத் திறமையையும் இசைத் திறமையையும் வளர்த்துக் கொண்டார். கோவிந்தராஜனை அவரது சித்தப்பா பி.எஸ்.செட்டியார் சேலம் மார்டன் தியேட்டர்ஸில் துணை நடிகராகச் சேர்த்துவிட்டார். மாடர்ன் தியேட்டர்ஸ் அரங்கின் தனி அறை ஒன்றில் தங்கிய படியே சங்கீத சாதகம் செய்வதை வழக்கமாகக் கொண்டார். கோவிந்தராஜன் பாடுவதைக் கேட்ட மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரமும் , இசையமைப்பாளர் ஜி.ராமநாதனும் கோவிந்தராஜனுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று அப்போதே கணித்துச்சொன்னார்கள்.

பி.ஏஸ்.செட்டியார் , கோவிந்தராஜனை சென்னைக்கு அழைத்து வந்து தமிழ் இசைக்கல்லூரியில் சேர்த்துவிட்டார். பதினெட்டு வயதிலேயே(1951) சங்கீத வித்வான் , இசைமணி ஆகிய பட்டங்களைப் பெற்றார். 1951 இல் சென்னை வித்வத் சபையில் நடந்த போட்டிகளில் 3 தங்கப் பதக்கங்களை வென்றார். இதன் பிறகே சினிமா வாய்ப்பு கோவிந்தராஜன் கதவைத் தட்டியது.. கல்கி எழுதிய பொய்மான் காடு பொன்வயல் என்ற பெயரில் திரைப்படமாக உருவானது. துறையூர் ராஜகோபால் சர்மா இசையில் சுத்தானந்த பாரதி வரிகளில் தனது வெங்கலக் குரலை சிரிப்புத் தான் வருதைய்யா என்ற பாடல் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார் கோவிந்தராஜன். ஆனால் இந்த பாடலுக்கு முன்பே ஜெமினி நிறுவனம் தயாரித்த அவ்வையார் திரைப்படத்திற்காக ஆத்திச்சூடியை பாடினார். திரைப்படத்தில் சீர்காழியார் பெயர் வெளியிடப்படவில்லை.

ஆரம்ப காலத்தில் எம்.ஜி.ஆருக்கு சீர்காழியும் சிவாஜிக்கு டி.எம்.எஸ்ஸும் பாடி வந்தார்கள். கண்ணதாசன் எழுதிய அறுபடை வீடு கொண்ட திருமுருகா என்ற நீளப்பாடலை (ஏழு நிமிடங்கள்) ஒரே டேக்கில் பாடிவிட்டு அசத்தியிருக்கிறார். இந்த சாதனைக்கு முருகன் அருள் தான் காரணம் என்றிருக்கிறார். பக்திப் பாடல்கள் பல பாடிக் குவித்த கோவிந்தராஜன் தனது 55 வயதில் மாரடைப்பு ஏற்பட்டு முருகனடி சேர்ந்தார் (24/03/88).

திரைப்படத்துக்காக பாடிய பிரபல பாடல்கள் சில
===================================

• பட்டணந்தான் போகலாமடி - படம்:எங்க வீட்டு மகாலெட்சுமி, இசை:எம்.வேணு

• அமுதும் தேனும் எதற்கு - படம்:தை பிறந்தால் வழி பிறக்கும்,இசை :கே.வி.மகாதேவன்

• மாட்டுக்கார வேலா - படம்:வண்ணக்கிளி,இசை :கே.வி.மகாதேவன்

• வில் எங்கே கணை இங்கே - படம்:மாலையிட்ட மங்கை,இசை :எம்.எஸ்.விஸ்வநாதன்,இராமமூர்த்தி

• வானமிதில் நீந்தியோடும் வெண்ணிலாவே - படம்:கோமதியின் காதலன்,இசை :ஜி.இராமநாதன்

• கொங்கு நாட்டுச் செங்கரும்பே - படம்:கோமதியின் காதலன்,இசை :ஜி.இராமநாதன்

• மலையே என் நிலையே - வணங்காமுடி ,இசை :ஜி.இராமநாதன்

• ஜக்கம்மா - வீரபாண்டிய கட்டபொம்மன்,இசை :ஜி.இராமநாதன்

• பட்டணந்தான் போகலாமடி - படம்:எங்க வீட்டு மகாலெட்சுமி, இசை:எம்.வேணு

பிரபல நகைச்சுவைப் பாடல்கள் சில
==========================

• பட்டணந்தான் போகலாமடி - படம்:எங்க வீட்டு மகாலெட்சுமி, இசை:எம்.வேணு

• மாமியாளுக்கு ஒரு சேதி - படம்: பனித்திரை

• காதலிக்க நேரமில்லை - படம்: காதலிக்க நேரமில்லை

• ஆசைக்கிளியே கோபமா- சபாஷ் மீனா (இதற்கு நடித்தவர் சந்திரபாபு!)

எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்களில் இடம் பெற்ற பாடல்கள்
===========================================

சக்ரவர்த்தித் திருமகள், புதுமைப் பித்தன் மற்றும் ராஜராஜன் போன்ற படங்களில் எம்.ஜி.ஆருக்கானஅனைத்து பாடல்களையும் இவரே பாடியிருந்தார்.

• நிலவோடு வான்முகில்,இதயம் தன்னையே (ராஜராஜன் 1957)

• எல்லை இல்லாத இன்பத்திலே - (சக்கரவர்த்தி திருமகள்)

• உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா -(நாடோடி மன்னன் 1958)

• வண்டு ஆடாத சோலையில் ,ஒன்றல்ல இரண்டல்ல தம்பி (தாய் மகளுக்கு கட்டிய தாலி 1959)

• சிரிப்பது சிலபேர் ,யாருக்கு யார் சொந்தம் என்பது (சபாஷ் மாப்பிள்ளை1961)

• ஓடிவந்து மீட்பதற்கு (நான் ஆணையிட்டால்)ஆலங்குடி சோமு இயற்றிய பாடல்

• யாருக்கு யார் சொந்தம் என்பது (சபாஷ் மாப்பிளே)

• ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் (நல்லவன் வாழ்வான்)
அழுத்தமான தமிழ் உச்சரிப்பால் ரசிகர்களை ஈர்த்த பாடல்கள்

• ஒற்றுமையாய் வாழ்வதாலே (பாகப்பிரிவினை 1959)

• எங்கிருந்தோ வந்தான் (படிக்காத மேதை 1960)பாரதியார் பாடல் ,இசை:கே.வி.மகாதேவன்

• ஓடம் நதியினிலே (காத்திருந்த கண்கள்)

• கோட்டையிலே ஒரு ஆலமரம் (முரடன் முத்து)

• நல்ல மனைவி நல்ல பிள்ளை (நம்ம வீட்டு லட்சுமி 1966)

• பாட்டோடு ராகம் இங்கே மோதுதம்மா (அக்கா தங்கை 1969)

• கண்ணான கண்மணிக்கு அவசரமா(ஆலயமணி 1962)

• கண்ணன் வந்தான் (ராமு).

குறட்டை விடுவது ஆபத்தின் அறிகுறியா ?குறட்டை பற்றிய தகவல்கள்!!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:13 PM | Best Blogger Tips
ஒருவர் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது, பலமான குறட்டை சத்தம் கேட்கும். ஆனால், அது அவருக்குக் கேட்காது. மற்றவர்களை இம்சைப்படுத்தும். “நீ குறட்டை விடுகிறாய்…’ என்று அவரிடம் சொன்னால், அதையும் உடனே மறுப்பார். எல்லா வீடுகளிலும் இந்தப் பிரச்னை உண்டு.

நாம் தூங்கும் போது, லேசான தூக்கத்தில் துவங்கி, ஆழ்ந்த தூக்கத்திற்குச் செல்கிறோம். இப்படி தூங்கும் போது, வாயின் மேல் பகுதியில் உள்ள தசைகளும், தொண்டைப் பகுதியும் ஓய்வு எடுத்துக் கொள்ளும் வகையில், தளர்ந்து விடும். அப்போது, மூச்சுக் குழாயில் தற்காலிக அடைப்பு ஏற்படுகிறது. மூச்சு வெளியேறும் போது, இந்த அடைப்பை மீறி காற்று வெளியேறுவதால், விதவிதமான ஒலிகளை எழுப்புகிறது. இது தான் குறட்டைச் சத்தமாக நமக்கு கேட்கிறது.

டான்சில் வீக்கம், அடினாய்டு பிரச்னைகள் ஏற்படும் போதோ, சளி பிடிக்கும் போதோ குறட்டை சத்தம் ஏற்படலாம். இந்தப் பிரச்னைகளால் ஏற்படும் அடைப்பு நீங்கியவுடன், குறட்டை சத்தமும் நின்று விடும்.
அதிக உடல் எடை கொண்ட குழந்தைகள் மற்றும் இள வயதினருக்கு குறட்டை ஏற்படுகிறது. கழுத்தைச் சுற்றி, அளவுக்கு அதிகமாக தசை வளர்வதால், சதை அடைப்பு உருவாகி, குறட்டை ஏற்படுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன் வரை, குறட்டை விடுபவர்களை கிண்டல் செய்பவர்கள் அதிகம். குறட்டை ஏற்படுத்தும் குழந்தைகள் தொந்தரவு ஏற்படுத்துபவர்களாகக் கருதப்பட்டனர். இப்போது நிலைமை முற்றிலும் மாறி விட்டது. ஆபத்தான மருத்துவக் கோளாறாக இது கருதப்படுகிறது. ஆபத்தான, தூக்கத் தடை ஏற்படுத்தும் நோயாக இது கருதப்படுகிறது. ஆழ்ந்த தூக்க நிலைக்குச் செல்லும் போது, நம் கண்கள் வேகமாக அசையும். அந்த நேரத்தில் நம் மூச்சுக் காற்றும் வேகமாக உள் சென்று, வெளியேறும். இதற்கு, “அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் அப்னியே’ என்று பெயர். அந்த நேரத்தில் குறட்டையும் அதிகரிக்கும். ஒரு மணி நேரத்திற்கு, 15க்கும் மேற்பட்ட முறை, நம் கண்கள் வேகமாக அசைந்து, மூச்சுக் காற்றும் வேகமாக உள் சென்று வெளி வருகிறது. குறட்டை விடும் போது திடீரென நின்று, திடீரென அதிகரிக்கும் சுவாசத்தால், நம் உடலில் ரத்த அழுத்தம் அதிகரித்து, இதய அடைப்பு, திடீர் மரணம் ஆகியவை ஏற்படலாம்.

“அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் அப்னியே’ ஏற்படுவதற்கான

அறிகுறிகள்:


அதிக சத்தம் கொண்ட குறட்டை, பகல் நேரத்தில் மயக்கமாக இருத்தல், இரவில் வியர்த்தல், காலையில் எழுந்ததும் தலைவலி. சாதாரண மயக்க நிலைக்கும், சோர்வுக்கும், குறட்டைக்கும் இது போன்ற ஆபத்தான உபாதைக்கும் “எப்ஒர்த்’ என்ற முறையில், வித்தியாசம் கண்டுபிடிக்கலாம்.

கீழே உள்ள கேள்விக்கான பதில்களுக்கு, 0, 1, 2, 3 என மதிப்பெண்கள் கொடுங்கள். உங்களுக்கு ஏற்பட்டுள்ளது எந்த மாதிரியான உபாதை எனக் கண்டுபிடித்து விடலாம்.

(0 – எப்போதும் இல்லை, 1 – குறைந்த அளவு வாய்ப்பு, 2 – போதுமான அளவு வாய்ப்பு, 3 – அதிக அளவு வாய்ப்பு).

1. எப்போதெல்லாம் தூக்கம் வருகிறது?

அ) “டிவி’ பார்க்கும் போது.

ஆ) “மீட்டிங்’கில் உட்கார்ந்திருக்கும் போது.

இ) தொடர்ந்து ஒரு மணி நேரம் காரில் பயணிக்கும் போது.

ஈ) மதிய நேரத்தில் படுக்கும் போது.

உ) மதிய உணவுக்குப் பின், சும்மா அமர்ந்திருக்கும் போது.

ஊ) நீங்கள் அமர்ந்திருக்கும் கார், “டிராபிக் சிக்னலில்’ நிற்கும் போது.

மேலே உள்ள பதில்களுக்கு மதிப்பெண் கொடுத்து விட்டீர்களா? இந்த மதிப்பெண்களைக் கூட்டும் போது விடை, 1 முதல் 9 வரை வந்தால், உங்களுக்கு இந்த நோய் ஏற்படவில்லை எனக் கொள்ளலாம். 12 முதல் 16 வரை விடை வந்தால், இந்த நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளீர்கள் எனக் கொள்ளலாம்.

இந்தியர்களில் பெரும்பாலோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், திடீர் மரணம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. நம் வாழ்க்கை முறை மாறி விட்டதால், இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
நம் பொருளாதார நிலை, மிக அதிக வளர்ச்சி கண்டுள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள் எம்.பி.ஏ., பட்டதாரிகளையும், மற்ற பட்டதாரிகளையும் பணிக்கு அமர்த்தி, கற்பனை செய்ய இயலாத அளவு சம்பளம் கொடுக்கிறது.

சொந்த தொழில் செய்பவர்கள், பொதுத் துறை ஊழியர்கள், இலக்கை எட்ட கடுமையாக உழைக்க வேண்டி உள்ளது. இந்த புதிய வாழ்க்கை முறையால் ஏற்படும் நோய்களால் நாம் பாதிக்கப்பட்டுள்ளோம். கவலை, மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள உயரதிகாரிகள், சாதாரண வாழ்க்கையை வாழ முடியாமல் தவிக்கின்றனர். உடற்பயிற்சி செய்ய அவர்களுக்கு நேரமே இல்லை. பள்ளிகளில் குழந்தைகள் விளையாட ஊக்குவிப்பதில்லை. மாலை நேரங்களில், “டிவி’ பார்க்கவே நேரம் சரியாகி விடுகிறது. உடல் பருமன் அதிகரித்த நிலை, தொற்று நோய் போல பரவி விட்டது.

குறட்டை ஏற்படுவதற்கான காரணத்தை அறிந்து, “ஸ்லீப் அப்னியே’ நோய் உருவாகி உள்ளதா என்பதைக் கண்டுபிடிக்க, தமிழகத்தின் பெரிய நகரங்களில் மருத்துவமனைகள் உள்ளன. சற்று அதிக கட்டணம் வசூலித்தாலும், உங்கள் தூக்க முறையை வைத்து, உங்களுக்கு நோய் உள்ளதா என்பதை, அவர்கள் கண்டறிந்து விடுவர்.

காரணத்தைக் கண்டறிந்து விட்டால், 30 சதவீதத்தினர் நோயைக் குணப்படுத்திக் கொள்ளலாம். டான்சில், அடினாய்டு, மூக்கினுள் வீக்கம் போன்ற பிரச்னைகளை, அறுவை சிகிச்சை மூலம் சரி செய்து கொள்ளலாம்.
ஆல்கஹால் அருந்துபவர்கள், போதை மருந்து சாப்பிடுபவர்களின் மூளையில், மூச்சு மையம் பாதிக்கப்படுவதால், அவர்களுக்கு இந்த நோய் ஏற்படலாம். தங்கள் பழக்கத்தை அவர்கள் நிறுத்தி விட்டால், குறட்டை, “ஸ்லீப் அப்னியே’ நோயிலிருந்து மீண்டு விடலாம்.

மீதமுள்ள 70 சதவீதத்தினர், உடல் பயிற்சி மற்றும் சீரான உணவு முறை ஆகியவற்றை மேற்கொண்டு, உடல் பருமனைக் குறைத்தால் போதும்; இப்பிரச்னைகளிலிருந்து விடுபட்டு விடலாம். உடல் பருமனுடன் உள்ளவர்களின் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன், ஆபத்தான அளவில் குறைந்து காணப்படும். மூக்குக் கவசக் கருவி மூலம், தொடர் நேர் அழுத்த சுவாசம் (கன்டின்யுவஸ் பாசிட்டிவ் பிரெஷர் வென்டிலேஷன்) மேற்கொண்டால், ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அதிகரிக்கும்.

தேவையான இடத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் புதிய கருவிகள் தற்போது கிடைக்கின்றன. அறையில் உள்ள ஆக்சிஜனை உள்ளிழுத்து, நம் மூக்கின் வழியே உடலுக்குச் செலுத்தும் இவற்றை வீட்டிலும் வைத்துக் கொள்ளலாம்.

குறட்டையைக் குறைக்க மேலும் சில கருவிகள் 


விளம்பரப்படுத்தப்படுகின்றன. டி-ஷர்ட்டின் பின்புறம், டென்னிஸ் பால் தைத்துக் கொள்ளுதல், விசேஷ தலையணை, கழுத்துப் பட்டைகள், நாக்கை அழுத்திப் பிடிக்கும் கருவிகள் என, பல வகைகள் உள்ளன. இவற்றின் நம்பகத் தன்மை, விவாதத்துக்கு உரியது. குறட்டை விடுபவரை, ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்குத் திருப்பி படுக்க வைத்தாலே, குறட்டை ஒலி குறையும்.

“ஸ்பைரோ மீட்டர்’ கருவியால் மூச்சுப் பயிற்சி செய்தல், புட்பால் ஊதுதல், புல்லாங்குழல் ஊதுதல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை, தினமும் 30 நிமிடம் மேற்கொண்டால், குறட்டை குறைகிறது என்பது, ஆய்வில் கண்டறிந்த உண்மை. யோகாவில் உள்ள மூச்சுப் பயிற்சியும் மிகச் சிறந்தது.
தினமும் 45 நிமிட யோகா, மூச்சுப் பயிற்சியுடன் கூடிய நடைபயிற்சி போன்ற பழக்கங்களை, சிறு வயது முதலே கடைபிடிக்க வேண்டும். இதனால், இளவயது பருமனைக் குறைக்கலாம்; திடீர் மரணத்தையும் தவிர்க்கலாம்.



நன்றி - பரமக்குடி சுமதி

மெட்டி அணிவது ஏன்?

மணக்கால் அய்யம்பேட்டை | 11:32 AM | Best Blogger Tips



 பெண்கள் காலில் மெட்டி அணிவது காமத்தை கட்டுப்படுத்துமா..? அறிவியல் சொல்லும்  ரகசியம் ..! | Benefits of wearing toe ring for married woman - Benefits of  wearing toe ring for married ...
 
 

பெண்களின் கருப்பை நரம்புகளுக்கும் கால் விரல் நரம்புகளுக்கும் ஒருவித தொடர்புஉள்ளது. கால் விரலில் மிஞ்சி அணிவதால் கருப்பையின் நீர்ச் சமநிலை எப்போதும் பாதிப்படைவதில்லை. அது மட்டுமின்றி வெள்ளியில் செய்த மெட்டியைத் தான் அணிய வேண்டும்.. ஏனெனில் வெள்ளியில் இருக்கக்கூடிய ஒருவித காந்த சக்தி காலில் இருக்கும் நரம்புகளில் இருந்து உடலில் ஊடுருவி நோய்களை நிவாரனம் செய்யும் ஆற்றல் உள்ளதாம்

பெண்கள் கர்ப்பம் அடையும்போது ஏற்படும் மயக்கம், வாந்தி, சோர்வு, பசியின்மை ஏற்படும். கர்ப்பகாலத்தின் போது இந்த நரம்பினை அழுத்தி தேய்த்தால் மேற்கண்ட நோவுகள் குறையும். இதனை எப்போதும் செய்துக் கொண்டு இருக்க முடியாது என்பதற்காக வெள்ளியிலான மெட்டி அணிவித்தார்கள். காரணம், நடக்கும்போது இயற்கையாகவே அழுத்தி, உராய்த்து நோவைக் குறைக்கிறது. கருப்பை பாதிப்புகள் ஏதும் வரக்கூடாது என்பதால்தான் காலில் மிஞ்சி அணியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் உருவாக்கியிருக்கின்றார்கள்.

 No photo description available.

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏