சீர்காழி கோவிந்தராஜன் 19/01/1933 அன்று சிவசிதம்பரம் & அவையாம்பாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். சீர்காழியின் தந்தை சிவசிதம்பரம் கலைநாட்டம் மிக்கவர் . சீர்காழி கோவிலொன்றில் இராமயண இசை நாடம் நடத்தி வந்தார். அதில் குட்டி ராமனாக நடித்து பாடல்களும் பாடினார்.
கோவிந்தராஜன்,இளைமையிலேயே தேவி நாடகக் குழுவிலும் , பாய்ஸ் கம்பெனியிலும் இணைந்து தனது நடிப்புத் திறமையையும் இசைத் திறமையையும் வளர்த்துக் கொண்டார். கோவிந்தராஜனை அவரது சித்தப்பா பி.எஸ்.செட்டியார் சேலம் மார்டன் தியேட்டர்ஸில் துணை நடிகராகச் சேர்த்துவிட்டார். மாடர்ன் தியேட்டர்ஸ் அரங்கின் தனி அறை ஒன்றில் தங்கிய படியே சங்கீத சாதகம் செய்வதை வழக்கமாகக் கொண்டார். கோவிந்தராஜன் பாடுவதைக் கேட்ட மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரமும் , இசையமைப்பாளர் ஜி.ராமநாதனும் கோவிந்தராஜனுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று அப்போதே கணித்துச்சொன்னார்கள்.
பி.ஏஸ்.செட்டியார் , கோவிந்தராஜனை சென்னைக்கு அழைத்து வந்து தமிழ் இசைக்கல்லூரியில் சேர்த்துவிட்டார். பதினெட்டு வயதிலேயே(1951) சங்கீத வித்வான் , இசைமணி ஆகிய பட்டங்களைப் பெற்றார். 1951 இல் சென்னை வித்வத் சபையில் நடந்த போட்டிகளில் 3 தங்கப் பதக்கங்களை வென்றார். இதன் பிறகே சினிமா வாய்ப்பு கோவிந்தராஜன் கதவைத் தட்டியது.. கல்கி எழுதிய பொய்மான் காடு பொன்வயல் என்ற பெயரில் திரைப்படமாக உருவானது. துறையூர் ராஜகோபால் சர்மா இசையில் சுத்தானந்த பாரதி வரிகளில் தனது வெங்கலக் குரலை சிரிப்புத் தான் வருதைய்யா என்ற பாடல் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார் கோவிந்தராஜன். ஆனால் இந்த பாடலுக்கு முன்பே ஜெமினி நிறுவனம் தயாரித்த அவ்வையார் திரைப்படத்திற்காக ஆத்திச்சூடியை பாடினார். திரைப்படத்தில் சீர்காழியார் பெயர் வெளியிடப்படவில்லை.
ஆரம்ப காலத்தில் எம்.ஜி.ஆருக்கு சீர்காழியும் சிவாஜிக்கு டி.எம்.எஸ்ஸும் பாடி வந்தார்கள். கண்ணதாசன் எழுதிய அறுபடை வீடு கொண்ட திருமுருகா என்ற நீளப்பாடலை (ஏழு நிமிடங்கள்) ஒரே டேக்கில் பாடிவிட்டு அசத்தியிருக்கிறார். இந்த சாதனைக்கு முருகன் அருள் தான் காரணம் என்றிருக்கிறார். பக்திப் பாடல்கள் பல பாடிக் குவித்த கோவிந்தராஜன் தனது 55 வயதில் மாரடைப்பு ஏற்பட்டு முருகனடி சேர்ந்தார் (24/03/88).
திரைப்படத்துக்காக பாடிய பிரபல பாடல்கள் சில
==========================
• பட்டணந்தான் போகலாமடி - படம்:எங்க வீட்டு மகாலெட்சுமி, இசை:எம்.வேணு
• அமுதும் தேனும் எதற்கு - படம்:தை பிறந்தால் வழி பிறக்கும்,இசை :கே.வி.மகாதேவன்
• மாட்டுக்கார வேலா - படம்:வண்ணக்கிளி,இசை :கே.வி.மகாதேவன்
• வில் எங்கே கணை இங்கே - படம்:மாலையிட்ட மங்கை,இசை :எம்.எஸ்.விஸ்வநாதன்,இராமமூ
• வானமிதில் நீந்தியோடும் வெண்ணிலாவே - படம்:கோமதியின் காதலன்,இசை :ஜி.இராமநாதன்
• கொங்கு நாட்டுச் செங்கரும்பே - படம்:கோமதியின் காதலன்,இசை :ஜி.இராமநாதன்
• மலையே என் நிலையே - வணங்காமுடி ,இசை :ஜி.இராமநாதன்
• ஜக்கம்மா - வீரபாண்டிய கட்டபொம்மன்,இசை :ஜி.இராமநாதன்
• பட்டணந்தான் போகலாமடி - படம்:எங்க வீட்டு மகாலெட்சுமி, இசை:எம்.வேணு
பிரபல நகைச்சுவைப் பாடல்கள் சில
==========================
• பட்டணந்தான் போகலாமடி - படம்:எங்க வீட்டு மகாலெட்சுமி, இசை:எம்.வேணு
• மாமியாளுக்கு ஒரு சேதி - படம்: பனித்திரை
• காதலிக்க நேரமில்லை - படம்: காதலிக்க நேரமில்லை
• ஆசைக்கிளியே கோபமா- சபாஷ் மீனா (இதற்கு நடித்தவர் சந்திரபாபு!)
எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்களில் இடம் பெற்ற பாடல்கள்
==========================
சக்ரவர்த்தித் திருமகள், புதுமைப் பித்தன் மற்றும் ராஜராஜன் போன்ற படங்களில் எம்.ஜி.ஆருக்கானஅனைத்து பாடல்களையும் இவரே பாடியிருந்தார்.
• நிலவோடு வான்முகில்,இதயம் தன்னையே (ராஜராஜன் 1957)
• எல்லை இல்லாத இன்பத்திலே - (சக்கரவர்த்தி திருமகள்)
• உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா -(நாடோடி மன்னன் 1958)
• வண்டு ஆடாத சோலையில் ,ஒன்றல்ல இரண்டல்ல தம்பி (தாய் மகளுக்கு கட்டிய தாலி 1959)
• சிரிப்பது சிலபேர் ,யாருக்கு யார் சொந்தம் என்பது (சபாஷ் மாப்பிள்ளை1961)
• ஓடிவந்து மீட்பதற்கு (நான் ஆணையிட்டால்)ஆலங்குடி சோமு இயற்றிய பாடல்
• யாருக்கு யார் சொந்தம் என்பது (சபாஷ் மாப்பிளே)
• ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் (நல்லவன் வாழ்வான்)
அழுத்தமான தமிழ் உச்சரிப்பால் ரசிகர்களை ஈர்த்த பாடல்கள்
• ஒற்றுமையாய் வாழ்வதாலே (பாகப்பிரிவினை 1959)
• எங்கிருந்தோ வந்தான் (படிக்காத மேதை 1960)பாரதியார் பாடல் ,இசை:கே.வி.மகாதேவன்
• ஓடம் நதியினிலே (காத்திருந்த கண்கள்)
• கோட்டையிலே ஒரு ஆலமரம் (முரடன் முத்து)
• நல்ல மனைவி நல்ல பிள்ளை (நம்ம வீட்டு லட்சுமி 1966)
• பாட்டோடு ராகம் இங்கே மோதுதம்மா (அக்கா தங்கை 1969)
• கண்ணான கண்மணிக்கு அவசரமா(ஆலயமணி 1962)
• கண்ணன் வந்தான் (ராமு).