உடலுக்கு அவசியமான அயோடின்!

மணக்கால் அய்யம்பேட்டை | 1:00 PM | Best Blogger Tips

மனிதனின் மூளை மற்றும் உடல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது அயோடின். ஒருவரது உடலில் இது சராசரி அளவைவிட குறைவாக இருந்தால், அவர்கள் எப்போதுமே சோகமயமான தோற்றத்தில் காணப்படுவார்கள். எந்த வேலையை செய்தாலும் உடனே சோர்ந்துபோய் விடுவார்கள். சுறுசுறுப்பு என்பதும் இவர்களிடம் மிகக் குறைவாகவே இருக்கும்.

கர்ப்பிணி பெண்ணின் உடலிலும் அயோடின் சரியான அளவில் இல்லாவிட்டால், அந்த பெண்ணுக்கு பிறக்கும் குழந்தைக்கும் அயோடின் குறைபாடு பிரச்சினை ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, பிறக்கும் அந்த குழந்தையானது மூளை வளர்ச்சி குறைபாடு கொண்டதாக பிறப்பதற்கும் நிறைய வாய்ப்புகள் உள்ளன என்கிறார்கள் டாக்டர்கள்.

இதே அயோடின் குறைபாடோடு அந்த குழந்தை வளர்ந்தால், அக்குழந்தைக்கு மேலும் பல பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன என்றும் அவர்கள் எச்சரிக்கிறார்கள். இந்த அயோடின் பற்றிய சில சந்தேகங்களையும், அதற்கான விளக்கத்தையும் இங்கே பார்ப்போம்:

ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு அயோடின் தேவை?

வளர்ந்த ஒரு மனிதனுக்கு 150 மைக்ரோ கிராம் அளவு அயோடினே ஒரு நாளைக்குத் தேவை (10,00,000 மைக்ரோ கிராம் 1 கிராம்). அயோடின் உப்பை தினசரி உணவில் பயன்படுத்தி வந்தாலே தேவையான அயோடின் நமக்கு கிடைத்துவிடும்.

அயோடினை ஏன் உப்புடன் மட்டும் கலக்க வேண்டும்? அதைத் தவிர்த்து, தனியொரு மருந்தாக அதை எடுத்துக்கொள்ளக்கூடாதா?

அயோடின் சத்து எல்லோருக்கும் தேவையான ஒன்றாக இருந்தாலும், மிக மிகக் குறைந்த அளவிலேயே தேவையாக இருக்கிறது. இதை உப்புடன் சேர்க்கும்போது, ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசமின்றி அது ஏறக்குறைய எல்லா மனிதர்களையும் சம அளவில் சென்றடைகிறது. அதனால்தான், அதை உப்புடன் எடுத்துக் கொள்கிறோம்.

அயோடின் ஒருவரது உடலில் குறைந்து காணப்பட்டால் என்ன பிரச்சினை ஏற்படும்?

முக்கியமாக கழுத்துக் கழலை என்கிற நோய் ஏற்படும். கழுத்துப் பகுதி வீங்கியிருப்பது போன்ற பிரச்சினையும் அயோடின் குறைபாட்டினால் வரும் நோய்தான்.

அடுத்ததாக தைராய்டு பிரச்சினை ஏற்படுகிறது. ஒரு பெண்ணுக்கு இந்த பிரச்சினை ஏற்பட்டால், அந்த பெண்ணுக்கு குழந்தை பிறப்பது கூட தள்ளி போகிறது. அது மட்டுமல்லாமல், அபார்ஷன் மற்றும் இறந்தே பிறக்கும் குழந்தைகள் எனப் பல சோதனைகளும் இதனால் பெண்களுக்கு வருகின்றன.

ஒரு கர்ப்பிணியின் உடலில் அயோடின் சத்து சரியான அளவில் இருந்தால்தான், அந்த சத்தானது அந்த பெண்ணின் வயிற்றில் வளரும் குழந்தையையும் சென்றடைந்து, அக்குழந்தையும் ஆரோக்கியமாக பிறக்க வழிவகை ஏற்படுகிறது.

ஒருவேளை, அயோடின் குறைபாட்டுடன் குழந்தை பிறந்துவிட்டால்...?

இந்தக் குறைபாடுடன் பிறக்கும் குழந்தைகள் அயோடைஸ்டு உப்பு சேர்த்து உணவு உட்கொள்வதால், அந்த குறைபாடு சரியாக வாய்ப்புள்ளதா என்று கேட்டால் அதற்கான வாய்ப்பு இல்லை என்று தான் கூற வேண்டும். ஆனால் சில சிறிய குறைபாடுகள் சரியாவதற்கு வாய்ப்புகள் உள்ளன. ஆனால், அயோடைஸ்டு உப்பு சேர்த்துக் கொள்வதே வரும்முன் காப்பதற்கு சுலபமான வழி.

எனவே, சாதாரண உப்பை வாங்கி பிரச்சினைகளை வரவழைத்துக்கொள்ளாமல், அயோடின் கொண்ட உப்பை வாங்கி பயன்படுத்துங்கள். அயோடின் பற்றாக்குறையை போக்கிடுங்கள்.