இரும்புச் சத்துள்ள உணவுகள்!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:59 PM | Best Blogger Tips

இந்திய பெண்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு இரும்புச் சத்து குறைபாடு இருக்கிறது. இதற்கு அனிமீயா என்று பெயர். இந்த நோய்க்கு பல்வேறு சமூக, பொருளாதார காரணங்கள் இருக்கின்றன. இரும்புச்சத்து போதுமான அளவுக்கு இல்லாவிட்டால் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின்களின் அளவு குறைகிறது. ஹீமோகுளோபின் என்பது உடல் முழுவதும் உள்ள உறுப்புகளுக்கு ஆக்சிஜனை கொண்டு செல்லும் முக்கியமான வேதிப் பொருள். பெரும்பாலும் ரத்தப் பரிசோதனை செய்து கொள்ளும் போதும், ரத்த தானம் செய்யும் போதுதான் அனிமீயா இருப்பது வெளிப்படையாக தெரிய ஆரம்பிக்கும். மற்றபடி இதனை லேசில் கண்டு பிடித்து விட முடியாது.

ஆனாலும் ஆக்சிஜன் போதுமான அளவுக்கு கிடைக்காத பட்சத்தில் உறுப்புகள் சோர்ந்து விடும். ஆம், சோர்வு தான் அனிமீயாவுக்கு முக்கியமான அறிகுறி. அதுபோல நீளமான மூச்சு விட முடியாது. வெளுத்து போய் காணப்படுவர். படபடப்பு இருக்கும். இதுபோன்ற அறிகுறிகள் மூலம் அனிமீயாவை அடையாளம் கண்டுகொள்ளலாம்.

இந்நோய் பெண்களுக்கு வருவதற்கு முக்கிய காரணமாக மாதவிலக்கை குறிப்பிடலாம். ஒவ்வொரு மாதவிலக்கின் போதும் அவர்களுக்கு ரத்த இழப்பு ஏற்படுகிறது. அதிலும் அதிகமான உதிரப்போக்கு உள்ள பெண்களுக்கு நிலைமை இன்னும் சிக்கலை உண்டாக்கும். அனிமீயாவை சமாளிப்பதற்கு பெண்கள் இரும்புச் சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஆனால் அவர்கள் அப்படி செய்வதில்லை. குறிப்பாக சைவச் சாப்பாடு சாப்பிடுபவர்களுக்கு இரும்புச் சத்து கிடைப்பதற்காக வாய்ப்பு கொஞ்சமாகவே இருக்கிறது.

இரும்புச் சத்து அதிகமாக காணப்படும் பொருட்கள்

* ஆடு, கோழி உள்ளிட்ட மாமிச வகைகள், ஈரல் (ஆனால் கர்ப்பிணி பெண்கள் ஈரலை சாப்பிட வேண்டாம். ஏனெனில் ஈரலில் வைட்டமின் ஏ அதிகமாக இருக்கிறது. அது வயிற்றில் வளரும் குழந்தையை பாதிக்கக்கூடும்.)

* காலை உணவில் போதுமான அளவுக்கு தானியங்களை சேர்த்து கொள்ள வேண்டும்.

* புத்தம் புதிய பச்சை காய்கறிகளை சேர்த்து கொள்ள வேண்டும்.

* டீயில் டானின் என்ற பொருள் இருக்கிறது. இந்த டானின் குடலின் இரும்புச் சத்து ஈர்ப்பு தன்மையில் குறுக்கிடுகிறது. ஆகையால் சாப்பாட்டுடன் சேர்த்து டீ குடிப்பதை தவிர்த்து விடுங்கள். ஆனால் வைட்டமின் சி நேரெதிராக செயல்படுவதால் உணவு சேர்த்து ஒரு கப் ஆரெஞ்சு ஜூஸ் அருந்தலாம்.

* உணவு மூலம் போதிய அளவுக்கு இரும்புச் சத்தை பெற முடியாதவர்கள் மருந்து மாத்திரைகள் மூலம் இரும்பு சத்தை பெற முடியும். இரும்புச் சத்து தரும் மருந்து- மாத்திரைகள் நிறையவே இருக்கின்றன. உரிய மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பிறகு அவற்றை வாங்கி பயன்படுத்தலாம்.