இழிவுபடுத்த வேண்டாம்... விட்டுவிடுங்கள்!!""

மணக்கால் அய்யம்பேட்டை | 6:13 PM | Best Blogger Tips

 May be an image of one or more people, beard and train

♦ஒரு தம்பதி 50வயதில் குழந்தை
பெற்றுக் கொள்கின்றார்களா?
பரவாயில்லை விட்டுவிடுங்கள்!
 இழிவுபடுத்த வேண்டாம் விட்டுவிடுங்கள்....
♦ஒரு பெண் பலகாலம் சென்று
திருமணம் முடிக்கவில்லையா?
பரவாயில்லை விட்டுவிடுங்கள்!
 
♦திருமணம் முடிந்து 5ஆண்டுகள்
ஆகியும் இன்னும் குழந்தை பெற்றுக்
கொள்ளவில்லையா?
பரவாயில்லை விட்டுவிடுங்கள்!
 இழிவுபடுத்த வேண்டாம் விட்டுவிடுங்கள்....
♦அவன் 30வயது கடந்தும் ஒழுங்கான தொழில் இல்லாமல் அலைந்து கொண்டிருக்கிறானா?
பரவாயில்லை விட்டுவிடுங்கள்!
 இழிவுபடுத்த வேண்டாம் விட்டுவிடுங்கள்....
♦அவள் பேரப்பிள்ளைகளை கண்டபிறகும்,தன் கணவனோடு கைகோர்த்து வீதியில் நடக்கிறாளா?
பரவாயில்லை விட்டுவிடுங்கள்!
 
♦அவள் கல்விக்காக வெகுதொலைவில் சென்று தனியே தங்கியிருந்து படிக்கிறாளா?
பரவாயில்லை விட்டுவிடுங்கள்!
 இழிவுபடுத்த வேண்டாம் விட்டுவிடுங்கள்....
♦அவரவர் அவர் விரும்பியவாறு
வாழ்ந்து கொள்ளட்டும்..அவர்களுக்கு
வெளியில் சொல்லமுடியாத
உங்களால் கற்பனை பண்ணமுடியாத அளவு சோகங்களும்,துயரங்களும் இருக்கும்.
 
அவர்களைக்கண்டால்,கொஞ்சம்
புன்னகையுடன் உரையாடுங்கள்.
 
முடியாவிட்டால்,மௌனமாக
கடந்துவிடுங்கள்..
 
அது போதும்..
 
உங்களது வாழ்க்கை உங்களுக்கானது..
 
அவர்களது வாழ்க்கை
அவர்களுக்கானது..
 வாய்மொழி துஷ்பிரயோகம் என்றால் என்ன? பாடுகிறது, வகைகள் மற்றும் பிரேக்கிங்  இலவசம்
புறம் பேசி அலைவதைவிட,
இத்தகைய மன நிலைஅமையப் பெற்றால்
 
நாம் உயர்நதவர்கள் தானே..!
 
 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 


  🌷 🌷🌷 🌷

தாராசுரம் கோவில் என்பது ஐராவதேசுவரர் திருக்கோவில்

மணக்கால் அய்யம்பேட்டை | 11:53 AM | Best Blogger Tips

 May be an image of monument and temple

 

தாராசுரம் கோவில் என்பது ஐராவதேசுவரர் திருக்கோவில் ஆகும்.
 
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்திற்கு அருகில், தாராசுரம் பேரூரில் அமைந்துள்ளது.
 
இக்கோவில் சோழ மன்னன் இரண்டாம் இராஜராஜனால் கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
 
தற்கால ஐராவதேசுவரர் கோயில், யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
 
முக்கிய அம்சங்கள்:
 
கட்டிடக்கலை: இது ஒரு சிவன் கோயில் ஆகும்.
சிற்பங்கள்: நுணுக்கமான மற்றும் அற்புதமான சிற்ப வேலைப்பாடுகளுக்குப் பெயர் பெற்றது.
அடையாளம்: "சிற்பிகளின் கனவு" என்று இது போற்றப்படுகிறது.
 
வரலாறு: இரண்டாம் இராஜராஜன் தனது தலைநகரை தாராசுரத்திற்கு மாற்றியபோது இக்கோயிலைக் கட்டினார்.
 
சோழ மன்னர்களில் 2ம் ராஜராஜனால் கட்டப்பட்ட அழகிய கலைக்கூடம் இக்கோயில்.
இக்கோயிலைச் சுற்றிலும் ஏராளமான கல்வெட்டுக்கள் உள்ளன. தூண்களில் அமைக்கப்பட்டுள்ள சிற்பங்களும், சுவர்களில் அமைக்கப்பட்டுள்ள வடிவங்களும், நாட்டிய முத்திரைகளை காட்டி நிற்கும் சிற்பங்களும், தேர் போன்று வடிவிலமைந்த மண்டபமும் என பல அரிய சிற்பக் கலைப் படைப்புக்களை இக்கோயில் கொண்டுள்ளது.
 
வல்லுனர்களால், "சிற்பிகளின் கனவு" என்று கருதப்படும் இந்த தலம் முழுவதும் மிகவும் நுணுக்கமான சிறிய மற்றும் பெரிய சிற்பங்களால் நிறைந்துள்ளது. வழக்கமான சைவத்தலங்களின் அமைப்பிலிருந்து சற்றே வேறுபட்டுள்ளது. இறைவிக்கென்று தனியே ஒரு கோயில் வலதுபுறம் அமைந்துள்ளது. இது வழக்கமான தலங்களைபோல முதலில் அமையப்பெற்று பின் கால மாற்றத்தில் சுற்றுச்சுவர் மறைந்து தனித்தனி சன்னதிகளாக அமையப்பெற்றிருக்கலாம் என்று ஒரு கூற்று இருந்தாலும், ஆயிரம் வருடங்களுக்கு முன்பே பெண் தெய்வத்துக்கும் சமமாய் ஒரு தனி கோயில் அமைத்திருப்பது இதன் சிறப்பாகும். இக்கோயில் கருவறை விமானம் ஐந்து நிலை மாடங்களுடன் 80 அடி உயரம் உள்ளது.
 
63 நாயன்மார்களின் சிற்பங்களும் இந்தக் கோயிலில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
கங்கைகொண்ட சோழபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த இரண்டாம் இராஜராஜன் அங்கிருந்து தனது தலைநகரைத் தாராசுரத்திற்கு மாற்றி, அங்கு கட்டிய கோயிலே ஐராவதேசுவரர் கோயிலாகும்.
 
முதலில் இக்கோயிலின் இறைவனுக்கு ராஜராஜேஸ்வரமுடையார் என்ற பெயர் வழங்கப்பட்டுப் பின்னர் ஐராவதேஸ்வரர் என பெயர் கொண்டது.
 
தக்கயாகப்பரணி இந்தக் கோயிலின் மண்டபத்தில் தான் அரங்கேற்றம் செய்யப்பட்டது.
 
[3] இந்தக் கோயிலில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கல்வெட்டில் இராஜராஜசோழனுக்கும் அவரது 5 மனைவியருக்கும் பள்ளிப்படை அமையப்பெற்றது என்ற செய்தி காணப்பட்டது
 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷


 

✨ இன்றைய சிந்தனை: டூப்ளிகேட் வாழ்க்கை!

மணக்கால் அய்யம்பேட்டை | 10:54 AM | Best Blogger Tips

வாழ்க்கை முறை: அறிவு மற்றும் புரிதல்

வீட்டில் பிரிட்ஜ் இல்லாத நாட்களில் ஐஸ் வாட்டருக்காக ஏங்கியிருந்தேன்…
இப்போது என் வீட்டிலும் ஏசி, பிரிட்ஜ் இரண்டும் இருக்கிறது.



நம்ப மாட்டீர்கள் — வாங்கிய நாளிலிருந்து இன்று வரை,
பிரிட்ஜில் தண்ணீர் வைத்து குளிர்ச்சியாக்கி குடித்ததே இல்லை!

அங்குமிங்கும் பார்த்துப் பார்த்து,
வீட்டில் வாங்கி வைத்த
டைனிங் டேபிளில் இப்போதெல்லாம் உட்கார்ந்து சாப்பிடத் தோன்றுவதில்லை...


அலுவலகம் மற்றும் வெளியிடங்களில் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டு அலுத்துப் போனவனுக்கு,
வீட்டில் இருக்கும்போது
தரையில் அமர்ந்து சாப்பிட்டால் மட்டுமே பரம திருப்தி!
வாழ்க்கைல மனுஷனுக்கு வரக்கூடாத ...
சோஃபாவும் அப்படித்தான்...

பீட்ஸா, பர்கர் என்றெல்லாம் பல பெயர்கள் சொல்லினாலும் கூட —


என்ன இருந்தாலும்,
“வாழை இலை சாப்பாட்டுக்கு இணையுண்டா!” என்று கடைசியில் மனமாற்றம் அடைந்தவர்களில் நானும் ஒருவன்!
Prime Video: A Way of Life


8GB RAM, Quad-core processor, 128GB built-in memory என்று அனைத்தையும் பார்த்து, அதிக காசு கொடுத்து வாங்கிய மொபைலில்


வெறுமனே
Facebook, WhatsApp-ல் மூழ்குவதை நினைத்து அவ்வப்போது சிரித்துக் கொள்வேன்...

ஆயிரம் ரிவியூக்களைப் பார்த்து வாங்கிய டெலிவிஷன் பெட்டி —

வாழ்க்கைல மனுஷனுக்கு வரக்கூடாத வியாதி விரக்தி ஆனா பிடிச்ச படிப்பு படிக்க  முடியல, பிடிச்ச வேலை கிடைக்கல, பணக்கஷ்டம், பிடிச்ச மாதிரி ...
ஆனால் இப்போதெல்லாம் நான் நாளொன்றுக்கு, இல்லை இல்லை… வாரத்திற்கு அரை மணி நேரம் டிவி பார்த்தாலே அது பெரிய விஷயம்!

காலம் மாறிவிட்டது…

இப்போது கையிலேயே
உலகத்தை காணும் வசதி இருக்கிறது.

அவரது ஓய்வில் நுழைய உழைப்பு ...
அதற்காக வருட சந்தாவும் செலுத்தியிருக்கிறோம்.
எல்லாம் இருந்தும் எதையும் சரியாக பயன்படுத்துவதில்லை.


பயன்படுத்தினாலும்
அளவாகத்தான்... வெத்து பந்தா மாதிரி ஆகி விட்டது வாழ்க்கை!

அன்லிமிட்டெட் சாப்பாட்டை வாங்கிவிட்டு, அளவுச் சாப்பாடு
சாப்பிடுபவனைப் போல
நாமும் வசதிகளுக்குள் வாழ்ந்தாலும்
, அவற்றை அளவாகத்தான் பயன்படுத்துகிறோம்...
The Way of Life: DEFINITIVE EDITION on Steam
எல்லாவற்றையும் நினைத்துப் பார்த்தால் —
எல்லாமே ஒரு மாயையாகத்தான்
தோன்றுகிறது…

இது ஒரு
“டூப்ளிகேட் வாழ்க்கை” என்று நன்றாகவே உணர முடிகிறது.

வீட்டை மிதித்தவுடன் களைப்பில் “சரி, கொஞ்ச நேரம் கண்ணயரலாம்” என்ற எண்ணத்தில்
தினசரி எனக்காகக் காத்திருக்கும்
தலையனையைத்தான் கண்கள் தேடுகிறது...

இப்படியாக பல
சுய பரிசோதனைகளின் வாயிலாக சில உண்மைகள் உரைத்தன… உணர்த்தியும் விட்டன...

இப்போது பண வரவு, சகல வசதிகளோடு இருந்தாலும் —


வாழ ஆசைப்படுவது நமது
பழைய, மனதுக்குப் பிடித்த நெருக்கமான வாழ்வைத்தான்!

ஆயிரம் இருந்தும், வசதிகள் இருந்தும்… No peace of mind!

இதைப்
படிப்பவர்களுக்கு புரியுதோ, புரியலையோ…


ஆனா
அனுபவிச்சவர்கள் இதை கண்டிப்பா உணர்வாங்க!

 🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷 

 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

 

சனி மகா பிரதோஷம் - பிரதோஷத்தின் பெருமை!…*

மணக்கால் அய்யம்பேட்டை | 11:18 AM | Best Blogger Tips

 May be an image of temple and text that says "இன்று பிரதோஷம்! சிவ பெருமானின் அருளால் உங்கள் வாழ்க்கை சிறப்பாக மாறப்போகிறது. ஓம் நமச்சிவாய நற்றுணையாவத வது அண் அண்ணாமலை லை யாரே"

 

பிரதோஷத்தின் பெருமை!…*
 
*பிரதோஷம் என்பது ஐந்து வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன*
 
☘️இனிய பிரதோஷ நாயகனே எல்லா பிற தோஷங்களிலிருந்தும் அனைவரையும் காத்தருள்வாய் ☘️
 
(1) நித்ய பிரதோஷம்,
 
(2) பட்சப் பிரதோஷம்,
 
(3) மாச பிரதோஷம்,
 
(4) மஹா பிரதோஷம்,
 
(5) ப்ரளய பிரதோஷம்.
 Benefits Of Pradosha Pooja,பிரதோஷத்தன்று சிவனை எவ்வாறு வலம் வந்தால் முழு  பலன் கிடைக்கும் ? - method to get complete benefits of pradosha pooja -  Samayam Tamil
 
“பிரதோஷம்’ என்றால் அனைத்துக் குற்றங்களும் பாவங்களும் சிவபெருமானால் பொறுத்து மன்னிக்கக்கூடிய காலமாகும். 
 
ஜாதகத்தில் ஏதாவது குற்றங்கள் இருந்தால் திருமணத்தடை, புத்திரப்பேறின்மை, கடன் போன்ற கஷ்டங்கள் ஏற்படுகின்றன. 
 
பிரதோஷ விரதம் இருந்தால், சிவன் ஜாதகக் குற்றங்களைப் போக்கி நன்மையளிப்பார்.
 
நாம் முற்பிறவிகளில் செய்த
பாவங்களினால் எத்தனையோ இன்னல்களுக்கு ஆளாகிறோம். பிரதோஷ விரதம்,
 
இவற்றிலிருந்தும் நம்மைக் காக்க வல்லது.
தினமும் மாலை சூரிய அஸ்தமனத்திற்கு முன்பு 24 நிமிடங்கள், பின்பு 24 நிமிடங்கள் ஆக 48 நிமிடங்கள் பிரதோஷ காலமாகும். 
 
இது நித்ய ப்ரதோஷம். வளர்பிறை திரயோதசி திதி மாலைப் பொழுது பட்ச பிரதோஷமாகும்.
தேய்பிறைத் திரயோதசி திதியின் மாலைப் பொழுது மாச பிரதோஷமாகும்.
 
சனிக்கிழமை யன்று
 
தேய்பிறைத் திரயோதசி திதி கூடிவருவது தான் மஹா பிரதோஷம் என்று குறிப்பிடப்படுகிறன.. இதனை சனி மஹாபிரதோஷம் என்றும் கூறுவர்.
தேவர்கள் பாற்கடலைக் கடைந்த பொழுது ஏற்பட்ட விஷத்தை சிவபெருமான் தாமே உட்கொண்டு உலகைக் காப்பாற்றிய நாள் இது....
 
மற்றைய பிரதோஷங்களில் உபவாசம் (சாப்பிடாமல் இருப்பது) இருக்க இயலாதவர்கள் சனி பிரதோஷத்தன்றாவது உபவாசம் இருந்து சிவபெருமானை வழிபட்டால் எல்லா குற்றங்களும் பாவங்களும் நீங்கி சகல க்ஷேமங்களும் உண்டாகும்.
 நித்ய பிரதோஷம் என்பதன் பொருள் என்ன?
ஐந்தாவதாகிய பிரளய பிரதோஷம் என்பது இந்தக் கலியுகம் முடிந்து அனைத்து உலகங்களையும் சிவபெருமான் தம்மகத்தே
ஒடுக்கிக் கொள்வதாகும்...
 
☘️அகிலம் காக்கும் அண்ணாமலை ஈசனே எனை ஆளும் நேசனே சிவ லோக நாதனே சிவமே என் வரமே .☘️
 
சிவாய நம🙏🙏 சிவமே ஜெயம் சிவமே தவம். சிவனே சரணாகதி 🌺 
 
🌺அகிலம் காக்கும் அண்ணாமலையார் மலர் பாதம் பணிந்து இன்றைய விடியலை மனமுவந்து நமக்கு அளித்த இனிய ஈசனுக்கு நன்றியுடன் கோடானு கோடி ஆத்ம நமஸ்காரங்கள் 🙏🙏🙏🌺 
 
🌺உலகின் முதல்வன் எம் பெருமான் நம் தந்தை சிவனாரின் இனிய ஆசியுடன் அன்பான சிவ காலை வணக்கங்கள் 🌺 
 




🙇அப்பனே அருணாச்சலா உன்பொற் கழல் 🌺 
 
Thanks & Copy from  
ஷிவானி கௌரி🦜

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 No photo description available.  🌷 🌷🌷 🌷