சனி மகா பிரதோஷம் - பிரதோஷத்தின் பெருமை!…*

மணக்கால் அய்யம்பேட்டை | 11:18 AM | Best Blogger Tips

 May be an image of temple and text that says "இன்று பிரதோஷம்! சிவ பெருமானின் அருளால் உங்கள் வாழ்க்கை சிறப்பாக மாறப்போகிறது. ஓம் நமச்சிவாய நற்றுணையாவத வது அண் அண்ணாமலை லை யாரே"

 

பிரதோஷத்தின் பெருமை!…*
 
*பிரதோஷம் என்பது ஐந்து வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன*
 
☘️இனிய பிரதோஷ நாயகனே எல்லா பிற தோஷங்களிலிருந்தும் அனைவரையும் காத்தருள்வாய் ☘️
 
(1) நித்ய பிரதோஷம்,
 
(2) பட்சப் பிரதோஷம்,
 
(3) மாச பிரதோஷம்,
 
(4) மஹா பிரதோஷம்,
 
(5) ப்ரளய பிரதோஷம்.
 Benefits Of Pradosha Pooja,பிரதோஷத்தன்று சிவனை எவ்வாறு வலம் வந்தால் முழு  பலன் கிடைக்கும் ? - method to get complete benefits of pradosha pooja -  Samayam Tamil
 
“பிரதோஷம்’ என்றால் அனைத்துக் குற்றங்களும் பாவங்களும் சிவபெருமானால் பொறுத்து மன்னிக்கக்கூடிய காலமாகும். 
 
ஜாதகத்தில் ஏதாவது குற்றங்கள் இருந்தால் திருமணத்தடை, புத்திரப்பேறின்மை, கடன் போன்ற கஷ்டங்கள் ஏற்படுகின்றன. 
 
பிரதோஷ விரதம் இருந்தால், சிவன் ஜாதகக் குற்றங்களைப் போக்கி நன்மையளிப்பார்.
 
நாம் முற்பிறவிகளில் செய்த
பாவங்களினால் எத்தனையோ இன்னல்களுக்கு ஆளாகிறோம். பிரதோஷ விரதம்,
 
இவற்றிலிருந்தும் நம்மைக் காக்க வல்லது.
தினமும் மாலை சூரிய அஸ்தமனத்திற்கு முன்பு 24 நிமிடங்கள், பின்பு 24 நிமிடங்கள் ஆக 48 நிமிடங்கள் பிரதோஷ காலமாகும். 
 
இது நித்ய ப்ரதோஷம். வளர்பிறை திரயோதசி திதி மாலைப் பொழுது பட்ச பிரதோஷமாகும்.
தேய்பிறைத் திரயோதசி திதியின் மாலைப் பொழுது மாச பிரதோஷமாகும்.
 
சனிக்கிழமை யன்று
 
தேய்பிறைத் திரயோதசி திதி கூடிவருவது தான் மஹா பிரதோஷம் என்று குறிப்பிடப்படுகிறன.. இதனை சனி மஹாபிரதோஷம் என்றும் கூறுவர்.
தேவர்கள் பாற்கடலைக் கடைந்த பொழுது ஏற்பட்ட விஷத்தை சிவபெருமான் தாமே உட்கொண்டு உலகைக் காப்பாற்றிய நாள் இது....
 
மற்றைய பிரதோஷங்களில் உபவாசம் (சாப்பிடாமல் இருப்பது) இருக்க இயலாதவர்கள் சனி பிரதோஷத்தன்றாவது உபவாசம் இருந்து சிவபெருமானை வழிபட்டால் எல்லா குற்றங்களும் பாவங்களும் நீங்கி சகல க்ஷேமங்களும் உண்டாகும்.
 நித்ய பிரதோஷம் என்பதன் பொருள் என்ன?
ஐந்தாவதாகிய பிரளய பிரதோஷம் என்பது இந்தக் கலியுகம் முடிந்து அனைத்து உலகங்களையும் சிவபெருமான் தம்மகத்தே
ஒடுக்கிக் கொள்வதாகும்...
 
☘️அகிலம் காக்கும் அண்ணாமலை ஈசனே எனை ஆளும் நேசனே சிவ லோக நாதனே சிவமே என் வரமே .☘️
 
சிவாய நம🙏🙏 சிவமே ஜெயம் சிவமே தவம். சிவனே சரணாகதி 🌺 
 
🌺அகிலம் காக்கும் அண்ணாமலையார் மலர் பாதம் பணிந்து இன்றைய விடியலை மனமுவந்து நமக்கு அளித்த இனிய ஈசனுக்கு நன்றியுடன் கோடானு கோடி ஆத்ம நமஸ்காரங்கள் 🙏🙏🙏🌺 
 
🌺உலகின் முதல்வன் எம் பெருமான் நம் தந்தை சிவனாரின் இனிய ஆசியுடன் அன்பான சிவ காலை வணக்கங்கள் 🌺 
 




🙇அப்பனே அருணாச்சலா உன்பொற் கழல் 🌺 
 
Thanks & Copy from  
ஷிவானி கௌரி🦜

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 No photo description available.  🌷 🌷🌷 🌷