🙏🌹 நன்றி இணையம் 🌹🙏
Ramesh
இயற்கை சூழ்ந்த அழகிய ஊர் ! 18 கோவில்களும் ! 18 குளங்களும் ! 18 தெருங்களும் இருக்கும் அழகிய கிராமம் ! பழமையான பெயர் திருப்பெருவேளூர் ! தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 92வது தலம். ! அழகா அமைத்துள்ள தெருங்கள் ! எங்கள் ஊா்.
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏
🌹"இன்றைய சிந்தனை"..🌹
..............................................
🌹''’ பணம் தான் வாழ்க்கையா?’’🌹
.............................................
‘கருவறையில் இருந்து கல்லறை வரை சில்லறை தேவை’ என்று சொல்லிக் கேட்டு இருப்போம். இது ஒரு விதத்தில் உண்மை தான்.*
சாப்பாடு, துணிமணி, வீடு என்று எல்லாவற்றுக்கும் பணம் தேவை. பணம் வைத்து இருப்பது தவறு இல்லை. ஆனால், பணத்தின் மீது அதீத ஆசை வைத்து இருப்பது தான் தவறு..*
பணத்துக்கு அதிக முக்கியம் கொடுக்கும் போது உறவுகளுக்கு இடையே விரிசல்கள் ஏற்படலாம்.*
ஒரு வணிகப் பத்திரிகையின் ஆசிரியர் சொல்கிறார்:*
“பணம் தான் சமுதாயத்துக்கு ரொம்ப முக்கியம். ஒருவேளை பணத்தை வைத்து எந்த பொருளையும் வாங்கவோ, விற்கவோ முடியாது என்ற நிலை வந்து விட்டால், எல்லாரும் குழம்பிப் போய் விடுவார்கள். ஒரே மாதத்தில் போரே வெடிக்கும்.”*
இருந்தாலும், பணத்தால் எல்லாவற்றையும் வாங்க முடியாது. பணத்தை வைத்துக் கொண்டு, சாப்பாட்டை வாங்கலாம், பசியை வாங்க முடியாது,*
மருந்தை வாங்கலாம், ஆரோக்கியத்தை வாங்க முடியாது, மெத்தையை வாங்கலாம், தூக்கத்தை வாங்க முடியாது,*
புத்தகத்தை வாங்கலாம், புத்தியை வாங்க முடியாது, நகையை வாங்கலாம், அழகை வாங்க முடியாது,*
ஆடம்பரத்தை வாங்கலாம் அன்பை வாங்க முடியாது, கூட்டத்தை வாங்கலாம், நண்பர்களை வாங்க முடியாது,*
வேலைக்காரர்களை வாங்கலாம், விசுவாசத்தை வாங்க முடியாது என்று நார்வே நாட்டு கவிஞர் அர்னா கர்பார்க் சொல்லி உள்ளார்..*
வாழ்வதற்குப் பணம் தேவை தான், ஆனால் பணமே வாழ்க்கையாகி விடக் கூடாது. இந்த உண்மையை உணரும் ஒருவர் திருப்தியாகவும் ஆனந்தமாகவும் வாழ்வார்.*
பண ஆசை எல்லாவிதமான தீமைக்கும் வேராக இருக்கிறது; சிலர் இந்த ஆசையை வளர்த்துக் கொண்டு பலவித வேதனைகளால் தங்களையே ஊடுருவக் குத்திக் கொண்டு இருக்கிறார்கள்”*
ஆம்.,தோழர்களே..,
பணத்தையும், சொத்து சுகத்தையும் பெரிதாக எண்ணி, பணமே குறிக்கோள் என்று எண்ணி வாழ்பவர்களுடன் பழகாதீர்கள்.
பணத்தை விட நல்ல குணங்களைப் பெரிதாக மதிப்பவர்களோடு பழகுங்கள்...✍🏼🌹
அனைவருக்கும் காலை வணக்கம் 🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏
![]()
திருநெல்வேலி மாவட்டத்தில் வழக்கத்தில் இருந்துவரும் ஒரு பழமொழி இதற்கு சான்றளிக்கிறது.
மந்திரம்தான் பொய்யானால், பாம்பை பாரு..
மருந்துதான் பொய்யானால் வாணம் பாரு..
சாஸ்திரம் பொய்யானால், கிரகணம் பாரு..
சாமிதான் பொய்யானால் சாணம் பாரு..
இதுதான், நமது சந்தேகங்களை தெளிவிக்கும் சூத்திரம்..
இதற்கான விளக்கம்
மந்திரம்தான் பொய்யானால், பாம்பை பாரு
மந்திரங்களில் சக்தியில்லை என்று யாருக்காவது சந்தேகம் இருந்தால் படம் எடுத்தாடும் பாம்பு முன்பாக மந்திரத்தை உச்சரித்து பார்த்து சந்தேகத்தை தெளிவுபடுத்திக்கொள்ளலாம். பயப்பட வேண்டாம், மந்திரம் சொல்ல தெரிந்தவரை சொல்ல விட்டு நீங்கள் தள்ளி நின்று இதைப் பார்க்கலாம்
மருந்துதான் பொய்யானால் வாணம் பாரு
வாணவேடிக்கை பட்டாசுகளுக்குள் இருக்கும் மருந்து
அந்த வெடியை வானத்துக்கு தூக்கிச் சென்று வண்ண கோலங்கள் காண்பிக்கிறது. மருந்தின் சக்தியை தெரிந்து கொள்ள வாண-வேடிக்கையை பாருங்கள் என்பதுதான் இதன் பொருள்.
சாஸ்திரம்தான் பொய்யானால் கிரகணம் பாரு
ஜோதிட சாஸ்திரத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கூட, பஞ்சாகத்தில் முன்கூட்டியே பவுர்ணமி, அமாவாசை, கிரகண காலகட்டங்கள், நட்சத்திர சுழற்சி போன்றவை இடம் பெற்றிருப்பதைப் பார்த்து வியப்படைந்திருப்பர்.
எனவே ஜோதிடம் பொய் கிடையாது. அது அறிவியல் என்பதை கிரகணம் குறித்து பஞ்சாங்கம் சொல்லியுள்ளதை பார்த்து தெரிந்துகொள்ளலாம் என்பது அதன் பொருள்.
சாமிதான் பொய்யானால் சாணம் பாரு
இது ரொம்ப சுவாரசியமான விஷயம். கிராமங்களில் பசு சாணத்தை எடுத்து அதை விநாயகர் என்று உருவம் பிடித்து வணங்குவார்கள்.
இப்படி விநாயகர் உருவம் பிடித்த சாணத்தை பிறகு தூக்கிப்போட்டு விடுவார்கள். அதில்தான் ஆச்சரியம். விநாயகர் என்று கும்பிட்ட அந்த சாணத்தில் மட்டும் கரையான் அரிக்காது. மற்றபடி தெருவில் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகும் கிடக்கும் சாணத்தில் கரையான் குடியேறி, அதை சாப்பிடும்.
விநாயகர் என்று நாம் உருவேற்றி விட்ட அந்த சாணத்தில் கரையான் சேட்டை செய்யாது. இதில் இருந்து கடவுள் இருப்பதை பாமரனும் சாணத்தை பார்த்து அறிந்து கொள்ளலாம் என்பது தான் இந்த பழமொழியின் hi கருத்து.
அர்த்தமுள்ள சனாதன தர்மம்..
🕉️
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏

அன்பார்ந்த நண்பர்களே...
மழைக்காலத்தில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய குறிப்புகள் (மின்சாரம் சம்பந்தப்பட்டது)
i) எர்த் லீக் Rdகேஜ் சர்குட் பிரேக்கர் ஒவ்வொரு வீட்டிற்கும் அவசியம்; செலவு பாராமல் வைக்க வேண்டும்.
ii) வீட்டிலுள்ள வீனாய் போயுள்ள, பழைய சுவிச்சுகளை அவசியம் மாற்றிவிட வேண்டும். தரமான சுவிச்களை வாங்கிப் பொருத்த வேண்டும்.
iii) தண்ணீர் ஏற்ற வைத்துள்ள மோட்டர் சுவிச் போர்ட், வாஷிங் மிஷின், ஃபிரிட்ஜ் கீழே ரப்பர் மேட் போட்டுக் கொள்வது பாதுகாப்பானது.
iv) எந்த சுவிட்சை இயக்கும் போதும் இடது கையை பின்புறத்தில் கட்டிக் கொண்டு,
வலது கை சுட்டு விரலால் மட்டுமே இயக்க வேண்டும், இதயம் இடது புறத்தில் உள்ளதால்.
v) பாத் ரூம் சுவிச் போர்டின் மேல் ஒரு பழைய டூத் பிரஷ் வைத்துக் கொண்டு, அதனால் சுவிட்சைப் போடுவதே பாதுகாப்பானது.
vi) மழைக் காலம் வாட்டர் ஹீட்டர் அடிக்கடி பயன்படுத்த வேண்டியிருப்பதால்,
அதன் விஷயத்தில் மிகவும் சாக்கிரதையாக இருக்க வேண்டும். மும்பையில்,
ஒரு நடிகை ஹீட்டர் நீரில் குளிக்கும் போது, மின் ஷாக் அடித்து இறந்து போனது அறிந்திருப்போம்.
தண்ணீர் இல்லாததால், ஹீட்டர் எலிமெண்ட் உருகி, மின்சாரம் பாய்ந்து, அந்த நடிகை இறந்து போயிருக்கிறார்.
ஹீட்டருக்கு கொடுக்க கூடிய
இன்லெட், அவுட்லெட் ஏதும் மாறவே கூடாது.
எதிலும் கண்ட்ரோல் வால்வ் வைத்துவிடக் கூடாது.
அவுட்லெட், ஹாட் வாட்டர் டேப் வழியாக தண்ணீர் வருவதை உறுதி செய்து கொண்ட பின்னரே,
ஹீட்டர் சுவிட்சை ஆன் பண்ண வேண்டும்.
ELCB/RCCB இம்மாதிரி சமயங்களில் நம்மைக் காப்பாற்றும்.
ஹீட்டர் சுவிச்சை டவல்/துடைக்கும் துண்டை வைத்து ஆஃப் செய்தால் ஈரக்கையோடு சுவிச்சை தொடுவதிலிருந்து தப்பித்து விடலாம்.
vii) பொதுவாக வாட்டர் ஹீட்டருக்கு சாதாரண சுவிட்ச் தான் வைத்திருப்பார்கள்.
அதற்குப்பதிலாக எம்சிபி வைத்தால், ஹீட்டரில் ஏதாவது ஷார்ட் சர்குட் ஆகும் போது ட்ரிப் ஆகி நம்மை காக்கும்.
எப்போதும், சுடு நீர் தயார் பண்ணிவிட்டு, MCB ஐ ட்ரிப் பண்ணிவிட்டு குளிக்கப்போவதே நல்லது. இதே போல, வெட் கிரைண்டருக்கும் எம்சிபி பொருத்திக்கொள்வதே நல்லது.
viii) ஈர மின் சாதனங்களான வாஷிங் மெஷின், கிரைண்டர் போன்றவற்றைக் கையாளும் போது, சுவிச்சை ஆஃப் பண்ணாமல் ஈரத் துணிகளை எடுப்பதோ, மாவை அள்ளுவதோ கூடவே கூடாது.
ix) இவ்வளவு கவனமாக இருந்தும்,
ஆக்சிடெண்டலாக ஷாக் அடிக்க நேர்ந்தால்,
நேர்ந்து விட்டால்,
அருகிலுள்ளவர் ஒரு கம்பால் அல்லது துடைப்பக் கட்டையால்
பாதிக்கப் பட்டவரின் கையை அடிக்க வேண்டுமே அன்றி, பாதிக்கப்பட்டவரை நேரடியாக தொடவேக் கூடாது.
கிரைண்டரில் ஷாக் அடித்த மருமகளையும், பேத்தியையும் காப்பாத்த அவர்களை தொட்டு இழுத்து, இறந்து போன மாமியாரையும்,
பல வருடங்களுக்கு முன்பு,
திருநெல்வேலி அருகே, இன்சுலேஷன் பாதிப்படைந்த சர்வீஸ் லைன் மேல் பட்டு, கீழே வீழ்ந்து கிடந்த டிவி ஆண்டெனாவைத் தொட்ட ஒரு மனைவியைக் காப்பாற்றப் போன கணவன்
தொடர்ந்து தொட்ட மகன், மகள், உறவினர்களென்று கிட்டத்தட்ட ஏழு பேர் ஒரே நேரத்தில் இறந்து போனதையும் மறக்கவே கூடாது.
இம்மாதிரியான நேரங்களில் உணர்ச்சி வசப்படாமல், அறிவு பூர்வமாக செயல்பட வேண்டும்.
செருப்பு இதற்கு நல்ல ஸேஃப்டி டூல்.
அதனால், அடித்துக் கூட காப்பாற்றலாம்.
வீடென்றால் தொடப்பக்கட்டை!
வெளியே என்றால் செருப்பு!!!
எளிதாகக் கிடைக்கும் என்பதற்காகத் தான்!
வேறொன்றுமில்லை!
தண்ணீரில் வீழ்ந்தவரைக் காப்பாற்றப் போய் தானும் உயிர் விடற மாதிரி ஆகிவிடக் கூடாதல்லவா?
x) கைக் குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு மின்சாதனங்களைத் தொடவே கூடாது.
குழந்தைகளுக்கு எட்டும்படியாக சுவிச் பாக்ஸ் வைக்கக் கூடாது.
xi) சிங்கிள் பேஸ் சப்ளை வைத்திருப்போர்,
இரு முனை அயன்கிளாட் சுவிச்சும்,
3 பேஸ் சப்ளை வைத்திருப்பவர்கள் 4 முனை சுவிச்சும் வைத்திருக்க வேண்டும்.
நியூட்ரலில் லின்க் போட்டிருக்க வேண்டும்;
ஃப்யூஸ் போடக் கூடாது.
நியூட்ரல் கிரவுண்டிங்கை சரியாகப் பராமரிக்க வேண்டும்.
xii) நமது வீட்டில் பொருத்தியுள்ள UPS க்கு மின்வாரிய நியூட்ரலைத்தான் பெரும்பாலும் பயன்படுத்துகின்றோம். மின்சாரம் இல்லாத போது நமது UPS மூலம் நமது மின் சாதனங்கள் இயங்கும்போது, அவையேதும் ஃபால்ட்டானால்,
நியூட்ரல்/ எர்த் வழியாக மின்கம்பத்திற்கு மின்சாரம் வந்து சில மின் ஊழியர்கள் இறந்துள்ளனர்.
ஆகவே நாம் UPS ல் உள்ள நியூட்ரலை பயன்படுத்திக்கொண்டால் மின்கம்பத்திற்கு மின்சாரம் வராமல் அல்லது மின்சாரம் இல்லாத போது மெயின் சுவிட்சை ஆஃப் செய்து வைத்து மின்வாரியத்திற்கு உதவி உயிர் பலியினை தடுப்பது நமது கடமை.
UPS சப்ளைக்கு காமன் நியூட்ரலை பயன்படுத்துவது தான் பொதுவாகப் புழக்கத்தில் இருக்கிறது.
UPS சப்ளைக்கு தனி நியூட்ரலை பயன்படுத்த வேண்டுமாயின்,
UPS ஃபீடிங் சர்கூட்டின் நியூட்ரலையும்,
பேஸ் மாதிரியே தனியாகப் பிரித்து, UPS இன் பேஸ், நியூட்ரலுக்குமாகத் தனியாக ஒரு காண்டேக்டர் மூலமாக UPS சர்கூட்டின் சப்ளையை பராமரிப்போமானால்,
சர்கூட்டின் ஃபேனோ, லைட்டோ பழுதடைந்தால், UPSஇன் பேஸ், வாரியத்தின் நியூட்ரலுக்கு ரிட்டர்ன் சப்ளை போகாது.
இது எளிதான காரியமல்ல.
அதற்குப்பதில், RCCB இணைத்தோமானால், யுபிஎஸ் சப்ளை, வாரியத்தின் லைனுக்கு பேக் ஃபீடாகி விபத்து நேர்வதை தடுக்கலாம்.இது கொஞ்சம் மெனக்கெட்டு செய்யனும்.
xiii) முதலில் சொன்னதையே இறுதியிலும் சொல்கிறேன், RCCB ஐ அவசியம் வாங்கிப் பொருத்துங்கள்.

எனவே, வீட்டின் அனைத்துச் சுவர்களும் ஓதம் காக்கும். குறிப்பாக, மெயின் சுவிட்ச் போர்ட் இருக்குமிடம் சொதசொதன்னு இருக்க அதிக வாய்ப்புள்ளது.
ஈரம் மின்சாரத்திற்கு நண்பன்!எனவே, நாம்தான், இந்த கடும்
மழைக் காலத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
முன்னெச்சரிக்கையுடன் இருப்போம் விபத்தை தவிர்ப்போம் நன்றி
🙏
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏

இது ஒரு எச்சரிக்கை பதிவு.....
தீபாவளி ,
31 10 2024, வியாழக்கிழமை.....
மேலே உள்ள போஸ்ட் எண்ணெய் குளியலைப் பற்றியது. இன்றைய தலைமுறையினரிடையே எண்ணெய் தேய்ப்பு குளியல் என்றால் முகத்தை சுளிக்கின்றார்கள். இது இருபாலருக்கும் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வைக்கின்றது. இன்று நம்மிடையே
உலவும் பெரும்பாலான நோய்களுக்கு
எண்ணெய் குளியல் இல்லாமையே முக்கிய காரணம்.
அது பற்றி தெரிந்து கொள்வோம், வாருங்கள்.....)
உடலின் மூன்று தோஷங்களை சீராக்கும் எண்ணெய் குளியல்.....!
நாம் மறந்துபோன பழக்கங்களில் எண்ணெய் குளியலும் ஒன்று. தீபாவளி அன்று மட்டும் பலர் எண்ணெய் குளியலை கடமையே என்று நிறைவேற்றுகிறார்கள்.
😟😮😟😮😟
உடலில் உஷ்ணம் அதிகரிக்கும்போது உள் உறுப்புகளில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்று மரபு மருத்துவம் முதல் நவீன மருத்துவம் வரை கூறுகின்றன. இதனை நன்கு அறிந்துதான் எண்ணெய் குளியல் என்ற வழக்கத்தை நம் முன்னோர் உருவாக்கி வைத்தனர்.பொதுவாக, வாரம் இருமுறை உடலுக்கு எண்ணெய் தேய்த்து குளித்து வந்தால் ஏற்படும் பலன்கள் குறித்து பாரம்பரிய மருத்துவம் கூறும் பலன்களை காணலாம்.உடலில் நல்லெண்ணெயை தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் உயர் ரத்த அழுத்தத்தை சரி செய்கிறது. செரிமானத்தை சரி செய்கிறது. இனப்பெருக்க உறுப்புகளின் அதீத சூட்டை தணித்து ஆண்மை குறைபாட்டை சரி செய்து உடலுக்கு வலிமையை கொடுக்கிறது.தலையில் அதிகரிக்கும் வெப்பம் காரணமாக முடி உதிர்தல், இளநரை, வழுக்கை ஆகிய பாதிப்பு ஏற்படுகிறது. எண்ணெய் குளியல் இந்த பிரச்சினைகளை சரிசெய்கிறது.கவலை, மன உளைச்சல், துக்கம், பயம், கோபம், தாழ்வு மனப்பான்மை, ஏமாற்றம், விரக்தி போன்ற உணர்வுகள் உடலில் பித்த அமில நிலையை அதிகரிக்கிறது. எண்ணெய் உடலின் சூட்டை சமநிலைக்கு கொண்டு வருவதால் உடலுக்கு கேடு விளைவிக்கும் உணர்ச்சிகள், கொதிப்பு நிலை குறைகிறது.உமிழ் நீர், எச்சில், நிணநீர், கணைய நீர் (இன்சுலின்), சளி, கோழை, சிறுநீர், விந்து, மாத விடாய், வெள்ளைப்படுதல், வியர்வை ஆகியவற்றை சரியான அளவில் வைத்து உடலை பராமரிக்கிறது.வாரம் ஒரு முறை அல்லது இரு முறை நல்லெண்ணெய் தேய்த்து அதிகாலை 4 மணி முதல் காலை 8 மணிக்குள் குளிக்க வேண்டும் என சித்த மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ளது. 
=======
ஆயுர்வேத மருத்துவத்தின்படி எண்ணெய் குளியல் வாத, பித்த, கப தோஷங்கள் உடலில் சரியான அளவில் இருக்க உதவுகிறது.
=======
உடல் உள்ளுறுப்புகளின் சூட்டைத் தணிக்கவும், உடல் உறுப்புகள் நன்கு செயல்படவும் எண்ணெய் குளியல் உதவுகிறது.
உடலில் என்ணெய் தேய்த்துக் குளிப்பதால், சருமத்தின் மூலமாக எண்ணெய் உட்கிரகிக்கப்பட்டு 'லிம் ஃபாட்டிக்ஸ்' என்று சொல்லப்படுகிற நிணநீர்க் கோளத்தில் சேர்ந்து உடலுக்கு நன்மை பயக்கிறது என்று ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. லிம் ஃபாட்டிக்ஸ் எனப்படும் நிணநீர்க் கோளமே உடல் செல்களுக்கு ஊட்டம் கொடுக்கவும், உடலில் உருவாகும் கழிவுகளை வெளித்தள்ளும் வேலையையும் செய்கிறது.
எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சீர் செய்யப்பட்டு உடல் உறுப்புகள் நன்கு செயல்பட உதவுகிறது. உடல் வெப்பத்தைச் சீராகப் பராமரிக்கும் பண்பு என்ணெய்க்கு உண்டு. இதனால் உறுப்புகள் புத்துணர்வுடன் செயல்படும்.
தற்போதைய அவசர உலகில், பலருக்கும் அழுத்தம், பரபரப்பு தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. உடல் வெப்பமடையும்போது மூளையும் வெப்பமடையும் என்பதில் சந்தேகமில்லை. எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது மேற்கூறியவற்றால் ஏற்படும் நோய்கள் தவிர்க்கப்படும்.
குளியல் முறை:
எண்ணெய் தேய்த்து வெகு நேரம் காத்திருக்கக்கூடாது. கால் மணி நேரம் முதல் அரை மணி நேரம் வரை, தலை முதல் உள்ளங்கால் வரை நன்கு பரவலாக எண்ணெயைத் தேய்க்க வேண்டும். உடல் உறுப்புகள் மூட்டு இருக்கும் இடங்களில் சற்றுப் பொறுமையாக தேய்க்க வேண்டும். எண்ணெய் தேய்த்த பிறகு மிதமான சூடுடைய வெந்நீரில் குளிக்கவும்.
எண்ணெய் தேய்த்துக் குளித்த அன்று பகல் உறக்கம் கூடவே கூடாது. ஏனென்றால் உடலில் உள்ள நவதுவாரங்களின் வழியாக அதிகரித்த உடல் சூடு வெளிவரும். முக்கியமாகக் கண்களின் வழியாக வரும். இதைப் பகல் தூக்கம் தொந்தரவு செய்யும். எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் அன்று குளிர்ச்சியான உணவு வகைகளான தயிர், குளிர்பானம், நீர் காய்கறிகள் போன்றவற்றைத் தவிர்க்கவும். பதிலாக மிளகு ரசம் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.
உடலில் தேய்ப்பதற்கு நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். இந்த எண்ணெய்களின் குளிர்ச்சி ஒத்துவரவில்லை என்றால், மேற்படி எண்ணெயுடன் பூண்டு, ஒரு காய்ந்த மிளகாய், ஐந்து மிளகு சேர்த்து முப்பது விநாடி அடுப்பில் காய வைத்துத் தேய்த்துக் குளித்தால் குளிர்ச்சி குறைவாக இருக்கும்.
நீண்ட நாட்களாகவோ, ஆண்டுகளாகவோ எண்ணெய் குளியல் செய்யாதவர்கள் விரும்பும்போது ஆரம்பத்தில் சளி பிடித்தல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தோன்றலாம். அதற்காக பயப்படத் தேவையில்லை. எண்ணெய் குளியலை முறையாகப் பின்பற்றினால் உடல் பழகிவிடும் . மேற்கூறிய தொந்தரவுகள் விலகி விடும்.
எண்ணெய் குளியலின் நன்மைகள் :
எண்ணெய் குளியல் முடி உதிர்வைக் குறைக்கும், பார்வை பலப்படும், முதுமையைத் தாமதப்படுத்தும், ஆயுட்காலத்தைக் கூட்டும், சருமத்தை பளபளப்புடன் வைத்திருக்க உதவும், உடலில் உண்டாகும் கழிவை வெளித்தள்ளும், உள்ளுறுப்புகள் தங்கள் செயல்களைச் சிறப்பாகச் செய்யும், நல்ல தூக்கத்தைத் தரும், உடலை மென்மையாகவும் நோய் எதிர்ப்பாற்றலுடனும் வைத்திருக்கும்.
ஆண்களுக்கு
புதன்கிழமையும் சனிக்கிழமையும் எண்ணெய் குளியலுக்கு உரிய நாளாக இருக்கிறது. மற்ற நாட்கள் உகந்ததல்ல.
எண்ணெய் தேய்த்து குளித்தலில் பெண்களின் முக்கிய பங்கு.....
பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிக்கலாம். பெண்களுக்கு சனியை விட சுக்ரனின் உதவி அதிகம் தேவை. மேலும் செவ்வாயும், வெள்ளியும் பெண்களுக்கு உகந்த கிரகங்களின் நாட்கள். எனவே இந்தக் கிழமைகளில் பெண்கள் எண்ணை தேய்த்துக் குளித்தல் நலம்.
ஒரு வீட்டில் செல்வமும், வளமையும் நிறைந்திருக்க அந்த வீட்டின் பெண்கள் சிறந்த உடல் மற்றும் மன ஆரோக்கியத்தோடு இருப்பது அவசியம். செல்வங்களுக்கும், சுக போகங்களுக்கும் அதிபதியாகவும், பெண்களின் அழகு, வசீகர தன்மைக்கும் காரகனாக “சுக்கிர பகவான்” இருக்கிறார். மேலும் தேவர்களில் அனைத்து இன்பங்களுக்கும் அதிபதியாக இருக்கும் இந்திரனுக்குரிய தினமாகவும் வெள்ளிக்கிழமை இருக்கிறது. எனவே வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் எண்ணெய் குளியல் மேற்கொள்வதால் இந்த இரு தேவர்களின் அருளாசிகளும் பெண்களுக்கு கிடைத்து இல்லத்தில் சுபிட்சம் பொங்கும். பெண்களின் அழகு கூடும், முகம் பொலிவு பெற்று வசீகரம் உண்டாகும். இளமை தோற்றம் நீடிக்கும்.
எனவே .....
ஆண்கள் புதன்கிழமைகளிலும், சனிக்கிழமைகளிலும், பெண்கள் செவ்வாய்க்கிழமையும் வெள்ளிக்கிழமையும் எண்ணெய் தேய்த்து குளிப்பது மிகவும் சிறந்ததாகக் கருதப்படுகிறது.
இதற்கு விதிவிலக்காக ஆடி ஒன்றாம் தேதியும் தீபாவளி மற்றும் உள்ளூர் பண்டிகைகளும் எந்தக் கிழமை வந்தாலும் எண்ணெய் தேய்த்து குளிக்கலாம்.
இதனால் எந்த பாதிப்பும் வராது.
இனியாவது தொடர்ந்து எண்ணெய் குளியல் எடுத்துக்கொண்டு உடல் ஆரோக்கியத்தைப் பெறுவோம்.
தெரிந்து கொள்வோம்......
🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏