🌹''’ 🌹''’ பணம் தான் வாழ்க்கையா?’’🌹’’🌹

மணக்கால் அய்யம்பேட்டை | 10:48 AM | Best Blogger Tips

 பணம் பாதாளம் வரை பாயும்... - மனிதன்

🌹"இன்றைய சிந்தனை"..🌹

..............................................

🌹''’ பணம் தான் வாழ்க்கையா?’’
🌹

.............................................

‘கருவறையில் இருந்து கல்லறை வரை சில்லறை தேவை’ என்று சொல்லிக் கேட்டு இருப்போம். இது ஒரு விதத்தில் உண்மை தான்.*

சாப்பாடு, துணிமணி, வீடு என்று எல்லாவற்றுக்கும் பணம் தேவை. பணம் வைத்து இருப்பது தவறு இல்லை. ஆனால், பணத்தின் மீது அதீத ஆசை வைத்து இருப்பது தான் தவறு..*

பணத்துக்கு அதிக முக்கியம் கொடுக்கும் போது உறவுகளுக்கு இடையே விரிசல்கள் ஏற்படலாம்.*

ஒரு வணிகப் பத்திரிகையின் ஆசிரியர் சொல்கிறார்:*

“பணம் தான் சமுதாயத்துக்கு ரொம்ப     முக்கியம்.  ஒருவேளை பணத்தை வைத்து எந்த பொருளையும் வாங்கவோ, விற்கவோ முடியாது என்ற நிலை வந்து விட்டால், எல்லாரும் குழம்பிப் போய் விடுவார்கள். ஒரே மாதத்தில் போரே வெடிக்கும்.”*

இருந்தாலும், பணத்தால் எல்லாவற்றையும் வாங்க முடியாது. பணத்தை வைத்துக் கொண்டு, சாப்பாட்டை வாங்கலாம், பசியை வாங்க முடியாது,*
பணம்தான் எல்லாம் • ShareChat Photos and Videos
மருந்தை வாங்கலாம், ஆரோக்கியத்தை வாங்க முடியாது, மெத்தையை வாங்கலாம், தூக்கத்தை வாங்க முடியாது,*

புத்தகத்தை வாங்கலாம், புத்தியை வாங்க முடியாது, நகையை வாங்கலாம், அழகை வாங்க முடியாது,*
பணம் தான் வாழ்க்கையா?"
ஆடம்பரத்தை வாங்கலாம் அன்பை வாங்க முடியாது, கூட்டத்தை வாங்கலாம், நண்பர்களை வாங்க முடியாது,*

வேலைக்காரர்களை வாங்கலாம், விசுவாசத்தை வாங்க முடியாது என்று நார்வே நாட்டு கவிஞர் அர்னா கர்பார்க் சொல்லி உள்ளார்..*


வாழ்வதற்குப் பணம் தேவை தான், ஆனால் பணமே வாழ்க்கையாகி விடக் கூடாது. இந்த உண்மையை உணரும் ஒருவர் திருப்தியாகவும் ஆனந்தமாகவும் வாழ்வார்.*

பண ஆசை எல்லாவிதமான தீமைக்கும் வேராக இருக்கிறது; சிலர் இந்த ஆசையை வளர்த்துக் கொண்டு பலவித வேதனைகளால் தங்களையே ஊடுருவக் குத்திக் கொண்டு இருக்கிறார்கள்”*

ஆம்.,தோழர்களே..,

பணத்தையும், சொத்து சுகத்தையும் பெரிதாக எண்ணி, பணமே குறிக்கோள் என்று எண்ணி வாழ்பவர்களுடன் பழகாதீர்கள்.

பணத்தை விட நல்ல குணங்களைப் பெரிதாக மதிப்பவர்களோடு பழகுங்கள்...✍🏼🌹


அனைவருக்கும் காலை வணக்கம் 🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

🌷 🌷🌷 🌷 


 
🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🙏✍🏼🌹

Ramesh

 
🙏✍🏼🌹