*விதியா? மதியா?*

மணக்கால் அய்யம்பேட்டை | 2:10 PM | Best Blogger Tips



ஒருவன் ஒரு ஞானியிடம் சென்று கேட்டான். "மனித வாழ்க்கையில் எல்லாவற்றையும் தீர்மானிப்பது அவன் விதியா, இல்லை அவன் மதியா?".

ஞானி சொன்னார். "ஒரு காலை உயர்த்தி மறு காலால் நில்"

கேள்வி கேட்டவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஆனாலும் இடது காலை உயர்த்தி வலது காலால் நின்றான்.

ஞானி சொன்னார். "சரி அந்த இன்னொரு காலையும் உயர்த்து"

அவனுக்குக் கோபம் வந்து விட்டது. நம் நடிகர் வடிவேலு மாதிரி "என்ன சின்ன பிள்ளைத்தனமாக இருக்கு" என்று சீறினான். "இரண்டு காலையும் உயர்த்தி எப்படி ஐயா நிற்பது?"

ஞானி அமைதியாகச் சொன்னார். "நான் காலைத் தூக்கச் சொன்ன போது எந்தக் காலைத் தூக்குவது என்று தீர்மானம் செய்தது உன் மதி. ஒரு முறை தீர்மானித்த பிறகு மறு காலையும் ஒருசேரத் தூக்கி நிற்க முடியாது என்பது விதி. பாதியை உன் மதி தீர்மானிக்கிறது. மீதியை உன் விதி தீர்மானிக்கிறது"

அந்த ஞானியின் வார்த்தைகளில் சூட்சுமமான இன்னொரு உண்மையும் இருக்கிறது. விதி என்பதே முன்பு நாம் மதி கொண்டு தீர்மானித்ததன் பின் விளைவாகவே பெரும்பாலான நேரங்களில்

இருக்கின்றது.

விதியையும் மதியையும் விளக்க இன்னொரு உதாரணமும் மிகப் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

வாழ்க்கை ஒரு விதத்தில் சீட்டாட்டத்தைப் போல. குலுக்கிப் போடும் போது எந்தச் சீட்டுகள் வருகின்றன என்பது விதி. கையில் வந்த சீட்டுக்களை வைத்து எப்படி நீங்கள் ஆடுகின்றீர்கள்

என்பது மதி. எந்தச் சீட்டு வர வேண்டும் என்பதை நம்மால் தீர்மானிக்க முடியாது. ஆனால் சீட்டுக்கள் கைக்கு வந்த பின் ஆடுவது நம் மதியிடம் உள்ளது. நல்ல சீட்டுக்கள் வந்தும் ஆட்டத்தைக் கோட்டை விடுபவர்கள் உண்டு. மோசமான சீட்டுக்கள் வந்தாலும் கவனமாகவும், புத்திசாலித்தனமாகவும் ஆடி வெற்றி பெறுபவர்களும் உண்டு.

சிந்திக்கையில் வாழ்க்கையை விதியும் மதியும் சேர்ந்தே தீர்மானிக்கிறது என்பதே உண்மையாகத் தோன்றுகிறது. ஆனால் மன உறுதியும், கடின உழைப்பும் மதியுடன் சேரும் போது அது

விதியைத் தோற்கடித்து விடுகின்றது என்பதற்கு ஹெலன் கெல்லர் அருமையான உதாரணம்.

குருடு, செவிடு, ஊமை என்ற மிகப்பெரிய உடல் ஊனங்களை விதி ஹெலன் கெல்லருக்குக் கொடுத்தது. ஆனால் மன உறுதியாலும், கடின உழைப்பாலும் பேசும் சக்தியைப் பெற்றதோடு

பிற்காலத்தில் சிறந்த பேச்சாளராகவும் புகழ் பெற்றார்.

விதி நமக்குத் தருவதை அப்படியே ஏற்றுக் கொண்டு முடங்கிக் கிடக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அதையே மூலதனமாக எடுத்துக் கொண்டு மதியால் எத்தனையோ செய்ய முடியும். கால நேர சூழ்நிலைகளைக் கணக்கில் கொண்டு மதி கொண்டு உழைத்தால் அந்த விதியும் வளைந்து கொடுக்கும்.

*எனவே, விதி மிக சக்தி வாய்ந்ததாக இருக்கலாம். ஆனால், விதி மட்டுமே ஒருவனது வாழ்க்கையைத் தீர்மானித்து விடுவதில்லை என்பது மதி படைத்த மனிதர்களுக்கு நற்செய்தி.

 

நன்றி இணையம்

வாழ்க்கையில நமக்கு வரவேண்டியது வந்தே தீரும்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:06 PM | Best Blogger Tips

 


புருசன் செத்துட்டான்

பொட்டப்புள்ளையை காப்பாற்ற

புளியமரத்தடியில் நைட்டு டிபன்கடை போட்டாள் இளவயது ஜெயா.

கடைபோட்ட அன்னிக்கே ஒரு போலீஸ்காரன் வந்தான் பர்மிசன் யார்கிட்ட கேட்ட

மிட்நைட் ஆச்சு கடையைச்சாத்துன்னு

எதையாவது சொல்லிதினமும் ஓசியில வயிறுமுட்ட தின்பான்.

பணம் குடுத்து சாப்பிடுபவர்கள் இன்னும் ஒரு தோசை எக்ஸ்ட்ரா சாப்பிடமாட்டார்களா என ஏக்கமாயிருக்கும். அவர்களுக்கு பார்த்து பார்த்து பரிமாறுவாள் ஜெயா.

ஆனால் இந்த ஓசிபோலீஸ் ஒருதோசை

குறைவாக சாப்பிடமாட்டானா

என நினைத்தால் அவன் தான் ஆறஅமர உட்கார்ந்து நிறைய தின்னுட்டு

பார்சலும் வாங்கிட்டு போவான்.

என்ன செய்ய? புளியமரத்தடியில் கடைபோட்டால் இப்படித்தான் வருவார்கள்...

நம்ம தலைவிதி அப்படின்னு போலீசுக்கு வேண்டாவெறுப்பாக பரிமாறுவாள்.

என்ன சுவையா சமைத்தாலும்

டவுனுக்குள் நாலுகடை சாத்தினபிறகுதான்

நாலுசனம் வரும் ஜெயாவின் கடைக்கு...

நாலு வருசம் ஆகியும் நயாபைசா மிச்சம் பண்ணமுடியலை.



தனது கைப்பக்குவத்தின் மீது நம்பிக்கைவைத்து வாரக்கந்துக்கு பணம் வாங்கி டவுனுக்குள் கடையை பிடித்தாள்.

ஒரே வாரத்தில் ஜெயாவுக்கு நம்பிக்கை வந்திடுச்சு அப்பாடா இனி ஓரளவுக்கு தப்பிச்சிடலாம்ப்பா கடை வாடகை, கந்துவட்டி போக நாலுகாசை கண்ணுல பார்த்திடலாம்னு நினைச்சநேரம் மறுபடியும் அதே ஓசி போலீஸ் உள்ளே வர்றான்.

வாடி வா, இன்னைக்கு உன்னை நாலுவார்த்தை நல்லா கேட்கனும். இனி உனக்கு நான் பயப்படத்தேவையில்லை

இன்னிக்கு சாப்பிட்டதுக்கு இப்பவே காசைக்குடுடான்னு சட்டமா கேட்கனும்னு நினைச்சவேளையில்.

இந்தாம்மா ஜெயா இதுல ஒரு லட்சரூபாய் இருக்கு, நாலு வருசம் நான் உன் புளியமரக்கடையில் சாப்பிட்டதுக்கான பில்.

உன்புருசன் என்னோட படிச்சவன்தான்,

புருசன் இல்லாம அந்த நைட்டுநேரம்

நீ அந்தஇடத்தில் வியாபாரம் பண்றது எவ்வளவு ரிஸ்க் எனத்தெரிஞ்சதால்

உன்னோட பாதுகாப்புக்காகத்தான்

நான் தினமும் அங்கே வந்தேன்.

நான் கொடுக்கும் இந்தப்பணம்தான்

புளியமரத்தடிக்கடையின் லாப பணம்.

வச்சிக்கோ....கையில் கொடுத்தான்

ஜெயாவுக்கு ஒரு நிமிடம் என்னசொல்வதென்றே தெரியவில்லை,

கடைசியாகச்சொன்னாள்...

வாங்க சாப்பிடுங்க!

வாழ்க்கையில நமக்கு வரவேண்டியது வந்தே தீரும் ,

உழைப்பை மட்டும் விட்டு விட கூடாது .

 


நன்றி இணையம்