சோம வார பிரதோஷம் !!

மணக்கால் அய்யம்பேட்டை | 2:44 PM | Best Blogger Tips
சோம வார பிரதோஷம் க்கான பட முடிவுசோம வார பிரதோஷம் க்கான பட முடிவு

இன்று சோம வார பிரதோஷம் !! அப்படி என்ன சிறப்பு...


சோம வார விரதம் !!

🌟 திங்கட்கிழமை என்பது 'சோமவாரம்" என்றழைக்கப்படுகிறது. சிவபெருமானை நினைத்து திங்கட்கிழமைகளில் மேற்கொள்ளப்படும் விரதம் என்பதால் இதற்கு சோமவார விரதம் என்று பெயர்.


🌟 பிரதோஷத்தில் சோமவாரம் (திங்கள்) மிகவும் சிறப்பு வாய்ந்தது. சந்திர திசை நடப்பவர்கள், சந்திரனை லக்னாதிபதியாக கொண்டவர்கள் திங்கள் அன்று வரும் பிரதோஷத்திற்கு செல்ல மனதில் நிம்மதியும், மகிழ்ச்சியும் கிடைக்கும்.

சோமவார விரதத்தை முதலில் தொடங்க உகந்த நாள் :

🌟 சிவபெருமானுக்கு உகந்த சோமவார விரதத்தை கார்த்திகை மாதம் முதல் திங்கட்கிழமையில் தொடங்கி ஆண்டு முழுவதும் கடைபிடிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் சித்திரை, வைகாசி, ஆவணி, மார்கழி முதலான மாதங்களில் வரும் முதல் திங்கட்கிழமையில் தொடங்கி தொடர்ந்து கடைபிடிக்கலாம்.

🌟 ராகு காலத்திற்கு முன்பே பூஜையை தொடங்க வேண்டும். அதிகாலையில் கணபதியை வழிபட வேண்டும். மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து, அதற்கு தேங்காய் உடைத்து கற்பூர தீபம் காட்ட வேண்டும். பின்னர் கும்பம் தயார் செய்ய வேண்டும். கலசத்தில் தண்ணீர் பிடித்து அதில் நாணயம், மஞ்சள்பொடி போன்றவற்றை போட்டு, கலசத்திற்கு மேல் பகுதியில் மாவிலையை வைக்க வேண்டும்.

குடும்ப தலைமை பற்றிய மெய்யறிவு !
குடும்பம் என்கிற அமைப்பு கொஞ்சம் குறைபாடுகளும், அதிக நன்மைகளும் வாய்ந்தது. குடும்ப தலைமை என்பது, அடக்குமுறை, ஆக்கிரமிப்பின் ஆரம்பம் என்று உணர்வதை விட, சரியான பாதுகாப்பு ஏற்பாடு என்பதே உண்மை. ஒரு குடும்பத்துக்கு ஒரு தலைமைதான் சாத்தியம்.

வாழ்க்கையில் தலைமை பண்பு என்பது குடும்பத்திலான தலைமைப் பண்பிலிருந்து துவங்குகிறது.

குடும்பத்தலைவனின் ஆளுமை பற்றி விவரிக்கும் புத்தகம் தான் குடும்ப தலைமை பற்றிய மெய்யறிவு !


இந்த புத்தகத்தை உடனே பெற இங்கே கிளிக் செய்யுங்கள் !
🌟 கலசத்தின் மையப் பகுதியில் மஞ்சள் தடவி, தேங்காய் வைத்து சந்தனம், குங்குமம் வைத்து அலங்காரம் செய்ய வேண்டும். அதன் பிறகே பூஜையைத் தொடங்க வேண்டும். சாதம், நெய், பருப்பு, பாயசம், தேங்காய், வாழைப்பழம் போன்றவற்றை நைவேத்தியமாக படைக்கலாம். வழிபாட்டின் போது சிவ நாமத்தை உச்சரிப்பது சிறப்பான வாழ்வை அருளும். வழிபாட்டின் முடிவில் இறைவனுக்கு தீபாராதனை காட்ட வேண்டும்.

🌟 பூஜை முடிந்த பின்னர் வயதான தம்பதியரை பார்வதி பரமேஸ்வரனாக மனதில் நினைத்து சந்தனம், குங்குமம் அளித்து நமஸ்காரம் செய்ய வேண்டும். அவர்களுக்கு புதுவேட்டி, ரவிக்கைதுணி, வெற்றிலைப்பாக்கு மற்றும் பழம் இவற்றுடன் தட்சனை ஆகியவை அடங்கிய தட்டை கொடுக்க வேண்டும். அவர்களுக்கு அன்னமிட்டு அட்சதையை அவர்கள் கையில் கொடுத்து வணங்கி ஆசி பெற வேண்டும்.

🌟 இந்த விரதத்தைக் கடைபிடிப்பவர்கள், அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருப்பது நல்லது. அப்படி இருக்க முடியாதவர்கள் ஒரு பொழுது மட்டும் சாப்பிட்டு விரதத்தை கடைபிடிக்கலாம். இந்த விரதத்தை வாழ்நாள் முழுவதுமோ அல்லது 12 ஆண்டுகளோ கடைபிடிக்கலாம்.

🌟 அதுவும் இயலாதவர்கள் கார்த்திகை மாதத்தில் மட்டுமாவது இந்த விரதத்தை அனுஷ்டிப்பது நலம் தரும்.



நன்றி இணையம்

என்னோட வாழ்க்கையை

மணக்கால் அய்யம்பேட்டை | 10:11 PM | Best Blogger Tips


🌹🍁🌹🍁🌹🍁🌹

நான் கடவுளிடம் கேட்டேன்,

"என்னோட வாழ்க்கையை நான் எப்படி வழி நடத்துவது என்று,🍁🌹



🌹🍁கடவுள் சொன்னார்,

உன் அறையை செக் பண்ணு, என்று🍁🌹



🌹🍁என்னுடைய அறை எல்லா பதிலும் சொன்னது🍁🌹.



🌹🍁🌹🍁🌹🍁🌹



🍄🍃மேற் கூரை சொன்னதாம்,

உன் எண்ணங்களை உயர்வாக வை என்று🍃🍄.



🍄🍃காத்தாடி சொன்னதாம்,

என்ன மாதிரி குளிர்ச்சியா கூலா இருக்கனும் என்று🍃🍄.



🍄🍃கடிகாரம் சொன்னதாம் நேரத்தை மதிக்கனும் என்று🍃🍄.



🍄🍃காலண்டர் சொன்னதாம், என்னை மாதிரி தினமும் உன்னை புதுப்பித்துக்கொள்

என்று🍃🍄.



🍄🍃மணிபர்ஸ் சொன்னதாம் ,

வருங்காலத்துக்காக சேமித்துக்கொள் என்று🍃🍄.



🍄🍃கண்ணாடி சொன்னதாம்,

உன்னை மட்டும் பார் என்று🍃🍄.


🍄🍃விளக்கு சொன்னதாம் என்னை மாதிரி அடுத்தவர் வாழ்வில் ஒளி ஏற்று

என்று🍃🍄.



🍄🍃ஜன்னல் சொன்னதாம், பரந்த மனப்பான்மையாக இரு என்று🍃🍄.



🍄🍃தரை சொன்னதாம்,

எப்பவும் கீழே பணிவாக இரு என்று🍃🍄.


🍄🍃படிக்கட்டு சொன்னதாம்,

வாழ்க்கையில் ஒவ்வொரு படியிலும் ஏறும் போதும் கவனமாக அடி எடுத்து வை

என்று🍃🍄.


🌹🍁🌹🍁🌹🍁🌹

இது போல வாழ்க்கையில் நாம் கடைப்பிடித்து வந்தால் மிக உயர்ந்த நிலைக்கு வரலாம்.



*அன்புடன் ரமேஷ் ராமலிங்கம்*

🌹🍁🌹🍁🌹🍁🌹


நன்றி இணையம்

_திருமணத்தில் மணமக்களுக்கு ஏன் பாலும், பழமும் கொடுக்கறாங்க தெரியுமா..?

மணக்கால் அய்யம்பேட்டை | 7:39 PM | Best Blogger Tips


*பிரம்மிப்பூட்டும் இரகசியம்..!!_*

பெண்ணானவள் தான் பிறந்து வளர்ந்த குடும்பத்தை விட்டு புதிய சூழலில் வாழ வருவதால் எல்லாமே புதிதாக இருக்கும்.

கணவர் வீட்டார் கூறும் வார்த்தைகளில் தவறாக புரிதல் வரும் அதிலும் கேலி கிண்டல் ஏன் சில நேரம் அதட்டல் என ஏற்படலாம்.
அந்த நேரங்களில் பெண்ணே ஒருபசு மாடு எப்படி விஷத்தையே உண்டாலும் அது தரும் பாலில் துளிகூட விஷம் இராதோ, அது போல கணவன் வீட்டார் உனக்கு தீமையே செய்தாலும் விஷம் போன்ற வார்த்தைகளை கொட்டி விடாதே என குறிக்க பாலும்.

வாழைபழம் எப்படி விதையே இல்லாவிட்டாலும் மூலமரத்தை சார்ந்து கன்றை தருகிறதோ அது போல் கணவனை சார்ந்து வம்சவிருத்தியை நீ தரவேணும் என குறிக்க பழமும் தருவர்.

மணமகனுக்கு ஏன் தருகிறார்கள் என்றால்,
ஏ ! மணமகனே பாலில் எப்படி தயிரும் நெய்யும் உள்ளதோ அதுபோல் இந்த பெண்ணிடமும் அறிவும் ஆற்றலும் உள்ளது பக்குவமாக உறையிட்டு பக்குவமாக கடைந்து வெண்ணையை நெய்யை எடுப்பாயாக பாலை கெட வைத்துவிடாதே என குறிக்க பாலும்.

வாழைமரத்தை எப்படி அதன் தாய் மரத்தில் இருந்து பக்குவமாக பிரித்து நடுவரோ அது போல் இந்த பெண்ணை உங்கள் குடும்ப தோட்டத்தில் நட்டுள்ளோம் அதை பட்டுபோக விடாமல் அதை பக்குவமாக கவனித்து அதிலிருந்து உங்கள் சந்ததிகளை வாழையடி வாழையாக விருத்தி செய்து கொள்ளுங்கள் என உணர்த்தவே பழமும் கொடுக்கிறார்கள்.

திருமணத்தில் பால் பழம் கொடுப்பது சும்மா ஒரு வேடிக்கையான செயல் அல்ல.

*_ஒவ்வொரு செயலிலும் ஓர் அர்த்தம் உள்ளது.*.


நன்றி இணையம்

மனதை தொட்ட பதிவு

மணக்கால் அய்யம்பேட்டை | 12:44 PM | Best Blogger Tips
கணவன் மனைவி க்கான பட முடிவு

புதுசா கல்யாணம் ஆன கணவன் மனைவி இடையே ஒரு ஒப்பந்தம்".....!!

இன்று ஒரு நாள் மட்டும்....,

"
யார் வந்தாலும் கதவை திறக்க கூடாது என்று முடிவெடுத்தனர்"......!!

அன்றே..,

"
கணவனுடைய அம்மா அப்பா வந்தனர் ".....!!

இருவரும் அவர்கள் வருவதை...,
"ஜன்னல் வழியாக பார்த்துவிட்டனர்"......!!

இருவரும் ஓருவரை ஓருவர் பார்த்து கொண்டனர்.....!!

"கணவனுக்கு கதவை திறக்க வேண்டும் என்ற ஆசை"......!!

ஆனால் ,
"
ஒப்பந்தம் போட்டு விட்டதால்"....,
"அதை மீற மனமின்றி கதவை திறக்க வில்லை அவன்".......!!

அவர்கள் வீட்டில் யாரும் இல்லை என்று நினைத்து.....,
" திரும்பி போய் விட்டனர்"......!!

கொஞ்ச நேரம் கழித்து..... ,
"மனைவியின் அம்மா அப்பா வந்தனர்".....!!

கதவை தட்டினார்கள்....!!

" இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்".....!!
தொடர்புடைய படம்கணவன் மனைவி க்கான பட முடிவு
ஆனால்,

" மனைவிக்கு கண்கள் கண்ணீரால் குளமானது".......!!

" என்னால் கதவை திறக்காமல் இருக்கமுடியாது " .....,
என்று சொல்லி கதவை திறந்தாள்.

ஆனால் ,

"
கணவன் ஒன்றும் சொல்ல வில்லை"......!!

வருஷங்கள் உருண்டோடின....!

"இரண்டு ஆண் குழந்தை பிறந்தது"....!!

மூன்றாவதாக....,

"பெண் குழந்தை பிறந்தது"......!!

கணவன்...,

"
பெண் குழந்தை பிறந்த சந்தோஷத்தில்"...... ,

பெரிய அளவில் செலவு செய்து.....,

" அனைவருக்கும் பார்ட்டி கொடுத்து கொண்டாடினான்".......!!

அதற்கு மனைவி ,

"இரண்டு ஆண் குழந்தை பிறந்த போது"......,

" இவ்வளவு பெரிய அளவில் கொண்டாட வில்லை".......!!

" பெண் குழந்தை பிறந்தவுடன்"....,

" இவ்வளவு பெரிய பார்ட்டி கொடுக்கிறீங்களே ஏன்"......?

என்று கேட்டாள் .....!!

அதற்கு கணவன்....,

" ரொம்ப நிதானமாக சொன்னான்"......

எதிர்காலத்தில்.....,

" எனக்காக கதவை திறக்க".......,

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
" ஓரு பெண் பிறந்துவிட்டாள் "....!!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
என்றான் கர்வத்துடன்....!!!
 
நன்றி இணையம்