தானம் செய்தால்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:35 PM | Best Blogger Tips
தானம் செய்தால் க்கான பட முடிவு


அன்னதானம் செய்தால்:

பூர்வ ஜென்ம கர்மவினைகள் தீரும் . பித்ருக்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்.

ஆடைதானம் செய்தால்:
தகாத உறவுக் குற்றங்கள் நீங்கும். பெண்களின் கற்பிற்கு ரட்சையாக இருக்கும்.

காலணி தானம்:
பெரியோர்களை நிந்தித்த பாவம் விலகும்.தீர்த்த யாத்திரை செய்த பலன் கிடைக்கும்.

மாங்கல்ய தானம்:
காமக் குற்றங்கள் அகலும். தீர்க்க மாங்கல்ய பாக்யம் உண்டாகும் .

குடை தானம்:
தவறான வழியில் சேர்த்த செல்வத்தினால் ஏற்பட்ட பாவம் விலகும். குழந்தைகளுக்கு சிறப்பான எதிர்காலம் உண்டாகும்.

பாய் தானம்:
பெற்றவர்களை பெரியவர்களை புறக்கணித்ததால் வந்த சாபங்கள் தீரும். கடும் நோய்களுக்கு நிவாரணம் கிட்டும். அமைதியான மரணம் ஏற்படும் .

பசு தானம்:
இல்லத்தின் தோஷங்கள் விலகும். பலவித பூஜைகளின் பலன்கள் கிடைக்கும்.

பழங்கள் தானம்:
பல ஜீவன்களை வதைத்த சாபம் தீரும். ஆயுள் விருத்தியாகும்.

காய்கறிகள் தானம்:
பித்ரு சாபங்கள் விலகும் . குழந்தைகளின் ஆரோக்யம் வளரும்.

அரிசி தானம்:
பிறருக்கு ஒன்றுமே தராமல் தனித்து வாழ்ந்த சாபம் தீரும். வறுமை தீரும்.

எண்ணெய் தானம்:
நாம் அறிந்தும் அறியாமலும் செய்த கர்ம வினைகள் அகலும் .கடன்கள் குறையும்.

பூ தானம்:
அந்தஸ்து காரணமாக பிறரை அவமதித்ததால் ஏற்படும் தீவினைகள் நீங்கும். குடும்ப வாழ்க்கை சுகமாகவும் , சாந்தமாகவும் அமையும்.

பொன் மாங்கல்யம் தானம்:
மாங்கல்ய தோஷங்கள் நீங்கும். திருமண தடங்கல்கள் நீங்கும் .

மேலும் நமக்கு பயன்படாத, மற்றவருக்கு பயன்படும் பொருட்கள் எதுவாகினும் தானம் கொடுக்கலாம், மற்றவர் கேட்டு கொடுப்பதைக் காட்டிலும் அவர்களுக்கு அப்பொருள் கண்டிப்பாக தேவைப்படும் என்பதை அறிந்து நாமே அவர்களுக்கு கொடுப்பது இன்னும் பலன்களை அதிகரிக்கச் செய்யும்.


நன்றி இணையம்

புறா எதற்காக வளர்க்கபடுகிறது

மணக்கால் அய்யம்பேட்டை | 12:18 PM | Best Blogger Tips
தமிழக கோயில்களில் பழங்கால முறைப்படி புறா எதற்காக வளர்க்கபடுகிறது ????

புறா எதற்காக வளர்க்கபடுகிறது க்கான பட முடிவு
1. கோயில்களில் சிலந்தி கூடு கட்டாது. ஒட்டடை என சொல்லப்படும் அசுத்தம் சேராது.
2. மரங்களை துளையிடும் வண்டுகள் வராது, வந்தால் புறாக்களின் இரை ஆகிவிடும்.
3. கரையான் வராது அப்படியே வந்தால் அதுவும் இரையாகி விடும்.
4. கற்சிற்பங்களை சேதப்படுத்தும் சிற்றுண்டிகள் வராது. மீறி வந்தால் அதுவும் புறாக்களுக்கு இரையாகி விடும்.
5. வவ்வால் உள்ளே வராது, ஆந்தையும் உள்ளே வராது புறாக்கள் எழுப்பப்படும் ஓசை அவைகளை விரட்டிவிடும்.
6. புறாக்கள் எழுப்பப்படும் ஓசையானது நோயாலிகளை குணப்படுத்தும். கோயில்களில் உள்ள சக்தியை சிதையாமல் அதிகரித்து மனிதனுக்கு தரவல்லது.
புறா எதற்காக வளர்க்கபடுகிறது க்கான பட முடிவு
நமது மூதாதையர்கள் விஞ்ஞானிகள் , முட்டாள்கள் அல்ல !!! வேற்று நாட்டவரை எண்ணி வியப்படைவதை விடுத்து, நமது மூதாதையர்கள் வழங்கிய பொக்கிஷங்களை பேணி பாதுகாப்போம்!!!!
Top of Form
 Image may contain: 2 people, including Senthil Kumar, people standing, sky and outdoor
நன்றி இணையம்