🌹மஹாளய பட்சம் வழிபாடு

மணக்கால் அய்யம்பேட்டை | 2:22 PM | Best Blogger Tips


🌼☘🌼☘🌼☘🌼☘🌼
சூரியன் புரட்டாசி மாதம் கன்னி ராசியில்
இருக்கும் தேய்பிறை பிரதமை முதல் அமாவாசை வரை உள்ள பதினைந்து திதிகளே (நாட்களே) மஹாளய பட்சமாகும்.
நமது பித்ருக்களாகி முன்னோர்களுக்கு
நாம் ஆராதனை செய்யும் வழிபாடே
மஹாளய வழிபாடாகும்.
இந்த ஆண்டு செப்டம்பர் 17-9-2016 புரட்டாசி
முதல் தேதியில் ஆரம்பித்து செப்டம்பர் 
30-9-2016
புரட்டாசி 14ம் தேதி வெள்ளிக்கிழமை வரை மஹாளய பட்சம் உள்ளது.
இவ்வருட மஹாளய அமாவாசை
30-9-2016
புரட்டாசி14 தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை 4-28 மணி முதல் மறுநாள் காலை
5-28
மணி வரை உள்ளது .
மஹாளயபட்ச தினங்களாகிய பதினைந்து நாட்களிலும் பித்ரு தேவதைகள் எம தர்மனிடம் விடைபெற்றுக்கொண்டு தங்கள் குடும்பத்தினருடன் தங்கி விடுவர் என்பர்.
எனவேதான் இந்த நாட்களில் அவர்கள் பசியாற அன்னமாகவோ (திதி) அல்லது எள்ளும் தண்ணீருமாகவோ (தர்ப்பணம்) அளிக்க வேண்டும் என்றார்கள்.
அவர்களும் அதன் மூலம் திருப்தியடைந்து, நமக்கு அருளாசி வழங்குகின்றனர்.
நோயற்ற வாழ்வினை வழங்குகிறார்கள். தாய், தந்தையர் இறந்த தினத்தில் சிரார்த்தம் (திதி) செய்யாதவர்கூட, மறக்காமல் மஹாளயத்தை அவசியம் செய்ய வேண்டும்.
"தென்புலத்தார் தெய்வம் விருந்துஒக்கல் தானென்றாங்கு 
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை'
என பொய்யாமொழிப் புலவர் வள்ளுவர்
கூறியுள்ளார்.
பித்ருக்களின் வழிபாட்டு உபசரி்புக்கு”மஹாளயம்” என்று பெயர்.
நம் தாய்- தந்தை மற்றும் அவர்களின் முன்னோர்கள் இந்த உலகை விட்டுச் சென்ற பிறகு, பித்ருக்கள் எனப் போற்றப்படுகிறார்கள்.
முறையாக கற்றுத் தேர்ந்த அந்தனர்கள் மூலம் தர்ப்பைப் புல்லை ஆசனமாக வைத்து அதில் பித்ருக்களை எழுந்தருளச் செய்து, எள்ளும் தண்ணீரும் தருவதை தர்ப்பணம் என்கிறோம்.
இங்கே கொடுக்கின்ற எள், தண்ணீர், பிண்டம் முதலானவைகளை பித்ரு தேவதைகள், நம் மூதாதையர்கள் எங்கு பிறந்திருந்தாலும் அவர்களுக்கு ஏற்ப ஆகாரமாக மாற்றி அங்கே கிடைக்கச் செய்கிறது. - 
மஹாளய அமாவசை தினத்தில் மறைந்த முன்னோர்களை 
நினைத்து வணங்கிப் படையலிடுவது வழக்கம்
அமாவாசை தினங்களை மிகவும் புனிதமாக கருதுவதால் நிறை நாள் என்ற பெயரும் உண்டு. - இறந்த நம் முன்னோர்களை நினைவு கூறும் நாள் அமாவாசை.
செய்யும் சிரார்த்தம் உள்ளிட்ட சடங்குகள் மற்றும் அவரவர் வழக்கப்படியிலான சம்பிரதாயங்கள் மூலம் தான் தெய்வமான பிதிர்களுக்கு மேல் உலகத்தில் கிடைக்கவேண்டிய உணவும், நீரும் கிடைக்கும்.
சிரார்த்த கடன்களை செய்யாது தவிர்க்கும்போது பசியாலும் தாகத்தாலும் வாடும் அவர்களின் கோபத்துக்கும் சாபத்துக்கும் ஆளாக நேரிடும். 
பல வீடுகளில் வசதியிருந்தும், தகுதியிருந்தும் சுபகாரியத் தடைகள் ஏற்பட காரணமாகிவிடுகிறது..!
முன்னோர்களுக்கு அறிந்தோ அறியாமலோ நாம் செய்த பிழைகள் மற்றும் தீய சொற்களுக்கு மன்னிப்பு கேட்பதற்கும் இந்த நல்ல நல்ல நிலைக்கு உயர்ந்ததர்க்கு நன்றி சொல்வதற்கும் ஒவ்வொரு அமாவாசை அன்று முன்னோர்களான பித்ருக்களுக்கு வழிபாடு செய்யவேண்டியது அவசியம்..!
பித்ரு பூஜைகளை மனப்பூர்வமாகவும் உள்ளன்போடும் செய்யவேண்டும். அதனால் தான் இறந்தவர்களுக்காக செய்யப்படும் போது அமாவாசை சிரார்த்தம் என்கின்றனர்.
அறிவியல் ரீதியாக பார்த்தால்
புரட்டாசி மாதத்தில் பூமியின் தென்பாகமும் ,
சந்திரனின் தென்பாகமும் சூரியனுக்கு நேராக நிற்கிறது. 
விஞ்ஞான ரீதியாக பித்ருக்கள் லோகம் பூமியை சமீபிக்கும் 
காலம் கணிக்கப்பட்டு மஹாளய பக்ஷமாக வழங்கப்படுகிறது
தங்கள் தலைமுறைகளுக்கு மரபணுக்கள் மூலம் அதிகமாக தங்கள் அம்சங்களை கொடுப்பவர்கள் தகப்பனார், பாட்டனார், முப்பாட்டனார் என்பதால் சிரார்த்தத்தில் இவர்கள் பெயரை மட்டும் சொல்லி பிண்டம் கொடுக்கிறார்கள்.
இதில் சிரார்த்தம் செய்பவர் மனமும் பெறுபவர் மனமும்
ஒன்று படுவதால் அதன் பலன் கிட்டுகிறது
நம் முன்னோர்கள் இந்த உலகை விட்டுச் சென்றாலும், அடுத்து வேறு பிறவி எடுத்தாலும், நம்மிலும் நம் சந்ததியிலும் அவர்களின் தொடர்பு இருப்பதால் நம் முன்னோர்களுக்கான நன்றியை, மரியாதையை, வணக்கத்தை, கடமையை சிராத்தம், தர்ப்பணம் முதலான சடங்காகச் செய்கிறோம். 
சிறுகச் செய்தாலும், பித்ரு காரியங்களை மனப்பூர்வமாக சிரத்தையாகச் செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம்.
மஹாளய தர்ப்பனம்.
அப்போது, பித்ருக்களின் பசிக்கும் தாகத்துக்குமாக எள்ளும் தண்ணீரும் அர்ப்பணிக்கிறோம்.
நாம் பூலோகத்திலே தருகின்ற இந்த திதி
சிரார்த்தமானது பித்ரு லோகத்தில் உள்ள
நமது முன்னோர்களை சென்றடையும்.
பித்ருலோகத்தில் வாழும் முன்னோர்கள் ஒவ்வொரு மாதமும் அமாவாசை முதலான முக்கியமான நாட்களில் அவரவரின் வீடுகளுக்குப் பித்ருக்கள் வந்து, வாசற்படிக்கு முன் நின்று, தங்களின் சந்ததியினர் அளிக்கும் உபசாரங்களை ஏற்று, ஆசிவழங்கி செல்கிறார்கள் என்றும், ஒருவேளை சிறப்பாகத் தர்ப்பணம் செய்யாமல் விட்டு, அதனால் அவர்கள் மனவருத்தம் அடைந்தால், அது சாபமாக மாறி நம்மைப் பாதிப்பதாகவும் சாஸ்திரங்கள் எடுத்துரைக்கின்றன.
நாம் அளிக்கும் இந்த சிரார்த்தம் யாருமில்லாத அனாதை ஆத்மாக்களுக்கும்
சென்றடையும்.அந்த புண்யமும் நம்மைச் சேரும்.
திருமணத் தடை நீங்க அதாவது கல்யாணத்தை விரும்புகிற மனிதன் மஹாளயம் செய்ய வேண்டும். ""மஹாளயம் செய்யாதவனுக்கு மங்களம் உண்டாகாது''என்பது பழமொழி.
தலைமுறையைக் கடந்த முன்னோர்களுக்குக் கடமையைச் செய்வதும் நமக்கான கடன்தான்.
மஹாளய பட்ச தினம் பித்ருகளுக்கு நன்றிக் கடன் செலுத்தி வாழ்க்கையில் உயரலாம். 
திருமணத்தடை,புத்திர பாக்கியத்தடை,
வாழ்க்கை முன்னேற்த்தடை நீங்கும்.
வசிஷ்ட மகரிஷி, தசரதர், யயாதி, துஷ்யந்தன், நளன், அரிச்சந்திரன், கார்த்தவீர்யார்சுனன், ஸ்ரீராமர், தர்மர் முதலானோர் மஹாளயம் செய்து பெரும் பேறு பெற்றனர் என்று புராணங்கள் கூறுகின்றன.
நாமும் மஹாளய பட்சத்தில் அமாவாசையில்
நமது முன்னோர்களுக்கு ஆராதனை செய்து
வாழ்வில் சகல நலங்களும் பெற்று வாழ்வோமாக.
*ஓம் சர்வேஷ்வராய நமஹ.*
🌼
https://www.facebook.com/images/emoji.php/v5/u87/1/16/1f340.png🍀🌼☘🌼☘🌼☘🌼
*https://www.facebook.com/images/emoji.php/v5/u71/1/16/1f339.png


*ஸ்ரீ அகத்தியர் வாக்கு*

மணக்கால் அய்யம்பேட்டை | 2:21 PM | Best Blogger Tips


ஒரு மனிதன் *ஒரு நீண்ட தூர பயணத்தை துவங்கு வதாகக் கொள்வோம்.*
ஒரு நகரத்திலிருந்து ஆயிரம் கல் தொலைவில் உள்ள இன்னொரு நகரம் நோக்கி *ஒரு பொது வாகனத்தில் பயணம் செய்வதாகக் கொள்வோம்.*
*இடையிடையே சிறு,சிறு ஊர்களும், நகரங்களும் வரும்.*
ஆனால் அவன் இறங்க மாட்டான்.
ஏனென்றால் அவன் எந்த நகரம் அல்லது எந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்று முடிவேடுதிருக்கிறானோ *அந்த ஊர் வரும்வரை பயணத்தை நிறுத்த மாட்டான் அல்லாவா ?*
*அதைப்போல ஆத்மா எனப்படும் பயணி, தேகம் எனப்படும் வாகனத்தில் ஏறி, இறைவன் எனும் ஊரை அடைவதற்கு உண்டான பிறவி எனும் பயணத்தை துவங்கி யிருக்கிறது.*
இடையிலே 
மண் ஆசை, 
பெண் ஆசை, 
பொன் ஆசை, 
பதவி ஆசை, 
இந்த உலக ஆசை -
*இது போன்ற ஊர்கள் குறுக்கிட்டாலும் அங்கேயெல்லாம் கவனத்தை திசை திருப்பாமல்*தொடர்ந்து பயணம் செய்து கொண்டே இருந்தால் கட்டாயம் *இந்தப் படிகளை எல்லாம் ஒரு மனிதன் எளிதில் தாண்டி விடலாம்.*
அறிவு பூர்வமாக சிந்திக்கும்பொழுது ஒன்று , *உலகியல் ரீதியாக வேண்டும்,*
*தேவை என்பது மறுக்க முடியாத உண்மையாக இருக்கலாம்.*
ஆனால் அந்தத் தேவை *உடலைக் காப்பதற்கும், அந்த உடலை ஆரோக்யமாக வைத்துக்கொள்ள மட்டும் இருந்தால் போதும்.*
*அதனையும் தாண்டி தேவையில்லை என்கிற நிலைக்கு ஒரு மனிதன் தன்னை ஆட்படுத்திக் கொள்ள வேண்டும்.*
தொடர்ந்து *வெறும் உடல் தேவைகளுக்கே முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டேயிருந்தால்* அவன் கவனம் திசை திரும்பி,
*பரமாத்மனை நோக்கி ஜீவாத்மா செல்வது தடைபட்டுப் கொண்டே யிருக்கும்.*
அப்படி வரக்கூடிய தடைகளை எல்லாம் ஒரு மனிதன் *ஈஸ்வர த்யானம் அஃதாவது இறை த்யானம் மூலம் மெல்ல, மெல்ல வெல்லலாம்.*
*இதற்கு தர்மமும், சத்தியமும் பக்க பலமாக இருக்கும்.*
எனவே மிக எளிய வழி, எத்தனையோ தர்மங்கள் செய்தாலும் கூட அவனுடைய ஆழ்மனதிலே, *அவனுடைய அடிமனதிலே நீங்காத ஒரு இடமாக ' இறைவனை அடைந்தே தீருவேன் '*
என்று உறுதியான எண்ணத்தோடு இருந்தால் *அவன் எதை செய்தாலும் அது குறித்து அவன் பாதிக்கப்படமால் இருப்பான்.*
அஃதாவது ஒருவன் எங்கிருந்தாலும், எந்த சுழலில் இருந்தாலும் அவனுடைய *ஆழ்மனதில ஈஸ்வர சிந்தனை அசைக்க முடியாமல் இருந்தால் அந்த ஜீவாத்மா மிக எளிதில் பல படிகளைத் தாண்டிவிடும்.*
ஆனால் அடிப்படை யிலேயே அந்த எண்ணம் இல்லாமலும், *பரிபூரண சரணாகதி பக்தி இல்லாமலும் இருக்கின்ற மனிதனுக்கு தடுமாற்றங்கள் வரத்தான் செய்யும்.*
அது போன்ற தருணங்களிலே குழப்பம் கொண்டிடாமல் கீழே விழுந்தாலும் ' விழுவது இயல்பு '
என்று மீண்டும், மீண்டும் எழுந்து அமர்ந்து ' *இறைவா ! என்னைக் காப்பது உன் பொறுப்பு '* என்றெண்ணி இறைவனை நோக்கி மனதை விரைவாக பயணம் செய்வதற்கு *உண்டான முயற்சியில் இறங்குவதே மனிதனுக்கு உகந்த கடமையாகும்.*
*இதை செய்வதால் ஜீவாத்மா எளிதில் பரமாத்மாவை அடையும்.*
https://www.facebook.com/images/emoji.php/v5/u71/1/16/1f339.png🌹 *நல்லதே நடக்கிறது*https://www.facebook.com/images/emoji.php/v5/u99/1/16/1f33a.png🌺
நன்றி இணையம்


🍏புருஷோத்தமன் வரம் தரும் புரட்டாசி சனிக்கிழமை

மணக்கால் அய்யம்பேட்டை | 1:49 PM | Best Blogger Tips


ஒவ்வொரு வாரத்திலும் சனிக்கிழமை வருகின்றது. அந்த நாளில் சிவாலயத்திற்குச் சென்று எள் தீபத்தை சனீஸ்வரர் சன்னிதியில் ஏற்றி வழிபட்டு சந்தோஷத்தை வரவழைத்துக் கொள்வோம். அதுமட்டுமில்லாத 'சனி பிடிக்காத தெய்வம்' என்று வர்ணிக்கப்படும் விநாயகப் பெருமானையும், அனுமனையும் விடாது வழிபட்டு வருவோம்.
எல்லா சனிக்கிழமைகளிலும் புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமை சிறப்பு வாய்ந்த கிழமையாகக் கருதப்படுகிறது. அன்றைய தினங்களில் விரதம்இருந்து விஷ்ணுவை வழிபட்டால் வெற்றி மீது வெற்றி வந்து குவியும். 'புருஷர்களில் உத்தமமானவன்' என்பதால்விஷ்ணுவை 'புருஷோத்தமன்' என்றுஅழைக்கிறார்கள்.
அவனது அவதாரத்தில் ராமாவதாரம் முக்கியமாகக் கருதப்படுகின்றது. காரணம் ஒரு இல், ஒருசொல், ஒரு வில் என்று வாழ்ந்ததுதான். அந்த ராமாயணத்தை புரட்டாசி மாதத்தில் படிப்பது வழக்கம். ராமர் பட்டாபிஷேக படம் வைத்து அதன் முன்னிலையில் இன்றும் கவியரசு கண்ணதாசன் பிறந்த ஊரான சிறு கூடல்பட்டியில் அங்குள்ள சிவன் கோவிலில் ராமாயணம் படிக்கின்றார்கள். ராமாயணம் படிப்பவர்கள், படித்ததைக் கேட்டவர்களுக்கு எல்லாம் ராமபிரானின் அருளும் கிடைக்கின்றது. வாழ்க்கைக்குத் தேவையான பொருளும் கிடைக்கின்றது.
பூமகளின் அருகிருக்கும் விஷ்ணுவை நோக்கி புரட்டாசி சனிக்கிழமை விரதமிருந்து ஆலயம் சென்று வழிபட்டு வந்தால் நாளும் பொழுதும் நல்லதே நடக்கும்.சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகில் உள்ள கொங்கரத்தி, வன்புகழ் நாராயண சுவாமி, திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள், அரியக்குடி- ஸ்ரீனிவாசப் பெருமாள், கீழச்சிவல்பட்டி கூடலழகிய சுந்தரராஜப் பெருமாள், செவ்வூர் ரோட்டுப் பெருமாள், கும்பகோணம் உப்பிலியப்பன் கோவில், மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவில் மற்றும் தமிழகமெங்கும் உள்ள விஷ்ணு ஆலயங்களுக்குச் சென்று விஷ்ணுவையும், லட்சுமியையும் வழிபட்டு வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளுங்கள்https://www.facebook.com/images/emoji.php/v5/u99/1/16/1f33a.png
🌺 ஆன்மீகபயணத்தில்  ரமேஷ்https://www.facebook.com/images/emoji.php/v5/u6c/1/16/2764.png❤