*ஸ்ரீ அகத்தியர் வாக்கு*

மணக்கால் அய்யம்பேட்டை | 2:21 PM | Best Blogger Tips


ஒரு மனிதன் *ஒரு நீண்ட தூர பயணத்தை துவங்கு வதாகக் கொள்வோம்.*
ஒரு நகரத்திலிருந்து ஆயிரம் கல் தொலைவில் உள்ள இன்னொரு நகரம் நோக்கி *ஒரு பொது வாகனத்தில் பயணம் செய்வதாகக் கொள்வோம்.*
*இடையிடையே சிறு,சிறு ஊர்களும், நகரங்களும் வரும்.*
ஆனால் அவன் இறங்க மாட்டான்.
ஏனென்றால் அவன் எந்த நகரம் அல்லது எந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்று முடிவேடுதிருக்கிறானோ *அந்த ஊர் வரும்வரை பயணத்தை நிறுத்த மாட்டான் அல்லாவா ?*
*அதைப்போல ஆத்மா எனப்படும் பயணி, தேகம் எனப்படும் வாகனத்தில் ஏறி, இறைவன் எனும் ஊரை அடைவதற்கு உண்டான பிறவி எனும் பயணத்தை துவங்கி யிருக்கிறது.*
இடையிலே 
மண் ஆசை, 
பெண் ஆசை, 
பொன் ஆசை, 
பதவி ஆசை, 
இந்த உலக ஆசை -
*இது போன்ற ஊர்கள் குறுக்கிட்டாலும் அங்கேயெல்லாம் கவனத்தை திசை திருப்பாமல்*தொடர்ந்து பயணம் செய்து கொண்டே இருந்தால் கட்டாயம் *இந்தப் படிகளை எல்லாம் ஒரு மனிதன் எளிதில் தாண்டி விடலாம்.*
அறிவு பூர்வமாக சிந்திக்கும்பொழுது ஒன்று , *உலகியல் ரீதியாக வேண்டும்,*
*தேவை என்பது மறுக்க முடியாத உண்மையாக இருக்கலாம்.*
ஆனால் அந்தத் தேவை *உடலைக் காப்பதற்கும், அந்த உடலை ஆரோக்யமாக வைத்துக்கொள்ள மட்டும் இருந்தால் போதும்.*
*அதனையும் தாண்டி தேவையில்லை என்கிற நிலைக்கு ஒரு மனிதன் தன்னை ஆட்படுத்திக் கொள்ள வேண்டும்.*
தொடர்ந்து *வெறும் உடல் தேவைகளுக்கே முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டேயிருந்தால்* அவன் கவனம் திசை திரும்பி,
*பரமாத்மனை நோக்கி ஜீவாத்மா செல்வது தடைபட்டுப் கொண்டே யிருக்கும்.*
அப்படி வரக்கூடிய தடைகளை எல்லாம் ஒரு மனிதன் *ஈஸ்வர த்யானம் அஃதாவது இறை த்யானம் மூலம் மெல்ல, மெல்ல வெல்லலாம்.*
*இதற்கு தர்மமும், சத்தியமும் பக்க பலமாக இருக்கும்.*
எனவே மிக எளிய வழி, எத்தனையோ தர்மங்கள் செய்தாலும் கூட அவனுடைய ஆழ்மனதிலே, *அவனுடைய அடிமனதிலே நீங்காத ஒரு இடமாக ' இறைவனை அடைந்தே தீருவேன் '*
என்று உறுதியான எண்ணத்தோடு இருந்தால் *அவன் எதை செய்தாலும் அது குறித்து அவன் பாதிக்கப்படமால் இருப்பான்.*
அஃதாவது ஒருவன் எங்கிருந்தாலும், எந்த சுழலில் இருந்தாலும் அவனுடைய *ஆழ்மனதில ஈஸ்வர சிந்தனை அசைக்க முடியாமல் இருந்தால் அந்த ஜீவாத்மா மிக எளிதில் பல படிகளைத் தாண்டிவிடும்.*
ஆனால் அடிப்படை யிலேயே அந்த எண்ணம் இல்லாமலும், *பரிபூரண சரணாகதி பக்தி இல்லாமலும் இருக்கின்ற மனிதனுக்கு தடுமாற்றங்கள் வரத்தான் செய்யும்.*
அது போன்ற தருணங்களிலே குழப்பம் கொண்டிடாமல் கீழே விழுந்தாலும் ' விழுவது இயல்பு '
என்று மீண்டும், மீண்டும் எழுந்து அமர்ந்து ' *இறைவா ! என்னைக் காப்பது உன் பொறுப்பு '* என்றெண்ணி இறைவனை நோக்கி மனதை விரைவாக பயணம் செய்வதற்கு *உண்டான முயற்சியில் இறங்குவதே மனிதனுக்கு உகந்த கடமையாகும்.*
*இதை செய்வதால் ஜீவாத்மா எளிதில் பரமாத்மாவை அடையும்.*
https://www.facebook.com/images/emoji.php/v5/u71/1/16/1f339.png🌹 *நல்லதே நடக்கிறது*https://www.facebook.com/images/emoji.php/v5/u99/1/16/1f33a.png🌺
நன்றி இணையம்