தொடர்ந்து வாலாட்டும் பாகிஸ்தான்..

மணக்கால் அய்யம்பேட்டை | 2:36 PM | Best Blogger Tips

பதிலடி தராத இந்தியா.. காரணம் என்ன தெரியுமா ?
யூரியில் ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 17 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தீவிரவாத முகாம்களை அழிக்க இந்தியா திட்டமிட்டு வருகிறது.
பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குவதிலும், அதில் வெற்றி பெறுவதிலும், இந்திய ராணுவத்திற்கு எந்த திறமை குறைபாடும் கிடையாது. அதை வெற்றிகரமாக நடத்தும் வல்லமை சிறப்பு படைக்கு உள்ளது.
அதேநேரம், பாகிஸ்தான் ஒரு அணு ஆயுத நாடு என்பதை மறுக்க முடியாது. முதலில் அணு ஆயுதத்தை பிரயோகிக்க தயங்காத நாடு என்பதும் காரணம்.
பாகிஸ்தானுக்கு தெரியும் இந்தியா திருப்பி தாக்காது என்ற தைரியத்தில் தான் மும்பை, பதன்கோட் போன்ற பகுதிகளில் பாக். தனது தீவிரவாதிகளை கொண்டு, எளிதில் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் கிடைத்தும், அந்த நாட்டை தாக்க முடியாததற்கு, அந்த நாட்டின் அணு ஆயுத பலம் ஒரு முக்கிய காரணம்.
மற்றொரு காரணம் காங்கிரஸ் மற்றும் நம் அரசியல் வாதிகள் ,, இந்தியா எப்போது பாகிஸ்தானை தாக்கும் நாம் அதை திசை திருப்பி இந்தியாவை கெடுத்து விட்டார் மோடி என்று சொல்லி ஆட்சியை புடித்து விடலாம் என்று கனவு காண்கிறது காங்கிரஸ் ,, ஏனென்றால் அதற்க்கு வேற குறை சொல்ல ஒன்றுமே இல்லை
மணிப்பூரில் இந்திய ராணு வீரர்கள் கொல்லப்பட்டபோது மியான்மர் எல்லைக்குள் புகுந்து சென்று தீவிரவாதிகளை கொன்று ஒழித்த திறமையுள்ளதுதான் இந்திய ராணுவம்.
மின்யான்மரில் பதிலடி ஆனால், இப்படியே பதிலடி தராமல் விட்டாலும், பாகிஸ்தான் அடங்காது.
பாகிஸ்தானில் அதுபோன்ற தாக்குதலை நடத்த தவிர்ப்பதற்கு அணு ஆயுதம் முக்கிய காரணம்.
சீனா ஆதரவு அணு ஆயுத பிரச்சினையோடு, சீனாவின் ஆதரவும் முக்கிய காரணம். சீனாவும் அணு ஆயுத நாடு என்பது இதில் கவனிக்கத்தக்கது.
பாகிஸ்தான் இந்தியா போர் வந்தால் , சீனா இதை பயன் படுத்தி இந்தியாவை எப்படியும் அழித்து விட வேண்டும் என்று குறியாக செயல் படும் ,, நமக்கு வேறு நாடுகள் ஆதரவுக்கு வந்தாலும் அழிவு இந்தியாவுக்கு தான் ,, பொருளாதாரத்தில் பல மடங்கு பின்னுக்கு சென்று விடுவோம் ,, அதனால் இதில் ராஜ தந்திரம் முக்கியம் ,, போரை எதிர்பார்க்கும் சீனாவிடம் மாட்ட கூடாது ,, அதற்க்கு பாகிஸ்தானை பிரிப்பதை தவிர வேறு வழியில்லை
பாகிஸ்தான், இந்தியாவிற்கு எதிராக மறைமுக போரை சீனா தான் முன்னெடுத்து உள்ளதாக தெரிகிறது . ஆனால் சீனாவுக்கு எதிராக பலுசிஸ்தான் பிரச்சனையை முன்னெடுத்து உள்ளோம் , அது சீனாவுக்கு பெரிய அடியாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை ,,
பாகிஸ்தானுக்கு இழப்பதற்கு ஒன்றும் இல்லை ,,
மேலும் இந்தியா பொருளாதாரத்தில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. ஆசிய நாடுகளில் சீனாவை விஞ்சக்கூடிய வல்லமை இந்தியாவுக்கு மட்டுமே உள்ளது.
இந்த வளர்ச்சியை தடுக்க சீனா தான் பாகிஸ்தானை தூண்டி விடுகிறது
பாகிஸ்தான் அழிவதை பற்றி சீனா கவலை படாது ,, இந்தியா வளர்வதை பற்றி தான் சீனாவுக்கு கவலை
இந்தியாவுக்கு பொருளாதாரம் முக்கியம்.. இந்த சூழ்நிலையில், தாக்குதல் தவறாகி போனால், காங்கிரஸ் கட்சிக்கு அல்வா துண்டு கிடைத்தது போலாகி விடும் ,, காங்கிரஸ் கட்சிக்கு நாட்டை பற்றி கவலை இல்லை , தாம் ஆள வேண்டும் என்பதற்காக இந்தியாவையே காட்டி கொடுக்க தயங்காது .. அது மிகப்பெரிய அடியாக அமைந்துவிடும்.
பாகிஸ்தானுக்கு இழக்க எதுவுமே கிடையாது. ஆனால் இந்தியாவுக்கு இழக்க அதிகம் உள்ளது. இதுவும் பதிலடி தாக்குதலை நடத்தாமல் இருக்க முக்கிய காரணம்.

 நன்றி இணையம்