அஜித் தோவலின் அடுத்த ஆப்பரேசன் ஆரம்பம்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:43 PM | Best Blogger Tips

நேற்று வடக்கு காஷ்மீரில் உள்ள பாரமுல்லா மாவட் டத் தில் உள்ள யுரியில் உள்ள ராணுவ தலைமையகத் தில் அதிகாலையில் நம்முடைய ராணுவ வீரர்ர்கள் தூங்கி கொண்டிருந்த பொழுது வீசப்பட்ட வெடிகுண்டுக ளால்முகாமில் தீப்பிடித்து எரிந்தால் 20 வீரர்கள் பரிதாப மாகஇறந்துவிட்டார்கள்.முப்பதுக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் காயங்களுடன் மருத்துவமனைகளில் உள்ளனர்
எந்த ஒரு ராணுவத்தையும்தற்கொலை படை தாக்குதல் கள் கொஞ்சம் மிரட்டிவிடும்.என்பது உண்மை தான்.சமீப காலங்களில் இல்லாத வகையில் நேற்றுநிகழ்ந்த மறை முக தாக்குதல் தான் இந்திய ராணுவத்தின் மீது காஸ்மீ ரில் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலாகும்.
இந்த தாக்குதல் இந்தியாவின் ஆற்றலுக்கு விடப்பட்ட சவால் என்றால் மிகையில்லை.பதிலுக்கு இந்தியா
என்ன பதிலடி கொடுக்க போகிறது என்பதில் இருந்தே வருங்காலங்களில் இந்தியாவின் பாதுகாப்பு நிச்சயிக்க
படும் என்பதே உண்மை.அதே மாதிரி இப்பொழுது நாம்
பாகிஸ்தானை தாக்குவதை பொறுத்தே எதிர் காலத்தில்
பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா வலிமை யாக இருந்தது என்று வரலாறு சொல்ல முடியும்..
யுரி தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் பிரதமர் தலை மையில் நடைபெற்ற உயர்நிலை கூட்டமும் அதை தொடர்ந்து மோடி ஜனாதிபதியை சந்தித்ததும் முக்கியத் துவம் பெற்றது என்றால் அதைவிட முக்கியமானது மோடியும் அஜித் தோவலும் இணைந்து நடத்திக் கொண் டிருக்கும் டிஸ்கஷன் தான்.
பதான் கோட் தாக்குதலுக்கே பதிலடி கொடுக்க வேண்டும்
என்று துடித்த அஜித்தோவலை இந்தியாவின் அமைச்சர வை கூட்டத்தின் முடிவு அமைதியாக்கிவிட்டது.ஆனால்
இப்பொழுது பிரதமரே குற்றவாளிகளை தண்டிக்காமல் விட மாட்டோம் என்று சூளுரைத்து இருப்பது..பழிக்குபழி
நிச்சயம்..ஆனால் எப்பொழுது தாக்குவது எப்படி தாக்குவ து என்பதே பிரதமருக்கும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
என்கிற நாட்டின் உயர்ந்த பொறுப்பில் இருக்கும் அஜீத் தோவலுக்கும் இடையில் நிகழ்ந்து கொண்டிருக்கும்
டிஸ்கஷன்.
என்னடா..ஒரு நாட்டின் பாதுகாப்பு மந்திரி உள்துறை மந்திரி இவர்களை எல்லாம் விடவா இந்த பதவிக்கு
அதிகாரம் இருக்கு என்று நீங்கள் கேட்கலாம்..நிச்சயம்
இந்தியாவில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்கிற பதவிஉயர்ந்த பதவி.ஏனென்றால் இந்தியாவில் இருக்கு ம் உள் நாட்டு உளவு அமைப்பான ஐபி (ntelligence Bureau) மற்றும்வெளிநாட்டு உளவு அமைப்பான ரா(Research and Analysis Wing) இவற்றின் இயக்குனர்கள் எல்லாம் முன்பு பிரதமர்அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது.
ஆனால் என்று இந்த நாட்டை பிஜேபி ஆள துவங்கியதோ
அப்பொழுதே அதாவது வாஜ்பாய் ஆட்சியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்கிற பதவி உருவாக்கபட்டு
பிரிஜேஷ் மிஸ்ரா என்கிறவரை நியமித்து என்எஸ்ஏ வில் பிள்ளையார் சுழியினை போட்டது பிஜேபி...இது வரை பிரிஜேஷ் மிஸ்ரா,ஜே.என்.தீட்சித்,எம்.கே நாரா யணன் சிவசங்கர்மேனன் ஆகிய நான்கு பேரைஅடுத்து ஐந்தாவ தாக மோடி கொண்டு வந்த அற்புதமான பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் தான்..இவருக்கு
இன்னொரு பெயர் இருக்கிறது..அதாவது இந்தியாவின்
ஜேம்ஸ்பாண்ட் 007 என்று..
The right man for the right place என்பார்களே அது அஜித் தோவலுக்கு 100% பொருந்தும்.ஏனென்றால் நம்ம அஜித்
தோவல் ஒரு உளவாளியாக இருந்தவர்.ஓய்வு பெறும்
பொழுது இந்தியாவின் உளவு அமைப்பான பி யில்
இயக்குனராக இருந்தவர்.ஓய்வுக்கு பிறகு மோடியே விரும்பி அழைத்து National Security Advisor பதவியை அஜீத்தோவலுக்கு அளித்தார் என்றால் தோவலின் திற மையை புரிந்து கொள்ளலாம்..
இவர் வந்தவுடனே நிகழ்ந்த ஒரு பெரிய சவாலை அட்டகா சமாக சமாளித்து The right man for the right place என்று நிருபித்தார்.வழக்கமா ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி களின்பிடியில் சிக்கியவர்கள் சின்னா பின்னாமாக சீரழி ந்து கொல்லப்படுவதே வழக்கம்.ஆனால் உலகளவில் இதைமாற்றியவர் தோவல்தான்.2014 ம் ஆண்டில் மோடி ஆட்சி க்கு வந்தவுடனே ஜூன் இறுதியில் ஈராக்கில் ஐஎஸ்ஐ எஸ் தீவிரவாதிகளிடம் சிக்கிக்கொண்ட 46 கேரள நர்ஸ் களை ஈராக் போய் தோவல் மீட்டுக் கொண் டு வந்து ஆட்சி க்கு வந்துடனே மோடிக்கு வந்த முதல் சவாலை முறியடி த்தவர் தோவல் தான்.
இலங்கையில் ராஜபக்சேவை வீழ்த்தி மைத்ரிஸ்ரீ சேனா வை ஆட்சிக்கு கொண்டு வந்து இலங்கையில் சீனாவின்
ஆதிக்கத்திற்கு தடை போட்டவர் தோவல் தான்.பங்காள
தேசிற்கும் இந்தியாவுக்கும் இருந்த எல்லை பிரச்சனைக ளை தீர்த்து பங்காளதேசத்தை இந்தியாவின் நட்பு நாடாக
மாற்றியதில் தோவலுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு.
இதனால் சீனா சீரமைத்த சிட்டகாங் துறைமுகம் இந்தி யா வின் கைக்கு வந்தது.அதோடு வங்காளதேசத்தில் இருந்த உல்பா(யுனைடட் லிபரேஷன் பிரண்ட் ஆஃப் அசாம்)தீவிரவாதக்கூட்டத்தின் பொது செயலாளர் அனுப்சேத்தி யாவை இந்தியா கேட்டும் 20 ஆண்டுகள் இழுத்தடித்தவங்க தேசத்தின் மண்டையில் கொட்டு வைத்து பார்சல்கட்டி இந்தியாவுக்கு தூக்கி வந்ததில் அஜித்தோவலின் ஆற்றல் தெரியும்.
மணிப்பூரில் நம்முடைய ராணுவ வீரர்கள் 18 பேரை கொன்ற நாகாலாந்து தேசிய சோஷலிச கவுன்சில் (கப் லாங் பிரிவு) தீவிரவாதிகளை மியான்மர் நாட்டுக்குள்
தேடிச்சென்று சுமார் 50 க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை
சுட்டுக்கொன்ற நமது விமான படைக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்தது அஜித்தோவல்தான்.
அதோடு நாகலாந்து மாநிலத்தில் தனிநாடு கேட்டு போரா டிய இன்னொரு தீவிரவாத அமைப்பான நாகாலாந்து தேசிய சோஷலிச கவுன்சில்(ஐசக் முய்வா பிரிவு) என்கிற
மாவோயிஸ்ட் கூட்டத்தை பிரதமர் மோடி முன்னிலை யில் கடந்த ஆண்டு சரணடைய வைத்ததும் அஜித் தோவல் தான்.இந்தியாவோடு முறுக்கி நின்ற நேபாளத் தை மோடியின் காலடியில் விழ வைத்தது இவர்தான்.
எல்லை பிரச்சனையில் பேச்சுவார்த்தை க்கு வரும் தோவலை கண்டு சீனா மிரண்டு நின்றால் அமெரிக்காவு க்கு சென்று இந்திய அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்தங்க ளை செயல்படுத்த இவர் வழங்கிய ஆலோசனைகளை கண்டு பெண்டகனேஅதியசயித்து நின்றது.இதெல்லாம்
விடுங்க..
இந்தியாவில் தீவிரவாத நடவடிக்கைகளை ஒடுக்கியதில்
அஜித் தோவலின் பங்கு அபாரமானது.இன்றைக்கும் இந்திய நீரோட்டத்தில் கலந்து கொள்ளாமல் முரண்டு
பிடிக்கும் மாநிலங்கள் வட கிழக்கு மாநிலங்கள் தான்
அங்கே உளவுத்துறையில் இருக்கும் பொழுது தீவிரவாத
குழுக்களில் தானும் ஒரு தீவிரவாதியாக சேர்ந்து அவர் ளுக்குள் சண்டையை உருவாக்கி போராட்டத்தின் திசையையே மாற்றியவர்..
இப்படி தாங்க தனி நாடு கேட்டு போராடிய மிசோ தேசிய
ராணுவம் என்கிற அமைப்பில் நுழைந்து அதை உடைத் து மிசோ தேசிய முன்னணி என்கிற அமைப்பை உருவா க்கி அவர்களை தேர்தலில் பங்கு பெற வைத்ததும் தோவல்தான்.நாடு கேட்டு போராடியவர்களை மாநிலத் திற்குள்முடக்கியது எவ்வளவு பெரிய சாதனை.சிக்கிம் நாடு இந்தியாவோடு இணைந்து மாநிலமாக மாறியதும் இவராலே.மிசோரம் மாநிலமாக மாறியதும் இவராலே.
வடகிழக்கு மாநிலங்கள் தோவலின் கண்ணசைவிற்கு
கட்டுபட்டது என்றால் பஞ்சாப் மாநிலமோ அஜித் தோவ லை கண்டு பயந்து நடுங்கியது.இன்றைக்கும் நமக்கு
தெரிந்தது பஞ்சாபில் காலிஸ்தான் தீவிரவாதிகளை அடக்க இந்திராகாந்தி நடத்திய ஆப்பரேசன்புளு ஸ்டார் ஆக்சன் தான்தெரியும்.ஆனால் அப்பொழுது எல்லாம் காலிஸ்தான் தீவிரவாதிகள் முழுமையாக அழிக்கபட வில்லை.
1988 ல் ஆப்பரேசன் புளு ஸ்டார் மாதிரியே ஒரு நடவடிக் கை பஞ்சாபில் உள்ள பொற்கோவிலில் நடந்தது.இதற்கு
பிறகு தான் பஞ்சாபில் பாகிஸ்தான் ஆதரவுடன் செயல் பட்ட காலிஸ்தான் தீவிரவாதிகள் காணாமல் போனார் கள்.இப்படி இவர்களை காணாமல் போக வைத்ததில் தோவலி ன் உளவுத்துறைக்கே முக்கிய பங்குண்டு.
பஞ்சாபை முடித்துக்கொண்டு காஸ்மீர் பக்கம் காலை வைத்த தோவல் திடிரென்று காணாமல் போய் விட்டார்.
அப்புறம் தான் தெரிந்தது பாகிஸ்தானில் முஸ்லிமாக
மாறி லாகூரில் 7 வருஷம் உளவாளியாக இருந்துள்ளார்
என்று.அப்புறம் என்ன இந்தியா வந்து தாவூதை தூக்க ஸ்கெட்ச் போட்ட இவரை தூக்கி (ஓய்வுதான்) வீட்டுக்கு
அனுப்பி விட்டார்கள் காங்கிரஸ் பக்கிகள்.
ஆனா பாருங்கள் நம்ம மோடி ஆட்சிக்கு வந்தவுடன் இவரை தேடிப்பிடித்து பக்கத்தில் உட்கார வைத்து இந்தி யாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்கிற பொறுப் பை கொடுத்து இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்தி ருந்த பொழுது அதில் ஓட்டை போட்ட எலிகளை விட்டு விடு வாரா..விட மாட்டார் பொறுத்திருந்து பாருங்கள். அடுத்த ஆப்பரேசன் பிளாக் தண்டர் விரைவில் ஆரம்பம்

 நன்றி இணையம்