துன்பங்கள் தீர்க்கும் ஆன்மீக ரகசியங்கள

மணக்கால் அய்யம்பேட்டை | 12:26 AM | Best Blogger Tips


PARIHARAM
1.
ஒரு வளர்பிறை செவ்வாய்க்கிழமை அன்று தொடங்கி செவ்வாய்க்கிழமை தோறும் ஒரு பசுவுக்கு நாட்டு வாழைப்பழம் வாங்கிக் கொடுத்துவர வறுமை நீங்கி செல்வ நிலையில் உயர்வு உண்டாகும்.


2.தொழில் முடக்கம் நீங்கி தொழில் விருத்தி அடைய ஒரு கரும்புள்ளி இல்லாத நல்ல எலுமிச்சம்பழம் ஒன்று வாங்கி கடை,அலுவலகம் முழுவதும் வளாகம் முழுவதும் வெளியில் நின்று நாகு துண்டாக நறுக்கி தெற்கு முகமாக நின்று குங்குமம் தடவித் திசைக்கு ஒன்றாக எறிந்து விடவும். கடை அலுவலகம் இவற்றில் இருந்த தொழில் முடக்கம் நீங்கி தொழில் சிறப்பாக நடைபெறும்.இதை செவ்வாய்க்கிழமை அன்று செய்யவும்.வியாபாரம் இல்லாமல் அடைத்து வைத்தட கடைகளில் இதை செய்து பின் கடை திறந்து வியாபாரம் செய்யத் தொழில் சிறக்கும்.
3.திருமணத்தடை, வறுமை, வேலையின்மை மற்றும் தோஷம் உள்ளவர்கள் நல்லெண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து கொஞ்சம் பஞ்சகவ்யம் சேர்த்து குளித்து அருகில் உள்ள ஆலயம் சென்று அர்ச்சனை செய்து கொள்ள தோஷங்கள் விரைவில் நீங்கி நல்வாழ்வு உண்டாகும். 
ஆண்கள் சனிக்கிழமை
பெண்கள் வெள்ளிக்கிழமை
4.பொருளாதாரம் உயர:-
ஞாயிற்றுக்கிழமையும் பூசம் நட்சத்திரமும் கூடிய நாளன்று அதிகாலையில் நாயுருவிச் செடிக்கு முறைப்படி காப்புக் கட்டி சாபநிவர்த்தி செய்து பிடுங்கி
அதைக் கையில் வைத்துக்கொண்டே சண்டி நவாக்ஷரி மந்திரம் 1008 உரு ஜெபம் செய்து பின்னர் வெள்ளைநிறப் பட்டு அல்லது பருத்தித் துணியை மஞ்சள் கலந்த தண்ணீரில் நனைத்து அந்தத் துணியால் நாயுருவிச் செடியைச் சுற்றவும். இதைக் கடை,அலுவலகம், வீடுகளில் வைக்க பொருளாதார நிலை உயர்வடையும்.
5.இரவில் கை,கால் ,முகம் கழுவிய பின்னர் தூங்கினால் துஷ்ட சக்திகள் தொல்லை செய்யாது.இரவில் தானாக விந்தி சக்தி வெளியேறாது.
6.அடிக்கடி ஆபத்துகளைச் சந்தித்து வருபவர்கள்,அஷ்டமத்துச் சனி நடப்பவர்கள், அஷ்டமாதிபதி தசை அல்லது புத்தி நடப்பவர்கள் மஹாம்ருத்யுஞ்சய மந்திரம் ஜெபித்து பின் வெளியே கிளம்பினால் விபத்துகள் இன்றி வீடு திரும்பலாம்.
7.அரச மரத்தின் அற்புத சக்தி :
1. தீரா நோய் தீர ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் தினமும் மதியம் 12:00 முதல் 1:30 மணிக்குட்பட்ட வேளையில் அரசமர வேரைத் தொட்டு வணங்கி வர தீராத நோய்கள் தீரும்.குறிப்பிட பகுதியில் பாதிப்பு ,நோய் இருந்தால் பாதிப்பு / நோய் உள்ள பகுதியில் வேரைத் தொட்டு வைக்கவும்.விரைவில் குணம் கிடைக்கும்.
2.ஞாயிற்றக்கிழமை அன்று மட்டும் அரச மரத்தைத் தொடக்கூடாது .
3.குறைந்த அல்லது உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் ,அதிகம் உணர்ச்சி வசப்படுபவர்கள் இனிப்பு பண்டம் அல்லது சர்க்கரை கலந்த நீரை அரச மர வேரில் விட விரைவில் ரத்த அழுத்த நோய் பாதிப்பு குறையும்.
4.தினமும் கிழக்கு முகமாக நின்று அரச மரத்திற்கு நீர் விட்டு வர பித்ரு தோஷ பாதிப்புகள் குறையும்.
5.ஆயுள் தோஷம் உள்ளவர்கள் (அற்பாயுள் ) சனிக்கிழமை தோறும் அரச மரத்திற்கு நீர் விட்டு தொட்டு வணங்கி வர ஆயுள் கூடும்.

இறைவன் நினைவே இனிய இரவு வணக்கம்! வாழ்க வளமுடன் !! நலமுடன்!! நன்றி!! நன்றி!!ஓம் சிவ சத்தி ஓம் -
என்றும் அன்புடன் MU Dhanalakshmi Chandaran


கர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம் உங்களுக்கு தெரியுமா ?

மணக்கால் அய்யம்பேட்டை | 12:22 AM | Best Blogger Tips

மகாபாரதத்தில் வரும் மாவீரன் கர்ணன் ஒரு பாண்டவ புத்திரன் என்ற இரகசியம் அவன் இறந்த பிறகே உலகம் அறிந்தது.
கொடைக்குப் பெயர் பெற்ற கர்ணனோ இறப்பதற்கு சில நாட்கள் முன்புதான் அறிந்திருந்தான்.
அதுவும் கிருஷ்ண பகவானின் லீலையால்!
மிகவும் நல்லவனான கர்ணனுக்கு ஏன் இப்படிப்பட்ட வாழ்வு?
இதற்கு விடை கர்ணனுடைய பூர்வ ஜன்ம இரகசியத்தில் உள்ளது.
பூர்வ ஜன்மத்தில் கர்ணன் சஹஸ்ர கவசன் என்ற அசுரனாக இருந்தான்.
தேவர்களை நிர்தாட்சண்யமின்றி தாக்கி வந்தான்.
பிரம்ம தேவனிடம் அவன் பெற்ற வரத்தின்படி அவனுடைய சரீரம் ஆயிரம் சட்டைகளால் போர்த்தப்பட்டிருந்தது.
எவரும் அந்த ஆயிரம் சட்டைகளை நீக்காமல் அவனைக் கொல்ல முடியாது. 
அவனைத் தாக்க விரும்பும் வீரன் 12 வருடங்கள் தவமிருந்து விட்டு, அதன் பின்னர் 12 வருடங்கள் அவனுடன் தொடர்ந்து போர் புரிந்தால் ஆயிரம் கவசங்களுள் ஒன்றை அறுக்க முடியும்.
இவ்வாறு 24 வருடங்கள் வீதம் தவமும் போரும் யாகமும் செய்து ஆயிரம் கவசங்களை ஒன்றன்பின் ஒன்றாக அறுத்தெறிந்தால் சஹஸ்ர கவசன் மடிவான்.
இதை யாரால் செய்து சாதிக்க முடியும்?
எனவே, அவனிடமிருந்து தேவர்கள் தாங்கொணாத் துயரத்திற்கு ஆளாயினர்.
அமரர்கள் மகாவிஷ்ணுவை நாடி அசுர உபாதையை ஒழித்து உதவுமாறு வேண்டினர்.
விண்ணவர் மீது இரக்கம் கொண்ட மகாவிஷ்ணு அசுரர் கொடுமையை ஒழித்து அமரவாசிகளுக்கு ஆறுதல் உண்டு பண்ணத் திருவுளம் கொண்டு நர நாராயணர்களாக அவதரித்தார்.
ஸஹஸ்ர கவசனை ஸம்ஹரிப்பதற்கு அவர்கள் கூட்டு முயற்சி செய்தனர்.
நரன் 12 வருடங்கள் தவம் புரிய, நாராயணர் அசுரனுடன் போர் புரிந்து கவசமொன்றை அறுத்துத் தள்ளினார். இப்படிப் பல வருடங்கள் விடா முயற்சி செய்து 999 கவசங்களை அறுத்து எறிந்தனர். 
இதற்குள் பிரம்ம பிரளயமே வந்து விட்டது.
எஞ்சி நின்ற ஒரு கவசத்துடன் சஹஸ்ர கவசன் சூரிய லோகம் போய்ச் சேர்ந்தான்.
இந்த சஹஸ்ர கவசனே அடுத்த ஜன்மத்தில் சூர்ய புத்திரனாக கர்ணன் என்ற பெயரில் மீதமுள்ள (பூர்வ ஜன்ம கவசம்) ஒரு கவசத்தோடு பிறப்பெடுத்தான்.
இந்தக் கவசமும் அறுக்கப்பட வேண்டியதே!
இந்தக் காரியத்திற்காகவே பகவான் மகாவிஷ்ணு நர ரூபத்தில் அர்ஜுனனாகவும், நாராயண அம்சத்தில் கிருஷ்ணனாகவும் ஜனித்தனர்.
12 ஆண்டுகள் பாண்டவர்கள் வனவாசம் செய்தது அந்த நரனுடைய 12 வருடத் தவமேயாகும்.
ஒரு கவசத்தை இந்திரன் மூலம் நீக்கிய விஷயம் நாம் எல்லோரும் அறிந்ததே.
கவசம் நீங்கியதால்தான் அர்ஜுனன் கர்ணணை கொல்ல முடிந்தது.
நம்முடைய இந்த ஜன்ம வாழ்க்கை நிகழ்வுகளுக்குக் காரணம் தெரியாமல் திகைக்கிறோம்.
இவற்றுக்குக் காரணம் பூர்வ ஜன்மக் கர்மாக்கள் ஆகும்.
கர்ணனின் வாழ்க்கை அமைந்த விதம் இந்த உண்மையை நிரூபிக்கிறது.

 நன்றி இணையம்

" கர்மா என்பது நமது எண்ணங்களே “

மணக்கால் அய்யம்பேட்டை | 12:16 AM | Best Blogger Tips

ஒரு நாட்டின் மன்னன் யானை மீதமர்ந்து நகர்வலம் சென்று கொண்டிருந்தான்! 
அப்போது கடைத்தெருவில் ஒரு குறிப்பிட்ட கடை வந்த பொழுது,
மன்னன் அருகிலிருந்த மந்திரியிடம் ந்திரியாரே ஏனென்று எனக்குப் புரியவில்லை ,
ஆனால் இந்தக் கடைக்காரனைத் தூக்கிலிட்டுக் கொன்று விடவேண்டும் என்று தோன்றுகிறதுஎன்றான்.
மன்னனின் பேச்சைக் கேட்ட மந்திரி அதிர்ந்து போனான்! மன்னனிடம் விளக்கம் கேட்பதற்குள் மன்னன் அக்கடையைத் தாண்டி நகர்ந்து விட்டான்!
அடுத்த நாள் அந்த மந்திரி மட்டும் தனியாக அந்தக் கடைக்கு வந்தான்! அந்தக் கடைக்காரனிடம் யதார்த்தமாகக் கேட்பது போல வியாபாரம் நன்றாக நடக்கிறதா? என்று விசாரித்தான்! 
அதற்கு கடைக்காரன் மிகவும் வருந்தி பதில் சொன்னான்! அவன் சந்தனக் கட்டைகளை வியாபாரம் செய்வதாகத் தெரிவித்த கடைக்காரன்.
என் கடைக்கு வாடிக்கையாளரே யாரும் இல்லை! கடைக்கு நிறைய மக்கள் வருகின்றனர்! சந்தனக் கட்டைகளை முகர்ந்து பார்க்கின்றனர்! நல்ல மணம் வீசுவதாகப் பாராட்டக் கூட செய்கின்றனர், ஆனால் யாரும் வாங்குவதுதான் கிடையாதுஎன்று வருத்தத்துடன் சொன்னான் கடைக்காரன்.
அதன் பின் அவன் சொன்னதைக் கேட்ட மந்திரி அதிர்ந்து போனான்! இந்த நாட்டின் அரசன் சாகும் நாளை எதிர்நோக்கியுள்ளேன்! அவன் இறந்து போனால் எப்படியும் எரிக்க நிறைய சந்தனக் கட்டைகள் தேவைப்படும் எனக்கு நல்ல வியாபாரம் ஆகி என் கஷ்டமும் தீரும்என்றான் கடைக்காரன்! அவன் சொன்னதைக் கேட்ட மந்திரிக்கு முதல் நாள் அரசன் சொன்னதன் காரணம் என்னவென்று விளங்கியது! இந்தக் கடைக்காரனின் கெட்ட எண்ணமே மன்னனின் மனதில் எதிர்மறை அதிர்வுகளை அவனறியாமல் உண்டாக்கி அப்படிச் சொல்ல வைத்தது என்று உணர்ந்தான் மந்திரி!
மிகவும் நல்லவனான அந்த மந்திரி இந்த விஷயத்தை சுமுகமாகத் தீர்க்க உறுதி பூண்டான்! தான் யாரென்பதைக் காட்டிக் கொள்ளாமல் அவன் கடைக்காரனிடம் கொஞ்சம் சந்தனக் கட்டைகளை விலைக்கு வாங்கினான்! அதன் பின் மந்திரி அந்தக் கட்டைகளை எடுத்துச் சென்று அரசனிடம் நேற்று அரசன் சொன்ன அந்த சந்தன மரக் கடைக்காரன் அரசனுக்கு இதைப் பரிசாக வழங்கியதாகக் கூறி அதை அரசனிடம் தந்தான்! அதைப் பிரித்து அந்தத் தங்க நிறமுள்ள சந்தனக் கட்டைகளை எடுத்து முகர்ந்த அரசன் மிகவும் மகிழ்ந்தான்! அந்தக் கடைக்காரனை கொல்லும் எண்ணம் தனக்கு ஏன் வந்ததோ என்று வெட்கப்பட்டான்! அரசன் அந்தக் கடைக்காரனுக்கு சில பொற்காசுகளைக் கொடுத்தனுப்பினான்! அரசன் கொடுத்தனுப்பியதாக வந்த பொற்காசுகளைப் பெற்றுக் கொண்ட வியாபாரி சந்தோஷப்பட்டான்! !! 
அந்தப் பொற்காசுகளால்அவனது வறுமை தீர்ந்தது!
அந்தக் கடைக்காரன் இத்தனை நல்ல அரசனை தன்னுடைய சுயநலத்துக்காக இறக்க வேண்டும் என்று தான் எண்ணியதற்கு மனதுக்குள் மிகவும் வெட்கப்பட்டு வருந்தினான்! அத்துடன் அந்த வியாபாரி மனம் திருந்தி நல்லவனாகவும் ஆகிப் போனான்!
இப்போது சொல்லுங்கள் கர்மா என்றால் என்ன?
கர்மா என்பது நமது சொற்கள், நமது செயல்கள், நமது உணர்வுகள், நமது கடமைகள்என்பதெல்லாம் அல்ல...!!!
" கர்மா என்பது நமது எண்ணங்களே
நாம் அடுத்தவர்கள் மேல் நல்ல அன்பான எண்ணங்களை வைத்திருந்தால் அந்த எண்ணங்கள் நமக்கு வேறேதேனும் வழியில் நமக்கு சாதகமாகத் திரும்பி வரும்!!
மாறாக நாம் அடுத்தவர் மேல் கெடுதலான எண்ணங்களை உள்ளே விதைத்தால் அதே எண்ணம் நம் மேல் கெடுதலான வழியில் திரும்பவும் வந்து சேரும் !!
நன்றி இணையம்


அணுவில் ஆண்டவன்!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:14 AM | Best Blogger Tips

அணு குறித்து அறிவியல் ஆர்வம் காட்டியது சில நூறு வருடங்களாகத் தான் என்றாலும் நம் முன்னோர் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே அணுவைப் பற்றி அறிந்திருந்தனர். முதலில் நம் முன்னோர் சொன்னதையும் பிறகு இன்றைய விஞ்ஞானம் சொல்வதையும் பார்ப்போம்.
ஜீவனின் வடிவத்தைச் சொல்ல வந்த திருமூலர் ஒரு மாட்டின் முடியை எடுத்து ஆயிரம் கோடி இழைகளாகப் பகுப்பது பற்றிப் பேசுகிறார். ஒரு மாட்டின் முடியை எடுத்து அதை நூறு கூறாக்கச் சொல்கிறார். பின்னர் அதிலிருந்து ஒரு முடியெடுத்து ஆயிரம் கூறாக்கச் சொல்கிறார். அவ்வாறு ஆயிரம் கூறு போட்டதில் ஒரு முடியை எடுத்து அதை நூறாயிரம் கூறு போடச் சொல்கிறார். இதுவும் அணுவைப் பிளப்பது போலத்தான். இதுதான் ஜீவனின் வடிவம் என்கிறார்.
(100 x 1000 x 100 000=100 000 00 000)
ஒரு மாட்டின் முடியை ஆயிரம் கோடி இழைகளாகப் பகுப்பது பற்றி திருமூலர் விவரிப்பதைப் பார்த்தால் நம் முன்னோர் அணுவைப் பிளப்பதை மனக்கண்ணில் கண்டார்கள் என்றே தோன்றுகிறது. பாடல் இதோ-
மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு
மேவியது கூறது ஆயிரமானால்
ஆவியின் கூறு நூறாயிரத்தொன்றாமே
திருமூலர் இன்னொரு பாடலில் அணுவில் இறைவனும், இறைவனில் அணுவும் இரண்டறக் கலந்திருப்பதைப் பெரும்பாலோர் உணர்வதில்லை. இணையில்லாத ஈசன் அப்படி பிரபஞ்சம் முழுதும் எங்கும் நிறைந்திருக்கிறான் என்று சொல்கிறார். அந்தப் பாடல் இதோ-
அணுவுள் அவனும் அவனுள் அணுவும்
கணுஅற நின்ற கலப்பது உணரார்
இணையிலி ஈசன் அவன்எங்கும் ஆகித்
தணிவற நின்றான் சராசரம் தானே.
சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன் அணுவை ரூதர்ஃஃபோர்டு பிளந்து பார்த்த போது உள்ளே எலக்ட்ரான், நியூட்ரான், ப்ரோட்டான் துகள்களும் பிரம்மாண்டமான வெட்டவெளியும் இருப்பதைக் கண்டார். அணுவின் உள்ளே துகள்கள் சில சமயங்களில் துகள்களாகவும், சில சமயங்களில் அலைகளாகவும் மாறி பெரிய அளவில் சக்தி வெளிப்பாடுகள் இருப்பதையும் கண்டார்.
அதன் பின் அணு ஆராய்ச்சிகள் மிகுந்த ஆர்வத்துடன் உலக நாடுகளில் நடைபெறத் தொடங்கின.
1972-ஆம் ஆண்டு, ப்ரிட்ஜாப் காப்ரா என்கிற பிரபல அமெரிக்க அணு விஞ்ஞானி 'The Dance of Shiva: The Hindu view of matter in the light of Modern Physics' (சிவனின் நடனம் : நவீன பௌதிகத்தின் பார்வையில் வஸ்துக்களை பற்றிய ஹிந்துக்களின் நோக்கு) என்கிற தலைப்பில் Main currents in Modern Thought என்ற விஞ்ஞான சம்பந்தப்பட்ட பத்திரிகையில், சிவனின் நடனத்துக்கும், உப அணுக்களின் நடனத்துக்கும் உள்ள இணக்கத்தைப் பற்றி முதலில் விவரமாக எழுதினார்.
1975-ஆம் ஆண்டு இந்தக் கட்டுரையை விரிவுபடுத்தி ’The Tao of Physics' என்ற தலைப்பில் ஒரு புத்தகமாகவும் அவர் எழுதி அது உலகிலேயே அதிகம் விற்ற புத்தங்களில் ஒன்றாகப் பிரபலமாகியது.
அதில் அவர் குறிப்பிடுகிறார். எப்படி இந்தியச் சித்தர்கள் படைப்பைப் பிரிக்க முடியாத, எப்போதுமே செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு நடப்பாகப் பார்த்தார்களோ, அப்படியே தான் நவீன பௌதிக விஞ்ஞானமும் பிரபஞ்சத்தைக் காண்கிறது
பிறப்பும், இறப்பும் நிற்பதே இல்லை. அதுபோல், பிரபஞ்சம் என்கிற தத்துவத்தின் அடிப்படையில் அணுக்களின் நடனம், அணுக்களின் பிறப்பினாலும் இறப்பினாலும் நிற்காமல் தொடர்கிறது. கோடானுகோடி அணுக்கள் வினாடிக்கு வினாடி உருவாகி, மறைவதுதான் பிரபஞ்சத்தின் நடனம் (cosmic dance). அதுவே தான் நடராஜரின் நடனம்என்கிறார் காப்ரா.
நடராஜரின் பிரபஞ்ச நடனமும், அணுக்களின் நடனமும் ஒன்றேஎன்று கூறும் அளவுக்கு, விஞ்ஞானமும் இந்திய ஆன்மிகமும் நெருங்கி விட்டிருக்கிறது. அதனால்தான் கடவுள் அணுவைக் கண்டுபிடிக்கும் ஆய்வு கூடத்தில், தில்லை நடராஜர் நடனமாடிக் கொண்டிருக்கிறார். இப்போது செர்ன்(CERN) என்று அழைக்கப்படுகிற அணு ஆராய்ச்சிக்கான ஐரோப்பிய மையத்தில் ஆறடி உயர நடராஜர் சிலை வைக்கப்பட்டுள்ளது. அந்த நடராஜர் சிலை அருகில் ஒரு பலகையில் சிவன் நடனத்துக்கும், அணுக்களின் நடனத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமை பற்றி காப்ரா எழுதிய மேற்கண்ட வரிகளும் எழுதப்பட்டுள்ளன.
அணு பிளவிற்குப் பிறகு விஞ்ஞானிகள் அணுவை மேலும் மேலும் ஆழ்ந்து ஆராயத் தொடங்கினர். இதன் பலனாக துகள் இயற்பியல் என்ற தனித் துறை உருவாகியது.
அடிப்படையான துகள்கள் யாவை என்று தொடர்ந்து ஆராய முற்பட்டபோது மொத்தம் 16 துகள்களே அடிப்படையான துகள்கள் என்று கண்டறியப்பட்டது. சிறு கல், மண், மேசை, கார், விமானம், பூமி, சந்திரன் சூரியன், நட்சத்திரங்கள், அண்டங்கள் இப்படியாக அனைத்துக்கும் அவற்றின் இயக்கத்துக்கும் இந்த 16 துகள்கள்தான் அடிப்படை என்று கண்ட போதும் விஞ்ஞானிகளுக்கு ஒரு சந்தேகம் இருந்து கொண்டே வந்தது. 
இந்த 16 துகள்கள் மட்டும் பிரபஞ்சத்தைத் தீர்மானித்து விட முடியாது என்று அவர்கள் நம்பினர். 16 துகள்களாலேயே எல்லாம் முழுமையடைந்து விட முடியாது என்பதும் இது வரை கண்டதில் ஏதோ ஒன்று விடுபட்டுப் போகிறது என்றும் அவர்கள் எண்ணினர். எல்லாவற்றையும் நிர்ணயிப்பதும் இயக்குவதுமான இன்னொரு முக்கிய துகள் இருந்தால் மட்டுமே எல்லாமே சீராகவும், ஒழுங்காகவும் இயங்க முடியும் என்று நினைத்த விஞ்ஞானிகளில் முதன்மையானவர் எடின்பரோ பல்கலைக்கழத்தைச் சேர்ந்த பீட்டர் ஹிக்ஸ் என்ற விஞ்ஞானி. அவர் இதை 1964 ஆண்டிலேயே தெரிவித்திருந்தார்.
அதை சமீபத்தில் தான் உண்மை என்று அறிவியல் உலகம் உறுதி செய்தது. கடவுள் துகள் என்று பிரபலமாக சொல்லப்படுகிற ஹிக்ஸ்-போஸன் என்ற உப அணுவை பல்லாண்டு ஆராய்ச்சிகளின் முடிவில் கண்டுபிடித்து இருக்கின்றனர்.
ஹிக்ஸ் போஸன் என்ற நிறைமிகு துகளின் இருப்பும், அதன் இருப்பினால் மட்டுமே இந்தப் பிரபஞ்சமும், உயிரினங்களும் கட்டமைக்கப் பட்டுள்ளன என்பதும் உறுதி செய்யப்பட்டது. ஜட வஸ்துவுக்கு ஓர் உயிர்ப்பாய், இயக்கமாய், அறிவாய், நிறைவாய் அந்த நிறை மிகு (அதாவது ஆங்கிலத்தில் மாஸ் எனப்படும் நிறைக்குக் காரணமான) அமைந்துள்ளதால் ஹிக்ஸ் போஸன் துகளைக் கடவுள் துகள் என்று அழைக்கின்றனர். (இதில் போஸன் என்ற பாதிப்பெயர் நம் இந்திய விஞ்ஞானி சத்யேந்திரநாத் போஸ் அவர்களுக்கு உரித்தானது. அந்த உப அணு குறித்து அவரும் முன்பே எழுதி இருந்தார் என்பதால் அவருக்கும் சமபங்கு அளித்து இந்தப் பெயர் வைத்திருக்கின்றனர்).
இப்போது அவனன்றி ஒரு அணுவும் அசையாதுஎன்று நம் முன்னோர் சொல்லி இருப்பதையும், அருணகிரிநாதர் தன் திருப்புகழில் பாடிய பரமகுருவாய், அணுவில் அசைவாய்என்ற வரிகளையும் நினைத்துப் பாருங்கள். அணுவில் இருந்து அண்டம் வரை அனைத்தையும் இயக்கும் ஆண்டவன் பற்றி சூட்சுமமாக நம் முன்னோர் அறிந்திருந்திருந்ததன் அறிகுறியே இது என்று கணிக்கத் தோன்றுகிறது அல்லவா?
- நன்றி - இணையம்


தெய்வ தரிசனம்!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:07 AM | Best Blogger Tips


ராவணனை அழித்த பிறகு, போர்க்களத்தில் ராமன் ஓய்வாக தரையை நோக்கியபடி அமர்ந்திருந்தார். அப்போது ஒரு பெண்ணின் நிழல் தெரிந்தது. அந்த நிழலுக்குச் சொந்தக்காரியான பெண், அவரது திருப்பாதங்களைத் தொட முயற்சிப்பதை ராமன் நிழலின் நடவடிக்கை மூலம் புரிந்து கொண்டார். உடனே தனது காலை உள்ளிழுத்துக் கொண்டார்.
நீ யாரம்மா?” என்றார்.
நான் ராவணனின் மனைவி மண்டோதரி. என் கணவரை யாராலும் வெல்ல முடியாது என இறுமாந்திருந்தேன். ஆனால் அவரையே ஒருவன் கொன்று விட்டான் என்றால், அவனிடம் ஏதோ உயர்ந்த குணம் இருக்க வேண்டும் என நினைத்தேன். மேலும். க்ஷத்திரிய குல தர்மப்படி, கணவனை இழந்த பெண்ணை வெற்றி பெற்றவன் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் நீ வரவில்லை. ஆச்சரியப்பட்டேன். இங்கே நீ என் நிழல் உன் மீது படுவதைக் கூட விரும்பவில்லை என்னும் போது, உன் சிறந்த குணத்தை என்னவென்பேன்! என் கணவரிடம் கூட ரகு குலத்தில் உதித்த ராமன் மனிதன் அல்ல.
உலகைக் காக்கும் பரம்பொருள். விஸ்வரூபன். தன்னுடைய ஒவ்வொரு அங்கங்களிலும் உலகங்களையே தாங்கி நிற்கிறான். பாதாள லோகமே அவனது பாதங்கள். பிரம்மலோகமே அவன் சிரசு. கதிரவனே அவனது கண்கள். மேகமே அவனது கேசம். அவன் இமைப்பதே இரவு பகலாகிறது. திசைகளனைத்தும் அவனுக்கு செவிகள். அவனது திருநாமம் எல்லாப் பாவங்களையும் நொடிப்பொழுதில் போக்கவல்லது. அவன் வேதத்தின் சாரம். ராமன் சாட்சாத் தெய்வ வடிவம் என்பதில் சந்தேகம் இல்லை. அவனிடம் பகையை ஒழித்து சீதையை விட்டுவிடுங்கள்என்று மன்றாடினேன். அவர் கேட்கவில்லை. உன் வெற்றிக்கு காரணம், என் கணவரிடம் இல்லாத ஒரு நற்குணம் உன்னிடம் இருந்தது தான். அதுதான் உன் ஏகபத்தினி விரதத்தன்மை. அதனால் தான் நீ வென்றாய்,” என்றாள். உடனே ராமன் தன் சுயவடிவான நாராயணனாக அவளுக்கு விஸ்வரூப தரிசனம் கொடுத்தார்.
ராமாயணத்தில் பாக்கியவதியாகத் திகழ்ந்தவள் மண்டோதரி. அனுமன் இலங்கை சென்று ராவணனின் அந்தப்புரம் சென்ற போது, மண்டோதரி ஒழுங்காக உடையணிந்திருந்ததைக் கண்டு, இவள் சீதையாக இருப்பாளோஎன்று சந்தேகம் கொண்டான். அந்தளவுக்கு ஒழுக்கமுள்ளவளாக விளங்கியதால் தான், கெட்டவனுக்கு வாழ்க்கைப்பட்டும் அவளுக்கு நாராயண தரிசனம் கிடைத்தது.
நன்றி இணையம்

ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறிய கதை !

மணக்கால் அய்யம்பேட்டை | 12:06 AM | Best Blogger Tips



ஒரு ஊரில் ஒரு ஆதரவற்ற ஏழைப் பெண் ஒருத்தி இருந்தாள். அவளுக்கு என்று சொந்தம் அவள் வளர்க்கும் சில மாடுகள் தான். அந்த மாடுகளிடமிருந்து பாலை கறந்து அக்கம் பக்கத்து கிராமங்களில் உள்ள பல வீடுகளுக்கு சென்று தினசரி கொடுப்பதை அவள் வழக்கமாக கொண்டிருந்தாள். அதன் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்து வாழ்ந்து வந்தாள்.
ஊரின் எல்லையில் இருக்கும் ஒரு சன்னியாசியின் ஆஸ்ரமத்துக்கும் இவள் தான் தினசரி பால் கொடுப்பது வழக்கம்.
ஒரு நாள் வழக்கம் போல, சன்னியாசி பூஜையில் உட்கார்ந்தார். ஆனால் நைவேத்தியத்துக்கு தேவையான பால் இன்னும் வரவில்லை. அடிக்கடி இந்த பால் கொண்டு வரும் பெண் தாமதமாக வருகிறாள் என்பதை புரிந்துகொள்ளும் அவர் அந்த பெண்ணிடம் கடிந்துகொள்கிறார்.
ஏன்மாஉன்னாலே ஒழுங்கா சரியான நேரத்துக்கு பால் கொண்டுவர முடியாதா? உன்னாலே எனக்கு எல்லாமே தாமதமாகுது
மன்னிக்கணும் சாமி. நான் என்ன பண்ணுவேன்…. நான் வீட்டை விட்டு சீக்கிரமா தான் கிளம்புறேன். ஆனால், இங்கே வர்றதுக்க்கு கரையில படகுக்காக காத்திருக்க வேண்டியிருக்கு.
என்னது ஆத்தை கடக்குறதுக்கு படகுக்கு காத்திருக்கியா? அவனவன் பிறவிப் பெருங்கடலையே கிருஷ்ணா கிருஷ்ணான்னு சொல்லிகிட்டே தாண்டிடுறான். நீ என்னடான்னா ஆத்தை கடக்குறதை போய் ஒரு பெரிய விஷயமா சொல்லிகிட்டிருக்கியே…. என்னமோ போ…. இனிமே சீக்கிரம் வரணும் இல்லேன்னா எனக்கு பால் வேண்டாம்என்று கூறிவிட்டு உள்ளே சென்றுவிடுகிறார்.
அவர் என்ன நினைச்சு சொன்னாரோ…. ஆனால் அந்த பெண் அதை மிகவும் தீவிரமாக பயபக்தியுடன் கேட்டுக்கொண்டாள்.
மறுநாளிலிருந்து சரியாக குறித்த நேரத்துக்கு பால் கொண்டு வர ஆரம்பித்துவிடுகிறாள். சந்நியாசிக்கோ திடீர் சந்தேகம் வந்துவிடுகிறது.
என்னமா இது அதிசயமா இருக்கு? இப்போல்லாம் சரியான நேரத்துக்கு வந்துடுறியே?”
எல்லாம் நீங்க சொல்லிக் கொடுத்த மந்திரம் தான் ஐயா…. அது மூலமா நான் ஆத்தை சுலபமா தாண்டிடுறேன். படகுக்காக இப்போல்லாம் காத்திருக்கிறதில்லை
என்ன நான் சொல்லிக் கொடுத்த மந்திரமா? அதை வெச்சு ஆத்தை தாண்டிடுறியா? நம்பமுடியலியே…. ” என்று கூறும் சந்நியாசி அவள் ஆத்தை தாண்டுவதை தான் நேரில் பார்க்க வேண்டும் என்கிறார்.
ஆற்றின் கரைக்கு சென்றவுடன், “எங்கே தாண்டு பார்க்கலாம்என்கிறார் அந்த பெண்ணிடம்.
பால்காரப் பெண், கை இரண்டும் கூப்பியபடி கிருஷ்ணா கிருஷ்ணாஎன்று கூறியபடியே தண்ணீரில் நடக்க ஆரம்பித்துவிடுகிறாள்.
நடந்ததை நம்ப முடியாது பார்க்கும் சன்னியாசிக்கு ஒரு பக்கம் அதிர்ச்சி மறுபக்கம் தயக்கம். ஆறு எவ்வளவு ஆழம்னு தெரியலையே…. தவிர கால் உள்ளே போய்ட்டா என்ன செய்றது? ஆடை நனைந்துவிடுமே…? என்று அவருக்கு பலவாறாக தோன்றியது. ஒரு சில வினாடிகள் தயக்கத்துக்கு பிறகு கிருஷ்ணா கிருஷ்ணாஎன்று கூறியபடி தண்ணீரில் காலை வைக்க முயற்சிக்கிறார். ஆனால் கால் உள்ளே செல்கிறது. சன்னியாசி திடுக்கிடுகிறார்.
அம்மா உன்னாலே முடியுது என்னால ஏன் முடியலே….?” என்கிறார் அந்த பெண்ணை பார்த்து.
அந்த பெண் பணிவுடன், “ஐயா…. உங்க உதடு கிருஷ்ணா கிருஷ்ணான்னு சொன்னாலும் உங்க கை ரெண்டும் உங்க உடுப்பு நனையக்கூடாதுன்னு தூக்கி பிடிச்சிருக்கே….? தவிர ஆத்தோட ஆழத்தை பரீட்சித்து பார்க்கும் உங்க முயற்சி அந்த ஆண்டவனையே ஆழம் பார்க்கிறது போலல்ல இருக்கு!என்கிறாள்.
சந்நியாசி வெட்கி தலைகுனிகிறார்.
கடவுள் மேல் நமது நம்பிக்கை எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதை விளக்க பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறிய கதை இது.
பிரார்த்தனை செய்கிறவர் மனநிலை அந்த பெண்ணின் மனநிலை போலத் தான் இருக்கவேண்டும். அந்த சன்னியாசியை போல அல்ல
நன்றி இணையம்

எனக்கொரு ஆசை...மீண்டும் என் முதல் உலகிற்கு செல்ல...!!!

மணக்கால் அய்யம்பேட்டை | 11:57 PM | Best Blogger Tips

நீர் சூழ்ந்த உலகம் அது....!!
காற்று என்பதே கிடையாது...!!
இருள் நிறைந்த உலகம் அது....!!
பயம் என்பதே கிடையாது.....!!
அங்கே இருட்டில் இருந்தும் எப்போதும்
வாழ்கை வெளிச்சமாய் இருந்தது....!!
கிட்டதட்ட அது ஒரு தனிக்குடித்தனம்..
ஆனாலும் தனியாக இல்லை....!!
உணவு இடம் பாசம் என அனைத்தும் கிடைக்கும் விருந்தோம்பல் அங்கே ...!!
வேலை என்பதே கிடையாது , ஆனாலும் ஒரே வேலை தூக்கம்....!!
சில நேர விழிப்பில் தூக்கத்திற்கு ஓய்வு..
மனதில் சிறிதும் , கோபம் இல்லை ,
சோகம் இல்லை , துன்பம் இல்லை,
காதல் இல்லை , காமம் இல்லை...!!
இரவின் நிலவு போல, அங்கு துணையாக யாரும் இல்லை...
தனிமையை தவிர....!!
ஆனாலும் அங்கேயும் ... நிலவை தாங்கும் வானம் போல எனையும் தாங்க....!!
எனக்காக சுவாசிக்க.....!!
எனக்காக உண்ண......!!
என்னையே எப்போதும் நினைக்க....!!
எனக்காகவே இருக்க.....!!
ஒரு ஜீவன்......!!!!
என் தாய் ..!!
==========
ஆம்..! எனக்கொரு ஆசை
மீண்டும் என் முதல் உலகிற்கு செல்ல.....!!

நன்றி இணையம்