*கஷ்டங்களை தீர்க்கும் பஞ்சபுராணம்*

மணக்கால் அய்யம்பேட்டை | 10:31 AM | Best Blogger Tips


பஞ்சபுராணம் பாடுதல் என்ற வழக்கம் முற்காலத்தில் நன்றாக இருந்து வந்துள்ளது. தற்காலத்தில் அவ்வழக்கம் சில கோயில்களில் மட்டுமே உள்ளது. சமயக் குரவர்கள், திருமூலர், சேக்கிழார், திருமாளிகைத் தேவர் ஆகியோர் பாடியவை திருமுறைகள் எனப்படுகின்றன.
அவற்றில் 
தேவாரம் (7 திருமுறைகள்), திருவாசகம் (திருக்கோவையார்), திருவிசைப்பா, 
திருப்பல்லாண்டு, திருத்தொண்டர்_புராணம் (பெரிய புராணம்)
ஆகிய ஐந்தில் ஒவ்வொரு பாடல் பாடுவது இன்று வழக்காற்றில் உள்ளது. இதுவே பஞ்ச புராணம் பாடுதல் எனப்படுகிறது. 
-
சமய நிகழ்வுகளில் விநாயகர் துதியுடன் ஆரம்பிப்பது வழமை. பஞ்சபுராணம் பாடத் துவங்கும் போதும் முடிக்கும் போதும் "திருச்சிற்றம்பலம்" என்று சொல்ல வேண்டும். பஞ்சபுராணம் ஓதியபின் அருணகிரிநாத சுவாமிகள் அருளிய திருப்புகழ் பாடல் ஒன்று ஓதி, “வான்முகில் வழாது பெய்கஎன்ற கந்த புராண வாழ்த்து பாடி நிறைவு செய்வது வழமை. 
-
சைவ நெறி பிறழா திருக்கோயில்களில் நாம் சென்று வழிபடுகின்ற நேரங்களில் அங்கே சில காட்சிகளைக் காண்பதுண்டு. பெரிய கோயில்களில் ஆறு கால பூஜைகள், நான்கு கால பூஜைகள், இரண்டு கால பூஜைகள் என வசதிக்கேற்றபடி நடைபெறுவது உண்டு. சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், தூப, தீப ஆராதனை நடைபெற்ற பிறகு, வேதங்களை இசைப்பார்கள் வேதியர்கள். 
-
அவர்கள் முடித்த பிறகு திராவிட வேதமெனும் தமிழிசைப் பாக்களை ஓதுமாறு கூறுவார்கள். சிலர் பஞ்ச புராணம் பாடுங்கள் என்றும் கூறுவர். ஓதுவாரும் அவருக்கு தெரிந்த தேவாரம், திருவாசகம் போன்ற பாடல்களை இசைப்பார். அதன் பிறகு வேதியர்கள் தீபாராதனை நிறைவு செய்து விபூதி பிரசாதம் வழங்கும் வழக்கம் இருந்து வருகிறது.
-
மந்திர நாயகனான சிவனை பஞ்சபுராணம் என்னும் ஐந்து பாடல் பாடி வழிபட்டால் கஷ்டங்கள் பஞ்சாய் பறந்திடும் என்பர். தினமும் காலையில் சிவ ஸ்தலத்திற்கு சென்று அபிஷேகம் முடிந்த பின் இதனை பாடுவது சிறப்பு. இயலாதவர்கள் உங்கள் வீட்டிலேயே இந்த சுலப பஞ்சபுராணத்தை நீங்கள் பாரயணம் செய்யலாம்.
-
விநாயகர் வணக்கம்
"ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே."
-
திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்
"தோடுடைய செவியன் விடையேறி ஓர் தூவெண்மதி சூடிக் 
காடுடைய சுடலைப் பொடிபூசி என் உள்ளம் கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனைநாள் பணிந்தேத்த அருள்செய்த
பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே."
-
மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
"பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் 
பரிந்து நீ பாவியேனுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி 
உலப்பிலா ஆனந்தமாய
தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த 
செல்வமே சிவபெருமானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் 
எங்கு எழுந்தருளுவது இனியே."
-
சேந்தனார் அருளிய திருவிசைப்பா
"கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக்
கரையிலாக் கருணைமா கடலை
மற்றவர் அறியா மாணிக்க மலையை
மதிப்பவர் மனமணி விளக்கைச்
செற்றவர் புரங்கள் செற்றஎம் சிவனைத்
திருவீழிமிழலை வீற்றிருந்த
கொற்றவன் தன்னைக் கண்டு கண்டுள்ளம்
குளிரஎன் கண் குளிர்ந்தனவே."
-
சேந்தனார் அருளிய திருப்பல்லாண்டு
"பாலுக்கு பாலகன் வேண்டி அழுதிடப் பாற்கடல் ஈந்தபிரான்
மாலுக்குச் சக்கர அன்றருள் செய்தவன் மன்னிய தில்லை தன்னுள்
ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம்பலமே இடமாகப்
பாலித்து நட்டம் பயில வல்லானுக்கே பல்லாண்டு கூறுதுமே."
-
சேக்கிழார் அருளிய பெரியபுராணம்
"உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்பு அடி வாழ்த்தி வணங்குவாம்."
-
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
"ஏறு மயிலேறி விளையாடு முகம் ஒன்றே
ஈசனுடன் ஞானமொழி பேசுமுகம் ஒன்றே
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே
குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே
மாறுபடு சூரனை வதைத்த முகம் ஒன்றே
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே
ஆறுமுகமான பொருள் நீ அருளல் வேண்டும்
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமானே."
-
கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்தபுராணம்
"வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க குறைவிலாது உயிர்கள் வாழ்க
நான்மறை அறங்கள் ஓங்க நற்தவம் வேள்வி மல்க
மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்."
-
"வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயது எல்லாம் அரன் நாமமே
சூழ்க வையகமும் துயர் தீர்கவே."


மனித மூளை

மணக்கால் அய்யம்பேட்டை | 10:19 AM | Best Blogger Tips

🌹மனித மூளையின் நூறு சதவீத செயல்பாடு சாத்தியமே. அதுதான் அட்டமா சித்திகளின் கடைசி நிலையான ஈசத்துவம்
🌴அந்த நிலையில் அனைத்தும் சாத்தியம். ஆக்கல் காத்தல் அழித்தல் ஆகிய முத்தொழிலும் சாத்தியம்
🌴ஒரே விடயத்தில் மட்டும் மனதை ஊன்றி சிந்திப்பது
🌴தாரணை என்பது விஞ்ஞானிகள் அறியாமலும், மெய்ஞானிகள் அறிந்தும் செய்வது
🌴மனம் ஒன்றுவது தாரணை
🌴மனமே அற்றது தியானம்
🌴மனம் அற்ற நிலையே தியானத்தின் இறுதி நிலை. அதாவது நிர்விகல்ப சமாதி
🌴எண்ணங்களின் தொகுப்பே மனம்.
🌴மனம் வேறு மூளை வேறு.
🌴மனம் பிரபஞ்சத்திற்கு சொந்தமானது.
🌴மூளை மனிதனுக்கு சொந்தமானது.
🌴பிரபஞ்ச மனம் மூளை என்கிற அணுத்தொகுதிகளின் வழியாக பஞ்சபூதங்களால் கட்டமைக்கப்பட்ட உடலை இயக்குகிறது.
🌴எல்லாமே ஆற்றல் பரிமாற்றம்தான்
🌴மனம் என்பது மூளையை மையமாக கொண்டு பிரபஞ்சம் முழுக்க வியாபித்து இருக்கக் கூடிய ஒன்று
🌴பிரபஞ்சத்தில் சிதறிக்கிடக்கும் எண்ணங்களை தொடர்பு கொள்ளும் மீடியமே மூளை
🌴நாம் ஒன்றைப்பற்றி சிந்திக்கும்போது மூளையில் உள்ள நியூரான்ஸ்களுக்கு மின்சக்தி சென்று அதிர தொடங்குவதால் அந்த அதிர்வு அலைகளாக வெளியே பயணிக்கும்
🌴ஒரு அணுவில் இருந்து மற்றொரு அணுவிற்கு ஆற்றலானது அலைகளாகவே பயணிக்கிறது
Top of Form

இருட்டு கடை அல்வாவோட தனி டேஸ்ட்டுக்கு இது தான் காரணம்!

மணக்கால் அய்யம்பேட்டை | 10:08 AM | Best Blogger Tips

அல்வா என்ற பெயர் கேட்டாலே நாம் எல்லாருக்கும் நினைவுக்கு வரும் ஒரே ஊர் திருநெல்வலி தான். அதுவும் அங்கே தயாரிக்கப்படும் இருட்டு கடை அல்வாவை சாபிட்டால், அதன் சுவை உங்கள் நாவில் தங்கி விடும். அப்படி என்ன விசேஷம், இருட்டுக்கடை அல்வாவில்? ராஜஸ்தானை சேர்ந்த பிஜிலி சிங் என்பவர் தான் இந்த இருட்டு கடை அல்வாவை துவங்கினார். அவருக்கு பின் வந்த சந்ததியினர் இதை நடத்தி வருகிறார்கள் . இந்த உலகத்தில் பல வகையான அல்வா வகைகள் இருக்கும்போது ஏன் இந்த இருட்டு கடை அல்வாவுக்கு மட்டும் அப்படி ஒரு தனி சிறப்பு ? இதற்கான காரணம், இந்த அல்வாவுக்கு தேவையான கோதுமையை இவர்கள் கையால் தான் அரைக்கிறார்கள்.

Order Tirunelveli Halwa Online and get delivered in less than 24 Hours

அது மட்டும் அல்லாமல், இந்த அல்வாவை மிஷின்களை தவிர்த்து, மேனுவல் முறைப்படி தயாரிக்கப்படுகிறது. அதனால்தான் இந்த இருட்டு கடை அல்வாவிற்கு இவ்வளவு வரவேற்ப்பு. மாலை 5.30 மணி அளவில் இந்த இருக்கு கடை அல்வா திறந்துவைக்கப்படும். வெறும் மூன்றே மணிநேரத்தில் எல்லா சரக்கும் தீர்ந்துவிடும். இதில் வரும் வருமானம் போதும் என்று நினைத்து தான் இதை செய்கிறார்கள், அதனால்தான் இவர்களை இந்த தமிழகம் இன்னும் அங்கீகரித்து கொண்டே இருக்கிறது. திருநெல்வேலி அல்வா செய்யும் முறை: தேவையான பொருட்கள்: சம்பா கோதுமை - 200 கிராம் சர்க்கரை - 750 கிராம் நெய் - 40 கிராம் பால் - 1 லிட்டர் செய்முறை: உடலுக்கு ஆரோக்யமான சம்பா ரவையை, ஒரு நாள் முன்னரே தண்ணீரில் நன்றாக ஊறவைக்கவேண்டும். சம்பா ரவை நன்றாக ஊறின பிறகு, கிரைண்டரில் நன்றாக அரைக்க வேண்டும். அதாவது நைசாக அரைக்க வேண்டும். நைசாக அரைக்க அரைக்க கோதுமை, பாலாக வர ஆரம்பிக்கும். அதை ஒரு துணியில் வடிகட்டிக் கொள்ளவும். கொஞ்சம் பெரிய வாணலியை ( அடி கனமான பாத்திரமாக இருக்கவேண்டும் ) எடுத்து அதில் 1 லிட்டர் பாலை ஊற்றி நன்கு காய வைக்க வேண்டும். இப்பொழுதான் கிளறுவது என்று ஒரு வேலை ஆரம்பம் ஆகிறது. பால் ஒரு மிதமான சூடானதும், சர்க்கரையை அதனுடன் சேர்த்து நன்கு கிளற வேண்டும். இப்படி செய்யும் பொது ஒரு வித கலவை கொதித்து, இறுகி, கெட்டியான பதத்திற்கு வரும். பிறகு அதனுடன் சுத்தமான பாலில் தயாரிக்கப்பட்ட நெய்யை அதனுடன் சேர்த்து கிளற வேண்டும். இப்படியே விடாமல் கிளறினால், அல்வா ஒரு நல்ல குங்குமச்சிவப்பில் வரும். இறுகலான பக்குவத்தில் பாத்திரத்தில் ஒட்டாமல் வந்ததும், இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டிப் பரத்தி, ஆறவைத்து தங்கள் அன்புக்குரியவர்களுக்கு பரிமாறி உங்கள் அன்பை வெளிப்படுத்தி கொள்ளுங்கள். இதே மாதிரி பல வகையான அல்வா இருக்கிறது. மற்ற இனிப்பு வகைகளை விட இந்த அல்வா தயாரிக்கும்போது மட்டும் பொறுமை மற்றும் பக்குவம் மிகவும் அதிகமாக வேண்டும். அனால் இப்பொழுது இருக்கும் இந்த அவசர உலகத்தில் பொறுமையும், பக்குவத்தையும் யாரும் கடைப்பிடிபதே இல்லை. அனால் அல்வா சாப்பிடும் ஆசை எல்லாருக்கும் உள்ளது. ஆகையால் பல ஸ்வீட் கடைகளில் ஏறி இறங்கி கண்கவர் வண்ணங்களில் விற்கப்படும் இந்த அல்வாவை தேடி பிடித்து வாங்குவர். இப்படி பட்ட தரமற்ற அல்வாவை நீங்கள் உண்டால், உங்கள் உடல் நிலை பாதிக்கபடும். இதை கணக்கில் கொண்ட நம்ம நேடிவ்கிருஷ்.காம்(www.nativcrush.com) சுத்தமான, சுவையான, சுகாதாரமான, இந்த இருட்டு கடை அல்வாவை நேர்த்தியான முறையில் தயார் செய்கிறார்கள். மண்மணம் மாறாத இந்த திருநெல்வேலி இருட்டு கடை அல்வாவை நீங்க நேடிவ்கிருஷ்.காம்' ல் (www.nativcrush.com) ஆர்டர் செய்தால், உங்கள் வீடு தேடி வரும் இந்த சுவையான இனிப்பு பண்டம். 

நன்றி
Thatstamil.com