பெண் ஒரு மகா சக்தி🙏🏽

மணக்கால் அய்யம்பேட்டை | 10:59 AM | Best Blogger Tips

 


 

வேலை செய்வது கூட பெரிய பிரச்சனை இல்லை!!!!

 

வீட்டில் என்ன  சமைப்பது என்பது தான் பெரிய பிரச்சனயே #பெண்களுக்கு

 பெண் எனும் மகா சக்தி; இந்தியாவில் ...

இன்னைக்கு சமைக்குறது;

 

அப்புறம் நாளைக்கு சமைக்குறது;

 

அப்புறம் நாளன்னைக்கு சமைக்குறது;

 

சமைச்சுக் கிட்டே இருக்குறது.

 

ஒவ்வொரு நாளும் சமைக்கனும்,

 

நேத்து சமைச்ச மாதிரி இல்லாம இன்னிக்கு சமைக்கனும்,

 

புதுசு புதுசா சமைக்கனும்,

 

ருசியா சமைக்கனும்,

 


அது எல்லார்க்குமே பிடிக்கனும்,

 

உப்பு கூடிடக் கூடாது,

 

சோறு குழைஞ்சிடக் கூடாது,

 

பிடிக்காத ஐட்டங்கள் இருந்துடக் கூடாது,

 

ஒவ்வாத ஐட்டங்கள் இருந்துடக் கூடாது,

 பெண் எனும் மகா சக்தி; இந்தியாவில் ...

இருக்குற பொருள்களை வச்சு அட்ஜஸ்ட் பண்ணனும்..

 

வேஸ்ட் பண்ணிடக் கூடாது.

 

இருக்குற காச வச்சு சமைக்கனும்.

 

பட்ஜெட் இடிச்சிடக் கூடாது.

 

ஒவ்வொரு நாளும் விடியுறப்போ,

 

இன்னைக்கு என்ன வாங்கலாம்,

 

என்ன சமைக்கலாம்,

 

வீட்டில என்ன இருக்கு, வீட்டில என்ன இல்லன்னு

 

யோசிச்சே விடியும்.

 பெண்களும் பாலினச் சமத்துவமும் - Her Stories

சாப்பிட்டு முடிச்சதும் பாத்திரம் கழுவி வைக்கனும்.

 

இதையே ஒரு நாளைக்கு நாலு தடவை பண்ணனும்.

 

பகல் சமைச்சத கழுவுறப்போ திரும்ப இரவுக்கும் இதையே பண்ணனுமேன்னு மனசுல யோசிக்கும்.

 

நாளைக்கும் முதல் இருந்து இது எல்லாமே பண்ணனும்லன்னு யோசிக்கும்.

 

ஆனாலும், நாளைக்கும் விடியும்.

 

நாளைக்கும் பசிக்கும். நாளைக்கும் சமைக்கனும்.

 Know About Folk Dance Folk Music Of Tamil Nadu - Tripoto

சமைக்குறதெல்லாம் பெரிய மேட்டர் இல்ல.

 

ஆனா..

 

தொடர்ந்து ஏழு நாளைக்கு சமைக்குறது மேட்டர் தான்.

 Acrylic Painting Artwork Girl Cooking Tamilnadu By Illayaraja 2

அதையே எழுபது நாளைக்கு சமைச்சா?

 

எழுபது வருசமா சமைச்சுக்கிட்டே இருந்தா?

 

சமைக்குறதுல இருக்குற சவால்கள் எல்லாம் புரியுது.

 

கஷ்டம் தெரியுது.

 

வெறுக்குது.

 

இவ்வளவும்,

 

எனக்காக மட்டும் சமைக்குறப்போ.

 Village Kitchen (Vol 2) – Crafttatva.com

இதுவே இன்னும் அஞ்சு பேர்க்கு சேர்த்து சமைச்சா?

 

அந்த அஞ்சு பேருக்குமே வேற வேற டேஸ்ட் இருந்தா?

 

அந்த அஞ்சு பேருமே,

 Village Kitchen – Crafttatva.com

அவர்களுக்கு சமைச்சுக் கொடுக்கத் தான் நான் பிறந்ததேன் என்கிற நினைப்புல இருந்தா?

 

உக்கார்ந்த இடத்துல இருந்துக்கிட்டே சாப்பாட்ட கொண்டு வரச் சொன்னா?

 Bargavi Srinivasan on LinkedIn: Oil painting by Mangalam Srinivasan | 60  comments

அதுல உப்பு இல்ல,

 

இதுல உறைப்பு இல்லன்னு

 

கம்ப்ளய்ன் பண்ணா?

 

சாப்பிட்டு அப்படியே அதே இடத்துல விட்டுப் போனா?

 Modern Technology at Ancient Chozha Kitchen

நம்ம வீட்டுல நமக்காக சமைக்குறவங்கள நாம எந்த அளவுக்கு கவனிச்சிருக்கோம்?

 

எந்தளவு அங்கீகரிச்சிருக்கோம்?

 

எந்தளவு சப்போர்ட்டிவ்வா இருந்திருக்கோம்?

 South Indian cooking

முப்பது வருசமாஅம்மா சமைக்குறாங்க.

 

இடையில வெளில வாங்கிக்கலாம் சொன்னா,

 

சமைக்கிறத தவற வேற வேலை என்ன?

 

அதைக் கூட செய்ய முடியாதானு பேசுவோம்,

 A South Indian Woman Cooking Curry for Her Family by GiorgioQuePee8081 on  DeviantArt

இங்க வந்து கிண்டலா பதிவு போடுவோம்.

 

என் வீட்டுல மனைவிக்கு கிச்சன் எங்க இருக்குதுனே தெரியாதுனு

 

பதிவை போட்டுட்டு ஸ்மைலி எமோஜிஸ் வந்ததும்,

 A South Indian Woman Cooking Curry for Her Family by GiorgioQuePee8081 on  DeviantArt

எதையோ சாதிச்ச மாதிரி, “சாப்பாடு ரெடியானுகுரல் கொடுப்பாங்க.

 

ஆறு நாள் அடுப்படி வேலையா இருக்கியே,

 

இந்தா ஒரு நாள் உனக்கு ஓய்வுனு வீட்டில யாராவது சொன்னா

 Illustration of Indian village woman cooking food | Premium AI-generated  image

யாரும் ஹோட்டல வாங்கிக்கிட்டா தேவலனு யோசிக்க மாட்டாங்க!

 

இதுல தோசைக்கு மாவு அரைக்குற அர்ப்பணிப்பு இருக்கே!

 

அதுக்கே ஆரத்தி காட்டணும்!

 My Bharat

இன்னொரு தடவ வீட்டில சமையலைப் பத்தி பேச்செடுத்தாலோ, வெளில வாங்கி சாப்புட்றதப் பத்தி பிரசங்கம் பண்ணாலோ, மாவரைச்சு கிரைண்டர் கழுவி வச்சிட்டுத் தான் போகணும்னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிடுங்க,

 

அதுக்கப்பறம் நக்கலா பேச மாட்டார்கள்.

 Indian Village Cooking added a... - Indian Village Cooking

கருவறை பத்து மாசம்னா,

 

சமையலறை வாழ்நாள் மட்டும்.

 

தனக்குப் பசியில்லாத போதும், பிறர்க்காய் சமைக்கும்

 Nothing beats a wholesome home cooked meal. Extra points if the vegetables  are grown in your backyard.

ஒவ்வொரு தாய்க்கும்,

 


மனைவிக்கும்

 Pin page

சமர்ப்பணம்!

 

சுட்ட பதிவேயானாலும்

அனைத்து பெண்மணிகளுக்குமான மனக்குமுறல்

 

பெண்மையை போற்றி வணங்குவோம்.

 Indian village women painting/Beautiful indian village scenery painting  with oil pastelsகேரள மாந்த்ரீகம் 1. வசியம் : ஆண் / பெண் வசியம்,காதல் வசியம், - யந்திர  மந்திர பிரயோகம். 2. மோகனம் - யந்திர மந்திர பிரயோகம். 3. ஸ்தம்பனம் - யந்திர  ...

பெண் ஒரு மகா சக்தி.🙏🏽

  என்று உணரலாம்!

அன்புடன்
K. மாரிக்கண்ணு  DHS
விராலிமலை

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷  May be an image of 1 person, smiling and temple 🌷 🌷🌷 🌷

.