மூக்கிரட்டை இலை பயன்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 1:30 PM | Best Blogger Tips


மூக்கிரட்டை இலையின் படம்

நீரிழிவு நோய்க்கு மருந்துகள் சாப்பிட்டு இரண்டு சிறுநீரகமும் செயலிழந்து விட்டநிலையில் எப்போது வேண்டுமானாலும் உயிர் பிரியலாம் என்ற நிலை. உடல் முகம் உயிர் நிலை கால்கள் எல்லாம் வீங்கிய நிலையில் சொந்த ஊருக்கு கொண்டு வந்து உறவுகளை இறுதியாக பார்க்க அழைக்கின்றனர். ஊரே அழுகிறது. அந்த ஊரைச்சேர்ந்த உறவினர் ஒருவர் தன் மகனை அழைத்துக் கொண்டு அவரை பார்க்க சென்றார்... கண்ணீர் விட்டு அழுதுவிட்டு ஆறுதல் கூறி ஆயிரம் ரூபாயை அவரிடம் அளித்தார். அப்போது அவர் மகன் (தான் படித்த...நம் முன்னோர்களின் அற்புத ஆய்வு தந்த அறிவை மற்றவர்களும் பயன்பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில்)ஒரு வார்த்தை தந்தையிடம் ஒப்புதல் பெற்று பேசினார்...

"மூக்கிரட்டை இலைகளை" அரைத்து சாறெடுத்து பழைய கஞ்சியில் (சோற்றை பிழிந்து எடுத்து விட்டு) மூக்கிரட்டை சாறு கலந்து" 1 வாரம் குடித்து வரச்சொன்ன அந்த இளைஞர்... உங்கள் குலதெய்வத்தை வணங்கி நம்பிக்கையோடு மேற்கண்ட மருந்தை உட்கொள்ளுங்கள் பரிபூரண குணமாவீர்கள் என்றார். மூன்று நாளில் ... எழுந்து அவராக நடந்து சிறுநீர் கழித்ததாகவும் ...2 நாளில் முகம் உடல் வீக்கம் குறைந்ததாகவும், நேற்று தோசை உணவுகள் சாப்பிட்டு நன்றாக உள்ளார் என்பதை கேள்விப்பட்டு மகிழ்ச்சி அடைந்தார்... இன்று பரிபூரண குணம் அடைந்து விட்டார்.

"உணவே மருந்தென்று" வாழ்ந்த தமிழனின் பெருமையை சொல்வேனா? அதிசயம் அற்புதம் ஆச்சரியம் ஆனால் உண்மை சிறுநீரகம் பாதித்தோர் பல கோடி செலவழிக்க வேண்டாம். மூக்கிரட்டை இலைச் சாறு பழைய கஞ்சி போதும்.

நன்றி:

Dr.G .S. ராஜதுரை.,M.B.B.S ., P.G.DIP.Us G /G.S.

கிளினிக்

கறம்பக்குடி

புதுக்கோட்டை மாவட்டம் .9865224588

மூக்கிரட்டை இலையின் படம் 

நன்றி இணையம்


 



மோதிஜி ஆட்சியில்

மணக்கால் அய்யம்பேட்டை | 5:00 PM | Best Blogger Tips

 


மோதிஜி ஆட்சியில் இந்தியாவுக்கு திரும்பிவந்த அபூர்வ பொருட்கள்..

# 100. வருடங்களுக்கு முன்பு திருடப்பட்ட இந்துமத தேவதையாகிய ஸ்ரீ அன்னபூர்ணாவின் சிலையை கனடா நாடு இந்தியாவுக்கு திருப்பி தந்தது...!!

# 13,ம் நூற்றாண்டில் திருடப்பட்ட ராம் லட்சுமணன் , சீதாதேவியின் சிலைகளை UK.இந்தியாவுக்கு திருப்பி தந்தது....!!

# 9,ம் நூற்றாண்டின் கடைசியில் திருடப்பட்ட நடராஜர் சிலையை UK. இந்தியாவுக்கு திருப்பி தந்தது..

# 400வருடம் பழமையான ஸ்ரீ கிருஷ்ணன் சிலை UK வில் இருந்து திரும்பி வந்தது...!!!!



நன்றி இணையம்

அன்பு கருணை மகிழ்ச்சி

மணக்கால் அய்யம்பேட்டை | 11:58 AM | Best Blogger Tips

 


ஜெயலலிதா அம்மா இறந்தார்..

திரு. விவேக் இறந்தார், திரு. SPB இறந்தார், அவர்களிடம் இல்லாத பணமா?? ஆள் பழக்கமா?? அவர்களிடம் எல்லாம் இருந்தும், உயிரை காப்பாற்ற எந்த மருத்துவ பலமும், பண பலமும், ஆள் பலமும் முடியவில்லை..

மரணத்தை தினமும் பார்க்கிறோம், மரண செய்திகளை தினமும் கேட்கிறோம், அதிலிருந்து நாம் எதாவது கற்றுக் கொள்கிறோமா? என்றால் இல்லை.. மரணத்தை தழுவாத எந்த உயிரினமும் இல்லை..

எதை கொண்டு வந்தோம்? எதை கொண்டு செல்கிறோம்? வாழும் இந்த நிலையில்லாத, குறுகிய காலத்தில், எதை நோக்கி பயணிக்கிறோம்?? ,..

நான் தான் பெரியவன், உயர்ந்தவன் என்ற திமிர் ஆணவம் ஏன் ? வீம்பு வீராப்பு? வெட்டி கவுரவம்? சூழ்ச்சி? ஏன் வெறுப்பு? ஏன் பகை? ஏன் பொறாமை? ஏன் ஏமாற்றி பிழைப்பு? ஏன் கெடுதல் நினைத்து, கெடுதல் செய்வது ஏன்? ஏன் நம்பிக்கை துரோகம்? ஏன்? ஏன்? ஏன்?

இந்த அற்பமான வாழ்வில், நேற்றைய நாளைய, நடந்த நடக்கபோவதை நினைத்து கலங்காமல், வாழ்வில் நமக்கு ஏற்படும் நிகழ்வுகளை அப்படியே சமநிலையில் ஏற்றுக்கொண்டு, யாரையும் குறை கூறாமல், தன்னை ஒழுங்குபடுத்தி, எதையுமே எதிர்பார்க்காமல், அனைத்திலும் நேர்மறையான எண்ணம் கொண்டு,

அன்பு கருணை மகிழ்ச்சி கொண்டு கள்ளம்கபடமின்றி, யாரையும் திருப்திபடுத்த நினைக்காமல், யாருக்காகவும் போலியாக முகமுடி போடாமல், படைத்தவனுக்கு மட்டுமே பயந்து, அடுத்தவர்களை அறிய முயலாமல், தன்னை உணர்ந்து, படைத்த இறைவனை உணர்ந்து, வாழ்வை உணர்ந்து வாழ்வோம்..

என்றும் அன்புடன்

 


நன்றி இணையம்