*ம* ஹாளய என்றால்,

மணக்கால் அய்யம்பேட்டை | 4:24 PM | Best Blogger Tips
Image result for மஹாளய என்றால்,Image result for மஹாளய என்றால்,

** ஹாளய என்றால்,
*'கூட்டாக வருதல்'*
என்பது பொருள்.
மறைந்த நமது முன்னோர்கள் மொத்தமாக ஒருசேரக் கூடும் காலமே மகாளய பட்சம் என்று கருதப்படுகிறது.
பட்சம் என்றாகில்,
15 நாட்கள் என்பது பொருள்.
அதாவது மறைந்த நமது முன்னோர்கள்,
15 நாட்கள் நம்மோடு தங்கக்கூடிய காலங்களை மஹாளய பட்சம் என்று கூறுகிறோம்.
மஹாளய பட்சம் புரட்டாசி மாத பவுர்ணமிக்கு மறுநாள்,
பிரதமை திதியில் துவங்கி,
அமாவாசை வரை நீடிக்கிறது.
புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசையே,
*"மஹாளய அமாவாசை"*
என்று அழைக்கப்படுகிறது.
சாதாரண அமாவாசை தினங்களில் மூன்று தலைமுறை முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கப்படும்.
*ஆனால்,*
மஹாளயபட்ச அமாவாசை தினத்தில்,
*தா* ய்வழி மற்றும் தந்தைவழி முன்னோருக்கு மட்டுமின்றி,
** ம் ஆசிரியர்கள்,
** ண்பர்கள்,
** றவினர்கள்,
** ங்காளிகள் மற்றும் ஏனைய அனைவருக்கும் இன்றைய தினத்தில் தர்ப்பணம் கொடுப்பதே மஹாளய அமாவாசையின் தனி பெரும் சிறப்பாக திகழ்கிறது.
மஹாளய பட்சத்தில் அனைத்து நாட்களுமே தர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷம்.
இயலாதவர்கள் மஹாளய அமாவாசை அன்றாவது பக்தியுடனும் - நம்பிக்கையுடனும் தர்ப்பணம் செய்வது எதிர்காலத்தில் நல்ல பலனைத் தரும்..


நன்றி இணையம்