மச்சத்தை வைத்து உங்கள் தலைவிதியை தெரிந்து கொள்ளலாமா!!!

மணக்கால் அய்யம்பேட்டை | 11:52 AM | Best Blogger Tips
மச்சத்தை வைத்து உங்கள் தலைவிதியை தெரிந்து கொள்ளலாமா!!!

பொதுவாகவே மச்சம் உடலில் இருந்தால் ஏதோ அதிர்ஷ்டம் உள்ளது என்று சொல்வார்கள். அதிலும் சில மச்சங்கள் கண்ணுக்கு தெரியாத இடத்தில் இருக்கும். சிலருக்கு உடலில் மச்சமே இல்லாமல் இருக்கும். மேலும் மச்சம் உள்ளவர்களின் வாழ்க்கையில் ஏதேனும் சற்று வித்தியாசமான அதிர்ஷ்டக் காற்று வீசிவிட்டால், உடனே அனைவரும் அவனுக்கு அந்த இடத்தில் மச்சம் இருப்பதால் தான், அவன்

ஏதோ செய்யப் போக நல்ல அதிர்ஷ்டம் அடித்துவிட்டது என்று சொல்வார்கள்.

நமது முன்னோர்கள் அனைவருமே அக்காலத்தில் மச்சத்தை வைத்தே ஒரு சிலவற்றை சரியாக கணித்து சொல்வார்கள். அதேப்போலவே, வளர்ந்து பெரிய நிலைக்கு வந்த பின்னர், நமது பாட்டி, தாத்தா சொன்ன வார்த்தைகள் அனைத்தும் ஞாபகத்திற்கு வரும். இதனால் சிலர் நமது வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள, பல சோதிடர்களை பார்த்து, ஜோசியம் பார்த்து, எதிர் காலத்தை தெரிந்து கொள்வார்கள்.

அதிலும் அவ்வாறு மச்சம் இருக்கும் போது எந்த இடத்தில் மச்சம் இருந்தால் என்ன நடக்கும் என்பதை இந்திய மற்றும் சைனீஸ் ஜோதிடம் சிலவற்றை சொல்கிறது. இதில் இப்போது முகத்தில் எந்த இடத்தில் மச்சம் இருந்தால், எப்படி இருப்பார்கள் என்பதைப் பார்ப்போமா!!!

நெற்றி

நெற்றி பெரிதாகவும், மச்சம் வலது பக்கத்திலும் இருந்தால், அது செல்வத்தை குறிக்கும். எப்போதும் சமூகத்தில் நல்ல செழிப்புள்ளவராக, நல்ல பெயர் மற்றும் செல்வாக்கோடு வாழ்வர். சிறந்த கொடை வள்ளல். ஆனால் நெற்றி குறுகலாகவும், மச்சமானது இடது பக்கத்திலும் இருந்தால், சுயநலவாதியாக, யாருக்கும் உதவி செய்யாமல், மற்றவர்களை மதிக்காமல் இருப்பர்.

நாக்கு

நாக்கின் நுனியில் மச்சம் இருந்தால், தன் புத்திசாலித்தனத்தான பேச்சாலேயே அனைவரையும் கவர்ந்து விடுவர். மேலும் எதிர்காலம் செழிப்போடு இருக்கும். அதுவே நாக்கின் நடுவில் இருந்தால், கல்வியில் தடை, சரியான பேச்சாற்றல் இல்லாதது மற்றும் உடலில் பல பிரச்சனைகள் போன்றவை இருக்கும்.

கன்னம்

கன்னத்தின் வலது பக்கத்தில் மச்சம் இருந்தால், பெற்றோர்கள், கணவன், மனைவி மற்றும் உறவினர்கள் மீது மிகுந்த பாசம் இருக்கும். வாழ்க்கையை மிகவும் சந்தோஷமாக ரசித்து நீண்ட நாட்கள் வாழ்வார்கள். அதுவே இடது கன்னத்தில் இருந்தால், வாழ்க்கையே பிரச்சனையாக இருக்கும். ஆனால் திருமணம் ஆனப் பின், குழந்தைகளால் பிற்காலத்தில் மிகவும் சந்தோஷமாக இருப்பர்.

உதடுகள்

உதட்டின் மேல்புறத்தில் இருந்தால், அனைவருக்குமே நல்லவர்களாக இருப்பர். அதுமே கீழ் உதட்டில் இருந்தால், அவர்கள் நன்கு சாப்பிடுவதோடு, நடிப்பதிலும், படம் வரைவதிலும் மிகுந்த ஈடுபாடு உடையவர்களாக இருப்பர்.

மூக்கு

மூக்கின் துனியில் மச்சம் இருந்தால், எதையும் விரைவில் சிந்திக்கக்கூடியவர். மேலும் அதிக சுயமரியாதைக் கொண்டவர்கள், எப்போதும் வெற்றி பெறக்கூடியவர்கள். அந்த மச்சமே வலது பக்கத்தில் இருந்தால், சிறு முயற்சியிலேயே அதிக பணத்தை பெறுவர். அதுவே இடது புறத்தில் இருந்தால், அனைத்துமே கெட்டதாக முடியும்.

காதுகள்

மச்சம் காதுகளில் எங்கிருந்தாலும், நல்ல வருமானம் இருப்பதோடு, ஆடம்பர வாழ்க்கையுடன் வாழ்வர். அதே நேரம் அந்த ஆடம்பரத்தால், மூழ்கும் நிலை கூட ஏற்படும். ஆனால் காதுகளின் பின்புறம் இருந்தால், அவர்களுக்கு வரும் வாழ்க்கைத்துணை மிகவும் பணக்காரர்களாக இருப்பர்.

புருவங்கள்

புருவத்திற்கு இடையில் மச்சம் இருந்தால், தலைமை பண்புகளுக்குரியவராக இருப்பர். அதுவே வலது புருவத்தில் இருந்தால், விரைவிலேயே நல்ல குணமுடையவரை திருமணம் செய்து கொள்வர். மிகவும் அதிர்ஷ்டசாலி. இடது பக்கத்தில் இருந்தால், கையில் எப்போதுமே பணம் இருக்காது, நிறைய பிரச்சனைகளை சந்திப்பர். சொல்லப்போனால் ஒரு துரதிர்ஷ்டசாலி.

கண்கள்

மச்சமானது வலது கண்ணில் இருந்தால், கைகளில் எப்போதுமே பணம் இருக்கும். அதுவும் வேலையே இல்லாவிட்டாலும், பணம் கையில் எப்போதும் இருக்கும். அதுவே இடது கண்ணில் இருந்தால், அதிக திமிரு பிடித்தவர்களாக இருப்பர்.